jayanthi praburajan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : jayanthi praburajan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-May-2014 |
பார்த்தவர்கள் | : 134 |
புள்ளி | : 13 |
இலைகள் உதிர்ந்தாலும்
ரேகைகள் மறைவதில்லை
மழையில் பயணிக்கும்
மண்புழுக்கள் அழுவதில்லை ..
மறையும் சூரியன் கூட
மரித்து போவதில்லை..
மாறாய் ..
இந்த மனிதன் மட்டும் ..
உடைந்து போகிறான் ..
அவன் எதிர்பார்ப்புகள் ..
பொய்யாய் போகும் போது ..
ஆசையை நம்பியவன் ..
அவனை நம்ப மறந்து விடுகிறான் ..
#குமார்ஸ் ....
என் கண்ணீர் கதைகளின்
தொகுப்பு!
நான் அழுவதும்
சிரிப்பதும்
அறியும்அருமை தோழி!
காதல் பொழுதுகளின்
தாபங்களில்
என் நெஞ்சனையும் தோழி!
அடங்கா கோபத்தில்
நான் குத்தி கிழித்து
கோபம் தணிக்கும்
சுமை தாங்கி!
அண்ணனோடும் அக்காவோடும்
சண்டையிட இணக்கமான கருவி!
இடி இடிக்கும் பொழுதுகளில்
பயம் தணிக்க
அணைத்துக் கொள்ளும்
துணிச்சல் மிக்க தோழி!
தோல்வி பொழுதுகளில்
நான் சுருண்டு
முகம்புதைக்க
எனை ஏந்தி அரவணைக்கும்
அன்னைமடி!
பள்ளியறை வைபவத்தின்
ஆனந்த தாண்டவத்தில்
ஆசுவாசப்படுத்தும்
அருமருந்து!
கணவனை கையகப்படுத்த
கால காலமாய்
கையாளும் தாரக மந்திரம்
உன் தலையணை மந்திரம்!
பிரசவ அறையின்
மரண வலியில்
முக்கி முணகி
திமிறி எழுகையில்
நிலவை வர்ணித்தேன்
நீயிருக்கும் போது!
உன்னைப் போலவே_இன்று
உடுக்கை இழந்த நிலவும்
என்னுடன் இல்லை!
வானில் மட்டுமல்ல_இன்று
என்னிலும் அமாவாசையே!
இதயமிருப்பதை உன்
பிரிவின் போதுதான் உணர்கிறேன்!
யாரும் அடிக்காதபோதும்
சற்று வலிக்கத்தான் செய்கிறது.
அப்போது என் மகனுக்கு இரண்டரை வயது.நான் அவனை பாட்டு வகுப்பிற்கு அழைத்துச் சென்றேன்,என் மகனும்
சூப்பர் சிங்கராக வேண்டுமென்ற ஆசையில்..பாட்டு ஆசிரியையும் வந்தார்.குரு பிரம்மா!குரு விஷ்ணு!என்று ஆரம்பித்தார்.என் இரண்டரை வயது மகனோ ஆசிரியை குரு பிரம்மா என்றால் அவன் குருங்கொம்மா!என்றான்.
மீண்டும் மீண்டும்
ஆசிரியை குரு பிரம்மா என்றால் அவன் குருங்கொம்மா!என்றான்.
மற்ற குழந்தைகளெல்லாம் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே இருந்தனர்.நேரம் வீணே போய்க்கொண்டிருந்தது,ஆசிரியை பாட்டுமறந்து பைத்தியம் பிடிப்பதற்குள் நானும் அவனும் எஸ்கேப்.வீட்டிற்கு வந்தேன்.கதையை கேட்ட உறவினர் அனைவரும் விழுந்
எவன்
என்னானால்
எனக்கென்னவென
எவர்க்கோ
எங்கோ
எதையோ
எப்படியோ
எல்லோரும்
எப்போதும்
எந்திரமாய்
தந்திரமாய்
ஆகத்துறத்திப்போவது
அடுத்தவன் போலாகத்தான்
உன் உயர்வுக்காய்
பலர் கூறும் பாராட்டு
நீ உறங்க தாலாட்டாய்
நினைத்திடாதே!
போராடி முயன்றிடவே
பல பேரின் தூண்டுதலை
முழு மனதாய்
ஏற்றிடாதே!
வாழ்ந்திடவே பல வழிகள்
உவப்பில்லா வழியதனை
உன் வழியாய்
கொண்டிடாதே!
வாழ்வு உனை பயமுறுத்தும்
வலு விழந்து நீ அதனை
பயந்தவனாய்
பதுங்கிடாதே!
நீதிக்கு தலை வணங்கு
வலிமை கண்டு நீ அதனை
வெறுமையாய்
விட்டிடாதே!
இளமை உனை விரட்டும்
கடமை முன் நிற்க
இளமைக்காய்
விழுந்திடாதே!
உன் முன்னே பல பணிகள்
உனை நம்பி பல இருக்க
பகட்டுக்காய்
பணிந்திடாதே!
உலகெங்கும் பல தேடு
கிடைக்கும் வரை தேடு
களைப்பாய்
சோர்ந்திடாதே!
அறிந்திடுவாய் உன் பலத்தை
ஆக்க
சாலையின் ஓரத்தில் தோண்டப்படும் குழிகளை மூடுவதில் தாமதமாக செயல் படுவதை குறைத்து கொண்டால் நடந்து செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.
எனக்கும் ஆசைதான்.......
கறைபடர்ந்த இந்த
கல்லறைக்கு
மட்டுமல்ல..........,
மனிதம் மறக்கும்
மண்ணுலகிற்கும்
வெள்ளை சலவை
செய்ய.............
மக்கள் தொகையில் இரண்டாம் இடம் இந்தியா!-இருக்கட்டும்.
நம் உலகில் நம்மைத் தவிர யாருமில்லை!
உங்களிடம் என் இதயம் தொலைத்து விட்டேன்.
இன்னும் ஒரு வார்த்தை சொல்ல வில்லை
கிடைத்து விட்டதென்று!_நான்
நன்னாலிலே உன் கைப்பிடித்து-அடுத்த
நாள் முதல் உன் இதயத்தில்
இடம் பிடிக்க வந்தவள்!
நெல்லிக்கனி சுவைத்து பின்
நீரருந்தினால் தான் இனிக்கும்-உன்னை
நினைத்தாலே இனிக்கும்!
நிழலாக அல்ல!-இனி
நீயாக நானிருப்பேன்
கடலென்றால் மீனில்லாமலா?
நானென்றால் நீயில்லாமலா?
ஆனித்திங்களில் என் மறுபாதியைக் கண்டுபிடித்தேன்!
தைத்திங்களில் என் உயிரைக் கைப்பிடித்தேன்!
இது காதல் கடிதமல்ல..
நான் காதலியல்ல!
என் அன்பு கணவ
உன் பாதம் படாததால் தான்
இருக்கிறது இன்னும்
சகாரா
பாலைவனமாய்!