malini1 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  malini1
இடம்
பிறந்த தேதி :  23-Mar-1983
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Aug-2012
பார்த்தவர்கள்:  298
புள்ளி:  112

என்னைப் பற்றி...

- கவிதையில் பல
கற்பனைகள் செய்வேன்...-
-கனவுக்குள் சில
சொப்பனங்கள் கொய்வேன்-......

என் படைப்புகள்
malini1 செய்திகள்
malini1 - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2013 8:57 pm

தாகம் என்று கொஞ்சம்
வேகமாய் ஓட
போகும் வழியில்
கானல் நீரால் சோகம்....

இதயம் துடிக்க
இடப்பக்க அறை இருந்தும்
இன்று அறைகள் மூட
அனாதையாய் என் இதயம்....

உன்னை கொஞ்சம்
உரசி ப்பார்க்கிறேன்
நெருப்பாய் கோபம்
உன் தேகம் எங்கும்....

அதையும் தாங்கி
உன் கைகள் பற்றவே
ஆசை இதயம் உன்னில்
இற(மறி) க்கிறது தினம்.....

மேலும்

ஊடலையும் அதன் பின்னான கூடலையும் சொல்லியுள்ளீர்கள் அருமை ! ஆனால் இது ஒருதலை ஊடலா ? 13-Dec-2013 8:04 am
முதல் நான்கு வரிகள் அற்புதம்.... 06-Dec-2013 5:49 pm
வலிகளை உணர்த்த கவிதையை விட வேறு களம் உண்டோ...நன்றி பேராசிரியரே... 28-Nov-2013 9:58 pm
இதயத்தின் வலியை உணர்த்தும் கவிதை. 28-Nov-2013 9:55 pm
malini1 - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2013 8:57 pm

விழி இமைக்காமல்
விழிக்கின்றேன் இரவில்...
வலி தெரியாமல்
அழுகின்றேன் கனவில்....

காரணம் புரியாமல்
கவிதை எழுதுகிறேன்...
காயப்பட்ட இதயம் ஆகையால்
கண்ணீர் வடிக்கிறேன்....

கூடும் ரணங்களால்
குத்தகை ஆகிறேன்...
விடையில்ல கேள்விகளால்
சிக்கித் தவிக்கிறேன்....

பார்வையின் ஓரத்தில் தான்
பரிதவித்து போகிறேன்...
விழிநீர் ஈரத்தில் நான்
முழுவதும் நனைகிறேன்....

அருகில் ஆபத்தை
விரும்பி ஏற்கிறேன்...
திரும்பி பார்க்கையில்
தெருவில் கிடக்கிறேன்....

அன்பின் ஆழத்தில்
கலப்படம் காண்கிறேன்...
அதனால் தான் இன்று
அனைத்தையும் வெறுக்கிறேன்....

ஒருமுறை தொலைந்ததால்
உன்னில் பலமுறை

மேலும்

உங்கள் கவிதை வரிகளில் ஒரு வகை தாக்கம் தெரிகிறது .. என்னை அறியாமல் நானும் மீண்டும் மீண்டும் வாசித்து பார்க்கிறேன் ஆனாலும் விடையில்லா வினாக்கள் போல் எனக்கும் விடைகிடைக்காமலே போய் விட்டது.....! அருகில் ஆபத்தை விரும்பி ஏற்கிறேன்... திரும்பி பார்க்கையில் தெருவில் கிடக்கிறேன்.... அருமையான வரிகள் தாமு 02-Dec-2013 2:29 pm
உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி....பேராசிரியரே... 28-Nov-2013 9:16 pm
கருத்து தங்குதடையின்றி வெள்ளமாகப் பாய்கிறது. உள்ளுணர்வுகளைக் எழுத்தில், குறிப்பாக க்விதையில் வடிக்கும்போது ஆறுதலும் நிம்மதியும் கிடைக்கும். நம்மை அடுத்தவர் இடத்தில் வைத்து அவ்ர்கள் நிலையைக் (Empathy) கற்பனை செய்வதன் மூலமும் அவர்கள் உணர்வைக் கிரகித்து நம் க்விதையில் மெருகேற்றலாம். தொடருங்கள். 28-Nov-2013 8:16 pm
மிக்க நன்றி தோழமையே..... 28-Nov-2013 5:48 am
malini1 - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2013 1:38 pm

உண்மையில் நடந்ததொன்று...
உலகம் அறிந்ததொன்று.....
நிஜம் மறைந்தது கண்டு...
நிலைமை தலைகீழ் இன்று.....

மனம் நொந்தது கண்டு...
மகிழ்ச்சி தொலைந்தது இன்று.....
தப்பின்றி தவிப்பது கண்டு...
தணல் போலாகுது உள்ளம் இன்று....

என் அறியாமையை கண்டு...
நானே அழுகின்றேன் இன்று....
வீணே பழி சுமப்பது கண்டு...
தானே நிற்குது மூச்சும் இன்று.....

நிஜம் அறியாத நிழல்கள் சேர்ந்து...
நினைப்பதை எல்லாம் பேசுது இன்று.....
உண்மை என்றும் சாகாது என்று...
உரைத்திருந்தார் நம் பாரதி அன்று.....

தூரே தெரியும் கானல் நீரும்...
அருகே சென்றால் காணாமல் போகும்....,
அநியாயம் பேசும் ஊரும் பேரும்...
அதை நினைத்து ஒர்ந

மேலும்

யாவும் கற்பனை தான்...கவிதைக்கு அழகே கற்பனை தானே...நன்றி உங்கள் கருத்துக்கு.. 28-Nov-2013 7:11 pm
மிக்க நன்றி தோழமையே... 28-Nov-2013 6:16 pm
கவிதையில் உணர்ச்சிகளின் வேகம் தெரிகிறது. அருமை தோழமையே! 28-Nov-2013 9:41 am
முனைவர் பட்ட ஆய்வுப் பணியில் மூழ்கியிருந்த போது குடும்பத்திலும் சுற்றிய்ருந்த சிலராலும் சகித்துக் கொள்ளமுடியாத தொல்லைகள். அப்போது எனக்கும் என் மனைவிக்கும் ஆறுதல் (1999) வேண்டுமென்ற நோக்கத்தில் இதை எழுதி என்னை நானே தேற்றிக் கொண்டேன். உங்களுக்கு ஆறுதல் தந்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன். கருத்துக்கு நன்றி. 27-Nov-2013 8:00 pm
malini1 - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2013 1:20 pm

நிலவொன்று கண்டேன் அதில் - என்
நினைவற்று போனேன்...
நிம்மதி அவளில் தேடி - என்
நின்னை தொலைத்து நின்றேன்...

நேற்று அந்த நாளை - என்
நெஞ்சுக்குள்ளே விதைத்தேன்...
நேரம் தூரம் இல்லையென்று - என்
நெஞ்சம் உருகி நின்றேன்...

உலகம் என்ற வட்டத்தின் - உள்ளே
நானும் ஒழிந்தேன் என்...
உயிரே அவள் தான் என்ற - புது
உண்மை அன்று படித்தேன்...

வாழ்க்கை என்றால் நீயே - என்ற
வார்த்தை அவளில் கேட்டேன்...
வாழ்வதே கொஞ்சம் என்று - உயர்
வானம் தொட்டு பறந்தேன்...

எப்போதும் இல்லா ஆனந்தத்தில் - நான்
ஏழிசையும் இசைத்தேன் ...
எல்லாம் பொய்யென்று - ஆனால்
எப்படி நானும் வாழ்வேன்???

மேலும்

எல்லாம் பொய்யென்று தெரிந்த பின் மனதைத் தேற்றிக் கொள்ளவேண்டியது தான். பொய்மையை மெய்யாக்க சில வழக்குரைஞர்களால் தான் முடியும் சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து. 26-Dec-2013 10:14 pm
மிக்க நன்றி நண்பரே... 27-Nov-2013 8:15 pm
மிக்க நன்றி தோழமையே.. 27-Nov-2013 8:12 pm
எப்போதும் இல்லா ஆனந்தத்தில் - நான் ஏழிசையும் இசைத்தேன் ... எல்லாம் பொய்யென்று - ஆனால் எப்படி நானும் வாழ்வேன்??? ==== நல்ல சொல்லி இருகிறீங்க .... நல்ல காதலை .... 23-Nov-2013 8:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (53)

இவர் பின்தொடர்பவர்கள் (53)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

sathiyan

madurai
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவரை பின்தொடர்பவர்கள் (53)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
தூ.சிவபாலன்

தூ.சிவபாலன்

ARANTHANGI, PUDUKOTTAI
மேலே