சரண்யா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சரண்யா |
இடம் | : கடலூர் |
பிறந்த தேதி | : 25-Jun-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 120 |
புள்ளி | : 22 |
திருவிழா என்பது கொண்டாட்டம் !
சிலருக்கு அதுவே திண்டாட்டம் !
பணத்திற்காக பலரும் தான் ....
புது புது கடனை பெறுகின்றார் !
வருடம் தோறும் கடன் வருதே ...
வாங்கிய கடனும் துயர் தருதே !
வசதிகள் வாழ்வில் வளரவில்லை...
வாழ்வில் பணத்திற்கு பெரும் தொல்லை ....
உயர்ந்தவனுக்கு தீபாவளி ....
உழைப்பவனுக்கோ பெரும் வலி !
அளவில்லா ஆசை துயர் தருமாம்....
அளவுடன் வாழ்வதே பெரும் மகிழ்வாம்!!!
பெண்களை வர்ணிப்பது பெண்களுக்கு பிடிக்கும் ...
பெண்களை இயற்கையுடம் இணைத்து வர்ணிக்கத்தவரே இருக்க முடியாது ....
வர்ணிப்பதும் ரசிப்பதும் தவறில்லை ...
அடைய நினைப்பது தான் தவறு ...
கண்ணின் மையை கார் மேகத்துடனும் ...
கூந்தலை மேகத்துடனும் ....
பாதங்களை பஞ்சுடணும் ..
இப்படி ஒவ்வொன்றுக்கும் எதாவது ஒன்றை இணைத்து
ஆண்கள் வர்ணிக்கும் ஜாலத்தின் வலையில் தான்
பெண்கள் வீழ்ந்து விடுகிறார்கள் .... காதலில் ....
வர்ணிப்பது பிடிக்காமல் இருக்குமா ???
யாராவது வர்ணிக்க மாட்டார்களா என்று ஏங்கி தன்னை தானே
கற்பனை குதிரையில் வர்ணித்து கொள்ளும் பெண்களே அதிகம் உள்ளனர்..
திரைப்படம் பார்க்கும் போதோ ...
எனக்கு காதலி இல்லை ...
காதலன் இருக்கிறார்...
என்ன மரியாதையை என்று பார்க்கிறீர்களா ....
என் காதலன் தற்போது என் கணவர் ...
காதலுக்காக பல கவிதைகள், பல காவியங்கள், பல திரைப்படங்கள், பல வசனங்கள்,
இப்படி இருக்கும் உலகில் வார்த்தைகளால் காதலை வெளிப்படுத்த தெரியாதவர்....
அவர் பார்வையே பல முறை என்னிடம் காதலை சொல்லி இருக்கிறது ...
பெண்களின் காதல் பூவில் உள்ள பனித்துளியில் போல அழகானது
ஆனால் ஆண்களின் காதல் வேரில் உள்ள நீர் போல ஆழமானது ...
அவர் காதலின் ஆழத்தை கடந்து செல்ல ஏழு ஜென்மங்கள் இல்லை...
எழுபது ஜென்மங்கள் இருந்தாலும் போதாது...
காதலை வர்ணிக்கும் போட்டியில் ...
என் காதலனை வர்ணிக்க ப
எழுத்து இண்ணையதளத்தில் எனது சக படைப்பாளியும் இனிய தோழியுமான யாத்வீகா கார்த்திக் தினமலர்- மதுரை பதிப்பகத்திற்கு கொடுத்த இயல்பான பேட்டி.
படித்து பாருங்கள் இல்லத்தரசிகளே.!! . உங்களாலும் சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார் இந்த கவிதாயினி !
-------------------இரா.சந்தோஷ் குமார்
தன்னம்பிக்கை...:
திருச்சியில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு மாற்றத்திறனாளிகளுக்கு நடந்தது. அதில் தன்னம்பிக்கை இழக்காமல் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள்.
இதுவன்றோ தன்ன்னம்பிகையின் அடையாளம் ...
நலிவடைந்த கைகளை , நல்வாழ்வு பெற தன்னம்பிக்கையை நம்பிடும் இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும் ... வெற்றி வந்து சேரட்டும் . வாழ்த்துக்கள்
எத்தனை ஆயிரம் கொடுமை கண்டும்
மனதில் வன்மம் தீரவில்லை
இத்தனை கோடி மனிதன் வந்தும்
இனமும் ஒன்றென மாறவில்லை
காலத்தில் காலனும்
கொண்டு செல்வான்
அவன் பணி திருடிட
முந்து வதேன்?
ஓர் இடம் (சொர்க்கம்) சேர்க்கவே
மதங்களும் ஆனதே
ஓரிடம் (உலகில்) சேர்ந்ததால்
அமைதியும் போனதே
துப்பாக்கி தொலைத்திட்ட
தோட்டாக்கள் எத்தனை
தப்பிய மனிதனின்
எண்ணிக்கை அத்தனை
பசுமை உலகையே
பாலையாய் ஆக்கினோம்
செம்மை ஆக்கிட
குருதியால் கழுவினோம்
தெறித்த இரத்தமும்
தீ என மாறுமோ
வன்மமும் அதனிலே
வெந்துதான் சாகுமோ
காலனின் கண்ணிலே
மண்ணையே தூவுதே
வன்முறை உலகிலே
வாழ்ந்துதான் கொல்லுதே
பட்டு - பூச்சி ஒன்று
கூடு விட்டு இறங்குது
உயிர் மூச்சு உள்வாங்கி
சத்தம் போட்டு அலறுது
முல்லை மொட்டு நான்கு காலில்
மண் மீது தவழுது
எச்சில் கொண்டு பொம்மைகளை
புண்ணிய பொருள் ஆகுது
விரல் பிடித்த நிழல் என்னை
முந்தி கொண்டு ஓடுது
சில பொருள்கள் வேண்டும் என்று
கொஞ்சி கொஞ்சி கேட்குது
கையில் அதை தந்த பின்னே
சிட்டு போல பறக்குது
கல்விதனை கற்று மெல்ல
என் அறிவை மிஞ்சுது
படித்த பாடம் எனக் குரைத்து
என் அறிவை வளர்க்குது
பட்டம் வாங்கி வேலை தேடி
சொந்த காலில் நிக்குது
தன் துணையை தேர்வு செய்ய
என் கருத்து நாடுது
என் முதுமை போக்கிடவே
அன்பு கரம் நீட்டுது
என் பயணம் முடிந