செந்தில் லோகு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : செந்தில் லோகு |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 15-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 453 |
புள்ளி | : 41 |
பள்ளியிலே படிக்கையிலே,
பக்கத்து சீட்டிலே,
என்னோடு அமர்ந்தவனே!
சின்ன சின்ன சண்டையிட்டாலும்,
சிரிச்சு பேச மறந்ததில்ல;
புளியமரத்துகட தேன்மிட்டாய்,
பகிராம நீயும் திண்ணதில்ல;
கண்ணாம்பூச்சி விளையாண்டாலும்,
கள்ளன் போலீஸ் விளையாண்டாலும்,
நம் முகத்துல சந்தோஷம்,
ஒருபோதும் குறஞ்சதில்ல;
பள்ளி தேர்வுல - நீ
விடை எழுத உதவிய என்னை,
விமலா டீச்சர் அடிச்ச அடி,
அடி மனதில் கேட்பதுண்டு;
அறியா பருவமதில்,
நம்மோட இந்த உறவுதான் நட்போ?
கல்லூரி பருவமதில்,
தேர்வுக்கு முன்னிரவு,
கண்முழிச்சு தான் படிச்சு,
ஒரே அறையில் கண்ணுறங்கி,
ஊர் கதைகள் தான் பேசி,
நட்டநடு ராவிலே,
வயிறு வலிக்க நாம் சிரிச்ச
சொந்த நாட்டிற்காக,
சொந்த ஊரை விட்டு,
கட்டிய மனைவியை விட்டு,
பெற்ற குழந்தையை விட்டு - என்னை
பெற்றெடுத்த முதிர்க்குழந்தைகளையும் விட்டு,
சுட்டெரிக்கும் வெயிலிலும்,
உறையவைக்கும் குளிரிலும்,
உறக்கமதை நினைக்காமல்,
கண்ணிமைகள் மூடாமல்,
நான் காத்திருப்பேன்! - நீங்கள்
சுதந்திர காற்றை சுவாசிக்க!
ஆஹா என்ன ருசி!
நான் குடிக்குற கஞ்சி!
நல்ல சாப்பாடு சாப்பிட்டு,
நாலு நாளாச்சு;
பண்டிகைகள் கொண்டாடி,
பல மாசமாச்சு;
அடுத்த வேள சாப்பாடு,
உறுதி இல்லாம போச்சு,
கடன கிடன வாங்கி,
விதை நெல்ல வாங்கி,
அறுவடையும் முடிச்சாச்சு;
என்னோட இறுதிமூச்சு,
இருக்கிற வரைக்கும்,
என் கை சேத்துல இறங்கும்!
என்னோட வேண்டுதல் என்னனா,
சாப்ப
உதிரம் தந்து,
உயிர் கொடுப்பது,
அன்னை மட்டுமல்ல;
உதிரக் கொடையாளனும்தான்!
அலைபேசியது ஒலிக்கும்;
அபய குரலில்,
உதவியென கேட்டவுடன்,
ஆறுதல் வார்த்தை கூறி,
விரைந்து சென்றிடுவோம்!
ஊசியது உடலை துளைத்தாலும்,
உதவிடும் மனப்பான்மை,
உள்ளம் முழுவதும் நிறைந்திருக்கும்!
பிளாஸ்மாவாய்,
பிளேட்லேட்களாய்-சிவப்பு
இரத்த அனுக்களாய்,
தன்னலமின்றி,
தன்னார்வலனாய்,
கைமாறு கருதாது,
தானமாக வழங்கிடுவோம்!
கண்ணீரை துடைத்திடுவோம்!
உதிரம் கொடுத்திடுவோம்!
உயிரை காத்திடுவோம்!
கண்கள் பார்த்திட,
கை விரல்கள் கோர்த்திட,
தென்றல் தழுவிட,
தேகம் சிலிர்த்திட,
நெருங்கி வந்திட- முகம்
நாணி சிவந்திட,
இறுக்கி அணைத்திட,
இதழ்கள் குவித்திட,
இதயம் குளிர்ந்திட
இவ்வுலகம் மறந்திட,
நாம் காதலில் மூழ்கிட வேண்டுமே!
பத்து திங்கள் எனை சுமந்து;
பட்ட வலி தனை பொறுத்து;
பட்டு பூச்சியினும் மென்மையாய்,
பத்திரமாய் ஈன்றெடுத்தாய்;
என் முகம் பார்த்தே எனை உணரும்,
என் உயிரான என் இறைவிக்கும்,
சின்ன சின்ன சண்டையிட்டாலும்,
சிரிச்சு பேச மறந்ததில்ல;
புளியமரத்து தேன் மிட்டாய்,
பகிராம நீயும் உண்டதில்ல;
அரவணைப்பில் அன்னையாய்,
அறிவுரையில் ஆசானாயிருக்கும் என் உடன்பிறப்புக்கும்,
மதிய உணவு வேளையிலே,
மண்ணை பார்த்து நிக்கயிலே,
தான் கொண்டு வந்த சோத்து சட்டி,
அவிழ்த்து நீயும் எனக்கு ஊட்டி,
பள்ளிக்கூடம் முதல் பருவமடைந்த காலம்வரை,
என்னோடு பயணிக்கும் என் அன்பு தோழிக்கும்,
தான் வளந்த வீட்டை விட்டு,
பாசம் காட்டும் ப
என் வலி நீக்கும்,
வழி நீயோ!
