vishnukaruppaiah - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vishnukaruppaiah |
இடம் | : pudukkottai |
பிறந்த தேதி | : 25-Jun-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 149 |
புள்ளி | : 19 |
உன் அழகு .....
என் கவிதையின் ......
முதல் வரி .
கவிதை எழுத கற்பனை தேவையில்லை ..
உன் இரு விழிகள் ...
என் விழி அருகில் இருந்தால்!
சிறகுகள் இருந்தால் மட்டும் போதது........
உயர பறப்பதற்கு .
கடின உழைப்பு வேண்டும் .
உள்ளுக்குள்
அழுகைச் சத்தம்
சில நாட்களாகவே இவளுக்குள்....
;;;;;
விழியோடு சேராத கண்ணீரை
உள்ளத்தில்
சேமிக்கத் தொடங்கியிருக்கிறாள்
நிச்சயதார்த்தம் நிகழ்ந்ததிலிருந்து............
;;;;;
தனியாக பேசிக் கொண்டிருக்கிறாள்
இவளுக்கு மட்டும்
கேட்கும் படியாக
தாய் வீட்டின்
ஒவ்வொரு பொருளோடும்
கடைசி நேர உரிமையோடு......
;;;;;
தாய்வீடே நிலைகொள்ள
வரம் கேட்டுக் கேட்டு
திரும்பப் பெறுகிறாள்
நிலைக் கண்ணாடியின் முன்
நீள்தவம் புரிந்து
யாரும் காணா பொழுதுகள்
தொழுது.....அழுது...
;;;;;
தலையணை புதைந்து
குடி பெயர்தலின்
குமுறல்களை
விசும்பல்களினூடே
குறியீடு செய்தவளாய்......
;;;;;
மின் குமிழொன்
நீ செல்லு
எந்தன் நெஞ்சே...
நீ சொல்லு
எந்தன் உறவை
என்னவளிடம்.....
உன்னை பாராமலிருந்தால்
தினம் கண்ணீரால்
என் விழிகள் போர்த்தப்படும்...
உன்னை சேராமல் போனால்
அங்கு காதலின்
சுவர்க்க கதவுகள் சாத்தப்படும்....
இதை சொல்லாமல் போனால்
என் நெஞ்சம்
மேலும் வருத்தப்படும்....
நீ வந்தால் மட்டுமே
என் காதல் அகராதி
மறுபடியும் திருத்தப்படும்....
உனை தினம்
நான் பாடிட்ட
கவிதைகள் சொல்லவா....?
என் காதலை மறுத்து
நீ கோடிட்ட
வார்த்தைகள் சொல்லவா....?
உன்னில் நீ என்றாவது
என்னை நீ கண்டாயா....?
என்னில் நான் எந்நாளும்
உன்னை நான் கண்டேனே....
நீ வந்துவிடு
என் இதயத்தில்...
தந
இன்றைய தலைமுறயின் சமுதாய வளர்ச்சிக்கு காரணம் !
# கலாச்சார மாற்றமா ?
# கல்வியா ?
# தொழில்நுட்ப வளர்ச்சியா ?
சிறு சிறு எறும்புகள் சேர ..
மளமளவென புற்றுகள் எழும் .
துளி துளியாய் நீர் நிறைய....
அலை அலையாய் வெள்ளம் புறப்படும் .
வலி வலியாய் தோல்விகள் நிறைய ...
ஒளி ஒளியாய் வெற்றிகள் அமையும் .
பக்கம் பக்கமாய் அனுபவங்கள் பதிய ..
புத்தகமாய் வாழ்கை .
"சிறுதுளி பெருவெள்ளம்"
கோயில்களில்
இல்லை நீ
ஆனால்
குடியிருக்கிறாய்
என்றும்
தெய்வமாய்
என்
இதயத்தில்..
அம்மா.......
""கயல்"
இம்மாம் பெரிய கூட்டுக்குல்ல
லைப் யெ(அ)னும் போட்டுக்குள்ள
சுற்றி சுற்றி வந்து பார்த்தா
வாயில வாக்கரிசி போட்டாத்தா
பாயும் விறிச்சி படுத்திருந்தன்
பஞ்சு மெத்தைமேல தூங்கியிருந்தன்
பாளும் எமன் கூட்டிபோயி -என்னை
பாட மேல படுக்கவச்சான்
நேத்து நாலு வேசி கூட
இன்று இல்ல நாலு வேட்டிக்கூட
நேத்து பட்டி தொட்டியோட
இன்று குழிக்குள்ள இல்ல ஒரு சட்டிகூட
வாழும் போது அனுபவிச்சன்
வாழ்ந்து செத்தவன் சாவ அனுசரிச்சன்
வாழ்கை எனும்போடுக்குள்ள-ஏறி
மூல்கி போனன் கடலுக்குள்ள .
தான் இறந்தது மறந்தும் என் அழுகையின் கண்ணீரை துடைக்கவந்த என் நட்பே !
இந்த அழுகை உன் மரணத்திற்காக அல்ல ...
உன்னுடன் விண்ணுலகம் வர இயலாதத்திர்க்காக ...