பார்த்திபன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பார்த்திபன் |
இடம் | : கரூர் |
பிறந்த தேதி | : 16-Mar-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 903 |
புள்ளி | : 76 |
வணக்கம் நண்பர்களே. நான் ராஜா. பார்த்திபன் என்னும் பெயரில் கவிதை மற்றும் சிறுகதை எழுதி வருகிறேன். என் கனவு மற்றும் லட்சியம் கவிதை,சிறுகதை புத்தகங்கள் வெளியிடுவதாகும்.rnஎன் கவிதைகளை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.நன்றி.🙏🏼 - பார்த்திபன். ✍🏽
இருளின் விழிகளைக் கொண்டு
நகரும் தருணங்கள்
பல பாடங்களை
சொல்லிவிட்டு செல்கிறது,
எது நிலையானவை என்று.
தலை குனிந்து நடக்காதே பெண்ணே
தரை கூட காதல் செய்யும் உன்னை..!
தலை குனிந்து நடக்காதே பெண்ணே
தரை கூட காதல் செய்யும் உன்னை..!
உயிரென உறவா இருந்தோமே.
உணவிலும் உறவை பகிர்ந்தோமே.
ஒவ்வொரு நாளும் ஒன்றாய் திரிந்தோமே.
ஒன்றுமறியாமல் இன்று ஏனோ பிரிந்தோமே.
அருகில் இருந்தும் ஏனோ
தூரங்கள் பல போனாயே.
நீ தூரமாய் போனாலும்
என் நட்பது குறையலயே.
நான் துரத்தி வந்து உனையும்
சேர நினைக்கவில்லையே.
உயிரென உறவா இருந்தோமே.
உணவிலும் உறவை பகிர்ந்தோமே.
ஒவ்வொரு நாளும் ஒன்றாய் திரிந்தோமே.
ஒன்றுமறியாமல் இன்று ஏனோ பிரிந்தோமே.
அருகில் இருந்தும் ஏனோ
தூரங்கள் பல போனாயே.
நீ தூரமாய் போனாலும்
என் நட்பது குறையலயே.
நான் துரத்தி வந்து உனையும்
சேர நினைக்கவில்லையே.
விதைக்கும் விதைக்கு
நிழலாக……..
முளைக்கும் செடிக்கு
உரமாக.....
வளரும் மரத்திற்கு
அடைக்கலமாக.....
பூக்கும் பூவிற்கு
பாதுகாப்பாக......
பழுக்கும் பழத்திற்கு
காவலாக.....
மரத்தோடு பழத்தையும்
சுமக்கும்.....
சேயினும் மேலான தந்தை!!!
-கவி....
கருவில் சுமந்து
வலியை பொறுத்து
கவலையை மறந்து
துயரத்தை துறந்து
பலவழியை கடந்து
அறிவுரையை ஆராய்ந்து
சுமையை துடைத்து
சேயை உயர்த்த துடிப்பது
தாயின் அன்பு.....!!!
-கவி....
உன்னை
நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்,
என்னுள் ஆயிரம் கற்பனைகள்
உன்னை சேரும் நாளை எண்ணி.
நீ நகம் கடிக்கும் அழகில்
நான் வெட்கப்பட்டேன் .....
---------------
குளத்திற்கு தெரியவில்லை
குளிக்கும் நீ ஓர் தாமரை என்று.....
-------------
கண்கள் வடிக்கிறது கண்ணீர்
உன் கண்னங்களை தொட .....
-------------
வரம் கேட்பேன்
நான் சுவாசிக்கும் காற்று
நீ வெளியிடும் காற்றாக
வேண்டும் என்று......
----------
நீ தமிழச்சி என்பதை மறந்தேன்
நான் அறிமுகமாக கை நீட்டிய போது
வணக்கம் வைத்த நீ .....
-----------
திருடனாய் நுழைந்தேன்
நீ தழை வாரிய சீப்பில்
தலை முடி திருட ....
--------------
பிழைக்கமாட்டேன் காதல் நோயில்
சிக்கிய நான் .......
ஏட்டினில் நான் எழுதிடுவேன்
உன் அழகின் பெருமை என்னவென்று பாடிடுவேன்
பூவும் பொட்டும் நிலைத்திடவே
நான் புகழ்ந்திடுவேன்
இங்கு ஆடும் மயில் உனக்கென்ன அழகு
வண்ணமயில் நின்னயே அழகென
நான் துதித்திடுவேன்
நிலையாத வாழ்வில் உனக்கென்ன தயக்கம்
அள்ளித் தந்திடும் உன் அன்பில்தான்
நான் மயங்கிடுவேன்
காற்றோடு கலந்திடும் சுழலில்என்ன பெருமை
சொற்குழலில்
ஆட்டுவிக்கும்போதுதான்
நான் மிதந்திடுவேன்
உன்னில் சேர்ந்து வாழும் நிழலுக்கென்ன வரம்
என் இதயத்திலே தொடர்ந்திடும் போதுதான்
நான் ஜீவனாகிடுவேன்
மேகத்தோடு அலைந்திடும் ஆடைக்கென்ன இனிமை
என் மேனியில் வந்தது தழுவிடும் போதுதான்
நான் உற
உதடுகள் சொல்ல முடியாத காதலை
சில சமயங்களில்
உணர்வுகள் சொல்லி விடுகிறது...
கண்ணீராக....
அல்லது
கவிதையாக...