ஆறுமுகப்பெருமாள் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆறுமுகப்பெருமாள்
இடம்:  புளியங்குடி
பிறந்த தேதி :  29-Dec-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Apr-2014
பார்த்தவர்கள்:  161
புள்ளி:  23

என்னைப் பற்றி...

இவன்
பிரம்ம நிலையை
அடைய போவதில்லை
இது சத்தியமே ..!!
ஆனால்
பிரம்மாவின்
நிலையை
அடைந்து விட்டான்
இது நிச்சயமே ..!!

என் படைப்புகள்
ஆறுமுகப்பெருமாள் செய்திகள்
ஆறுமுகப்பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2016 10:16 pm

அம்மா என்று உனை அழைப்பர் -உனக்கு
அடிமை குணத்தை முளைவிப்பர் -சிலர்
அக்கா வென்று சூளுரைப்பர் -அப்படி
இணங்கச் செய்துதம் இனங்காட்டுவர் -உனை
கற்புக்கரசி யென்று வஞ்சக்கவி பாடுவர்
அவர் இழப்பின் அதை ஆண்மைத்தன மென்பர்
நீ இழப்பின் அதை கீழ்த்தர மென்பர் –இவளென்
இல்லத்தரசி யென்று இச்சகத்தில் கூவுவர் -உன்
இயற்கை கூறுரைத்து இயலாமை கண்துடைப்பர்
மெச்சப் படித்து நல்லறம் காணென்பர் - பின்
மெல்லத்தரம் பிரித்து இல்லறம் பேணென்பர்
பத்தினி என்று கூறி பதிப்பாட வைப்பர் - நீ
படி தாண்டி போயின் பழியென்று உரைப்பர்
பெண் தெய்வம் எனப் போற்றி பெண்ணடிமை தூற்றுவர்
ஆணடிமை பெண் எனப் பறைசாற்றி பெண்ணியம் ஏற்றுவர்


மேலும்

எங்க வீட்டு (செல்லப்) பிள்ளை 


அவன் என் உறவுக்காரன் 
வயல்வெளிக்கு சொந்தக்காரன்
என் வீட்டிற்கு 
வாயில்லா மூத்தப்பிள்ளை 
அவனுக்கும் எனக்கும் 
சில ஒற்றுமை உண்டு
இவனுக்கும் கண்ணீர் வரும்
அவனுக்கும் கண்ணீர் வரும்
அவனுக்கும் வால் உண்டு 
இவனுக்கும் வால்த்தனம் உண்டு 
இவன் அவனுக்கு கொடுத்ததோ 
வெறும் பசும்புல்லு…!
அவன் இவனுக்கு கொடுத்ததோ 
இரண்டாம் தாய்ப்பாலு…!

மேலும்

ஆறுமுகப்பெருமாள் - கீத்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2015 6:08 pm

சூரியன் கதிர் பரப்ப
தாமரை இதழ் விரிக்க
அந்தணர் இன்னிசை கானம் இசைக்க
புது மணப்பெண்ணாய் பவனிவா
இனிய புதுவருடமே...!

மேலும்

ஆஹா ..அருமை .. 31-Dec-2015 8:12 pm
அருமை 31-Dec-2015 12:21 pm
வாழ்த்துக்கள் 28-Dec-2015 10:21 pm
நன்றி...! 28-Dec-2015 8:15 pm
ஆறுமுகப்பெருமாள் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2015 9:38 pm

கனவில் பாரதி,திலகர், இராமலிங்க அடிகள், காந்தியிடம் கேட்கிறேன்

முண்டாசு கவிஞனே..முறுக்கு மீசைக்காரனே..
உனக்கோ.
“”என்று தணியும் இந்த சுதந்திர தாகம்..
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்””

ஆனால் எம் குலப்பெண்களுக்கோ
“”என்று தணியும் இந்த பெண்ண்டிமை தாகம்””
“”என்று மடியும் ஆண்கள் காமத்தின் மோகம்””
என் மகாகவியே..
புத்தகத்தின் முன்பக்கத்திலோ
“”சாதிகள் இல்லையடி பாப்பா
குலம்தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்””
என்று உன் பாட்டு..
ஆனால் என் பள்ளிப்பாட்டோ
“”சாதிகள் வேணுமடி பாப்பா
குலம்தாழ்த்தி உயர்த்தி சொல்லல் லாபம்””

அறிவில் பெரியவரே..
வயதில் முதியவரே..
பாலகங்காதர திலகரே
பொய்யு

மேலும்

மதுவிலக்கு
பூரண மதுவிலக்கு நமக்கு தேவையா..இன்றைய நவீன உலகில் அது சாத்தியமா..
எனக்கு “நான் ஈ படம்” தான் ஞாபகத்திற்கு வருகிறது ஒரு “ஈ”யை வைத்து படம் பண்ண முடியுமா.. சாத்தியமாயிற்று ..வெற்றி பெற்றது
ஒரு மதுவை வைத்து அரசியல் பண்ண முடியுமா..? முடியும் என் நாட்டில்..வெற்றி யாருக்கு...
மதுவுக்கா ..மக்களுக்கா...அரசியல்வாதிகளுக்கா..
முடிவு குடிமகனின் கையில்..
10 வருடங்களுக்கு முன்னால் மது பொது வாழ்க்கையின் மைய நீரோட்டங்களில் இல்லை ஆனால் இன்றோ அரசியலின் மைய புள்ளிகளிலும், ஆட்சியை தீர்மானிப்பதிலும் ஒரு “நான் ஈ”யாக வந்துவிட்டது. நம் பிரச்சனை என்ன மது விலக்கா.. மது அடிமையா..இன்று பல நிகழ்ச்சிகளில் மது நம்மை பகிர்ந்து கொள்கிறது பொது விழாக்கள்.கல்யாணம்,காதுகுத்துனு இன்னும் எத்தனையோ..ஆனால் இந்த மது இன்றல்ல இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் நம்மோடு இருக்கிறது.மதுவின் பரிணாமங்கள் மாறியிருக்கிறது ஆனால் அதன் மேலுள்ள பரிதவிப்பு மாறவில்லை இருநூறு வருடங்களாக இவ்வளவு சீரழியாத என் சமூகம் கடந்த இருபது வருடங்களில் சீரழிகிறது என்றால் அதற்கு காரணம் மதுவல்ல
மதிகெட்ட மனிதனே...மது அடிமை மனிதனே..
“Party-க்காக மது” என்ற நிலை மாறி
“மதுவுக்காக Party” என்ற திசையை நோக்கி
நம் நகர்தல் பயணித்து கொண்டு இருக்கிறது.அந்த பயணத்தை திசை திருப்ப வேண்டுமே தவிர மதுவே வேண்டாம் என்று கூறுவது மடத்தனம்
மது குடிப்போரை வயதின் அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கலாம் 1.X<20, 2.20-45, 3.Y>45இதில் 20-45 வயதினரேஅதிக எண்ணிக்கையில் குடிப்பவராவர் இதையும் மூன்று வகையாக பிரிக்கலாம்
1.BEGINNER
a.INTROVERT b. EXTROVERT
2.EXPERT
a.INTROVERT b. EXTROVERT
3.PROFESSION

1.BEGINNER:
இவங்க மகிழ்ச்சியின் உச்சத்திற்கு மது ஒரு சிறுபகுதியே..இவன் மது அடிமை ஆகாமல் இருக்க என்ன வழி..?
ஊருக்கு ஊரு sports center வைத்து நிறைய games ஆரம்பிக்கலாம், ஆயகலைகள் அறுபத்தி நான்காம் இதில் எத்தனை பேருக்கு ஒரு கலையாவது தெரியும் அதில் ஏதாவது ஒன்றை எடுத்து வளர்ச்சி அடைய செய்யலாம்..நிறைய cultural celebrations- ஐ ஊக்கப்படுத்தலாம்.
2.EXPERT:
இவங்க தான் மது அடிமைகள்..அவனுக்கு மகிழ்ச்சியின் உச்சம், எச்சம், மிச்சம் எல்லாமே மது தான்..இவனை சேவை செய்வதில் ஊக்கப்படுத்தயும், குடியின் தன்மையை விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்றிவிடலாம்..
3.PROFESSION :
“”தாமரை இலை பீர் போலே ஒட்டி ஒட்டாமல் இரு””
மது இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் ஒரே நிலையில் இருக்க வேண்டும் இந்த பயணமே சமூக வளர்ச்சிக்கான வழி.. மேலே சொன்ன வழிவகையை கடைப்பிடித்தாலே.. அவன் இந்த நிலைக்கு வந்துருவான்..
இந்த மாதிரி வழிவகையை யோசிக்காம எப்படி மதுவிலக்கு முடியும்..
மதுவிலக்கே தேவையில்லை..
பூரண மதுவிலக்கு என்பது வெட்டிப்பேச்சு...!!
அத்தனையும் அர்த்தமற்ற அரசியல் சாயப்பூச்சு...!!

மேலும்

ஆறுமுகப்பெருமாள் - கனகரத்தினம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2014 11:51 pm

பட்டி மன்றங்கள் பொழுது போக்கா ?அறிவு தேடலா ?இதைபற்றிய கருத்துக்களை விவாதிக்கலாம் உங்கள் கருத்தென்ன ? .....

மேலும்

விவாதித்தாலே பட்டிமன்றம் தான்.. கருத்துக்களை செறிவூட்டவும்,செழுமைபடுத்தவும், தெளிவுபடுத்தவும் தான் ..விவாத களத்திற்கு வந்தாலே..அது பட்டிமன்றம் தான்..இப்பொழுது நீர் செய்வதும் அதுவே தான் .. 27-Oct-2014 1:44 am
பட்டி மன்றம். வீனா போன மொக்கைங்க போடற ஆட்டம். 18-Oct-2014 11:40 pm
பட்டிமன்றம் பொழுது போக்கான அறிவுத்தேடல்... சிறு வயதில் நான் தொலைக்காட்சியில் கண்டுகளித்த பட்டிமன்றங்களால் தான் என் பேச்சுத்திறன் மேம்பட்டது.. பட்டிமன்றம் , பேச்சாளனாவதற்க்கு பெரிதும் துணைபுரியும்.. 18-Oct-2014 10:24 am
தேவை இல்லாத ஒன்று. 18-Oct-2014 8:37 am
ஆறுமுகப்பெருமாள் - Enoch Nechum அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Oct-2014 12:36 pm

இத கேள்வின்னு சொல்றத விட ஒரு சந்தேகம்னு சொல்லலாம்
இருந்தாலு நா ஒரு கேள்வியாவே கேட்குற .

எங்களுடைய தோழர்களோட எங்களுக்கு இருக்க நட்பு school life la தொடங்கி வாலிப வயசு வந்தும் பிறகு கல்யாணத்துக்கு அபரமும் வயது போகும் வரைக்கும் அதைய மாறியே நீடிக்கும் ,

ஆனால் தோழிகளுடன் எங்களுக்கு இருக்க நட்பு அவங்க கல்யாணத்திற்கு பிறகும் முதல் இருந்த மாறியே எங்களுக்கு கிடைக்குமா ?
காரணம் சில ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பு அவ்வளோ வலிமையா இருக்கும்
ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் இடியில உள்ள நட்ப விட
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பு ... ஒரு ஆணுக்கும் பெரும் பாக்கியமாக கருதலாம்
அந்த நட்பு பெண்ணின

மேலும்

அண்ணனிடம் நன்றி கூறவேண்டாம் தங்கையே ! 27-Oct-2014 10:58 pm
மறுபடியும் நன்றி 27-Oct-2014 10:54 pm
நீ என் தங்கைதானே அன்ஸ் ! உன்னை என் தங்கை என்று அழைக்காமல் எப்படி அழைப்பது ! உன் கருத்து முற்றிலும் உண்மையானதே ! 27-Oct-2014 10:48 pm
அண்ணன் என் தங்கை என்று என்னை விளித்ததில் மகிழ்கின்றேன்.கருத்தினை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி அண்ணா. 27-Oct-2014 10:38 pm
ஆறுமுகப்பெருமாள் - மயில்வாகனன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2014 1:02 pm

சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்ய இட ஒதுக்கீடு மிக அவசியமே, ஆனால் அதை சார்ந்த தர ஒதுக்கீடு அவசியமா?

35% மதிப்பெண் பாஸ் மார்க் எனும் பட்சத்தில் 25% எடுத்தாலே பாஸ் எனும் சலுகை, தாழ்த்தப்பட்டவர்களான நீங்கள் இந்த மதிப்பெண் எடுப்பதே ஜாஸ்தி என்பது போல் அவர்களை மேலும் தாழ்வுபடுத்துவதாகாதா? மேலும் இப்படி சலுகை மதிப்பெண் பட்டதாரிகள் நாட்டின் வளர்ச்சிக்கு உண்மையில் எப்படி பங்களிப்பார்கள்?

மேலும்

என் தலைமுறையில் யாருமே அரசியல்வாதி கிடையாது என்பதால் நான் வெறும் 3 விழுக்காடு ஓட்டுகளை பெற்று வெற்றிபெறுவது ஜனநாயகம் ஆகுமோ தோழா? தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் இருக்கக்கூடாது என்பதே என் ஆசையும்கூட. இந்த கேள்வி இடவொதுக்கீடு சார்ந்ததல்ல, இடவொதுக்கீடில் தரவொடுக்கீடு தேவையா என்பதே. சமச்சீர் கல்வி என்று பெயரைவைத்துக்கொண்டு மதிப்பெண் மட்டும் சமமாக இல்லாததில் என்ன நியாயம் இருக்க முடியும். இதே தரஒதுக்கீடை நாளை எல்லா துறையிலும் வரச்செய்தால் நாட்டின் தர உயர்விற்கு அது எந்த விதத்தில் உதவி செய்யும்? 80% இடவொதிக்கீடு கூட பரவாயில்லை ஆனால் 1% கூட தரத்தில் ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்பதே என் வாதம். மூன்றாவது வந்தவனுக்கு தங்கமென்றால் முதலில் வந்தவனுக்கு என்ன பலன். பந்தயத்தில் அனைவரையும் பங்கு பெற வைப்பதே அரசின் கடமை, பின் வருபவனுக்கு பரிசு கொடுப்பதில்லை. 18-Dec-2014 3:33 pm
திரு விஷு நீங்கள் சொல்வது தவறு சமுதாயத்தில் நீங்கள் எந்த வகுப்பை சேர்த்தவர்கள் என்று தெரிய வில்லை தால்தபட்டவர்களில் நீங்களும் ஒருவனை இருந்தால் மட்டுமே அதனை உணர முடியும் உங்களின் எத்தனாவது thalaimurai படித்தவர்கள் anaal அவர்களில் இன்னும் எதனை thalaimuraikku உங்கள் முன்னோர்கள் தடையாக இருந்திருகிறார்கள் தெர்யும இப்போது தான் அவர்களில் சிலர் படித்தவர்கள் அதை தட்டி பறிக்க வேண்டாம் மேலும் உங்களுக்கு தகவல் வேண்டும் என்றல் என்னோட தொலை பேசி எண் 9788411277 18-Dec-2014 12:36 pm
ஏற்றத்தாழ்வு தான்..நம்முடைய நாட்டின் கட்டமைப்பை மூன்றாக பிரிக்க வேண்டும் அது high,middle,low அதிலும் middle- upper,middle,lower என்று பிரிக்க வேண்டும். இந்த தர ஒதுக்கீடு middle,lower middle and lower class இவர்களுக்காக தான் ... 27-Oct-2014 1:23 am
சமுதாயத்தில் சமம் என்று வர சம அளவீடு மட்டுமே இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு கேள்வி குறி தான்... இதை நான் ஓர் நாள் ரயில் பயணத்தின் போது பேசினேன். அப்போது எனக்கு கிடைத்த ஒரே பதில் 'அவர்களின் மேலே வரவேண்டும்' என்பது தான் அதற்கும் விடாமல் சம கல்வி முறை இருந்ததானே அவர்கள் மேலே வந்ததாக அர்த்தம் என்றேன். அதற்கும் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் தான் முக்கியமாக படுகிறது. அவர்களே தங்களை தாழ்த்தி கொள்ள நினைக்கும் போது நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை. அதோடு அவர்களிடம் இது பற்றி பேசுவது வீண் என்று அமைதியாகி விட்டேன். நாமாக சொன்னால் புரியாது.. அவர்களாக புரிந்து கொள்ள வேண்டும்.. 25-Oct-2014 3:04 pm
ஆறுமுகப்பெருமாள் - ஆறுமுகப்பெருமாள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Apr-2014 10:59 am

நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொண்டேன் ..
நானும் தமிழன் என்ற திமிர் எனக்கு வந்தது ..
ஆம்..! நானும் படித்தேன் பொன்னியின் செல்வனை ..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

saravanabava

saravanabava

TIrupur
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே