துளசி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : துளசி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 609 |
புள்ளி | : 86 |
உங்களில் ஒருத்தி
"சிவா என்னால வீட்டில உள்ளவங்க கிட்ட சொல்லி புரிய வைக்க முடியலடா. நாம சின்ன வயசில் இருந்து ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்னு என் வீட்டிலயும் சரி உன் வீட்டிலயும் சரி ரொம்ப நல்லாவே தெரியும். அப்பிடி இருந்தும் சாதி மதம் தான் பெருசுன்னு நம்மள சேர்த்து வைக்க மாட்டேங்கிறாங்க."
"அது தான் தெரிஞ்ச விசயமாச்சே. நான் நல்ல மூட்ல இருக்கேன். இதையெல்லாம் ஞாபகப்படுத்தி என் மூடை கெடுக்காத."
"எனக்கென்ன ஆசையா உன் மூடைக் கெடுக்கணும்னு. நானே நொந்து போயிருக்கேன். இதுல நீ வேற." சலிப்பாய் சொல்லிக் கொண்டே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் தலையை மெல்ல வருடியவாறே "ஏன் இப்ப என்ன புதுசா?" என்று கேட்டான். அவனது அன்பா
"சிவா என்னால வீட்டில உள்ளவங்க கிட்ட சொல்லி புரிய வைக்க முடியலடா. நாம சின்ன வயசில் இருந்து ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்னு என் வீட்டிலயும் சரி உன் வீட்டிலயும் சரி ரொம்ப நல்லாவே தெரியும். அப்பிடி இருந்தும் சாதி மதம் தான் பெருசுன்னு நம்மள சேர்த்து வைக்க மாட்டேங்கிறாங்க."
"அது தான் தெரிஞ்ச விசயமாச்சே. நான் நல்ல மூட்ல இருக்கேன். இதையெல்லாம் ஞாபகப்படுத்தி என் மூடை கெடுக்காத."
"எனக்கென்ன ஆசையா உன் மூடைக் கெடுக்கணும்னு. நானே நொந்து போயிருக்கேன். இதுல நீ வேற." சலிப்பாய் சொல்லிக் கொண்டே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் தலையை மெல்ல வருடியவாறே "ஏன் இப்ப என்ன புதுசா?" என்று கேட்டான். அவனது அன்பா
"டேய் எருமை இன்னிக்கும் குடிச்சிருக்கியா? எப்போ தாண்டா இந்த கருமத்த விட்டுத் தொலைவா? நானும் டெய்லி கரடியா கத்திக்கிட்டு தான் இருக்கன். உன் மரமண்டைல கொஞ்சமாச்சும் ஏறுதா?"
"நீ மனுசனா கத்தியிருந்தா ஏறி இருக்கும்"
"ம்ம் இந்த வாய்க்கொழுப்புக்கு மட்டும் குறைவில்லை. ஒழுங்கா வீடு போய் சேருவியா? இல்ல நான் வரணுமா?"
"நாங்கெல்லாம் குடிச்சாலும் ஸ்டெடியா நிக்குற ஆளுங்க. நீ போய் பால் குடிச்சிட்டு தூங்குற வழிய பாரு."
"நீ எல்லாம் திருந்தவே மாட்டா. வீட்டுக்கு போய்ட்டு மெசேஜ் பண்ணு. bye."
"bye"
phone ஐ பாக்கெட்டுக்குள் வைத்து விட்டு வண்டியை உதைத்து கிளப்பினான் ஜீவன். விநோதனின் அக்கறை நிறைந்த அன்பு எப்பொழ
"சனியன்.. சிடுமூஞ்சி.. எப்பபாரு மூஞ்சிய உம்முண்ணே வச்சிருக்கா..." தேனிலவிற்கு வந்திருக்கும் எந்தக் கணவனாவது தன்னோட மனைவிய இப்பிடித் திட்டுவானா. ஆனா நம்ம ஹீரோ ஹரிவர்த்தன் இப்படித்தான் திட்டிக்கிட்டிருந்தான். ஆனா மனசுக்குள்ள தான். சத்தம் போட்டுத் திட்டுனா அப்புறம் கீர்த்தனா கிட்ட இருந்து அவனக் காப்பாத்த அந்தக் கடவுளாலேயே முடியாதே. கீர்த்தனா யாருன்னு கேக்குறீங்களா? சார் கொஞ்சம் முன்னாடி அன்பா சனியன்னு மனசுக்குள்ள கொஞ்சிட்டிருந்தாரே அந்த மிஸ்.சிடுமூஞ்சி சாறி சாறி மிஸ்ஸஸ்.சிடுமூஞ்சி ஹரிவர்த்தன் தாங்க கீர்த்தனா. சரி அவங்களுக்குள்ள என்ன சண்டை அப்டின்னு தானே யோசிக்குறீங்க? வாங்க பாக்கலாம்.
சோபாவில் வ
நினைவற்று மடியில் மயங்கிக் கிடக்கும் தோழனின் கோலத்தை பார்க்க தாங்காமல் கண்களை மூடிக் கொண்டாள் நிலா. மூடிய கண்களுக்குள் பழைய ஞாபகங்கள்.
"நான் போக மாட்டேன். நான் போக மாட்டேன்." பள்ளி வாசலில் தந்தையின் காலைக் கட்டிக் கொண்டு அழுத அந்த சின்ன ஹரியின் நினைவில் துக்கத்திலும் நிலாவின் இதழ்கள் புன்னகை பூத்தன. அதுதான் நிலாவுக்கும் ஹரிக்குமான முதல் சந்திப்பு.அப்பொழுது நிலாவின் பெயர் நிலவன். அழுது கொண்டிருந்த ஹரியின் தோளில் கைபோட்டு தன்னிடமிருந்த மிட்டாயை கொடுத்து அவன் அழுகையை நிறுத்தினான் நிலவன். ஐந்து வயதில் தொடங்கிய அவர்களது நட்பு பதினான்காவது வயதில் பிரிவை சந்தித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் விளைந்த
துவைத்த உடைகளை காயப்போடுவதற்காக சென்று கொண்டிருந்த மீராவின் கைகளைப் பிடித்து நிறுத்தினான் வாசு.
"மீரா நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்."
மீரா அமைதியாக வாசுவின் முகம் நோக்கினாள். அவளுடைய கண்களில் தெரிந்த வலி வாசுவை பேசவிடாமல் தடை செய்தது. ஆனால் அதையும் தாண்டி தன் மனதில் இருப்பதை வெளியிட்டான்.
"நாம் இனி சேர்ந்து வாழ முடியாது மீரா."
மீராவிற்குள் இலட்சம் இடிகள் ஒன்றாகத் தாக்கிய உணர்வு. சில நாட்களாகவே வாசுவுக்கும் தனக்கும் இடையில் இடைவெளி அதிகரித்திருப்பதை மீரா உணர்ந்து தான் இருந்தாள். ஆனால் அது பிரிவிற்கான பாதை என்று அப்போது அவளுக்கு தெரியவில்லை. இப்போது தெரிந்த போதோ தாங்க முடியாத வலி நெஞ்ச
பூப்போட்ட பாவாட
உடுத்தவளே முத்தம்மா!
ஒம் மாமன் தவிக்குறனே
முத்தமொன்னு கொடுத்திடுமா...
கொளத்துப்பக்கம் ஒன் வீடு
கெழக்குல தான் என் வீடு
நடுவுல நாம் கெணத்தடியில்
பால் நெலவ சாட்சி வெச்சி
உரையாட
ஒனக்கென்ன சம்மதமா...
ஒங் கைய நான் புடிக்க
எங் கைய நீ புடிக்க
தனிமைக்குத் தாழிட்டு
நிசப்தத்த உறையவிட்டு
ஊரும் நீரும் ஒறங்கையில
உன் மடியில் நானாக
ஒனக்கென்ன சம்மதமா...
ஒன் நெனப்ப நான் மறந்து
களத்துப்பக்கம் போனாலும்
தாவனிய உடுத்துக்கிட்டு
என் முன்னே போயிடுவ
அப்புறமா என் மனசு
மயிலாட்டம் போடுதடி!
குச்சடுக்கிக் கூடு கட்டி
காகம் கூட சேரயில
ஓல போட்ட குடிசையில
மயிலக்காள நானிருக்கன
விழுந்தாலும் விதையாகிவிடு...
தரையெங்கும் இரத்த ஆறு வெள்ளமாய்
பெருக்கெடுக்க...
மனித தலைகள் மலை போலே குவிந்து
கிடக்க....
மனமெங்கும் உயிர் போகும் அச்சம்
உறைந்திருக்க...
கனன்று கொண்டிருந்த ஆயுதங்களில்
சிக்கி...
மண்ணுக்குள் புதைந்து போனது
பல உயிர்கள்....
விழிமூடி துயில் கொள்ள நேரமில்லை
கண்முன்னே உயிரொன்று துடித்தாலும்
அவன் உயிர் காக்க வழியில்லை...
தன் விழிநீர் மண்ணை அடையும் முன்
அவனோடு துணைபோகவே
முடிந்தது விண்ணகம் வரை...
அனைத்திற்கும் விடியாத முடிவு
வந்தது ஒரு நாள்...
அன்றோடு உறங்கிப்போனது
உரிமைப்போராட்டங்கள்....
பதுங்கு குழிகளுக்குள் புதையுண்டு
மறைக்கப்பட்டது பல
நாளை பூக்கும் பூக்கள் உதிரலாம்...
நாளை வீச காற்றும் மறுக்கலாம்....
நாளை உதயம் வானில் கலையலாம்...
ஆனால் மரணம் வரை
கலையாத அன்பு விலகாத பாசம் என் வாழ்நாள்
முடியும் வேளையிலும் தொடரும்...
என்னை உயிர்பித்த
அன்னை தந்தைக்கும்
எனக்கு உயிர் கொடுத்த
அன்புக் கணவனுக்கும்.....!
உன்னிடம் மாசமாக
இருக்கின்றேன் என
வெட்கத்தோடு நான் கூற
அளவற்ற மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்து ஓடி வந்து எனை கட்டித்தழுவி முத்தமிட்டு சிரித்தாய்
அன்று பார்த்தேன் உன் அன்பை..!
நான் உன் மடியில் படுத்துறங்க மேடிட்ட என் வயிற்றை வலக்கையால் நீ தடவி
என் காதோரம் வந்து
என் பையன் எனக் கூறி
என் உதட்டில் முத்தமிட்டாய்
அன்று பார்த்தேன் உன் அன்பை..!
அடம் பிடித்து நான் உன்னிடம்
புளிப்பு மாங்காய் வேண்டும் என்று நடுச்சாமம் தான் கேட்க இரவு என்று பார்க்காமல் மரமேறி உடன் பறித்து என் கையில் வைத்தாயே என்
சிரிப்பைப் பார்ப்பதற்காய்
அன்று பார்த்தேன் உன் அன்பை..!
முதல் மாதம் இது உனக்கு வே
உன் குழந்தை சிரிப்பால்
என் வயதினை வென்றவனே
என்னையும் ஒரு குழந்தையாக்கி
உன் மடியினில் தவழவிட்டவனே....!
முதலில் எனக்கு துணையானாய்
பிறகு என் தோழனானாய்
ஒவ்வொரு வினாடியும் என்
நாடியோடு நரம்பாய் கலந்தவனே....!
உன் மௌனத்தினால் என்
வார்த்தையை வென்றவனே
உன் ஓரப் பார்வையால் என்னை வெட்கத்தால் நெளிய வைத்தவனே..!
உன் பொறுமையினால் என்
வேகத்தை வென்றவளே
உன் மிகுந்த அன்பால் என்னை
இதய கூட்டுக்குள் அடைத்தவனே...!
வானத்தில் இருக்கும் நிலா
பூமியில் உள்ளவர்கள் கண்களுக்கு நெருக்கமாகி,, கரங்களுக்கு தூரமாகிப் போவது போல்- இப்பூமியின் நிலா நீ
என் கண்களுக்கு நெருக்கமாகி கரங்களுக்கு தூரமாக இரு
என்னை நீ
ஏமாற்றினாலும்
என்னோடு உன் நினைவுகள்
இருக்கும் வரை
எந்த மூலையில்லாவது வாழ்ந்து
கொண்டிருப்பேன் பெண்ணே
என் உண்மையான காதலோடு ..............