இலக்கியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இலக்கியன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Jan-2015
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  5

என் படைப்புகள்
இலக்கியன் செய்திகள்
இலக்கியன் - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2015 7:34 pm

இதுவரை அறியவில்லை
போடா என்பதில்
இத்தனை மென்மையை

உந்தன்
ஏற்ற இறக்கங்கள்
ஏற்றிக்கொல்கிறது

உந்தன் சல்லடைக் கண்கள்
வடிகட்டி முடிக்கையில்
மீதமிருந்தவன் நானா.....?

எச்சில் பழங்களை கூட
உண்ணாதவன் நான்
இன்றோ உணவாக
உந்தன் மலரிதழ்கள் கேட்கிறேன்

விடியலை பார்க்கிறேன்
முதல் முறை
உறக்க நேரங்கள்
காலவரையற்று வேலைநிறுத்தம்
செய்வதில்

குளிக்க ஆயிரம் முறை
யோசித்து கிடப்பேன்
இன்றோ வெளியே வாடா என
திட்டும் வரை மயங்கி
கிடக்கிறேன் அந்த குளியலறை
ஷவரில்

அந்த ரோஜா இதுவரை
தென்பட்டதில்லை
இன்று என் தங்கை சுற்றிபோடுகிறாள் அதற்கு எந்தன்
கண்பட்டுவிட்டதென

ம்ம்ம்
மாயங்கள் செய்துவிட்டாய்

மேலும்

அருமை 11-Feb-2015 11:38 am
அருமை நண்பா தொடருங்கள் ........... 05-Feb-2015 9:08 pm
நன்றி தோழரே 05-Feb-2015 8:52 pm
ஆகா! அற்புதம் நண்பா ... 05-Feb-2015 8:48 pm
இலக்கியன் - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2015 8:03 pm

கிழிந்த உடையோடு இருந்தும்
அவன் சிரிக்கிறான்

எந்த ஏளன பேச்சையும் அவன்
கண்டுகொள்வதே இல்லை

உண்கிறான் உறங்குகிறான்
பிதற்றுகிறான்

ஏதுமற்று கிடந்தாலும்
எல்லாம் கிடைத்தது போல்
இருக்கிறான்

அமைதி தேடி ஓடியது இல்லை அந்த ஆலமரத்தடியை தாண்டியதில்லை

சிலசமயம் பொறாமையாக உள்ளது
பலசமயம் பைத்தியமாய் தோன்றுகிறது

பரவசம் என்கிறான் தன்னை
பரதேசி என்கிறான்

உயர்வை எண்ணி மகிழ்வதில்லை
தாழ்வாய் என்றும் எண்ணுவதில்லை

கூட்டம் கூடுகிறது இருந்தும்
வசூலிப்பதில்லை

பசி எடுத்தால் எப்பா இரண்டு
இட்லி வாங்கி கொடு என்கிறான்

போகும் போதெல்லாம் வாபா என
அழைத்து வேதாந்தமா வேதாளமா என அறியாத படி ஆரூ

மேலும்

மிக அருமை 11-Feb-2015 11:37 am
சிந்தனை மிக சிறப்பு தோழரே... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Feb-2015 1:05 am
யாரும் அறிந்திடாத புதுமையான சிந்தனை..... 08-Feb-2015 10:10 pm
புத்தனா சித்தனா பித்தனா மூன்றுமானவனா எதுவோ புதிதாய் புதிராய் இருக்கின்றாய் உண்மையில் நீ யாரோ......? மூன்றுமானவன் 08-Feb-2015 8:40 pm
இலக்கியன் - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2015 11:30 am

உயிர் அற்ற மூங்கிலில்
துளையிட்ட போதிலே
வெளிப்பட்ட காற்றையும்
இசை என்று கொண்டார்

உயிருள்ள மூங்கிலை
உயிரற்றதாக்கியே
உயர்வான நிலையினை
உலகத்தில் தந்தார்

இருக்கின்ற போதிலே
இல்லாமை தந்து
இல்லாத போதிலே
இருக்கையை தந்தால்

அமருகின்றவன் யாரோ........?
அவர் அமரர்ரானவர்தானோ
விந்திலே முளைத்தவரே
விந்தைகள் செய்பவரே

சிற்பிக்க வேண்டியவர்
சிறப்புலகு எய்திய பின்
சீர் கொடுத்து என்ன பயன்
சிந்திப்பீர் உலகினரே

மேலும்

உண்மைதான் தோழரே ....... வாழும் போது வழி கிடைக்க வில்லை .... வழி கிடைக்கும் போது உயிர் உடலில் வாழ்வதில்லை ....... கவியும் கவியின் பொருளும் அருமை ...... வாழ்த்துகள் தொடருங்கள் தோழரே ............ 11-Feb-2015 1:25 pm
கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் இருக்கும் போதே உணராத அருமையினை இறந்த பின்னரே அறியும் அறிவிலிகள் இங்கு ஏராளாம்...... சாந்தமான நடை செம்மையான கரு .... 11-Feb-2015 1:08 pm
//இருக்கின்ற போதிலே இல்லாமை தந்து இல்லாத போதிலே இருக்கையை தந்தால் // ஆதங்கம் புரிகின்றது ! தொலைந்தபின்தான் அதன் விலை தெரியும் ! அழகான சிந்தனையும் அர்த்தமுள்ள கேள்வியும் ! அருமை நண்பரே ! 11-Feb-2015 12:44 pm
நல்ல கேள்வி 11-Feb-2015 11:37 am
இலக்கியன் - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2015 9:03 pm

கண் கண்ணாடிகளின்
விற்பனைக் கூடங்கள் இன்றைய
பள்ளிக்கூடங்கள்

வெளிநாட்டில் உழைக்க மனித
எந்திர தயாரிப்பு நிறுவனங்கள்
கல்லூரிகள்

இந்தியாவின் மானங்கெட்ட குடிமகன்
அமெரிக்காவில் சாப்ட்வேர்
இன்ஞினியர்

உனக்கென்னடா வந்தது
ஆம் உன் படிப்பிலும் எங்கள்
வரிப்பணம்

மேலும்

அருமை 04-Feb-2015 11:06 am
ஆம் உணரவேண்டிய ஒன்று .......... கல்வியின் நிலை 03-Feb-2015 3:11 pm
அருமை உண்மை 03-Feb-2015 2:52 pm
இலக்கியன் - கி கவியரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2015 3:00 pm

உயிர்பூக்கள் மலர்ந்திட உருபெற்ற உணர்விது
உயர்பூக்களாய் வளர்கையில் மணம் கொடுக்க வலியது
உதிர்கின்ற வலியிலும் சுகம் கொடுக்கும் வழியிது
உடல் மறைந்து போயினும் நிலைக்க இடம்பிடிக்கும் செயலிது

சாதிதன்னை தூக்கியே சாக்கடையில் எறிவது
சாதியென்று உன்னையே சிகரமேற வைப்பது
மதபேதம் இன்றியே மனதை மட்டும் பார்ப்பது
மதம்பிடித்த செடியிலும் மனிதம் பூக்க செய்வது

கருவிலுன்னை சுமக்கையில் தாயுள் தோன்றும் குணமிது
வளருமுன்னை பார்க்கையில் தகப்பன் கொள்ளும் மகிழ்விது
கோபமோடு அவளடிக்கையில் தங்கையென பொறுப்பது
சாயும் நேரம் வருகையில் உறவை தோள் கொடுக்க வைப்பது

இரத்தம் சிந்த பார்க்கையில் இரக்கம் என்ற

மேலும்

காதல் சிறப்பு. 09-Feb-2015 9:31 am
அன்பையே ஆணிவேராக கொண்டு படைக்கப்பட்ட உங்களின் சீர்மிகு வரிகள் மிக சிறப்பு நண்பரே . வாழ்த்துக்கள 09-Feb-2015 7:24 am
உணர்ந்து கொண்டே நகருது கவி ...மதம்பிடித்த செடியிலும் மனிதம் பூக்க செய்வது ... அருமை நண்பரே 09-Feb-2015 7:00 am
நன்றி நட்பே 06-Feb-2015 9:30 am
இலக்கியன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2015 4:51 am

கவிதை எழுதவேண்டும் என்ற ஆர்வம் இருந்தப்போது... வெறுமனே வார்த்தைகளை கூட்டி சேர்த்து எழுதி பழகிய கல்லூரி கால நினைவுகளை கொஞ்சம் இங்கு பகிர்கிறேன்.

எதுகை எது மோனை எது என்று கூட தெரியாமலே கவிதைகள் எழுதிய காலம் அது. ( இப்போதும் அப்படித்தான் )
-------------------
கல்லூரி வகுப்பின் பால்கனி தடுப்புக்கு மறுபுறம் ஒரு பேனா கிடந்தது. அதை என் தோழி ’கிறிஸ்டி ’எடுத்துக்கொடுக்க என்னிடம் வேண்டினாள். அப்போது நான் பேசிய வசனத்தை கவிதை என்று பாராட்டினாள் என் தோழி. அந்த கவிதை இதுதான்.

இது பேனாவாக இல்லாமல்
பெண்ணாக இருந்திருந்தால்
துள்ளிக்குதித்து இறங்கி
அள்ளியணைத்து
எடுத்துக்கொடுப்பேன் கிறிஸ்டி..!

மேலும்

மிக்க நன்றி தோழரே..! உற்சாகமூட்ட உங்களை போன்றவர்கள் இருக்கும் போது எனக்கு கவலையே இல்லை தோழா. நன்றி நன்றி தோழா 03-Feb-2015 8:27 pm
பழைய நினைவுகளில் நானும் மூழ்கி விட்டேன்... நல்ல பதிவு தோழரே... எதற்கும் கவலை வேண்டாம் தோழரே... தாங்கள் என்றும் ஒரு சிறந்த எழுத்தாளனாகவே இருப்பீர்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Feb-2015 7:57 pm
புரிந்தமைக்கு நன்றி தோழா 03-Feb-2015 7:47 pm
மன்னிக்கவும்.....புரிந்து விட்டது நண்பரே.. 03-Feb-2015 7:26 pm
இலக்கியன் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2015 11:18 pm

வண்ணக் கோலமென்றே நினைத்தேன்
வகைகளின் கோர்வையென உணர்ந்தேன் ​!
மலர்களின் வேலிக்குள்ளே பலபொருட்கள்
உற்றுநோக்கியே அறிந்தேன் அவைகளை !

சோப்பு சீப்பு கண்ணாடி அடுக்கடுக்காய்
பொட்டும் வளையல்களும் வரிசையாய் !
வாசனை திரவியமும் இங்கே கூடுதலாய்
வசீகரம் மேலோங்க குங்கும சிமிழ்களுமாய் !

வண்ணமிகு கோலமானது தரையில்தான்
திட்டத்தை தீட்டியவரின் எண்ணம்தான் !
வாழ்த்துக்கள் வரைந்திட்ட கரங்களுக்கும்
வாழ்த்திடுங்கள் புரிந்திட்ட நெஞ்சங்களும் !

​( இப்படத்தை எனக்கு அலைபேசி மூலம்
அனுப்பியவர் ​என் இனிய நண்பர் இயக்குனர் திரு விசு
அவர்களின் துணைவியார் )


பழனி குமார்

மேலும்

இரண்டையும் விட தங்களின் கருத்தால் முழுமை பெற்றது என் எண்ணமும் . நன்றி ப்ரியாராம் 04-Feb-2015 4:02 pm
தங்களின் பார்வையும் எங்களுக்கு பாதையை காட்டுது ... மிகவும் நன்றி அண்ணா 04-Feb-2015 4:01 pm
மிக்க நன்றி கவியரசன் 04-Feb-2015 4:01 pm
கோலத்தால் அழகானதா கவி இல்லை கவியால் அழகானதா கோலம் இரண்டுமே அழகென கூறுகிறேன் அய்யா கைவந்து சேர்ந்ததால் ...அருமை அய்யா ... 04-Feb-2015 3:17 pm
இலக்கியன் - காதலாரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2015 2:48 pm

நெஞ்சு பொறுக்குதில்லையே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மூளைப் பிளவிலும் அழுத்தம் செலுத்தும்
விற்பனைக்கல்வி - சேவையைப் பரப்புமா ..?

கழிவானத் தெருவிலும் விளம்பரம் ஒட்டும்
அரசியல் - வறுமையை ஒழிக்குமா ..?

உண்மை புதைத்து பணத்தில் மிதக்கும்
ஊடகம் - உயிர்வலியை உணர்த்துமா ..?

காமமே காட்சியாக நாகரீகம் நசுக்கும்
திரைகள் - புரட்சியைப் புகட்டுமா ..?

நெகிழி நிறைத்து மதுவில் மடியும்
மனிதன் - வாழ்வியல் சிற்பியா ..?

பிழையின் உருவாய் உழைப்பைத் திருடும்
ஆடம்பரம் - உயிர்த்துளியைச் சுரக்குமா ..?

ஊழல் ஊட்டலில் வன்முறை வடிவமான
சட்டம் - சமத்துவம் எழுதுமா ..?

பல்லுயிர் அழித

மேலும்

சிறப்பான படைப்பு... வாழ்த்துக்கள் தோழரே..! 07-Feb-2015 1:43 pm
அனைத்து வரிகளுமே அருமை அண்ணா......இன்றைய நிலை.....நாளைய நிலை........? வாழ்த்துக்கள் அண்ணா........! 06-Feb-2015 4:24 pm
கவிதை அருமை ! வினாக்கள் விதைகளாக ! 04-Feb-2015 4:15 pm
பிறந்தநாள் மற்றும் பரிசுபெற்றமைக்கு வாழ்த்துக்கள் கவிதையிலும் பதித்திருக்கேறேன் 02-Feb-2015 6:48 pm
இலக்கியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2015 2:52 pm

விண்ணவனுக்கும் முகிலவளுக்கும்
பிறந்த மழைத்துளி
மண்ணில் பட்டு
பெண்ணானதோ .............?!

அடி இனியவளே
சில நேரம் உருமாறும் இடியவளே
கோபம் ஏனோ ..........?

மேலும்

நன்று ! 11-Jan-2015 1:11 am
கோபம் இருந்தானான் காதல் என்பது :) 08-Jan-2015 12:56 pm
நன்றி நண்பரே 08-Jan-2015 12:44 pm
நன்றி நண்பரே 08-Jan-2015 12:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே