santhosh bhavan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : santhosh bhavan |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 24-Apr-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 132 |
புள்ளி | : 37 |
http://putthiyakavithaigal.blogspot.in
நீல வானம் இல்லை, எனது
மதிக்கு தெரியும்,மனம் தான் நம்பவில்லை,..
உன்னை நினைப்பது போலவே.
நான்
............
மழை நின்ற பின் வெயிலும்
வெயில் தாக்கம் போக்கும் மழையும் - நான்
தாமரை இலைக்கும் நீருக்கும்
இடையே உள்ள இடைவெளி இல்லா இடைவெளி நான்
உறவுக்கு பிரிவுக்கும் நடுவில் உள்ள
பிரபஞ்சம் கண்ட மௌனம் நான்.
நான் காணும் யாவும் நீ ஆதலால்
நீ யாகிய நீயும் நான்
எதில் எல்லாம் நான் என்னும் கர்வம் இல்லையோ அவை எல்லாம் நான்
பிறக்காத கனவும்,என்றும் இறக்காத
நினைவும் நான்
நான் என்றும் நான் அல்ல நீயாகிய நானே நான்.
மழை மேகம் கருமையாகவும்
மழை விழுதுகள் வெண்மையாகவும் - காண்போர் காணலாம்,
மேகம் வெண்மையாகவும்
விழுதுகள் கருமையாகவும்-உன்னை கண்போரே காணலாம் .
மழை மேகம் கருமையாகவும்
மழை விழுதுகள் வெண்மையாகவும் - காண்போர் காணலாம்,
மேகம் வெண்மையாகவும்
விழுதுகள் கருமையாகவும்-உன்னை கண்போரே காணலாம் .
ஆயக்கலைகள் அனைத்தும்
இவளுக்கு அத்துபடி,
காயங்கள் நிறைந்த
நெஞ்சமடி,
சாயங்கள் பூசாத
உறவடி,
கல்லம் கபடமில்லாத
மனசுக்காரி,
கார்மேகம் அளவிற்கு
பாசக்காரி,
கோவில்கள் படைக்காத
தெய்வம் அவள்,
கொஞ்சிடும் தமிழின்
பாஷை இவள்,
நமக்காக வாழ்வை
துறந்த போராளி அவள்,
நாம் ருசியாக உண்ண
பசியை வரமாக பெற்றவள்,
தன் துன்பத்திலும்,
இன்பத்தை மட்டுமே
பங்கு போடுவாள்,
எமக்கு சாவும் வந்தால்
உந்தன் மடியில்
சேலை நுனியில்
மடிந்தால் அதுவும் வரமே!!!
வான அன்னையை
மறைத்து வளர்ந்த
மேகமும் நிலவும்
கொஞ்சிக் கொள்ளும் நேரம்...
ஒயிலாக வளர்ந்து நிற்கும்
உனைக் கொஞ்ச வராத
என்னை தேடும்
தேன் சிட்டே
இதோ
இன்னும் சில நொடிகளில்
உன் அருகில் நான்......
உணவேதும் இல்லாமல்
இருந்தாலும் உண்ணாமல்,
காரணங்கள் தோணாமால்,
உடலோடு வயிறு செய்யும்- போர்
பசியும் கொடிதல்ல
கண்ணீர் ததும்பும் முகங்கள் சூழ
காற்றோடு மனம் கலக்க
இமை இரண்டும் தான் கலக்க
உயிர் பிரியும் தருணமும் கொடிதல்ல.
காற்றில் கானம் படி, கவிதையாய்மொழிகள் கூறி
கைகோர்த்து நடந்த கடற்கரை துறந்து,
உனக்கு பிடித்த பாடல் கேட்டு ,
மனதில் உன்னை சுமந்து, கொட்டும் மழையில்
கண்ணீர் கரைய, என் மகிழ்ச்சியும்
மெதுவாய் குறைய
நானிருக்கும் தனிமையே கொடிது.
தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது
நம்பிக்கை
அறிவுரை
சொல்ல நினைத்த வார்த்தைகளை
cellல் அனுப்பினேன் SMS ஆக.
எழுதி வைத்த கவிதைகளை
இணைத்து அனுப்பினேன் Email ஆக.
முகம் பார்த்து பேச கூட நேரமில்லை
முகநூல் statusல் பகிர்ந்துவிட்டான்.
சந்தித்து பேசவும் சாவுகாசமில்லை- அதனால்
சாயும்காலம் chatting சொல்லி விட வேண்டும்.
நான் உன்னை காதலிக்கிறேன்,
எனக்கு எல்லாமே நீ தான்,
ஒவ்வொரு நொடியும் உன் நினைப்பிலே வாழ்கிறேன் என்று.
காய்ந்து வற்றிய குளத்திலும்
கால் முளைத்த தாமரைப்பூ..!
பூமிக்காகிதத்தில்
புதுக்கவிதை நடக்கிறது..
ராமனின் பாதம்பட்டு
மோட்சம் பெற ஏங்கினாள் அகலிகை
உனது பாதம்பட்டு
மோட்சம் பெற ஏங்குகின்றன
சாலையோர பூக்கள் ...!!