ஹரி ஹர நாராயணன் - கருத்துகள்

கொத்தாய் நனைந்தேன்
பித்தாய் மகிழ்ந்தேன்
முத்தாய் பொழிந்ததாய்
சொத்தாய் கிடைத்தாய்.....!!

எந்தாய் தந்த அன்பை
தந்தாய் எனச் சொல்ல - தயங்க
வைத்தாய் - காதலே காரணம் -
அத்தாய் என் மழலையிலே - தந்த முத்தம்....!!

என அன்பையும் - காதலையும் உணரவைத்த படைப்பு - அழகு....!!

காதலும் வைரஸ் தானோ ?! இதயக்
கணினியும் கஷ்டப் படுதே.....!!

ஹேன்காகி ஹேன்காகி
ஹெட் வலியே கூடிடுதே.....!!

வைரஸ் கிளீனாய் ஆன்மீகம்
வைப்போமா இதயத்தில்....

வதைக்கும் இந்தக் காதல் போதும் - என
வயோதிகன் எனது கருத்து தோழா.....!!

தங்கள் படைப்பு அருமை - அன்புடன் ஹரி

வெல்லத் துணிந்து விட்டால்
வேதனையான சூழ்நிலைகளை
சொல்லத் தயக்கமென்ன ?
சொர்க்கமே இவ்வாழ்வு .....!!

கொல்லக் கிளம்பிடுவோம்
கோபத்தையும் தாபத்தையும்
சொல்லத் தயக்கமென்ன ?!
சொர்க்கமே இவ்வாழ்வு....!!

அள்ளப் பழகிடுவோம்
அன்பு நிலை ஆழ்மனதில்
சொல்லத் தயக்கமென்ன ?!
சொர்க்கமே இவ்வாழ்வு...!!

மெல்லக் கற்றிடுவோம்
மேன்மையுற மனித நேயம்
சொல்லத் தயக்கமென்ன ?!
சொர்க்கமே இவ்வாழ்வு...!

வாழ வைத்து வளர்த்திடுவோம்
வையகத்தில் உயிரனைத்தையும் - தோழி
சொல்லத் தயக்கமென்ன ?!
சொர்க்கமே இவ்வாழ்வு...!!

என எழுதி பழகிய போதும் - உங்களது தயக்கத்தையும் ஆமோத்திக்கத்தான் வேண்டியுள்ளது - ஏனெனில் - உங்கள் படைப்பில் புதைந்திருக்கும் யதார்த்தமான உண்மைதான் - எனவே பாராட்டை

சொல்லத் தயங்கினேன் - என்னையும்
சோகம் வந்து பற்றுவதால்....!!

நன்றி - ஹரி

ஷார்ப்பான பென்சில் என்பேன்
ஷாக்கடிக்கும் கரண்டு என்பேன்
ஷக்கலக்க பேபி என்பேன்
ஷதா சர்வகாலமும் உன் நினைவு என்பேன்...!!

எத்திசையும் உன் உருவம்
எவ் வொலியும் உன் பேச்சு
என்னருகே நிலவொளியும் - அதில்
ஏனோ உன் விரல் ஸ்பரிசம்.....!!

எங்கேயடி உன் உருவம் - என
என் இதயம் கண்டேன் அங்கு உன் உருவம்...!!

என கவியின் மேல் ஏற்பட்ட - காதலினால் - கவிப் பித்தனாக்கிய - காதல் கீதம் - இனிய ஸ்வரம்...!!

புரிந்து கொண்டால் வலி எதற்கு ?
புனித காதலில் வாழ வழி இருக்கு..!

காதலென்றால் என்னவென்று
கண நேரம் தெளிந்தால் போதும்....!!

காட்சிப் பிழை இல்லை என்றாகும்
காதலில் எப்படி தோல்வி உண்டாகும்

கர்ப்பத்தில் தனித்திருந்தோம் - நம்மீது
காதலோடு தாய் இருந்தாள்

காலம் போக போக - மானுடர் - தாய்
காட்டிய காட்டிய காதல் மறந்தே

களிப்புற்றே கண்கள் கண்ட
காட்சி மாயையில் தவித்து நின்றார்....

எனவே -

காதலில் வலிகள் இல்லை அம்மா
கற்று உணர்ந்து கடைத்தேற பல வழிகள்தான் உண்டு அம்மா....

என என்னை காதல் ஞானியாக்கிய படைப்புக்கு ஒரு சபாஷ்....( பரவாயில்லை....பாராட்டுவதற்கு வடமொழியையும் உபயோகிக்கலாம் - சபாஷ் )

இல்லை என்றாய் - என்மீது வெறுப்பை....!
இனிமை என்றேன் - நீ வைத்த அன்பை....!
இரண்டா இதயம்..?! - ஒன்றே என்றோம்.....!
இரவும் பகலும் - காதலில் வாழ்ந்தோம்.....!
இருக்கும் அனைத்தும் - விழிகளில் மறைய
இமை மூடி காதல் முகம் இனித்திடக் கண்டோம்...!!
இல்லை என்று ஒன்றுமில்லை - காதலில்
இருப்பது கோடானு கோடி தோழி.....!!
இந்தப் படைப்பில் மோனைத் தொடை என
இலக்கணம் பயின்ற நடை மிக அருமை வாழி...!!

இல்லை கவிதை
முல்லை வாசம்.....!!

கண்களை நீ மூடிக் கொண்டால்
கவிதைகள் எப்படி நான் படிப்பது ?!
கண்ணே....என்...கண்ணே என என்
கண்ணின்மணி எப்படி நான் ரசிப்பது ?!

மீன் என நீந்துகிறாய் - விழியால்
மின்னலென வெட்டுகிறாய்
காண் என மிரட்டுகிறாய் - நான்
கண்டாலோ நாணத்தில் இமை மூடுகிறாய்.....

எனவே - கண்ணே - கண்ணே

கண்களை நீ மூடிக் கொண்டால்
கவிதைகள் எப்படி நான் படிப்பது ?!
கண்ணே....என்...கண்ணே என என்
கண்ணின்மணி எப்படி நான் ரசிப்பது ?!

என்று கண்களையும் / பார்வையின் பரிமாணத்தையும் பயில வைத்த - புகழ் விழியின் கவிதை - புகழ்ச்சிக்கு அப்பாற்பட்டது - வளர்க

தாக நிலையுணர்ந்து
தாய்மை உணர்வோடு - நீ
தவித்த வாய்க்குத்
தண்ணீர் கொடு! அந்தத்
தண்ணீரும் இலநீராய் இனிக்கும்...!!

பண்போடு வரவேற்று
பாசத்தோடு இலைபோட்டு
பசித்த வயிற்றுக்குப்
புசிக்க உணவு கொடு! - நீ
படைத்த உணவு அந்த
பாற்கடலில் தோன்றிய அமுதாகும்...!!

நிறைவது மனம் ஆகட்டும் - பின்னர்
நிறைவது வயிராகட்டும்......
இதைப் போல தர்மம்
இவ்வுலகில் வேறு ஏது!
இதமான அன்பே
இந்தப் பூமியை சொர்க்கமாக்குது.....!!!

பூவோடு சேர்ந்த நாரும் மனம் பெறுவதாய்.......ஐயாவின் சொல்லோவியத்தொடு கொஞ்சம் என் வரிகளையும் வரைந்து பார்த்தேன் - தங்கள் படைப்பு அழகு.

வெல்லத்தான் நினைத்தேன் அவளை முடியவில்லை - விழியால்
கொல்லத்தான் துணிந்தால் நானும் தடுக்கவில்லை - வலிகளும்
வெல்லம்தான் அவளால் தவிர்க்கவில்லை - மகிழ்ச்சி
வெள்ளமதான் அணைகட்ட ஏனோ முடியவில்லை........!!

முத்தைத் தரு பத்தித் திருநகை
வித்தை வழி இந்தத் தமிழ் கவி
தித்தை தக தித்தை சந்தத்தில் - சித்
தத்தை வெகு வாக கவருதே....!

தமிழன் இனிமை - இக்கவியில் இனிமை அக்கா....

எங்கள் உலகம் இனியது
என்றும் அது புதியது......!
நாங்கள் எழுதும் விதியது
நாளை அதனால் விடியுது...!!

அன் - பால் பெற்ற தெம் - பால் - மழலை
தன் - பால் மகிழ்வு கொள்ளுதே....!
அப் - பால் இல்லை இப் - பால் - இறையென - நற்
பண் - பால் அன்னை முகம் காணுதே....!!

கவிதை படிக்கும் பழக்கம்
கவிஞன் எனக்கும் உண்டு - என
கருத்தில் நானும் தெளிந்தேன்
காரணம் காதலி சிரிப்பை ரசித்தேன்....!

எதிரில் அவளும் இல்லை என்
எண்ணமே அவளின் உருவம்
எனவே நானும் சொல்லுவேன்
எழில் சிந்தையின் அழகே சிரிப்பு.....!!

வெண்மையின்
பசிசுத்தம் - இந்தக் கவிதையில் உணர்ந்தேன் - அற்புதம் அம்மா....வாழ்த்துக்கள்

பக்குவப் படுவதே
பகுத்தறிவென - மனிதன்
படித்துக் கொண்டால்
பணிந்தே சமநிலை வரும்......!!

உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்விலா நிலை வேண்டும் என்ற
சீர்காழி பாடிய பழைய திரைப் பாடல்
சீரும் சிறப்புமாய் நம் செவிகளில் தினம் விழும்....!!

நல்லதைக் கேட்கவும் சொல்லவும்
நாட்டம் வரும் - கற்றதுபோல்
நடந்து காட்டவும் வாழ்விலே
நலமும் வரும்.......!!

நிறைவைக் காண தெளிவு வரும் - அந்த
நிலையை அடைந்தது சமநிலை வரும்.....

வானம் நோக்கி சென்று
பூமி நோக்கி வீழ்கின்ற
வண்ண மத்தாப்பூ பூ - இந்தப் படைப்பு தெரிந்தாலும்......

மீண்டும் விருட்சமாக உருவெடுக்க
வீழ்ந்த விதையைப் போல் தோற்றமளிக்கிறது -

நல்ல மனம் வாழ்க

அன்புடன் ஹரி

ஆடி அடங்குவதே மானுட
ஆயுளின் நியதி என்று
ஓடி முடித்தே மின் விசிறி
ஓய்ந்த காட்சி யதார்த்தம்......!

அகத்தின் உள்ளே வந்த
ஆசை வெயில் சுட்டேரிக்குதே
அதை நமது குளிர்சாதனப் பெட்டி
அடக்கி தணிக்கவும் கூடுமோ ?!

நிறைவையும் குறையாய் காணும்
நிலை மானிடரிடம் மாறுமோ....
நிழலையும் வெயிலாய் கண்டால்
நிம்மதியும் வந்து சேர்ந்திடுமோ...?!

காயம் அது சாயும் வரை - பலர்
களிப்பினிலே மயங்கிடுவர்....
காற்றாய் தேகம் ஆன பின்னே - மனிதர்
கடவுள் நிலை எய்திடுவர்.....

அப்போது......

சுடும் வெயிலும் சுகமளிக்கும்....
சுந்தரத் தோற்றமே - உலகம் எங்கும்.....

என என்னை - சுய பரிசோதனை செய்ய வைத்த - டாக்டர் ஐயாவின் இந்தப் படைப்புக்கு நன்றி

மிக்க மரியாதையுடன்

ஹரிபூ விரிந்தது - அதை விவரித்தேன்
பூ சிரித்தது அழகு என்று.....

பூ சிரித்தது அதை கவனித்தேன்
பூ ரிப்பில் உன் முகம் என்று.....

பூ வின் சுவாசத்தை நேசித்தேன்
பூ த்தாய் மனதில் அன்பென்று...

பூ வே உனையே யாசித்தேன்
பூ க்கட்டும் இன்பம் தினம் என்று

கவி புகட்டிய மலர்களே மலர்களே என்ற இக்கவிதை இனிமை

மனசுக்குள்ளே நீங்களும் உண்டு - அதை
மறவாதீர்கள் அதுதான் நன்று - எந்த
வலிக்கும் நிவாரணம் என்பது உண்டு - அது
வளர்கின்ற அனுபவம் என கற்பதே நன்று....!!!

ஆசைப் படுகிறோம் அதனால் வலி - நமை அது
அடைய வைக்குதே ஐயோ கிலி
ஆக வேண்டாம் அதற்குப் பலி - நட்பே
ஆனந்தம் அடையுங்கள் அது ஒன்றே வழி.....!!

( என்னால் முடிந்த வலிக்கு மருந்து - இந்த வரி )

தென்றலின்
தேகத்தில்
ஹோலி வண்ணங்கள்......

பட்டாம் பூச்சிகள்......!


ஹரி ஹர நாராயணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே