ராம்குமார் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ராம்குமார் |
இடம் | : நாகப்பட்டினம் மாவட்டம் |
பிறந்த தேதி | : 24-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 736 |
புள்ளி | : 40 |
பல வருடங்களுக்கு முன்பு என்னையும் அறியாமல் கவி எழுத தொடங்கினேன்.
ஆனால் இப்பொழுது தான் அதற்கான கருத்துக்களை பெற்றிருக்கிறேன்.
நன்றி!!!!!!
மனம்முழுதும்
கனவுகள் ததும்பிட
பத்து திங்கள்
மடியினில் சுமந்து பெற்ற
மலர் கருகியதன் துயர்வாழும்
அன்னையின் நிலை அறிவாயோ?
நித்தம் காலை உச்சிமுகர்ந்து
பள்ளியனுப்பிய அவள்
உன் உதிரம் கண்டிட
காத்திருந்தாளோ இத்தனை காலம்??
பூவிதழ் மனங்கொண்டு
வண்ணவண்ண கனவுகள்
நித்தம் கண்ட
நஞ்சறியா பிஞ்சுமுகம்
அதைக் கொய்தவன்
கொடும்பாவியில் கொடியவன்!
அழகுமலர் தோட்டத்தில்
சிரித்திட்ட சில்வண்டு
நினைத்திருக்குமோ தான்
சிலப்பொழுதுகளில்
சில்சில்லாய் போவோமென்று!!!!
மலர்களில் தீவைத்த
மனம் மறத்த மனிதா...
நீ செய்திட்ட செயல்
முன்னே அறிந்திருப்பாளோ
உன் அன்னை? இல்லை.
மார்முட்டி நீ
பசியாறுகையி
மனம்முழுதும்
கனவுகள் ததும்பிட
பத்து திங்கள்
மடியினில் சுமந்து பெற்ற
மலர் கருகியதன் துயர்வாழும்
அன்னையின் நிலை அறிவாயோ?
நித்தம் காலை உச்சிமுகர்ந்து
பள்ளியனுப்பிய அவள்
உன் உதிரம் கண்டிட
காத்திருந்தாளோ இத்தனை காலம்??
பூவிதழ் மனங்கொண்டு
வண்ணவண்ண கனவுகள்
நித்தம் கண்ட
நஞ்சறியா பிஞ்சுமுகம்
அதைக் கொய்தவன்
கொடும்பாவியில் கொடியவன்!
அழகுமலர் தோட்டத்தில்
சிரித்திட்ட சில்வண்டு
நினைத்திருக்குமோ தான்
சிலப்பொழுதுகளில்
சில்சில்லாய் போவோமென்று!!!!
மலர்களில் தீவைத்த
மனம் மறத்த மனிதா...
நீ செய்திட்ட செயல்
முன்னே அறிந்திருப்பாளோ
உன் அன்னை? இல்லை.
மார்முட்டி நீ
பசியாறுகையி
எங்கே மனிதம்???
விபத்தில் சிக்கியவன்
உதவிக் கேட்டிலும்
விலகிச் செல்லும்
உன் சுய நலத்தால்
அவனுடன் சேர்ந்தே
மடிகிறது மனிதம்
சதைவெறி மிறுகங்களின்
சபலங்களால் போராடும்
அபலைப் பெண்ணின்
கடைசிச் சொட்டு கண்ணீரோடு
கரைகிறது மனிதம்
ஒருவனது தொழில்
ஜாதி
ஏழ்மை
இயலாமையை கொண்டு
நீ பார்க்கும் பார்வையில்
நித்தம் துடிக்கிறது
மனிதம்
துப்பாக்கி பீரங்கி
ஆகியவற்றின்
இடிமுழக்கத்தில்
அப்பாவி மனிதனின்
மரண ஓலத்துடன்
சேர்ந்து கேட்ப்பாரற்று
சாகிறது மனிதம்
நோயுற்ற வயோதிகன்
பிச்சை என்று
கேட்டிலும் தராமல்
துரித உணவகத்தில்
பணிபுரிபவணுக்கு
நீ கொடுக்கும்
டிப்ஸுடன் விலைப்
போகிறது மனிதம்
முன்பெல்லாம் கனவில்
வந்து வந்து போகும்
என்னவள் முகம்:
இப்பொழுதெல்லாம்
கவிதை
வந்து போகிறது...
காலை எழுந்தவுடன்
முகம்விழிக்க கண்ணாடி
தொடரும் தொலைக்காட்சி:
இப்போதோ
முழுநேரம் முகம்புதையும்
கைக்கணினி...
நான் பார்க்கும் பெண்ணின்
நடவடிக்கை கண்டு
முன்பு காமம் தோன்றியதா
தெரியவில்லை:
இப்போது கவிதை மட்டும்...
அலுவலக அலுவல்கள்
இல்லையென்றால்
வெட்டிக்கதைகள்
வெளியேரும் புகை
இடைவேளையில்
புறட்டிபார்க்க சமூக அரசியல்
புறம்பேச சினிமா கிசுகிசு:
இப்பொழுதோ
இடைவெளி கிடைத்தால்
ஓய்வெடுக்கிறேன் விரும்பி
கணினி திரையில்...
பள்ளி விட்டு வீடுதிரும்பும்
பாலகனாய்
முன்பு அலுவலம் விட்டு:
இ
நான் இவன்..
நீ அவன்..
என்ற
ஜாதி கடந்தது
நட்பு
நான் உள்ளவன்
நீ இல்லாதவன்
என்ற பாகுபாடு
கடந்தது நட்பு
நீ அதைச் செய்
நான் இதைச் செய்கிறேன்
என்று
எதிர்பார்க்காதது
நட்பு
உதடு திறந்து
கேட்டிலும்
உதறிச் செல்லும்
உறவுகள் மத்தியில்
வெரும் உணர்வறிந்து
உதவிடும் நட்பு
நட்புக் காவியம்
பல இருந்தாலும்
அவரவர் நண்பர்களைப்
போல் எவரும் இலர்
நம் நட்பு
காகிதத்தில் காவியம்
ஆகாவிடிலும்
என் மனதினில்
என்றும் அது
நிஜவோவியம்
நான் இவன்..
நீ அவன்..
என்ற
ஜாதி கடந்தது
நட்பு
நான் உள்ளவன்
நீ இல்லாதவன்
என்ற பாகுபாடு
கடந்தது நட்பு
நீ அதைச் செய்
நான் இதைச் செய்கிறேன்
என்று
எதிர்பார்க்காதது
நட்பு
உதடு திறந்து
கேட்டிலும்
உதறிச் செல்லும்
உறவுகள் மத்தியில்
வெரும் உணர்வறிந்து
உதவிடும் நட்பு
நட்புக் காவியம்
பல இருந்தாலும்
அவரவர் நண்பர்களைப்
போல் எவரும் இலர்
நம் நட்பு
காகிதத்தில் காவியம்
ஆகாவிடிலும்
என் மனதினில்
என்றும் அது
நிஜவோவியம்
ஆதாம் ஏவாள்
வித்திட்ட
அறிவியல் விந்தை
ஹார்மோன்களால்
மீட்டப்படும்
சிலிர்த்திடும் சிம்பொனி
அறுவை சிகிச்சை
இன்றி
இதயம் இடமாறும்
காதல் கார்டியாலஜி
காதல் பித்தம்
தலைக்கேறினாள்
நியூட்டனும்
தலைக்கீழ் மிதப்பான்
காதலி
சுண்டுவிரல் தீண்டியதன்
மின்சாரத்தில்
எடிசனும் எகிறுவான்
சீறிவரும் காளையென்பான்
சிறுத்தையென்பான்
அவள் கடைவிழி
பார்வையிலே
கன்றுக்குட்டி ஆகிடுவான்
சிலரது காதல்
காவியம்
பலரது காதல்
காகிதம்
திரைக்காதலை
ஒழித்து
நிஜக்காதல்
புரிவாயடா!!!!!!!
துப்புரவுத் தொழிலாளின்
நிலை புரிந்தால்
தெருவினில் உமிழ்வாயோ?
தாயின் பிரசவிக்கும்
வலி அறிந்தால்
பெண்களை
கலங்கம் செய்வாயோ?
உயிருக்காக உதிரம்
தேடுபவனின்
உணர்வுகள் தெரிந்தால்
மதுத் தேடி அலைவாயோ?
அரவாணியின்
மனநிலை
தெரியுமாயின் அவர்களை
ஏளனம் செய்வாயோ?
கந்தல் துணி உடுத்தும்
மனிதனின் அவளம்
புரியுமாயின்
உள்ளாடைத் தெரிய
உடை உடுப்பாயோ?
நீ
உன் பிம்பமாய்
அவர்களை காணாதவரை
அவர்தம் துயர்
அறியமாட்டாய்
மறந்து விடாதே மனிதா
அவர்களும் மனிதர்களே.
கம்பன் வீட்டு
கட்டுத்தறி
கவிபாடும் அறியேன்
நான்
உன் கண்னம்
தொடும் காதனி
கவிபாடும் அறிவேன்
நான்
காவிய காதல்
கதைகள்
அறியேன் நான்
உன் விழிகள்
பேசிடும் கதைகள்
அறிவேன் நான்
சங்கீத ஆலாபனை
அறியேன் நான்
உன் கால் கொலுசு ஜதி
அறிவேன் நான்
கவி எழுதிடும்
நடை அறியேன் நான்
தமிழ் நடை நாணும்
உன் நடை
அறிவேன் நான்
இத்தனையும் அறிந்திட்ட
பித்தன் நானடி
நான் உந்தன்
காதல் என்று
ஒரு முறை கூறடி
நண்பர்கள் (14)

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

காயத்ரி பாலகிருஷ்ணன்
ஸ்ரீ லங்கா , பதுளை

அனுரஞ்சனி மோகன்
bangalore

k.nishanthini
chennai
