A. Prem Kumar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  A. Prem Kumar
இடம்:  Chennai
பிறந்த தேதி :  19-Jun-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Sep-2011
பார்த்தவர்கள்:  1080
புள்ளி:  638

என்னைப் பற்றி...

இன்றையஉலகம்
இனித்திடநான் கவி படைத்தலைவிட,
நாளையஉலகம்
வளம்பெற...
நலம்பெற...
நான் விதைக்கிறேன்,
- என் கவிதைகளை....

என் படைப்புகள்
A. Prem Kumar செய்திகள்
A. Prem Kumar - Vidhya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2022 2:31 pm

பலமுறை உன்னிடம் கோபம் கொண்டுள்ளேன்
ஏன் என்னிடம் அன்பாக பேசவில்லை என்று
பிறரிடம் காட்டும் அன்பை
என்மீதும் பொழியலாம் அல்லவா !!!

நீ இருக்கும் வரை புரியவில்லை
சென்ற பிறகு தான் புரிகிறது
என்னை பற்றி ஊர் முழுக்க பெருமையாக பேசியிருக்கிறாய்
ஆனால் என்னிடம் பேசவில்லையே

உன் அன்பின் வெளிப்பாடு
தான் கோபம் என்பதை இப்பொழுது உணருகிறேன்
மன்னிப்பு கூற முடியவில்லை
ஆதலால் உன் ஓவியத்திடம் கேட்கிறேன்

இன்றும் என் கைபேசியில்
அப்பா என்ற எண்ணில் இருந்து
அழைப்பு வராதா என்று
ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் ...

-Vidhya K

மேலும்

உடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உன்னுள் வாழ்கிறார். உன்னுள் உரையாடுகிறார். தொடரட்டும்.... 25-Jun-2022 12:46 am
அழகு தந்தையின் பாசம் 23-Jun-2022 7:11 pm
A. Prem Kumar - கோ.கணபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2018 8:16 am

தன்னோட பிள்ளை
தரணியில் உயர்ந்திட
நற்கல்வியும்,
நன்னடத்தையும் கற்றுதர—நம்
முன்னோர்கள் பிள்ளைகளை
குருவிடம் ஒப்படைத்து
குருகுலத்தில் சேர்த்தனர்

குருவைத்தவிர எவரும்
உள்ளே வர இயலாத
குருகுலத்தில்
இடையூறு ஏதுமின்றி
அயராது கல்வி கற்று
ஒப்பில்லா சிறப்புடன்
உயரம் தொட்டார்கள்

ஆசிரியருக்கு தேவையான
அனைத்து பணிகளும், அன்று
படிக்கும் மாணவர்களுக்கு
பாடமானது--அதனை
அன்றாடம்செய்து முடிப்பதும்
அவர்களின் கடமையானது

தமிழகத்தில் தற்போது
தேர்வுக்கு மாணவர்கள்
எட்டு திசை நோக்கி
எங்கெங்கோ போவது
கல்வியின் தரம் உயர
குருகுலம் மீண்டும்
உருவாகுதோ!

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 26-Jun-2022 9:28 am
A. Prem Kumar - கோ.கணபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2020 3:11 pm

நன்மை, தீமை
மகிழ்ச்சி, துன்பமென
அனைத்தையும் நம்
நெஞ்சிற்குக் கொண்டு
சேர்க்கும் மகத்தான பணி—நம்
சொற்களுக்கானது

சாப்பாட்டில் ஒரு முடி
கணவன் சினம் கொள்ளாமல்
முடியைக் கையிலெடுத்து
மனைவியிடம் சொன்னான்—“உன்
தலையிலிருந்தாலும் அழகு
இலையிலிருந்தாலும் அழகு “ என்றான்

சினம் தனிந்து இருவரும்
சிரித்து மகிழ்ந்தனர் ,
இல்லறப் பாதையில்
இடையூறு ஏதும் பண்ணாம
மனக் கசப்பை நீக்கினால்—என்றும்
மகிழ்ச்சி அலைகள் ஆர்ப்பரிக்கும்

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 26-Jun-2022 9:25 am
சாப்பாட்டில் ஒரு முடி கணவன் சினம் கொள்ளாமல் முடியைக் கையிலெடுத்து மனைவியிடம் சொன்னான்—“உன் தலையிலிருந்தாலும் அழகு இலையிலிருந்தாலும் அழகு “ என்றான் அருமை, ஐயா. தங்கள் தாள் பணிகிறேன் 25-Jun-2022 12:14 am
A. Prem Kumar - கோ.கணபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2020 3:36 pm

அன்புக்குள் அதிகாரம்
இருக்கலாம்—ஆனால்
அதிகாரத்திற்குள் அன்பு
இருக்க முடியாது

இதைச் செய்யாதே
என்பது அதிகாரம்
இதைச் செய்யாமல்
இருப்பது நல்லதென்பது அன்பு

இதைச் செய்
அல்லது செத்துவிடு
என்பது அகந்தை
அது அழிவைத் தரும்

அன்பின் வழிபட்ட
அதிகாரத்திற்கு
என்றும் மனிதன்
அடிபணிவான்

மேலும்

தெளிவான பதிவு. மிக அருமை, ஐயா 25-Jun-2022 12:08 am
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி 04-Sep-2020 8:33 am
சிறப்பு 03-Sep-2020 8:36 pm
A. Prem Kumar - கோ.கணபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2022 2:14 pm

