ஜெயபாலன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜெயபாலன் |
இடம் | : கடலூர் |
பிறந்த தேதி | : 30-Jun-1957 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 746 |
புள்ளி | : 69 |
இந்த உலகத்தில் குடிதண்ணீர் அற்றுப்போனாலும் நான் தமிழ்க் குடித்து வாழ்வேன்.
ஒளி இல்லாமல்
போனால்
என் கண்களே
எனக்குத்
திரை ஆகும்!
அன்பே,
நீ இல்லாமல் போனால்
என் உணர்வே
எனக்கு சிறை ஆகும்!
அன்பே,
உன் கண்கள்
என்னைக் குடிக்கறது
உன் பெண்மை
என்னை நெரிக்கிறது!
அமுதரோஜவே,
முள்ளிருந்தும்
நீ முள்ளோடு
வரவில்லை
சப்தமில்லாமல்
என்னை சந்திக்க
வந்தாய்
சந்திப்பில்
நீ தந்த
முத்தத்தின்
சத்தத்தில்
சங்கீதம்
சமாதியாகிவிட்டது!
அமுதம் வழிந்தோடும்
அழகிய கண்களில்
ஆசையை வடிகட்டியது
எனக்குத் தானா!
வானத்திற்கு
வழிகேட்க வந்த
குயிலைப்போல்
எனக்கு முனனால்
சிறகடித்து நின்றாய்!
சந்தித்துப் பேசினாய்
மௌனம் கலந்த
மலர்ப் பார்வையில்!
நான் சப்தமின்றி
ஒடுங்கிப் போனேன்
என்னை அடிமைப் படுத்திய
அந்த நாளில்
உன் பரிபூரனங்களில்
என் நினைவுகளுக்கு
பதவி
பழங்காலத்திலிருந்து மக்களிடம் ஒரு நம்பிக்கை.
நரியின் முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும்.
பூனை குறுக்கே வந்தால் கேட்ட சகுனம்.
நல்லதையே எப்போதும் விரும்பும் இந்த மனித இனத்தில்
வீட்டில் நரியை வளர்க்காமல் பூனையை வளர்க்கிறார்கள்.
எண்ணத்துக்கும் செயலுக்கும் காலகாலமாய் ஏனிந்த முரண்?
காதல் என்பது
காந்தமானால்
நீ தென்துருவம்
நான் வடதுருவம்
நமக்குள் கவர்ச்சிதானே!
தூண்டில் புழுவாய்
நானிருந்தால்
கொத்தும் மீனாய்
நீ வருவாய்!
கடவுளென்ற உழவனின்
காதல் கலப்பையில்
வலதுமாடு நீ
இடதுமாடு நான்
அவன் கைப்பிடியில்
நாம் கண்ணடித்துக்
கொள்வோமா!
உனக்கும் எனக்கும்
காதல் ஒரு தேர்தல்
உன் சின்னத்தில்
நான் முத்திரை இடுவேன்
என் சின்னத்தில்
நீ முத்தரை இடுவாய்
எண்ணிப் பார்த்தல்
தெரியும்
நீயும் நானும்
வெற்றி வேட்பாளர்கள்
அங்கெ
நீ என்னை ஜெயித்திருப்பாய்
நானும் உன்னை ஜெயித்திருப்பேன்
பகலைத் துரத்துகிறது இரவு
இரவைத் துரத்துகிறது பகல்
உன்னையும்
நிலாவாய் சிரிக்கும்
ஒரு வெள்ளிக்கிண்ணமாய்
என் கைகளில்
வீற்றிரு!
முத்தம் கொடுக்கும்
மோக நிலவின்
முழு முகவரி
உன் கண்கள்!
பள்ளி அறையில்
துள்ளி வந்த
என் பாதரசமே
நீ என்
இன்பக் குறியீடாய்
இருந்துவிடு!
உன் பார்வை
பதியும் போதெல்லாம்
என் பருவம்
பதியம் போடுகிறது!
விண்ணிலும் மண்ணிலும்
விரிக்கப்பட்ட காமவலை
உன் கண்கள்!
உன் பார்வையில்
சிக்கிகொண்ட என்னை
எப்படி மீட்கப்போகிறாய்
நீ எப்படி அசைந்தாலும்
எனக்கு வலிக்கிறது!
என் நெய்யாற்றில்
நீ நெருப்பாய்
நீந்தி சென்றாயே
இதற்குப் பெயர்தான்
காதலா!
இப்படித்தான்
நான் எரிந்து
சாகவேண்டுமா!
என் கருவிழி
கல்லாத்தான் நிப்பீங்களா?
நீதியில்லையா? நியாயமில்லையா?
அய்யோ இதை கேப்பாரில்லையா?
இது நாட்டுக்குவந்த கேடா ! - எங்க
வீட்டுக்கு வந்த கேடா ! - அய்யய்யோ
தருமம் செத்துப் போச்சா? - எங்களுக்கு
கருமம் செய்யப் போச்சா?
அய்யோ எங்க மண்ணும்
உசுரும் போகப் போகுதே!
அய்யோ எங்க மாடும்
ஆடும் சாகப் போகுதே!
அவசரமா சட்டம் போட்டு
எங்க வயித்தில அடிக்கிறாங்களே!
எங்களைக் கூட கேக்காம
எங்க நெலத்தை பறிக்கிறாங்களே!
நெல்ல வெளச்சி ஊருக்கெல்லாம்
அரிசி தந்த எங்களுக்குத்தான்
ஊரக்கூட்டி வாய்க்கரிசி போடுறாங்களே!
பட்டாபோட்டு வாங்கப்போகுதே சர்க்காரு
பரிஞ்சிபேச எங்களுக்காரு இருக்காரு?
ஏழைபாழை கூலி வெவசாயிங்க
குடிப்பதில் இருக்கும் துன்பம் வேறில்லை...
குடிப்பதை விரும்பாதவன் பலரில்லை...
குடிப்பவன் சொல்வான் வேதமில்லை..
குடித்ததால் அவன் பேசுவது நியாயமில்லை ....
அவன் பிறந்ததை நினைத்து குடிப்பான்..
அடுத்தவன் இறந்தால் குடிப்பான்...
கூட்டு சேர்ந்தால் குடிப்பான் ...
கூடு பிரிந்தால் குடிப்பான்...
எல்லையில் இருந்தாலும் குடிப்பான்...
எல்லை மீறவும் குடிப்பான்...
எலும்புகள் உருகும் வரை குடிப்பான்..
எறும்புகள் உடம்பில் ஊறுவது தெரியாமல் குடிப்பான் ...
இதயம் தொலைத்தவன் குடிப்பான்..
இதயத்தை தேடுபவனும் குடிப்பான்..
இதயம் நிற்கும் வரை குடிப்பான்.
இதயங்கள் உடையும் வரை குடிப்பான்..
வாழ்க்கை வெற்ற
கனவுகளை மெய்பட வைப்பது எது ?
கொஞ்சிடும் குழந்தை
இவள் அழகை
மிஞ்சிடுமோ தேவதைகள் .
வளையல் கொஞ்சும்
மென்கரங்கள்
கொலுசுகள் சிணுங்கும்
சின்னக்கால்கள்
தலை நிறைந்த மல்லிகை
தரைப்பார்த்து இவள்
நடக்கையில் தடுமாறித்தான்
போனான் பிரம்மனும்
செதுக்காத சிற்பமா?
வரையாத ஓவியமா?
வானமும் காணாத
வானவில்லா ?
பூக்கள் காணாத
நறுமணமா?
தென்றல் காணாத
மெல்லிசையா ?
இல்லை இல்லை இவள்
அவைகளை மிஞ்சும்
செந் தமிழச்சி ....
தோழர் விக்ரம் -க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
------------------------------------------------------------------------------------------
நவீன யுகத்தின்
விஞ்ஞான புத்தகமாம்.
இந்த உலகவீதியில்
தமிழ் சிறகுக்கொண்டு
இணைய உலாவிகளில்
உலாவிக்கொண்டே
புதுப்புது எழுத்தாளர்களை
உருவாக்கிக்கொண்டிருக்கும்
”எழுத்து.காம்”
இணையதள இயக்கத்தின்
பிண்ணனியிலிருக்கும்
ஒரு முன்ணனி தோழன்
விக்ரம் அவர்களுக்கு
”இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் “
- எழுத்து தள தோழமைகளுடன்
இரா.சந்தோஷ் குமார்.