தமிழரசன் பாபு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழரசன் பாபு |
இடம் | : திருப்பூர், வரப்பட்டி |
பிறந்த தேதி | : 06-Sep-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 373 |
புள்ளி | : 66 |
அடுக்கு மொழிகளில் கவிதை எழுத எனக்கும் ஆசை தான்,என்ன செய்ய நான்கு வரிகளுக்கே நான் படும் பாடு, என்னை பார்த்து புன்னகைக்கும் பேப்பருக்கும்,பேனாவிற்கும் மட்டுமே புரியும் ....
பக்குவமாய் வெந்நீர் வைத்துபாதத்தில் உயிரை வைத்துமூக்கு நெத்தி வகுடி எடுத்துமுழுசா உன்னை வருடையிலேபிஞ்சு தேகம் நெஞ்சம் தொட்டுபொக்கை வாய் சிரிப்பு மயக்குதடா,,உன்னை மார்பில் போட்டு தாலாட்டிநீ முகம் சுளித்தால் சீராட்டிஉன்னை அழகு படுத்தி பாராட்டிநீ பார்ப்பதெல்லாம் நானும் பார்த்துநீ கேட்பதெல்லாம் நானும் கேட்டுநீ அழுகையில் நானும் தவித்துகண்ணே என் கண்ணெல்லாம்உறங்கையிலும் உன்மீதே,,மகனே நான் காலில் ஏந்தி நீராட்டபாசமில்லை என நினைப்பாயோ,,சோப்பு நுரை கண் நனைத்தால்நான் கொடுமை காரி என நினைப்பாயோ,,தடுப்பூசி போட சென்றால்கல் நெஞ்சம் என நினைப்பாயோ,,உண்மை நீ உணர்கையிலேநான் கிழவி ஆகி போவேன்இருப்பினும் கவலை என்னஎன்
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு காரணம் உண்டு கர்மா...
இந்த கர்மா முடியுமானால் நாம் வாழ்ந்த காரணமும் முடிந்து விடும்...
இதற்கு இடையினில் எத்தனை எண்ணங்கள் பல வண்ணங்களாய் நெஞ்சினில்...
யோசிப்பது செயல் புரிவது எல்லாமே இந்த அறிவு கெட்ட மூளை தான் !!!
பிறகு ஏன் அவமானம் வலி ஏமாற்றம் எல்லாம் நெஞ்சினை துளைக்கிறது...???
யார் கண்டு பிடித்தது மனது எனும் ஒன்று இதயத்தில் இருக்கிறதென்று...???
ஏன் துன்பம் நேர்ந்தால் இதயம் கணக்கிறது...???
இதுதான் காலச் சங்கிலியா...????
யாரேனும் விடை அறிந்தால் இப்பொழுதே சொல்லுங்கள்..... !!!
ஓராயிரம் விண்மின்கள் உண்டு வானில்
அதில் ஒன்றை கொண்டு காதல் தூது செய்தால்
என்ன என்னை கண்டு கொன்றிடவா போகிறது அந்த நிலவு ...
அப்படியும் என்னை கண்டு கொண்டு
நிலவே நீ நேரில் வந்தால்
அவள் நெத்தி சுடி வாங்கி தருகிறேன் ....
உன் நெத்தியில் இட்டுக்கொள் அப்படியேனும்
அவளை மிஞ்சுகிறாயா அழகில் என்று பார்கிறேன்...
என் தேவதை வானில் வந்தால் மேகங்கள் எல்லாம் உன்னை சுற்ற மறந்து விடும்....
அவள் முன்னே சென்று வட்டமிடும்....
அவள் பின்னே அலைந்து திரிந்து காதல் மழை பொழிந்து விடும்...
அழகான பிறை ஒளியின் மொழி உன்னதென்றால்
அவள் கண்ணின் ஒளி என்ன சொல்ல...
இருள் தேச பௌர்ணமி நீ என்றால்
என் பகல் தேச சந்திரனை எ
என் காதல் என்னுடைய அவளோடே முடிந்து போயிற்று யாருக்கும் தெரியாமல் ...
இப்படிக்குஉணர்வுகளில் பூத்த ஒருதலை காதல் ...
காதலில் விழ வைத்து
கண்ணீரில் கரைய வைத்து
என்னை உயிரோடு
எரிய வைத்து சென்ற என்னவளே!!!
நீ இப்போது எங்கே...?
இனி உன்னுடன் தான்
என் வாழ்க்கை என சொன்ன
அந்த உதடுகள் இப்போது எங்கே...?
அரைநிமிடம் பேசாமல் போனாலும்
எனக்காக கண்ணீர் சிந்தும்
அந்த விழிகள் இப்போது எங்கே...?
நெடுந்தூரம் என் விரல் பிடித்து
என்னுடன் நடந்து வந்த
அந்த நிழல்கள் இப்போது எங்கே..?
உந்தன் மடி சாயும் நேரமெல்லாம்
எந்தன் தலை கோதும்
அந்த விரல்கள் இப்போது எங்கே..?
நான் கலங்கி நிற்கும்
போதெல்லாம் தோள் சாய்த்து
ஆறுதல் சொன்ன அந்த
வார்த்தைகள் இப்போது எங்கே...?
கோபத்தால் பற்றி எறியும்
என் கன்னங்களை
கோடி முத்
இப்படியே விட்டு விடு என்னை
காதலென என்மீது நீ
உருகி வழிவது அமுதமழையல்ல
அமிலமழை
வெந்துத்தணிய நானொன்றும் அக்னிகுஞ்சல்ல
வண்ணத்துப்பூச்சி....
நீ கனவில் கரம்கோர்த்து உணர்வில் உறவாடி
இமைமூடி இல்லறம் நடத்துகிறாய்
இனியேனும் என்னை நிஜத்தோடு வாழவிடு
அன்பெனும் எண்ணத்தில்
என்இதயத்தை
நீ கிழித்துப் போடுவதும்
நான் தையல் போடுவதும்மாய்
இனி நீ கிழித்துப் போட இடமுமில்லை
தையல் போடவழியுமில்லை...
விலங்கிட்டாய் மகிழ்ந்தேன்
விலங்கானாய் பயந்தேன்....
தேடித்தவிப்பாய்
பேசிவதைப்பாய்
உயிரோடு
சமைப்பாய்
ரணத்தோடு சுவைப்பாய்
அதையும் காதலென்றே
உரைப்பாய்....
அத்திப்பூத்ததென்று
அகம் ம்க
காவியக் காதலொன்று கற்பனையில் பூக்குதடி ,,,
முகுர்த்த நாள் எண்ணி மூச்சினுள் இறைக்குதடி ,,,
உன்னோடு நானிருக்க உயிரோடு கோர்த்திருக்க
உள்ளுக்குள் ஏக்கமடி ,,,
ரதியே ,,,!
ரகசியத் தோழியே ,,,!
தோல் மீது சாய்ந்து கொள்
என்னை துப்பட்டாவில் போர்த்திக்கொள் ,,,,
பொழுது சாய்கையில் ,,,!
கரு மை கண்ணால் முறைக்காதே
கடிகாரம் பார்க்காதே ,,,
என் நெருக்கங்கள் குறைக்காதே
உன் வீடு செல்ல துடிக்காதே ,,,,!
பிறை நிலவு வருகையில்
என் முழு நிலவிற்கு கோவம் ஏனோ ?
உயிர் தீரும் வரை உடன் வா
உள்ளத்தில் மட்டும் அல்ல உண்மையிலும் ,,,,,!
அன்பே
உன் விழிக்கொண்டு என்னை
விழுங்கிவிடலாம் என்று
நினைக்காதே!
வளைந்த புருவத்தினைக்கொண்டு
என்னை புரட்டிபோடலாம் என்று
நினைக்காதே!
மயிரிழைக் கொண்ட சடையால்
என்னை சாகடிக்கலாம் என்று
நினைக்காதே!
வட்ட வடிவ
நெத்திப் பொட்டினை வைத்து
என்னை
வளைத்துப்போடலாம் என்று
நினைக்காதே!
காதோரமாடும் கம்மலால் என்னை
கவிழ்த்துவிடலாம் என்று
நினைக்காதே!
மலர்ந்த முகமதைக் காட்டி என்
மனதை மயக்கிவிடலாம் என்று
நினைக்காதே!
ஏன் இந்த முயற்சி?
யாரைக்கொல்ல இந்த பயிற்சி?
உன்னை நினைத்த நாளிலேயே
என்னை இழக்க தொடங்கியபோது!
இன்னும் என்னுயிரை
எடுக்க நினைத்தால்
என்னால் என்ன செய்ய முடிய
தினமும் கனவினில்
உன் முகம் பூவையே ...
திகைக்கிறேன் கனவினில்
உன்னை கண்டு ..,
தினம் தினம் விழியினில் நீயே நீயே ,,,
விழி திறக்கையில் வரும்
கண்ணீரும் நீயே ,,,,
தனிமையில் இதமான நினைவுகள் நீயே ,,,,
நீயே நீயே ! என் உயிர் நீயே !....
அடி தினமும் உன்னுடன் தானடி வாழ்கிறேன் ,,,
எண்ணில் உறைந்த உந்தன் நினைவினில் ,,
தாலி கட்ட வந்த என்னை,
காவி கட்ட வைத்தவளே !
மறவாமல் மறந்து விடு,
என்னை மறக்கும் எண்ணத்தை,
மறந்தும் கூட மறந்து விடாதே,
என் காதலை ..