எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எப்பொழுதுமே பெண்கள் பற்றிதான் யோசித்து கவிதைனு எழுதுவியா? நண்பர்கள் பற்றி எழுதசொல்ற. நானும் யோசிச்சேன்....But விடுடா...

Friends_க்குள்ள என்னடா மச்சான் கவிதை. HAPPY FRIENDSHIP DAY டா.... ம்...

மேலும்

இன்றெனக்கு
இரட்டிப்பு மகிழ்ச்சி;
அதிசயமாய்
முகம்கொடுத்து
பார்த்தோ
புன்னகைத்தோ
விசாரித்தோ
விடவில்லை நீ
அணிந்திருந்த
உடையின் நிறம்
நமக்குள்
ஒன்றானதால்...
=============
ப்ரியன்

மேலும்

சட்டியில் இல்லாமலே
அகப்பையில் வருகிறது
அவளை நினைக்க நினைக்க
கவிதை
==================
ப்ரியன்

மேலும்

நன்றி தோழரே... 08-Jun-2015 8:05 pm
சட்டியும் அகப்பையையும் சரியாப் புரிஞ்சுக்கிட்டீங்கள்ள... அப்ப அசத்துங்க வாழ்க வளமுடன் 08-Jun-2015 6:17 am
நன்றி தோழா... 07-Jun-2015 4:56 pm
உங்க எண்ணம் பல படிச்சி படிச்சே இப்படி ஆயிட்டேன்... 😊 நன்றி... ஜி. 07-Jun-2015 4:56 pm

நிறம் மாறுமோ பூக்கள்
இந்த ஆண்டு என்னவள்
வேறுநிற சீருடையில்
===================
ப்ரியன்

மேலும்

உண்மையாகவே பள்ளி குழந்தைகளை பார்த்து தோன்றியதுதான். இ இ இ... நான் வேறு மாதிரி எழுதிவிட்டேன். அடுத்த ஆண்டு சேர்க்கனும் மகன். 06-Jun-2015 10:08 am
என்னவள் ??? ? வாழ்த்துக்கள் ரியன்!! (மகளா?) 06-Jun-2015 9:57 am

ஏதோ இப்ப சொல்லனும்னு தோனிச்சி: - ப்ரியன்
====================================
FAKE ID வைப்பு பற்றிய ராம் வசந்தின் அவர்களின் எண்ணத்திற்கு பின்னூட்டமாய் ஜின்னா அவர்கள் எழுதியது.
====================================
மிகவும் பிடிக்காத அதுவும் அருவருவக்க தக்க செயல்களில் ஒன்று போலி பெயர்களில் உலாவருவது...
அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்....
இங்கே யாரும் திருடர்கள் அல்ல... மப்டியில் வந்து எங்களை பிடிக்க...
ஏன் உங்களுக்கு இந்த போலி நாடகம்...
இப்படி போலியில் இருக்கும் நீங்கள் என்ன உண்மையை சொல்லி கிழிக்க போகிறீர்கள் ?
கவிஞர்களுக்கு அழகே உண்மை முகம்... அதுவே இல்லை எனும்போது எப்படி உங்கள் எழுத்தை (...)

மேலும்

ஒருவர் எழுத்தை விமர்சிக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை தோழரே. சிலர் எழுதுவது அடுத்தவரை சீண்டுவது போல உள்ளதே. எனக்கு பதில் வேறொருவர் கேட்கும் போது, நான் சப்போர்ட் செய்கிறேன் அவ்வளவே. இதுக்கு பேர் துதி பாடுவது அல்லவே. எனக்கு பழக்கமும் இல்லை. அப்புறம்... நான் என்ன கட்சியா நடத்துறேன், ஜால்ரா கூட்டம் தேட. இதுவரை என் படைப்பு படித்து பிடித்தவர்கள் மட்டுமே என்னை பாராட்டி உள்ளார்கள், அது என்றும் போதுமே எனக்கு. 05-Jun-2015 9:54 pm
உங்கள் கருத்தும் சரிதான் நண்பரே, இங்கே முகமூடி போடாத சிலரின் முகமே முகமூடிதானே? முகமூடி போட்டும் போடாமலும் முகஸ்துதி செய்யும் போலிப் படைப்பாளிகளை தோலுரிக்க முகமூடி தேவைப்படுகிறது. முகத்தையும் பார்க்க வேண்டாம், முகமூடியையும் பார்க்க வேண்டாம். சொன்ன கருத்து சரியா பிழையா என்று பார்க்கவேண்டும். நடுநிலையோடு விமர்சியுங்கள், துதி பாடாதீர்கள், உங்களிடமிருந்து நல்ல எழுத்து வரும், வளரும். நல்ல படைப்பாளிக்கு ஜால்ரா கூட்டம் தேவையில்லை. 05-Jun-2015 9:10 pm
உங்கள் கருத்தும் சரிதான் அய்யா! இங்கே முகமூடி போடாத சிலரின் முகமே முகமூடிதானே அய்யா? முகமூடி போட்டும் போடாமலும் முகஸ்துதி செய்யும் போலிப் படைப்பாளிகளை தோலுரிக்க முகமூடி தேவைப்படுகிறது. முகத்தையும் பார்க்க வேண்டாம், முகமூடியையும் பார்க்க வேண்டாம். சொன்ன கருத்து சரியா பிழையா என்று பார்க்கவேண்டும். உங்களைப் போல் நடுநிலையோடு விமர்சிப்பவர்கள், கருத்துச்சொல்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 05-Jun-2015 9:09 pm
இந்த சலசலப்புக்கெல்லாம் பயந்து ஓடுபவரா நீங்கள்! விடாதீர், பிடியும்! 05-Jun-2015 9:06 pm

தோழர்களுக்கு காலை வணக்கம்...

திருவிழாவுக்கு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளேன்.
"இது திருவிழா காலம்" (246971) என்ற என் கிறுக்கல் கவி வாசிக்காதவர்களுக்காக இந்த "திருவிழா" படம். செல்லியம்மன் ஆண்டவர் அனைவரையும் ஆசிர்வதிப்பார். நன்றி.
படம் : ப்ரியன் (03.06.15)

மேலும்

பக்தியான தங்கள் வரிகளுக்கு நன்றி தோழரே. 04-Jun-2015 3:51 pm
செல்லியம்மா செல்லியம்மா என்ன சொல்லிப் பாடுவேன் செல்லியம்மா செல்லியம்மா நீ செல்வி அம்மா பிரியத்துடன் சொல்லச் சொல்ல நீ அள்ளித் தரும் செல்வி அம்மா ! ___அன்புடன் ,பக்தியுடன் கவின் சாரலன் 04-Jun-2015 2:19 pm

வாழ்த்துக்கள்...

கவியிங்குநீ எழுதிடவே
கண்டெடுத்த உனைத்தான்
புவியெங்குநீ சென்றாலும்
புகழ்ந்திடுமே கைகொடுத்து

உன்னெழுத்தில் காதலால்
உறவுகளை ஈர்க்கின்றாய்
உன்வயதில் எனைக்காண
உவகைகள் தருகின்றாய்

என்பிள்ளை பெயர்வைத்து
இருக்கின்றாய் நீயும்தான்
இனும்சிறப்பாய் வாழ்ந்திடவே
இறைவனிடம் வேண்டுகிறேன்

அன்புடன்... ப்ரியன்.

மேலும்

வாழ்த்தில் இணைந்தமைக்கு நன்றி... 03-Jun-2015 9:00 am
வாசிப்பிற்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழரே. 03-Jun-2015 8:59 am
முகிலுக்கு .. மன்னிக்கவும் ....தட்டட்ச்சு பிழை வந்ததற்கு முகில். 03-Jun-2015 7:14 am
முயலுக்கு முத்தான வாழ்த்துக்கள் 03-Jun-2015 7:13 am

தளத்தார்/தோழர்கள் கவனத்திற்க்கு:
(நியூட்டன் 3 ஆம் விதிப்படி...)

எழுத்து தளம் வருவதற்க்கு முன்பு கூட நான் பேதங்களுடன் (அதிகம்) இருந்ததில்லை. இங்கு வந்த பிறகு அதிகமாகி விட்டது. எழுத்திலேயே சுற்றிக்கொண்டு இருப்பதால் பிறர் கூற்றை படிக்க படிக்க, அது நானொரு இந்து என்பதை நினைவுபடுத்துகிறது. நன்றி...

மேலும்

உண்மை தோழரே. அப்படி வெளிப்படையாக குழுக்கள் தோன்றினால், பாவம் எழுத்து.காம் 02-Jun-2015 2:50 pm
முகநூலை விட மோசமாக போய்க் கொண்டிருகிறது எழுத்தின் எண்ணம். பிரிவினைகள் வெளிப்படையாக விதைக்கப்படுகிறது. சாதி மதம் சார்ந்த குழுக்கள் தோன்றினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை...வருத்தத்துடன் நான்... 02-Jun-2015 1:26 pm
புரிதலுக்கு நன்றி தோழரே. 02-Jun-2015 1:25 pm
எனக்கு சற்று குழப்பமாக இருந்தாலும் ப்ரியன் ஆதங்கம் சரியே! நானும் அவர் பக்கம் சாய்கிறேன்! 02-Jun-2015 1:14 pm

பெண்ணே ஏனிப்படி - ப்ரியன்

என்னையுன் நினைவுக்கு
இரையாக்கி விடுகின்றது
நீ தவறவிடும்
கைகுட்டையும்
உன் கூந்தலுதிர்
பூக்களும்...

மேலும்

😊 நன்றி தோழரே... 27-May-2015 7:24 pm
ரசிப்பிற்கு நன்றி தோழரே... 27-May-2015 7:23 pm
இதோ உங்கள் கவிதை என் கண்ணுக்கு இரையாகி விட்டது.... அழகிய கவிதை 27-May-2015 6:19 pm
இனியும் பல நினைவுச் சின்னங்கள் கிடைக்கும் காதலரே..காதல் படுத்தும் பாடு..... சின்னக் கவிதை சிணுங்குகிறது..அழகு.. 27-May-2015 5:52 pm

புதியதோர் உலகு உனக்கு - ப்ரியன்

கிரிக்கெட் சீரியலில்
யாவரும் மூழ்கிட
விளம்பரங்களில்
விருப்பம் உனக்கு

காலை மாலை
வைத்திருந்தாலும் ஓட
கண்டுதும் பெரியது
தாய்தான் உனக்கு

தேனும் பாலும்
கொடுக்க இருந்தும்
திண்றிட பிடிக்கும்
மண்தான் உனக்கு

பகல் முழுவதும்
விழித்து இருந்தாலும்
இரவிலும் விளையாடிட
ஏக்கம் உனக்கு

பஞ்சு மெத்தை
பட்டு இட்டாலும்
அன்னை மடியில்தான்
ஆசைகள் உனக்கு

மேலும்

நன்றி நட்பே... 25-May-2015 5:36 pm
சிறப்பு... 25-May-2015 12:55 pm
நன்றி தோழா... 25-May-2015 9:38 am
நன்று தோழா.. 25-May-2015 7:55 am
மேலும்...

மேலே