பிரேம பிரபா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரேம பிரபா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 07-Dec-1956 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 813 |
புள்ளி | : 191 |
கிடைத்தால் மகிழ்வதற்கோ, மறுதலிக்கப்பட்டால் துக்கிப்பதற்கோ ஒன்றுமில்லை என்னிடன். வாழ்க்கையை அதன் போக்கிலேயே போக விடுகிறேன். அது என்னை வழி நடத்துகிறது. என் தனிமையை அழிக்கிறது. என்னை ஒரு குழந்தையாக பாவித்து முத்தம் கொடுக்கிறது. அனைத்துக்கும் மேல் என் கைகளைப் பிடித்து உலகத்தைச் சுற்றிக்காட்டுகிறது. தோளில் உட்காரவைத்து திருவிழாவைச் சுற்றிக்காட்டும் என் அப்பாவைப் போல, கதைகள் சொல்லும் கோமதிப் பாட்டி போல, தவறு செய்தால் தன் பார்வையினாலேயே என்னைத் திருத்தும் அம்மாவைப் போல
அன்று சித்திரா பௌர்ணமி. வழக்கத்திற்கு மாறாக மல்லாம் கிராம மக்கள் அன்று மாலை நடக்க இருக்கும் சிறப்புக் கொற்றவை பூஜைக்காக ஆவலாகக் காத்திருந்தார்கள். பௌர்ணமி பூஜையைக் காண பெருந்திரளான மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வெளியூரிலிருந்தும் வந்து கொண்டிருந்தார்கள். மல்லாம் கிராமம் திருவிழாக் கோலம் கொண்டிருந்தது. கிராமத்து தலைவரின் உத்தரவிற்கிணங்க வெளியூரிலிருந்து வரும் வண்டிகளை ஊர் எல்லையில் இருக்கும் ஐய்யனார் பொட்டைத் திடலிலேயே நிறுத்தியிருந்தார்கள். ஒரு சிலர் தட்டையான கல்லில் சிறிது புளி, காய்ந்த மிளகாய், சிறிது உப்பு, சின்ன வெங்காயம் கையளவு, அதனுடன் நல்லெண்ணை விட்டு சதைத்து அந்தக் கலவையை ஆவி பறக்க
பவுர்ணமி நிலவில் பாலாறு கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. கரையோர புற்கள் மெல்லிய காற்றின் அசைவிற்கு ஒத்திசைவுடன் தலையாட்ட ஒரு கோடி நிலவுகள் தரையிறங்கியது போலத் தோன்றியது. அன்னையின் தாலாட்டாக ஆற்றின் சலசலப்பு கேட்க அரைமனதுடன் துயில் கலைந்து கண் விழித்துப் பார்த்த கூடடைந்த பறவைகள் ரகசியமாக ஏங்கித் தவித்து மீண்டும் கண் அயர நீண்ட நேரம் ஆனது. சிறிது தூரத்தில் இருந்த பெருமாள் கோயிலின் கோபுரத்திலிருந்து வழிந்திறங்கிய நிலவொளி நடை சாற்றிய கோயில் பிரகாரத்தை மேலும் பிரகாசமாக்கியது. அம்மலூர் கிராம முதியோர்கள் திண்ணையில் அமர்ந்து கொண்டு தங்களின் பேரக் குழந்தைகளுக்கு சொல்லும் கதைகளில் ஏழு கடல் ஏழு மலை தாண
கல்லணையைக் கட்டிய மன்னர் கரிகாலனின் ஆட்சிக்குப்பிறகு சோழ நாடு இருகூறுகளாகப் பிரிந்து போக ஒரு பகுதியை கடற்கரை நகரமான புகாரைத் தலைநகராகக்கொண்டும், மற்றொரு பகுதியை உறையூரைத் தலைநகராகக் கொண்டும் ஆட்சி புரிந்தார்கள். இவர்களில் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்ட கோப்பொருஞ்சோழனே மிகச் சிறந்து விளங்கினான். புலவர்கள் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார், புல்லாற்றூர் எயிற்றியினார், பொத்தியார் அறிவுரைகளுக்கிணங்க கோப்பெருஞ் சோழன் நல் ஆட்சி புரிந்துவந்தான். அப்போது ஒரு நாள்,,,,
அரண்மனையில் இருக்கும் திறந்த வெளி அரங்கில் மல் யுத்தத்திற்கான ஆயத்தப் பணிகள் நடந்துகொண்டிருந்தது. அரசர் கோப்பெருஞ்சோழனிற்காக அ
வானவ மாதேவி அன்று ஏனோ இனம் புரியாத குழப்பத்திற்கு ஆட்பட்டிருந்தாள். குழம்பிய மனதில் தெளிவிருக்காது என்பதற்கிணங்க அன்புடன் உணவு படைக்கும் தாதிமார்களிடம் எரிந்து விழுந்தாள். தான் செய்வது தவறு என்று உணர்ந்தும் தன் தற்போதைய நிலைக்குக் காரணத்தை கண்டறிய இயலாமல் நிலை தடுமாறினாள்.
அரசரைக் கண்டு பத்து தினங்களுக்கு மேலாகிவிட்டதால் அதற்கான காரணத்தை யாரிடம் கேட்கலாம் என்று மறுகிக்கொண்டிருந்தாள். தன் நெருங்கிய அந்தரங்க தோழியிடம் கேட்டால் என்ன என்று முதலில் யோசித்தாள். அவளுக்கு அந்தப்புரமே அனைத்துமென்றாகிப்போக வெளியுலகத்தில் நடக்கும் செய்திகளைப் பற்றி அவளிடம் கேட்டு எந்தவிதப் பயனும் இல்லை என்ற முடி
முகநூல் காதல் பற்றி என்ன எண்ணுகிறீர்கள் ?
1) நிம்மதி என்றல் என்ன??
2) நிம்மதி எங்கு கிடைக்கும் ??
3 ) நிம்மதியை ஏன் தேடுகிறோம் ??
நான் இந்த கேள்விக்கு சில பதில்கள் மனதில் வைத்துள்ளேன் ...அதை பிறகு கூறுகிறேன் ...
சற்று குழப்பத்தில் உள்ளதால் தெளிவு பிறக்க வேண்டி இக்கேள்வியே இங்கு கேட்டு உள்ளேன் நண்பர்களே ...பதிலளியுங்கள்
“மாத்யூ ஃபெர்ணாண்டஸ், மன நல மருத்துவர். கேட்டில் மாட்டியிருந்த பித்தளை பெயர்ப்பலகை சூரிய ஒளியில் பளபளத்தது. எங்கு பார்த்தாலும் நெடிய மரங்கள். முதன் முதலாய் இங்கு வருபவர்கள் ஏதோ பண்ணை வீட்டிற்குப் போவது போல முதலில் உணர்வார்கள். இதுவரை தாங்கள் அனுபவித்த நகர நெரிசலையும் வாகன இரைச்சலையும் தற்காலிகமாக மறந்து விடுவார்கள். தூரத்தே தெரியும் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பெரிய வீட்டின் வரவேற்பரையில் இருக்கும் விலையுயர்ந்த சோபாவின் நுனியில் தயக்கத்துடன் அமர்ந்திருந்தான் ரிஷி. “பிளீஸ் கம் இன்” ஆளில்லாத அந்தப் பெரிய வரவேற்பரையின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது அந்த மந்திரக் குரல். மேஜையில் எதையோ
மழையைக் குறித்தான என் அனுபவங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. முதலில் என் சக விளையாட்டுத் தோழனின் பார்வையிலிருந்து சிறிது மாறி கண்டிப்பான பெரிய மனித தோரணையில் என்னைக் கண்டிக்கவும் செய்தது. கூடுதலாக உங்களுக்கு ஒரு ரகசியம். மழையும் மனிதர்களைப் போலத்தான். சில சமயம் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது நம்மையும் சேர்த்து உற்சாகப்படுத்தும். சில சமயம் சோகமாகன சிணுங்களில் ஆரம்பித்து ஆர்ப்பரிக்கும். என் வாழ்க்கையின் முக்கியமான அனைத்து நிகழ்வுகளையும் ஞாபகப்படுத்திக் கூற பல சமயங்களில் இந்த மழை உதவி இருக்கிறது. அடர் மழைப் பொழிவில் நான் தனியாகக் கார் ஓட்டும் போது வைப்பரின் சீர
ஊரின் எல்லையில் அந்த முதியோர் இல்லம் இருக்கிறது. வார்டன் மூதாட்டியையும் சேர்த்து இருபது பேர்கள்தான் அங்கு தங்கி இருக்கிறோம். சுற்றிலும் நெடிய மரங்கள். பல வருடங்களுக்கு முன் பூசிய சுண்ணாம்புப் பூச்சு உதிர்ந்து ஆங்காங்கே செங்கல் வரிசைகள் பளிச்சென்று கண்ணை உறுத்தும்.
“ராமன்னா, ஊணு கழிக்கான் வரில்லே? இப்பவே மணி பத்தாவுது. சாப்பிட்டிட்டு மாத்திரை போட்டுக்க வேண்டாம்!” மலையாளத்திலும் தமிழிலும் கலவையான ஒரு மொழியில் பேசிக்கொண்டே வந்த வார்டன் மூதாட்டி என் கையில் இருக்கும் மண்வெட்டியை உரிமையுடன் பிடுங்கிக்கொண்டு வேகமாக எனக்கு முன்னே நடந்தாள். நானும் அதற்கு மறுப்பேதும் கூறாமல் அவரைப் பி
சிற்பியின் காதலி
கி.மு. 353 நூற்றாண்டிலிருநு 350 வரையிலான காலம். தலை நகரில் இருக்கும் சிற்பக் கூடத்தில் உளிச் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கோண்டே இருந்தது. நான்கு மாதங்களாக டிமோதியஸ் வடிவமைத்த அந்த பெண்ணின் சிற்பம் பூர்த்தியாகும் நிலையிலிருந்தது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் சிலையின் அழகு பன் மடங்காகத் தெரிந்தது. சிலையின் கண்களை மட்டும் திறப்பதற்காக முழுப் பௌர்ணமி நாளை தேர்ந்தெடுத்து இருந்தான் டிமோதியஸ். அகன்ற தோள்கள், நெற்றியில் இழையோடும் கற்றைச் சுருள் முடி, மிகக் குறைவான ஆபரணப் பொலிவுடன் வடிவமைக்கப்பட்ட சிலையில் இயற்கையின் அழகு கூடுதலாகவே இருந்தது. இடுப்பில் இழைந்தோடும் கச்சையின் இற
“பயணிகளின் இனிய கவனத்திற்கு. ரயில் எண் 6010 மும்பாய் மெயில் மூன்றாவது பிளாட்பாரத்திலிருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்பட இருக்கிறது” ஒலிபரப்பாளர் தேவையான ஏற்ற இறக்கங்களுடன் கணீர் என்று உச்சரித்தார். சபாபதி கடிகாரத்தைப் பார்த்தார். மணி இரவு ஒன்பது ஐம்பத்தைந்து. ஜன்னலின் வழியாக ரகுவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு “ரகு, பார்த்துடா. அடிக்கடி போன் பண்ணு” சபாபதியின் வார்த்தைகள் சோகத்தில் சுருங்கின.
எந்தச் சந்தர்ப்பத்திலும் கண்களில் நீரை வரவழைக்கவோ அல்லது கவலையை முகத்தில் அப்பட்டமாகக் காட்டக் கூடாது என்று பிடிவாதமாக இருவரும் இருந்தனர். மனது முரண்டு பிடித்தது. அப்பா சில நாட்களில் எப்படி இவ்வளவு மா
அடுத்த நாள் வாராந்திர விடுமுறை என்று நினைத்தவுடனேயே, எந்த வித முன்னறிவுப்பும் இல்லாமல் ஒட்டு மொத்த சோம்பேறித்தனமும், விக்கிரமாதித்தியனின் தோளில் ஏறி அமர்ந்து இறங்க அடம் பிடிக்கும் வேதாளம் போல உடம்பு முழுவதும் அப்பிக்கொள்ளும். ஆறு நாட்களாக ஏங்கித்தவித்த காலைத் தூக்கத்திற்கு மனம் கனவு காண வைக்கும். இப்படியான ஒரு காலைத் தூக்கத்தை துளியும் இரக்கம் இல்லாமல் கெடுத்தது ஒரு நண்பனின் திடீர் வருகை. "என் தோழி பாமா காலை பத்து மணிக்கு கா•பி ஷாப்பிற்கு வருவதாக கூறியிருக்கிறாள். நீயும் தயாராயிரு" என்று என் பதிலுக்குத் துளியும் காத்திருக்காமல், பேப்பரை வாசலில் விட்டெறிந்து விட்டு சிட்டாய் பறந்து போகும் பேப