சோமா- கருத்துகள்

புதுகை செனா, தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் வணக்கம். நன்றி!

Mohamed Sarfan, Meenakshi Vinolia, JINNA அவர்களுக்கு, தங்கள் வருகைக்கும் , வாழ்த்திற்கும் தலை வணங்குகிறேன். நன்றி!

Chellamuthutamil தங்கள் மேலான வருகைக்காக, வாசிப்பதற்காக, கருத்து எழுதியதற்காக தங்களின் பொன்னான வாழ்வில் சற்று நேரத்தை ஒதுக்கியதற்காக நன்றி! இந்த 'நான்' - இடமிருந்து விடுதலை அடைந்தபின் என்ன நிலைமை, எவருக்கும் சொல்ல இயலுமா என்று தெரியவில்லையே! எனினும் இப்போதே வாழ்த்துக்கள்!

தங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

பிச்சைக்காரி மேல் எழ வேண்டியது அனுதாபம். எழுவது இச்சை என்பதை படிப்பவரின் மனதைத் தொடும் படி கவி வடித்தது பாராட்டுக்குரியது

நன்று. ரசித்தேன்

சகோதரி, நானும் கருப்புதான். நண்பர் வடிவேல் தனது கருத்தில் சொல்லியபடி," இது கருப்பனுக்கும் பொருந்தும் கவிதை." தங்கள் கவிதை, ஒரு கவிதையாக, உண்மையிலேயே அழகு. பாராட்டினேன். பாராட்டுகிறேன். அதில் உணரப் படும் 'கருப்பாக உள்ளேனே' என்ற வருத்தத்தை தாங்கள் வெற்றி கொண்டு கடைசி நாலு வரிகளில் ' எனக்கு என்ன குறைச்சல்?' என்ற பாணியில் இயம்பியதை ரசித்தேன். நமது சமூகத்திற்கு நிச்சயம் fair complexion தான் அழகு என்ற complex உண்டு. நம் போன்ற கருப்பு நிறத்தவருக்கு அதன் பாதிப்பால் inferiority complexம், self pity யும் ஏற்படுகின்றன. அந்த ஆதங்கத்தை வளர விடாமல் அதிவிரைவில் அழித்து விட வேண்டும் என்றுதான் நான் சொல்ல வந்தேன். தொடர்ந்து எழுதுங்கள். வரவேற்கிறோம்!

அமர்க்களமான நண்பர் அணிவகுப்பு! அழகான முத்தாய்ப்பு! ஆனந்தம் நல்கும் கவிநடை. வாழ்த்துக்கள்!

தந்தை இல்லாத தனயனின் தவிப்பை தாங்கலாக வெளிக் கொணர்ந்துள்ளீர்கள் - அருமை!

பெற்றோர், பள்ளிப்படிப்பு தம் பிள்ளைகள் பணம் சம்பாதிக்க வழி வகுக்கும் என்று பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.. அறிவுத்தாகத்தை ஏற்படுத்தும், அன்பினையும், அருளையும் பெருக்கும் என்று எண்ணி அல்ல. எனவே, நமது கல்லூரிகளும், பள்ளிகளும் வியாபாரக் கூடங்கள் ஆகி விட்டன. " இந்த அவலம் மாற வேண்டும்
சமூகம் திருந்த வேண்டும்.... " என்று அழகாக சொல்கிறீர்கள். நல்ல பாடல். நல்ல பாடம்.

சொற்களை, கவி மயக்கத்தில், புனைந்த விதத்தால் கருப்பாக உள்ளேனே என்ற ஆதங்கம் (self pity) ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள்! ஆனால், கருப்பாக இருப்பதற்கு இவ்வளவு வருத்தப்பட வேண்டுமா, என்ன? மாறாக, பெருமை பட்டிருக்க வேண்டும். ஊனம் இல்லை அல்லவா! கருப்பே அழகு, காந்தலே ருசி.

இறைவன் ஒருவன் என்று ஆரம்பிக்கும் கவிஞர் ஆத்திகர் என்றே கொள்ள வேண்டும். அறிந்தவன் நாத்திகன் என்றது புரிபடவில்லை! "அறியாத"ஆத்திகனும் "உண்டு, உண்டு" என்றுதான் பிழைப்பு நடத்துகிறான். இறைவன், உண்டு, இல்லை எனபதற்கெல்லாம் அப்பாற்பட்டவன். சிந்திக்க வைக்கும் பாடல்

சத்தியம், சிவம், சுந்தரம் என்பார்கள் : எது உண்மையோ, அது நல்லது, எது நல்லதோ அது அழகு. அகத்தில் அமைதி நிலைப்பதே அழகு என்றது சரி. ஆனால், கலைவது அழகு, அழகின் மேல் ஆசை களைவது அழகு என்றதும் சரியாகப் படுகின்றதே! ஆக, ஆசை இரு வகை: சிற்றின்ப ஆசை மற்றும்
பேரின்ப ஆசை. சிற்றின்ப ஆசையை, பேராசையை, மேலெழுந்தவாரியான ஆசையை களைய வேண்டும். உண்மை, நன்மையிலிருந்து உண்டான, உவகையான, சுந்தரமான, தெய்வீக அழகின் மேல்
எழும் ஆசையை பூண, பேண வேண்டும்! என் சிந்தனைக்கு சிறகுகள் தந்த தங்கள் புலமைக்கு வந்தனம்!

நன்று, இந்த காதல் மதி மயக்கம்!

ஒரு வாசனை மிக்க பா... பழைய புத்தகத்தின் மணம், மழையின் வாசம்
நாங்களும் நனைந்து விட்டோமே, உள்ளும் போதே! நன்று!

திருக்குறள்:
"நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொயுடைமை
போற்றி யொழுகப் படும்" -
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
அந்த பொறுமை அன்பினாலேதான் சாத்தியம்.

"அன்புஈனும் ஆர்வம் உடைமை; அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு."

அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
நேசித்தல் முதல் அடி. பொறுத்தல் அதன் விளைவு. திருத்தல் அதன் லட்சியம்.
ஆஹா! த்த்துவங்கள் இருக்கட்டும்! தங்கள் கவித்துவமும், கவியும் அற்புதம்!

அட்சதை போட்டு ஆசீர்வதிப்போம், இதுவாவது நிலைக்கட்டுமே என்று! நிதர்சனமான கவி! நகைப்பூட்டுவது கூட!

அலுவலகம் செல்லும் பெண்டிரின் அன்றாட வாழ்க்கையை வீடியோ எடுத்து விட்டீர்களே! அழகாக! நன்று.


சோமா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே