லட்சுமி ரவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : லட்சுமி ரவி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 18-Nov-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 5 |
நிதமும் கணிபொறியிடம் போரிடும் கன்னிப்பொறி ;)
என் தோல்வியை கண்டு என்றும்
நான் வருந்தியது இல்லை ;
என் தோல்வியால் வெற்றி கொண்டவரை
கண்டு மகிழ் கிறேன் ;
தன் கண்ணீரில் அனைவரையும் மகிழ்விக்கும்
அந்த வானத்தை போல !!
பட்டியலிட்டு பழகிட நண்பர்கள்
யாரும் இல்லை..
தொட்டிலிட்டு தாலாட்டிய தாயின்
அன்பும் கிட்டவில்லை..
திக்கெட்டும் வெறுமை..
தனிமையின் துணையோ கொடுமை...
உறுதி கொள் என் மனமே!
மண்ணில் கம்பீர உலா
போகும் சூரியப்பெண்ணே !
எழுச்சி கொண்டு போரிடு,
வலிகள் இல்லா வழியேது !!
இறைவன் கொடுத்த,
இலவசப் புடவையில்
சாயம் போகின்றதாம்...
வருத்தத்தில்,
வண்ணத்துப் பூச்சிகள்......!
நான் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டேன்
உன் விழிகள் எனை பார்க்க மறுத்ததால் ;
இறைவனை வணங்க மறுத்துவிட்டேன்
உன்னை எனிடம் இருந்து
பிரித்த காரணத்தால் ;
இயற்கையை ரசிக்க மறந்துவிட்டேன்
உன்னை ரசித்த கண்களால் வேறதையும்
ரசிக்க இயலவில்லை என்பதனால்;
கண்ணாடி பார்ப்பதை குறைத்துவிட்டேன்
உன் பின்பங்கள் என் கண்களில் தோன்றுவதால்;
வெளிச்சத்தில் நடப்பதை தவிர்த்துவிட்டேன்
என் நிழல் எனை விட்டு உனை
நோக்கி பயணிப்பதால் ;
அனைத்தையும் நிறுத்திய என் நெஞ்சம்
உனை நினைப்பதை மட்டும் நிறுத்த
மறுக்கிறது ! மறக்கவும் மறுக்கிறது !
Mannil naan ovoru murai
veelum podhu
kadal alaigal en sevi kooriya
seidhi iduve
"veelvadhu eluvadharkagave ! "
அன்பே,
உன்
கண்சிமிட்டலைக்
காப்பியடித்துத்தான்
கடவுள்
பட்டாம்பூச்சியைப்
படைத்திருப்பார் !
அன்பே !
நிறுத்தத்தில் நீ
நின்றிருந்தால்
பேருந்து என்னைத்
தவறவிடுகிறது !
எல்லா கோள்களையும்
ஆளவல்ல செங்கோல்!
விழுதுபோல்
மண்ணில் நம்பிக்கை
வேர்பிடிக்கும்
எழுதுகோல்!
உன் 'மை' யானாலும்
என் 'மை' யானாலும்
எம்'மை' யானாலும்
உண்மையான நன்'மை' ஈந்து
நம்மை காக்கும்
நம் 'மை'ந்தன்
எழுத்துக்கடலில்
காகிதக்கப்பலை
சத்தியக்கரை நோக்கி
செழுத்தும் துடுப்பு!
ஆறாம் விரலாய் இருந்த
எழுதுகோல்
'ஒரு ஊர்ல ஒரு எழுதுகோல்'
என்று வருங்கால கதையின் நாயகனாகிவிடுமோ?
என்ற கேள்விக்கு
பதிலாகும் ஆச்சர்யக்குறி!