நான் உயிர் வாழ,
வளி நீயோ!
விழியோரம் வழியுதே,
வலிக்கும் ஈரம்;
அழிக்க முயல்வாயோ? - மேலும்
அளிக்க முயல்வாயோ?
உளிகொண்டு செதுக்கியதோ?
உயிரொன்று இல்லையோ?
உணர்வை உணர்வாயோ?
வழிநீரை துடைப்பாயோ?
நின் பெயரை துடித்த,
என் பூவான இதயம்,
இரும்பென மாறியதே!
கரும்பாறையாய் இறுகியதே!
கல்லாகிய என் கண்ணே,
உயிர் பெற்று வா!
உணர்வுற்று வா!
வலி நீக்க வா!
என் வளியாக வா!
நாவில் நீரூரும்,
தேனைப் பருகினாலும்,
கற்றை நோட்டுகளை,
கண்ணில் கண்டாலும்,
மனதை வருடும்,
கீதம் கேட்டாலும்,
நான் பெற்ற உவகையை,
அவையாவும் அளிக்குமோ?
காதில் தேன்வந்து பாய்ந்ததே!
கருவுற்ற செய்தி கேட்டவுடனே!
பத்து திங்கள் கடந்து,
பட்டுவை காணும் ஆவலோடு,
காத்திருந்தேன்; எதிர்பார்த்திருந்தேன்;
காணக் குரலொன்று,
காதில் கேட்டதே!
ஓடி சென்றேன்;
உவகை கொண்டேன்;
உச்சி முகர்ந்தேன்;
அன்புக்கு பிறந்தவளை,
அழகின் பெட்டகத்தை,
அள்ளியெடுத்து,
முத்தமிட்டு - கூறினேன்
பிறந்தநாள் வாழ்த்து!!!
நாவில் நீரூரும்,
தேனைப் பருகினாலும்,
கற்றை நோட்டுகளை,
கண்ணில் கண்டாலும்,
மனதை வருடும்,
கீதம் கேட்டாலும்,
நான் பெற்ற உவகையை,
அவையாவும் அளிக்குமோ?
காதில் தேன்வந்து பாய்ந்ததே!
கருவுற்ற செய்தி கேட்டவுடனே!
பத்து திங்கள் கடந்து,
பட்டுவை காணும் ஆவலோடு,
காத்திருந்தேன்; எதிர்பார்த்திருந்தேன்;
காணக் குரலொன்று,
காதில் கேட்டதே!
ஓடி சென்றேன்;
உவகை கொண்டேன்;
உச்சி முகர்ந்தேன்;
அன்புக்கு பிறந்தவளை,
அழகின் பெட்டகத்தை,
அள்ளியெடுத்து,
முத்தமிட்டு - கூறினேன்
பிறந்தநாள் வாழ்த்து!!!
குட்டி ஊரிலே,
சுட்டி பெண்ணாய்,
பட்டத்தையும் பட்டாம்பூச்சியையும்,
எட்டி பிடித்து,
துள்ளி குதித்தேன்;
பருவம் அடைந்தாலும்,
அன்பு தந்தைக்கு,
வானத்து தேவதையாய்,
செல்ல குழந்தையாய்,
மகாராணியாய் வாழ்ந்திருந்தேன்;
இன்றோ!
முகமறியா ஊரிலே,
மாலையிட்ட மன்னவனே!
கரம் பிடித்த நாள் முதல்,
கண் மூடும் நாள் வரை,
காதலரியா கன்னிகைக்கு,
உயிரும் நீயே!
உலகமும் நீயே!
காதலும் நீயே!
கள்வனும் நீயே!
தவறேதும் செய்தால்,
வெறுக்காது பொறுப்பாயே!
கோவிலுனுள் நுழையும்போது,
ஒதுக்கபட்டவனென்று ஒதுக்கி வைத்தார்கள்;
தாகத்திற்காக தவித்தபோது,
தாழ்த்தபட்டவனென்று தடுத்து நிறுத்தினார்கள்;
துன்பத்தில் துயரபடும்போது,
என்னை தேற்றுவதற்கோ எவருமில்லை;
பாடத்தில் பதக்கம்பெரும்போதோ,
என்னை பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை;
இப்போதோ என்னைசுற்றி ஒரே கூட்டம்;
என் வீட்டின் முன்னோ ஆட்டம் பாட்டம்;
ஆராய்ந்த போது தான் தெரிகிறது;
என் கையிலோ பணம் புழங்குகிறது!!!