ருத்ரா - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  ருத்ரா
இடம்:  மதுரை (தற்போது kalifOrniyaa
பிறந்த தேதி :  01-Jun-1943
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-May-2012
பார்த்தவர்கள்:  1575
புள்ளி:  1044

என்னைப் பற்றி...



என் படைப்புகள்
ருத்ரா செய்திகள்
ருத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2023 2:02 pm

காதல் என்றொரு கேலக்ஸி
_____________________________________ருத்ரா


கேலக்ஸி என்று ஆங்கிலத்தில்
ஒலித்த போதும்
காதல் எனும் கலித்தொகை
களிப்பு மிக்கூறுகிறது.
ஆம்.
என் இரவுப் பிழம்புக்குள்
நீ ஒரு ஓளிமண்டலம்.
கனவு கொண்டு தைத்தபோதும்
அந்த இருட்கந்தலில்
உன் ஊசி நினைவுகள்
என்னைச் சல்லடை ஆக்கிக்கொண்டு தான்
இருக்கிறது.
இந்த ஒளி நிழல் சல்லடையை
அன்றொரு நாள் தவறுதலாய்
அந்த ஜேம்ஸ்வெப் தொலைனோக்கி
"ஒளிச்சடையன்" என்ற
ஒரு புது "கேலக்ஸியை"
கண்டுபிடித்து விட்டதாய்
தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறது.
அன்பே!
அது உண்மையில்லை என்று
நீ போட்டு உடைத்து விடாதே.
அந்த பிரம்மாண்ட பிரபஞ்ச சந்தோஷ

மேலும்

ருத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2023 12:26 pm

ஹைக்கூ
__________________________________ருத்ரா


கிடக்கட்டும் என்று கைக்குட்டையை
எங்கோ அவள் வீசினாள்
அவன் ஆக்சிஜன் சிலிண்டரை.

________________________________________

மேலும்

ருத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2023 11:46 pm

ஹைக்கூ
________________________________ருத்ரா


ஏ ஐ ல் காதல் செய்ய எண்ணினான்.
கண்ணை மூடி கனவு காண்பதற்குள்
கல்யாண பத்திரிகையே கையில்.

__________________________________________

மேலும்

ருத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2023 9:29 pm

ரொட்டித்துண்டு
-------------------------------------------------------------ருத்ரா

ஒரு ரொட்டித்துண்டுக்கு
கிராஃபிக்சில்
ஆப் வைத்திருக்கிறீர்கள்
கோதுமை வயல்களையெல்லாம்
எட்டு வழி சாலையாக்கிவிட்டு
பசி தீர்க்க
எங்கே பயணம்?

____________________________________

மேலும்

ருத்ரா - ருத்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2021 7:31 am

புல்லை நகையுறுத்தி
பூவை வியப்பாக்கி...
நான்
சூரியனைச்சொல்லவில்லை.
அன்று மொட்டை மாடியில்
ஒரு பிருந்தாவனமாய்
நின்று விட்டு
விருட்டென்று மீண்டும்
மொட்டை மாடி ஆக்கிவிட்டு
மறைந்து விட்டாயே.

________________________ருத்ரா

மேலும்

நண்பர் திரு நன்னாடன் அவர்களுக்கு மிக்க நன்றி. அன்புடன் ருத்ரா 27-Aug-2021 10:39 pm
நல்ல காட்சியின் கவர்ச்சியான புனைவு அழகாய். 27-Aug-2021 10:27 am
ருத்ரா - ருத்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2021 7:59 am

காதல்
______________________ருத்ரா

எப்போதும்
நீ
புதிய சொல்.
காலம் கூட‌
உன்னை தரிசிக்க ஏங்கி
உன் காலடியில் கிடப்பதால்.
_________________________

மேலும்

மிக்க நன்றி நண்பரே!......ருத்ரா 06-Feb-2021 1:51 pm
மிக அழகான கவிதை . நினைக்க நினைக்க இனிப்பு ஐயா . 06-Feb-2021 8:48 am
ருத்ரா - ருத்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2020 8:56 am

நுள்ளித்தரும் காதல் துளிகள்(1)
_______________________________________ருத்ரா

கீ கொடுக்காத‌
ஒரு கைக்கடிகாரத்துடன்
உனக்காக நான் காத்துக்கொண்டிருப்பேன்.
காலம்
பாவம் எனக்காக காத்திருந்து
அந்த முட்களில்
உட்கார்ந்து கொண்டிருக்கட்டும்.

_____________________________________________________

மேலும்

மேலே "எழுது" "கவிதை"பகுதிகளை அழுத்தவும். 21-Sep-2020 1:59 pm
இந்தத் தளத்தில் நான் எப்படி எழுதுவது கூறுங்கள் தோழர்களே 21-Sep-2020 12:18 pm
ருத்ரா - ருத்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2020 8:45 am

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
‍________________________________________ருத்ரா

சிரிக்கமுடியவில்லை
கவசம்.
பார்க்கமுடியவில்லை
கருப்புக்கண்ணாடி.
அந்த நீண்ட அழகிய கைகளும்
தெரியவில்லை.
கவிதை பேசும் கணுக்கால்களையும்
வண்ணச்சீறடிகளையும்
தரிசிக்கவே முடிய வில்லை.
மெல்லிய சல்லாத்துணியில்
அந்த சன் ஸ்ட்ரோக்குக்கும்
அல்ட்ரா வைலட் கதிர்வீச்சுக்கும்
கவசம் கவசம் கவசம்.

