kongu thumbi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kongu thumbi |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 20-Jun-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 438 |
புள்ளி | : 55 |
மது ஒழிப்பு போராட்டம் 1989 தீவிரமாக கலந்து கொண்டு சென்னை சிறை 18 நாட்கள்.
1990 ல் ரயில் மறியல் போராட்டம் கோவை சிறையில் 15 நாட்கள்.
மறைமலை நகரில் ரயில் நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க போராட்டம் கோவை சிறையில் 8 நாட்கள்.
1991 ல் அமைதி வேண்டி இருபத்தி எட்டு நாட்கள் தொடர் பாதயாத்திரை.
1990 ல் இளைஞர் காங்கிரஸில் மாவட்ட பொதுச் செயலாளர்.
1995 ல் மாநில பொதுக் குழு உறுப்பினர்.
1996 ல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் .
2001 ல் மாநில காங்கிரஸ் அமைப்புச் செயலாளர்.
2002 முதல் 2012 வரை நகர கவுன்சிலர்.
சின்னத் தாயின் மடியில் இருந்து
ஒரு ராகம் பிறந்தது
ஏழிசை ஸ்வரங்களில்
ஏழை இசை மலர்ந்தது
வறுமைப் பிறவிகளில்
வண்ண இசை விழுந்தது
வருங்கால சங்கீத
வசந்தம் மலர்ந்தது
முரட்டு மூங்கிலில்
முல்லைக் கோடி படர்ந்தது
முகரி ராகம்
மூச்சிழந்து போனது
பண்ணை புறத்து பழைய நாணல்
புதிய பாதை இட்டது
பரம்பரை சங்கீதம்
உயிரோடு பிறந்தது
பசித்து அழும் பாங்கான வயிறு
வீணையை விற்றது
பாட்டுடை வர்க்கம்
பாதியில் நின்றது
இயற்கை இசை அன்னை
இறுதிச் சடங்கு ஆனது
இருந்தவர் இசைத்தவர்
இதோடு தீர்ந்தது
மெல்லிசை மெட்டு
மெதுவாக ஒய்ந்தது
அனைத்து
வெள்ளைத்தாளின் வீணை
விபரம்நிறைந்த பானை
அறிவு நிறைந்த புதையல்
அனைவரும் விரும்பும் படையல்
தேடி அருந்தும் பானம்
தெரிந்து கொண்டால் கானம்
இது எல்லை இல்லாவானம்
கருத்துக்கள் ஊரும் சோலை
கடக்க முடியாத சாலை
விஞ்ஞா னத்தில் புதுமை
விண்ணைத்தொடும் பதுமை
விடை சொல்லும் புதிர்
விடியல் காட்டும் வெளிச்சம்
பழமை காக்கும் பத்திரம்
பண்பு சொல்லும் நண்பன்
புதுமை எழுதும் சித்திரம்
ஞானம் தரும் போதி
நாளும் தரும் ஜோதி
உலகே இதனுள் அடங்கும்
உலகை இதனுள் அடக்கும் .
தூய தடாகங்கள்
அமைத்தனர் ஆன்றோர்.
மக்களும் பயிர்களும்
புள்ளினங்களும் கால்நடைகளும்
வாழ்வு நடத்த.
குளம் சுத்தமாக வேண்டி
மீன்களையும் வளர்த்தனர்
உருமீன்களின் கழிவுகள்
தடாகத்தில் வண்டலாக.
கோடையில் வண்டல் எடுத்து
வயல்களுக்கிட்டு
மண்வளம்கண்டனர்
அடுத்த மழைக்கு
சுத்தநீர் குளங்கள் தயார்.
அதுபோலவே!
மீன் போன்றதொரு
தியான மனப்பயிற்சிகளால்
திறந்த வெளி
எனும் மனங்களின்
தெளிந்த நீர்க்குளத்தில்
ஆனந்த மழைச் சாரல்
பொழிய மறுப்பார் எவர் ..?.
அண்ணனால் கையுடைந்த
அழகு பொம்மை
வேதனை மறந்து
இப்போது
குதூகலிக்கிறது ...!
தன் கைக்கு
மருத்துவம் பார்க்கும்
தங்கைப்பாப்பாவின்
அன்பு மழையில்
மிதந்து கொண்டே...!
எனது இதயத்தில்
ஏன் இத்தனை கனம்?
இதயங்கள்
இடம் மாறியதாகச்
சொல்லிச் சென்றாயே..
இந்தச்
சுகமான சுமை..!
உன் இதயம்
சுமப்பதால்தானோ..?
அங்குள்ள
என் இதயம்
கண்டபின் தான்
கனம் இலகுவாகும்
என்பதால் ...
விரைந்து வா...
உன்னின் இதயம்
பார்க்க வேண்டாமா...!
வெள்ளைத்தாளின் வீணை
விபரம்நிறைந்த பானை
அறிவு நிறைந்த புதையல்
அனைவரும் விரும்பும் படையல்
தேடி அருந்தும் பானம்
தெரிந்து கொண்டால் கானம்
இது எல்லை இல்லாவானம்
கருத்துக்கள் ஊரும் சோலை
கடக்க முடியாத சாலை
விஞ்ஞா னத்தில் புதுமை
விண்ணைத்தொடும் பதுமை
விடை சொல்லும் புதிர்
விடியல் காட்டும் வெளிச்சம்
பழமை காக்கும் பத்திரம்
பண்பு சொல்லும் நண்பன்
புதுமை எழுதும் சித்திரம்
ஞானம் தரும் போதி
நாளும் தரும் ஜோதி
உலகே இதனுள் அடங்கும்
உலகை இதனுள் அடக்கும் .
தேர்தல் வரும் காலமப்பா
இது தேர்தல் வரும் காலமப்பா
நம்ம தேவைக்கான காலமப்பா..!
வீடு தேடியும் வருவாங்க ,
விருந்துண்ண அழைப்பாங்க ,
விலையுயர்ந்த சரக்குகளை
விடாமக் கொடுப்பாங்க.
சாதிமதம் இல்லையென்று
சத்தியமே செய்வாங்க ,
சகலரும் ஒண்ணுன்னு
சமதர்மம் புரிவாங்க.
கையால கும்பிட்டு காலுல விழுவாங்க,
கற்கண்டுப் பேச்சால கதம்ப மாலை கோர்பாங்க,
சிறுவாணித் தண்ணீரும் சில்லறையாய் விப்பாங்க,
சிட்டாட்டம் பறக்க சிறு வண்டி தருவாங்க,
சாக்கடை சுத்தமென்று சாராயம் விடுவாங்க,
சாதனைகள் புரிந்தோமேன்று
சரவெடியை வெடிப்பாங்க ,
செத்தவனைக் கூட்டிவந்து
சீட்டு எழுதிக் கொடுப்பாங்க .
காடை கௌதாரி காசு
ஆடோக்காரர் அன்பானவர்தான் ,
ஆபத்திலிருந்தும் காப்பவர் தாம்.
விலாசம் அறிந்த விஞ்ஞானி,
விபரம் சொல்லும் மெய் ஞானி ,
வளைந்து நெளிந்து சென்றிடுவார்
வலி இன்றி இடத்தில சேர்த்திடுவார் .
உரிமைகேட்டும் போரிடுவார்,
உழைத்துத்தான் சோறிடுவார்.
தன்னலமறியா உழைப்பாளி,
தாயன்பை பெரும் முதலாளி.
மூச்சுக் காற்றில் உயிரிருக்கும்,
மூன்று சக்கரத்தில் வாழ்விருக்கும்.
பிரசவத்திற்கு இலவசமாய் ஓட்டிடுவார்
பிரியமுடன் எப்பணியும் செய்திடுவார்.
நம்பினால் தெய்வமாய் மதித்திடுவார்,
நட்பினை உயிராய்க் கருதிடுவார்.
ஏய்க்கும் பழக்கம் இவரிடம் இல்லை,
எளிமைதான் இவர்களின் எல்லை.
வளர்ந்திட வேண்டும் இவ