எது நல்லது, எது கெட்டது என்று
எதனையும் சொல்ல முடியாது
ஆசை தான் அதனை நிர்ணயிக்கும்

அழியக்கூடிய மண்ணுலகிலிருந்து
அழிவற்ற விண்ணுலகத்திற்கு
செல்லும் பயணம் தான் மனித வாழ்க்கை

நேர்மையும், மனசாட்சியும்
நிறைந்த நல்லவன் ஒருவனுக்கு
அரசியல் எப்போதும் உதவாது

கருக்கலில் எழுந்து,கடவுளை துதித்து
கடும் உழைப்பை காணிக்கையாக்கினால்
கைவிடுவானா இறைவன்

படிக்காமல் இருப்பதை விட
பிறக்காமல் இருப்பதே மேல்
அறியாமை உயிரை பறித்து விடும்

சிந்தனையும், செயலும்
ஒன்று பட்டால் தான்
மாற்றத்தை உருவாக்க முடியும்

நல்ல பழக்க வழக்கங்கள்
நற்பண்புகளை நமக்கு தந்து
நம்மை மேன்மையடையச் செய்யும்


பழக்கங்க

மேலும்

உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி. 26-Jun-2022 9:12 am
தெளிவுடன் கோர்க்கப்பட்ட வார்த்தைகளும், வாக்கியங்களும். அருமையான பதிவு 24-Jun-2022 11:59 pm
A. Prem Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2022 10:18 am

வெகு சிலருக்குவாழ்க்கை பரிசாகவும்பலருக்கு வாழ்க்கைபோர்க்களமாவும்பகுத்து வித்திட்டான்,எம்பெருமான்!எஞ்சியபயணத்தில்மிஞ்சிய சிலருள் - சல்லடைக்கண்ணுடையான்கஞ்சம்பாராதுபாத்திரமறிந்து பிச்சையிட்டான்,மீதி வாழ்க்கை!!ஆசிர்வதிக்கப்பட்டேன், இறைவா!!!

மேலும்

A. Prem Kumar - A. Prem Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2014 11:26 pm

மேலுடல் கருமேகத் திரைவடிவே யாயினும்
தருமழைபோ லுள்ளம் கள்ளம் கபடமற்று.

- சுமதி A. பிரேம் குமார்

மேலும்

போற்றுதற்குரிய இலக்கிய படைப்பு பாராட்டுக்கள் மீண்டும் தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 03-Dec-2016 3:21 am
நல்லாருக்கு தோரே.. 17-Nov-2014 12:11 am
A. Prem Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2014 11:26 pm

மேலுடல் கருமேகத் திரைவடிவே யாயினும்
தருமழைபோ லுள்ளம் கள்ளம் கபடமற்று.

- சுமதி A. பிரேம் குமார்

மேலும்

போற்றுதற்குரிய இலக்கிய படைப்பு பாராட்டுக்கள் மீண்டும் தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 03-Dec-2016 3:21 am
நல்லாருக்கு தோரே.. 17-Nov-2014 12:11 am
A. Prem Kumar - எண்ணம் (public)
28-Nov-2013 6:26 am

முன்பெல்லாம், ஒருவரின் தனிப்பட்ட படைப்புகளை எடுத்துப்பார்க்க, அவரின் முதற்பக்கம் சென்று, அவரின் அனைத்து படைப்புகளையும் ஒவ்வொன்றாக சொடுக்கிப்பார்த்து, படிக்க சுலபமாக இருந்தது.

எடுத்துக்காட்டாக, நான் நேரம் கிடைக்கும் பொழுது, திரு கன்னியப்பன் ஐயாவின் முதற்பக்கம் சென்று, அவர் தொடர்ந்து படைத்துவரும் "தேசியவிநாயகம் பாடல்களை" படித்து, பொருளை அறிந்து, கற்ப்பேன். அதுபோன்றே, திரு காளியப்பன் ஐயாவின் முதற்பக்கம் சென்றும் படிப்பேன், அத்தகு வாய்ப்புகள் இப்போதைய மாறிவரும் எழுத்துத் தளத்தில் மறைந்து வருகின் (...)

மேலும்

நாங்கள் பலரு இதே கருத்தை வலியுறித்தி உள்ளோம் ஏற்கனவே. நிச்சயம் இதனை நிர்வாகம் பரிசீலித்து , உடனடியாக மாற்றம் செய்து எங்களை மகிழ்விப்பார்கள் என்றே நம்புகிறேன். என் நண்பர்களும் பலரும் இதனை என்னிடம் கூறி உள்ளார்கள். 28-Nov-2013 6:57 am
A. Prem Kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2013 12:04 pm

வான்தட்டும் தலை
-முட்டும் படி
-கட்டும் கால்
-விடுபட்டும் விதி
-கொடிகட்டும்...!

நீயென்ன விலக்கா கர்ணா?



- A. பிரேம் குமார்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (79)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
சாய்ராபானு

சாய்ராபானு

கோயம்புத்தூர்
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (79)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Ramani

Ramani

Trichy
mukil dinakaran

mukil dinakaran

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (79)

மேலே