"அப்புறம்
எந்த எழவடா
காதலிக்கத் துவங்குவது?"

பெண்ணே
உன்னைக் காண இயலாத
ஏக்கமும் தாகமுமே
இப்படி கொப்பளிக்கிறது.
காதலின் கதிர்வீச்சுக்கு கவசம் இல்லை.
அறிவியலில் "குவாண்டம் டன்னலையும்"
துளைக்கும் கணித சமன்பாடுகள்
உண்டு

மேலும்

மிக்க நன்றி நண்பரே. அன்புடன் ருத்ரா 22-Aug-2020 4:52 pm
வெகு நுட்பமான அறிவுரை! 22-Aug-2020 3:23 pm
ருத்ரா - ருத்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Sep-2017 7:00 am

நம்பிக்கை
========================================ருத்ரா

எழுந்துகொண்டு விட்டேன்
போர்வைக்குள்ளிருந்து உதறி.
கனவுச்சதையின் மிச்சம்
கண் இமைகளில் பனிபோல்
கவ்விக்கிடந்தது.
விழிப்பின் கத்திமுனை
அறுக்கக் காத்திருக்கிற‌து.
துண்டு துண்டுகளாய்
இந்த சுறாக்களுக்கு உணவாக.
இன்னுமா என் மீது இரவுக்கடல்
கொந்தளிக்கிறது?
பகல் நேரத்துக்கடமைகளும் கவலைகளும்
பள பளக்கிறது
"கில்லட்டின்" போல.
மறுபடியும் கால்களை உதைத்து உதறி
எழுந்திருக்கிறேன்.
ஜிவ்வென்று
என்னக்குள்ளிருந்து மனத்தின்
ஒரு அசுரக்கை முளைத்தது.
தன் முஷ்டியால்ஓங்கி ஒரு குத்து
அந்த பேய்களின் முகத்தில்.
என்ன செய்துவிட்வாய்?
என்னைத்தின்

மேலும்

வாழ்வியல் சிந்தனைக்கு கருத்துக்கள் தங்கள் படைப்பு போற்றுதற்குரிய விழிப்பு உணர்வு உண்டாக்கட்டும் கலாம் கனவை நனவாக்குவோம் பாராட்டுக்கள் 21-Sep-2017 4:22 am
நீர் ஊற்றும் மேகங்கள் போல மனிதனுக்குள் நம்பிக்கைகள் 18-Sep-2017 12:10 am
அன்பு நண்பர் திரு.இளவெண்மணியன் அவர்களே மனிதனின் மன எழுச்சி அவன் மனத்துள் ஒளியாகவும் அவனுக்கு ஒரு நிழல் ஆகவும் இருக்கிறது.அதை அவன் மொழி பெயர்க்கும் போது அது நம்பிக்கை எனப்படுகிறது. உங்கள் மடலுக்கு மிக்க நன்றி. அன்புடன் ருத்ரா 16-Sep-2017 10:28 pm
சிந்தனை வீச்சு சிறப்பு ! 16-Sep-2017 8:33 am
ருத்ரா - ருத்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2015 11:46 am

குப்பைத்தொட்டியில் வீசப்படுபவை

===========================================ருத்ரா


ஆம்

மதமாற்றம் தான் என் நோக்கம்.

மனிதனின் மதத்தை அல்ல...

கடவுளின் மதத்தை.

உயர்வான மனிதத்தை

வெறும் அச்சுப்பிழைக்குப்பைகள் என்று

அந்த தொட்டிக்குள் வீசப்பட செய்வதற்கு

அந்த கடவுளுக்கு

என்ன உரிமை இருக்கிறது?

கை கால்கள் அழுகவிட்டு

அழகு பார்த்து அழவைப்பதற்கு

எவர் கொடுத்தார் அந்த உரிமையை?

நீங்கள் வேண்டுமானால்

அந்த குறியீடுகளை

அந்த ஸ்தோத்திர வசனங்களை

அந்த பஜனைப் பாட்டுகளை

நாமாவளிகளை

குவித்து வைத்துக்கொள்ளுங்கள்.

உரிக்க உரிக்க‌

வர்ணங்கள் மட்டுமே

உங்கள் சந்நி

மேலும்

மிக்க நன்றி திரு.முகமது சர்பான் அவர்களே. அன்புடன் ருத்ரா 05-Apr-2015 6:01 pm
முதலில் என் கைதட்டல்கள் அழகான படைப்பு ஆழமான வரிகள் வாழ்த்துக்கள் 01-Apr-2015 11:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (40)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஜெகதீஷ்

ஜெகதீஷ்

சென்னை
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (40)

sankarsasi

sankarsasi

chennai
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (42)

இராமகிருஷ்ணன் வெ

இராமகிருஷ்ணன் வெ

கிருஷ்ணகிரி
பூந்தளிர்

பூந்தளிர்

சிதம்பரம்

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே