vasanthimanaalan- கருத்துகள்
vasanthimanaalan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [38]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [10]
மௌனமாயிருந்து மாற்றம் கொண்டுவருவது நோக்கமா? --வ.ம.
தாய்மொழி யோடும் தம்பண்பைத்
***தவறா துயர்த்த முன்வருவீர்!
வாய்மொழி யோடும் நில்லாமல்
***வாழ்க்கை பயில உதவிடுவீர்!
ஓயவில்லை, கற்க, கற்பிக்க!
*** உம்பணி சிறக்கச் செய்திடுவீர்!
தேய்நிலை காணாச் சமுதாயம்
*** திறந்து காட்ட முன்வருவீர் !--வசந்திமணாளன்
மிக்க நன்றி உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் என்னை உயர்த்தும்-நன்றி -வசந்திமணாளன்
ம் ம் அந்த பயம் இருக்கட்டும்!..வ.ம.
=பல சமயங்களில் அனர்த்தமான கற்பனை மொழியை மீறி கவிதையாய் வெளி வந்து விடுகிறதே..
=இது நமது தளத்தின் பல படைப்புகளில் காணலாம்.
=கற்பனை என்பது அவரவரின் சிந்தனை குறித்தது தானே...கவிதை தவறு எனில் கற்பனையில் சிக்கல் தானே;
இந்த மூன்று முடிச்சுகளைக் கொஞ்சம் தனிக்கட்டுரைகளில் [for & against] எடுத்துக்காட்டுகளுடன் அவிழ்த்துக் காட்டுவீர்களா?--வம எ காஎ
அருமையிலும் அருமையான கருத்து..நன்றி- வ.ம.
வர வரக் கருத்துச் சொல்பவர்களைவிடக்
கட்டுரை எழுதுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள்; கவிதை, கட்டுரை, கதை, சிறுகதை என்றிருப்பதைப்போல, தமிழ்க் கவிஞர்கள் என்றிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் காலியாக இருக்கும் இடத்தில் விவாதங்கள் அல்லது விவாத மேடை என்ற ஒன்றை ஒதுக்கித் தரச் சொல்லி எழுத்துவிற்கு எழுதலாமா என்று யோசித்திக் கொண்டிருக்கிறேன்- வ.ம.(இது கருத்துதான்-விவாதிக்க வேண்டாம்)
ஆயிஷா பாரூக்கின் பெற்றால்தான் பிள்ளை படித்திருப்பீர்கள்; அதில் எனது கருத்துப்பதிவைப் படித்தீர்களா?-வ.ம.
தங்களின் மணியான படைப்புகளை இனி
அமெரிக்காவிலிருந்து தொடராலே..!- வ.ம.
ஆஹா! அருமையாக வடித்துவிட்டீர்கள்..வ.ம.
உழைக்க அல்ல மேடம்! இங்கு
உதைக்க வழி சொல்லப்படுகிறது..நீங்கள் பாரதிதாசனின் 'ஓடப்பர்.." பாடலைப் படிக்கவில்லையோ? - வ.ம.
ஏன்? இலவசங்கள் போதாதா? -வ.ம.
'தளத்தையும் , தமிழையும் பெருமைப் படுத்த எழுத்துக்கள் செய்வோம் !' இப்படி போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போனால் எப்படி? இதைப் பற்றி ஒரு நாலு கட்டுரையாவது நீங்கள் எழுதிக் காட்டினால்தான் எங்களைப் போன்றவர்கள் கொஞ்சமாவது புரிந்துகொள முடியும்..வ.ம.
மனவிளிம்பில் நிற்கும் வார்த்தைகள்
ஏனோ...விழுந்து விடுகின்றன
அதன் அடிவாரங்களில்...
உனது மன்னிப்பைக் கோரியபடி.
மனவிளிம்புகளிலிருந்து அதன் அடிவாரத்தில் விழுகிறதென்றால், மனதிற்குள்ளேயேதான் தங்கிவிட வேண்டும்; அப்படிஎன்றால் மன்னிப்பைக் கோரியபடி என்று எப்படி வாய்க்கும்? மின்னிப்பைக் கோர முடியாதபடியா? இல்லை மறந்தபடியா?இல்லை மன்னிப்பை மனதிற்குள்ளேயே மறைத்தபடியா? --இவ்வளவிதான் எனக்குக் கேட்க முடியும். உங்கள் கவிதைகளை எப்பொழுது படித்தாலும் என்னால் முழுதுமாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. நான் இன்னும் எவ்வளவோ வளரவேண்டுமென்று மட்டும் புரிகிறது..முயற்சிக்கிறேன்..வசந்திமணாளன்.எ.கா
போலிக் கவிஞர்களின்
பேனாக்களே
வண்டமிழின் பிணத்திற்கு
விறகுகளாகிக் கொண்டிருக்கும்
விபரீதத்தை இனியும்
வேடிக்கை பார்க்க முடியாது....
வண்டமிழோ பிணமாகிவிட்டதாய்ச் சொன்னபின், அது எரியும்போது போலிக் கவிஞர்களின் பேனாக்கள் விறகுகளாக எரிவதை ஏன் விபரீதமாகப் பார்க்க வேண்டும், அதை ஏன் வெடிக்க பார்க்க முடியாது?-- வசந்திமணாளன்.
வழக்கம்போல்
வார விடுமுறை என்றறியாமல்
உன்னைத்
தேடிக்கொண்டிருக்கின்றன
அந்தக் 'கலைக்கண்கள்'!--வசந்திமணாளன்
அருமையான கவிதை படைத்திருக்கிறீர்!
நிலநடுக்கமா ? ஓ! இவ்வளவு பெரிய ஊழலை இத்தனை நாள் மறைத்து வைத்ததற்க? இல்லை இப்பொழுதுதான் கண்டுபிடித்ததுபோல் போடும் நாடகத்திற்கா? எதற்கைய்யா நடுங்கும் நிலம்? நம்மவர்கள் நடுங்கப்போவதில்லை. --வசந்திமணாளன்
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் கடமைப் பட்டுள்ளேன்; மிக்க நன்றி.
அவலத்தை எடுத்துக் காட்டும்
...ஆவலில் கவிதை செய்வேன்!
கவலையைப் பதிவு செய்து
...கவனத்தை ஈர்க்கப் பார்ப்பேன்!
உவகையை, உள்ளத் துள்ளே
...உணர்ந்ததைச் சொல்லிப் போவேன்!
அவரவர் தீர்வு சொன்னால்
...அதனிலும் மகிழ்ந்து போவேன்!
நக்கீரன் இறையனார்க்குச் சொன்ன பதில் போல இருப்பதாக எண்ணிவிடவேண்டாம்--எசேக்கியல்.
என்ன ஆகவேண்டும்?
நன்றி கலை- வ.ம.