இளந்தென்றல் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இளந்தென்றல் |
இடம் | : ஆலங்குளம் |
பிறந்த தேதி | : 04-Jul-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 186 |
புள்ளி | : 13 |
எழுத்து ஆர்வலன்
கல்லூரி சுவற்றில்
கரி கொண்டு கிறுக்கியிருந்தான்
ஒரு அநாமதேயன்.
நீயும் நானும் எழுதாத
நமக்கான முதல் காதல் கடிதம்
அது!
நம்மை ஆப்பிள் கடிக்க செய்த
அந்த சாத்தானை
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
கடவுள் கிரீடம் சூட்டுவதற்காக!
மின் தட்டுப்பாடு
மிக சாதாரணமாகிவிடும்,
ஒட்டு மொத்த குடி நீர்
தட்டுப்பாடு வரும் போது
உலகில் முக்கால் பங்கு
நீர் இருந்தும்
கால் பங்கு நிலத்தை
கனவாய் கண்ட
மீன் செத்தது!
கடல் நீர்
உலக அளவு
ஆர்வத்துடன் தான்
இருக்கிறது...
நமக்கு தான்
முழங்காலுக்கு மேல்
நனைவதற்கு ஆர்வமில்லை
காய்ந்த பாலையில்
கானல் நீர் பார்க்கிறேன்...
ஈர சாலையில் கானல் தாகம் பார்க்கிறேன்
பிரபஞ்சமே நம்மை பாதுகாக்க
சுழல்கிறது
பிரபஞ்சத்தின் ஒற்றைத்துளியை பாதுகாக்க
நமக்கு எத்தனை சவால்கள்
நீங்கள் வற்ற வைத்த
நதிகளுக்கும்
விட்டு வைத்த நதிகளுக்கும் சேர்த்தே
மிகப்பெரிய கண்ணீருடனும்
பேர
குருவி பறந்த பின்
கிளை ஆடுகிறது....
சொந்தம் கொண்டாட
தென்றல் ஓடுகிறது..
கிளையின் பூவுக்கோ
ஊஞ்சலாடும் மகிழ்ச்சி!
ஆலகால விருட்சம்
வெட்டப்படுகிறது
ஒட்டு மொத்த உயிர்களுக்கும்
சேர்த்த ஒப்பாரியாய்
ஓவென்ற இரைச்சலுடன்
சாய்ந்து விழுகிறது மரம்..
ஆலமரத்தில் அடைக்கலமிருந்த
ஆந்தை சொன்னதாம்
ஆலமரத்துக்கு என்னை விட
குறைவான ஆயுசு என்று
கொட்டும் மழையில்
குயில் நனையுமென்று
கவிஞன் வருந்தினான்
மழை முடிந்த மறுநாளில்
ஜூரம் மாத்திரை வாங்க
குயில் இல்லை
இவனே நின்றான் மருந்து கடையில்
பாறையில் விழுந்த விதை
என்பது உங்கள் விரக்தியின்
வாக்கியம்
காங்கிரிட்டில் முளைத்த மரம்
தான் முயற
ஒரு பலூன் உடையும் பொழுது
வண்ணங்களின் வடிவமெடுத்தக் காற்று
மீண்டும் உருவமிழக்கிறது.
ஒரு பலூன் உடையும் பொழுது
புவீஈர்ப்பை கேலி செய்து
புன்னகைத்த இழைகளின் மிச்சம்
பூமியின் காலில் விழுகிறது
ஒரு பலூன் உடையும் பொழுது
சிறைபட்டக் காற்று சத்தம்போட்டு சிரித்து
சுதந்திரம் பெற்று உணர்கிறது
ஒரு பலூன் உடையும் பொழுது
உன்னோடு விளையாடிக்கொண்டிருந்த
பலூனிற்குள் இருந்த என் சுவாசம்
தனியே விசும்பிக்கொண்டிருக்கிறது.
முனிவர் Vs துறவி - வித்தியாசம் சொல்லுங்களே ப்ளீஸ் .....
விதி என்றால் என்ன ?
விதியின் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதா ?