Sooriya Vizhi- கருத்துகள்

இனிய நல் வாழ்த்துக்கள் இன்று புதிதாய்ப் பிறந்த நாள் காணும் சகோதரிக்கு!

அன்பரே...

தங்களின் பண்பான வரவேற்பில் எமது உள்ளம் மகிழ்ந்தோம். இத்துனை நாளாய் இம்மன்றம் அறியாது இருந்தமைக்கு வருந்துகின்றோம்.

நன்றி....

நட்புடன்
சூரிய விழி

நன்றி மங்காத்தா அவர்களே...

கலையவரே... என்னினும் இளையவரே... உமது கவிதை அருமையய்யா. வெற்றிகள் உமைத் தேடிவரும் என்று வாழ்த்துகிறேன்.
நட்புடன்
சூரியவிழி

தரம் பார்த்து வருவதல்ல கவிதை... கவிதையில் தரம் பார்த்தலும் தரமல்ல...கவிதை என்பது வாசிப்பவரின் உள் வாங்குதலோடு தொடர்புடைத்து. உங்கள் கவிதை மிகவும் அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நட்புடன்...
சூரியவிழி.

நன்றிகள் பல நண்பா...!

மிக நன்றாக உள்ளது உங்கள் கவிதை.
நட்புடன்
சூரிய விழி

அஹமது அலி...
உங்கள் கவிதை மிகவும் அருமை. வாழ்த்துக்கள் நண்பா!
நட்புடன்
சூரிய விழி

மிகச் சரியாகச் சொன்னீர்கள் மங்காத்தா அவர்களே... சில வரிகள் மனதை காயப் படுத்துகின்றன இந்த கவிதையில். குறிப்பாக
காதலெனும் போர்வைப் போர்த்தி
களிப்பினில் உன்னை மயக்கி
காமுகனுன் கற்பினைத் தின்றிட
காரிகை நீயும் இசையாதே !
இங்கே கற்பென்று எதைக் குறிப்பிடுகிறார் கலை? 'கற்பினைத் தின்றிட' இதில் பொருள் குற்றமும் உள்ளது. எந்த ஒரு இழி செயல் புரிவதை யும் உண்பதற்கு உவமைப் படுத்துவானேன்? உண்ணுதல்/திண்றல் என்பது எவ்வளவு உண்ணதமான ஒரு செயல் என்பது கலைக்கு தெரியாமால் போயிற்றே? அதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது.

நன்றாகச் சொன்னீர்கள் முத்துநாடன் அவர்களே... இந்தக் கவிதையின் தலைப்பே மிகப் பிற்போக்காக உள்ளது... மன்னிக்க வேண்டும் கலை அவர்களே, எனது தாழ்மையான கருத்து இது.

மிக மிக நன்றாக உள்ளது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்.
நட்புடன்...
சூரிய விழி

மங்காத்தா அவர்களே... நீங்கள் 'சுட்டது' என்று குறிப்பிடுவது கவிதையையா? இல்லை பஜ்ஜியையா? :) சரி கவிதையை என்றால் மன்னித்து விடுங்கள், இந்த கவிதையை எழுதி ஒரு ஆறேழு வருடங்கள் ஆகின்றன. முன்னர் ஒரு இணைய மையத்தில் பதிப்பித்திருந்தேன். அந்த மையம் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
நட்புடன்...
சூரிய விழி

மிக்க நன்றி மங்காத்தா அவர்களே. சீரான சிந்தனை இருந்தால் செய்பவை யாவும் சிறப்பே. இல்லையா மங்காத்தா அவர்களே?

நன்றி மங்காத்தா அவர்களே!

ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல கவிதை...
எனக்கும் அவ்வப்போது இது போன்று தோன்றுவதுண்டு. நல்லா அழகா எழுதி இருக்கீங்க. ஒரே ஒரு மனக்கவலை. உங்கள் கவிதைத் தலைப்பு. சீதையையும் கண்ணகியையும் நாம் இழுப்பானேன்?
நான் கண்ணதாசனின் பட்டுக் கோட்டையாரின் மிகப் பெரும் ரசிகன்.
கண்ணதாசன் கூட காம ரசம் பாடியுள்ளார், ஆனால் இன்றைய கவிகள் போல அல்ல. இலை மறைக் காயாய் தான் பாடியுள்ளார். பட்டுக் கோட்டையாரின் பாட்டைப் பற்றி பேச என் ஒரு ஜனனம் போதாது. இன்றளவும் ஒரு முறையேனும்..."சின்னப் பயலே சின்னப் பயலே..." பாடலை கேட்காமல் இருந்ததில்லை.
வளர்ந்து வரும் உலகத்துக்கு நம்மை வலது கையாக இருக்கச் சொன்னார். தனிவுடைமை கொடுமைகள் தீர தொண்டு செய்யச் சொன்னார். ஆனால் இன்றைய கவிஞர்கள் தாங்கள் சொன்னது போல காமத்தையும் கதறல்களையும் காசுக்காய் கவிதை எனத் தருகின்றனர். அருமையாய் சாடியதற்கு நன்றிகள் பல.
நட்புடன்...
சூரிய விழி!

நன்றி மங்காத்தா அவர்களே...

ஹ்ம்ம் என்ன சொல்ல இந்த கவிதையைப் பற்றி.. ஆணாதிக்கத்தை சாடி விட்டு... ஒரு ஆணாதிக்கத்தை வைத்து விட்டார் இறுதி வார்த்தையில். இதில் இருந்து என்ன தெரிகிறது? எத்தனையோ புரட்சிகரமாக சிந்தித்தாலும் இயற்கையிலேயே ஆணாதிக்கம் என்பது உறைந்து கிடக்கிறது நம் அடி மனத்தில். தவறாக சொல்லி இருந்தால் அடியேனை மன்னித்தருள்க.
நட்புடன்...
சூரிய விழி.

இல்லாத இடைமீது இருக்கின்ற அந்த
இமயங்கள் தாங்கியவள் நடைபோட
தள்ளாடும் இளமனது தாகத்தால் நொந்து
தடுமாறும் நிலைக்குமனம் தடைபோட

இந்த வரிகள் மிக அருமை...
எதுகையும் மோனையும் உங்கள் கவிதையில் சிந்து பாடுகின்றன. வாழ்த்துக்கள்!


Sooriya Vizhi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே