திருமதி கலைஞானகுமார்- கருத்துகள்
திருமதி கலைஞானகுமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [34]
- மலர்91 [31]
- கவின் சாரலன் [25]
- அஷ்றப் அலி [24]
- C. SHANTHI [19]
கதை நகர்ந்த விதம் நன்றாய் உள்ளது.அதுவும் தோழியரிடையே நடக்கும் சம்பாஷனை சிறப்பாய் உள்ளதோடு நிதர்சன உணர்வினையும் தந்தது.
சாருமதியின் தொழில் என்னவாக இருக்கும் என்பது ஏற்கனவே ஊகிக்ககூடியவகையில் இருந்தமையானது இந்த சிறுகதையின் சுவாரசியத்தினை கொஞ்சம் குறைத்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.கதை நகர்த்தலில் இனியும் சுவாரசியம் குறையாமல் இருப்பதில் கவனம் செலுத்தினால் நன்றாய் இருக்கும்.
மற்றும் படி கலையின் இந்த சிறுகதை முயற்சி சிறப்பாய் வெற்றி கண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
கலை தங்களது படைப்பானது எம்மில் பலரது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதாய் உள்ளது.
ஆனாலும் இந்த படைப்பு பற்றி எனக்குள் ஒரு சின்ன நெருடல் , இந்த படைப்பானது வெறுமனே அராபிய ஆண்கள் மீது மட்டுமே குற்றம் சுமத்துவதாய் உள்ளது ... அராபிய பெண்டிரும் கொடுமைகள் செய்வதில் அத் தேசத்து ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதினை நிருபித்த பல சந்தர்ப்பங்கள் உண்டு.
இந்த அராபியர்கள் உலகிலேயே தாம்தான் உயர்ந்த மனித இனம் என நினைப்பதே தொழில் தேடிச்செல்லும் சாதாரண மக்களை மிருகங்களை விடவும் மோசமாக நடத்துவதற்குக் காரணம்.
மதச் சட்டத்தின் துணைகொண்டு மிருகங்களை விடவும் மோசமான கொடூரச்செயல்களை சுதந்திரமாகச் செய்தே இன்புற்று வாழும் இந்த கீழான பிறவிகளும் வெறுமனே மதத்தின் பெயர்களால் அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் நியாயம் கற்பிக்கும் மனித இனத் துரோகிகளும் என்றுமே மாறப்போவதில்லை என்பது திண்ணம் _____ ஆனாலும் நாம் எமது ஆதங்கத்தினை எழுதிக்கொண்டே இருப்போம் .
உழுகின்ற உழவனுக்கு உணவில்லை -
உண்டிக்காய் கண்டிராத சோகம் கண்டான் !
===அழுகின்ற குழந்தைக்குப் பாலில்லை -
வெற்றுமடி தினம்சப்பி ரோகம் கொண்டான் !
===தொழுகின்ற கடவுளுக்கு விழியில்லை -
படையலுண்டு அவனோ போகம் கண்டான் !
===எழுகின்ற விம்மலுக்கு முடிவில்லை -
கூற்றனுக்கே விவசாயி யாகம் செய்தான் ___நல்ல சிறப்பான வரிகள் __மரபுவழியில் இன்னாத வாழ்வினை இயல்பாக வெளிப்படுத்த நன்கு முயற்சித்திருக்கிறீர்கள் நன்று கலை ....
என்ன பெரியப்பா ஆமென் போடுறீங்க ..?? நலமாக இருக்கிறீர்களா ??
இருக்கும் இடத்தினை விடுத்து இல்லாத இடத்தில் தேடும் யாரோதான் எனை காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும் .
அபி அங்கிள் நான் எங்கு இருந்தேனோ அங்கேயே தான் இப்போதும் இருக்கிறேன் தாங்கள் தான் என்னை கண்டு கொள்வதே இல்லை ..நான் மிகவும் நலமுடன் உள்ளேன் தங்கள் நலம் எப்படி அங்கிள் ..??
நல்லதொரு படைப்பு.. குமுறுகின்ற நெஞ்சில் பிறந்த இந்த வரிகள் ஒவ்வொன்றும் உண்மையின் அடையாளங்கள் .
"அக்கறையின் விலாசங்கள்
காரமாக, கரிசனையாக
அக்கரையிலேயே நின்று
அப்படியே திரும்பிவிடுகிறது !" - நிதமும் நான் ஆதங்கம் கொள்ளும் அந்த நிதர்சனத்தினை வெளிப்படுத்தும் இந்த வரிகள் வெகுவாக என்னைக் கவர்ந்துள்ளது ..
இதுபோன்ற உணர்வுபூர்வமான கவிதைகளுக்கு உண்மையில் ஒரு படைப்பாக நோக்கி கருத்துப்பதிவதற்கு மட்டுமே இயலுமானதாக உள்ளமையானது வேதனைக்கு உரிய விடயம்.
யாவற்றிற்குமான விடியல் எத்திசையில் பிறக்கும்.... ???
தனித்துவமாய் நேர்த்தியோடு இருக்கிறது படைப்பு ..
மழைக்கு, வெயிலுக்கு
குடையின்
மூன்றாம் பயன்பாடு
மறைத்தலுக்கு ! ____ அழகு ...
பொருத்தமான வார்த்தைக் கோர்வைகளால் முழுமைப்படுத்தப்பட்டிருக்கிறது படைப்பு ..
தன் வாழ்வில் மற்றுமொரு பரிணாமம் காண விளையும் ஜனனி அக்காவிற்கு எனது அன்பான வாழ்த்துக்கள் இந்த படைப்பினூடாக சென்றடையட்டும்..
எழில் மிகு படைப்பு ..
மனிதன் கீறும்
நகரும் ஓவியம்
மழலை ! ____ தனி அழகு ..
"நான் நாளைய மருத்துவன்
அப்பா இன்றே நோயாளி
நுழைவுக் கட்டணம் ! " -
கருத்தாழத்தோடு நன்றாக இருக்கிறது தங்களது படைப்பு...
தங்களது புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனாலும் சென்ரியு என்கிற கவிதை வடிவமா எனத்தெரியவில்லை தெரிந்தவர்கள் யாரேனும் இதுபற்றி தங்களது கருத்தினை சொல்வார்களேயானால் நாங்களும் இதுபற்றிய மேலதிக தெளிவினைப் பெற்றுக்கொள்ள முடியும் என நினைக்கிறேன் ..
இங்கே எல்லாமே
உயர்விலை தான்
மலிவாக - நாம் மட்டுமே ! கலை இந்த வரிகள் மட்டுமே போதுமானதாக உள்ளது படைப்பினை முழுமைப்படுத்துவதற்கு ..
இந்த நிதர்சனங்கள் மிகவும் வேதனைக்கு உரியவை .. இருப்பினும் இவை எல்லாம் நிச்சயம் தவிர்க்க முடியாது ..
இந்த வாழ்க்கைப் போராட்டங்கள் என்றாவது ஒருநாள் மாற்றம் ஏற்படும் என்கிற பொய்யான நம்பிக்கையோடு என்றும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கும் ..
கலையினுடைய படைப்பு பொதுவான ஒரு விடயம்...அப்படி யார் வேண்டுமானாலும் எழுதலாம் .. யாரும் தடுக்க முடியாது .. நீங்கள் பண்ணுவது தனிநபர் சாடல் தடுப்பதற்கு முடியும் .
உங்கள் கருத்துச் சுதந்திரம் உங்கள் கருத்தினை வெளிப்படுத்துவதற்கே தவிர அடுத்தவரை தாக்குவதற்கு அல்ல என்பதனை விளங்கிக்கொள்ளுங்கள் ..
தெளிவான சிந்தனையோடு நியாயம் கேட்கிறது படைப்பு .. படைப்பில் கூறப்பட்ட எவற்றையுமே இங்கு மறுதலித்துவிட முடியாது.எல்லாமுமாக நினைக்கும் கடவுளரிடத்திலும் ஆணாதிக்கம் எப்படி மேலோங்கி இருந்திருக்கிறது என்பதனை வெளிக்காட்டிய அற்புதமான அவசியமான படைப்பு.
=================================================
இப்படி ஒருவன் பகுத்தே ஆராய்ந்து நியாயமான வகையில் கேள்வியை எழுப்பினால் அதனை சற்றேனும் சிந்தித்துப்பாராமல் படைப்பாளியையும் , படைப்பையும் தவறான கோணத்தில் இங்கே விமர்சிப்பதானது நன்மை பயக்கும் செயல் அல்ல.இவ்வாறு நடந்து கொள்ளும் படைப்பாளி " மங்காத்தா " அவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் சமூகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பவர்கள் அல்ல.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் வேறுபட்ட கோணத்தில் காண்கிறார்கள்.வேறுபட்டு சிந்திக்கிறார்கள் .இதில் ஒன்றும் தவறில்லையே .." தங்கள் சிந்தனையில் இருந்து கலை வேறுபடுகிறார் போலும் அதனாலேயே தங்களுக்கு இந்த படைப்பு முரண்பட்ட கோணத்தில் தெரிகிறது. "
கலையினுடைய இந்த படைப்பில் எந்த ஆபாசமும் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் உங்களுக்கு இருப்பதாகத் தோன்றுவது நிச்சயம் பிரமையாகத்தான் இருக்க முடியும்.நமது கருத்தை அடுத்தவர்கள் மீது திணிக்காத வரையில் அங்கே சுதந்திரம் சரியான வகையில் பேணப்படுகிறது.இங்கே கலை அவரது சிந்தனையை , கருத்தை யார் மீதும் திணிக்க முயலவில்லை .அவர் அவரது சிந்தனையை ,கருத்தை சமூகத்தில் வெளிப்படுத்துகிறார் அதனைத் தவறென்று கூறி அவரை முடக்க முற்படுவதே தவறான செயல்.அவரது சிந்தனையை , கருத்தினை வெளிப்படுத்தும் சுதந்திரத்தில் தாங்கள் அத்து மீறி நுழைந்து அநாகரீகமாக செயற்படுவதாகத் தோன்றுகிறது.இதனை தாங்கள் இனியாவது தவிர்த்துக்கொள்வது நல்லதாக இருக்கும்.
தாங்கள் இந்தப் படைப்பில் வெளிப்படுத்திய கருத்தானது கலையின் மீதான தங்களின் பகைமை உணர்ச்சியை மட்டுமே கட்டி நிற்கிறது. கலையினை பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி இருங்கள் அவரை தளத்தை விட்டு ஒழிக்க வேண்டும் என நினைக்காதீர்கள்.அப்படி நினைத்தீர்களானால் நீங்களும் பகைமையினை எதிர்கொள்ள நேரிடும். ஏனையவர்களும் தங்களின் கருத்து பிடிக்காமல் தங்களை தளத்தினை விட்டு முடக்க வேண்டும் என நினைக்கலாம் அல்லவா ..?
நீங்கள் கலையை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்ற போது அதனை தளம் செயற்படுத்த தளம் ஒன்றும் எடுப்பார் கைபிள்ளை என்பதினையும் இனியும் தங்களின் தனிநபர் சாடல் தொடர்தலானது நல்லோர்க்குரிய பண்பல்ல என்பதினையும் மனதில் கொள்ளவும்.
இனியாவது நல்ல விமர்சனங்களோடு ஏனைய படைப்பாளிகளை அணுகுங்கள் ..
================================================
தெளிவான சிந்தனையோடு நியாயம் கேட்கிறது படைப்பு .. படைப்பில் கூறப்பட்ட எவற்றையுமே இங்கு மறுதலித்துவிட முடியாது.எல்லாமுமாக நினைக்கும் கடவுளரிடத்திலும் ஆணாதிக்கம் எப்படி மேலோங்கி இருந்திருக்கிறது என்பதனை வெளிக்காட்டிய அற்புதமான அவசியமான படைப்பு.
=================================================
இப்படி ஒருவன் பகுத்தே ஆராய்ந்து நியாயமான வகையில் கேள்வியை எழுப்பினால் அதனை சற்றேனும் சிந்தித்துப்பாராமல் படைப்பாளியையும் , படைப்பையும் தவறான கோணத்தில் இங்கே விமர்சிப்பதானது நன்மை பயக்கும் செயல் அல்ல.இவ்வாறு நடந்து கொள்ளும் படைப்பாளி " மங்காத்தா " அவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் சமூகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பவர்கள் அல்ல.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் வேறுபட்ட கோணத்தில் காண்கிறார்கள்.வேறுபட்டு சிந்திக்கிறார்கள் .இதில் ஒன்றும் தவறில்லையே .." தங்கள் சிந்தனையில் இருந்து கலை வேறுபடுகிறார் போலும் அதனாலேயே தங்களுக்கு இந்த படைப்பு முரண்பட்ட கோணத்தில் தெரிகிறது. "
கலையினுடைய இந்த படைப்பில் எந்த ஆபாசமும் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் உங்களுக்கு இருப்பதாகத் தோன்றுவது நிச்சயம் பிரமையாகத்தான் இருக்க முடியும்.நமது கருத்தை அடுத்தவர்கள் மீது திணிக்காத வரையில் அங்கே சுதந்திரம் சரியான வகையில் பேணப்படுகிறது.இங்கே கலை அவரது சிந்தனையை , கருத்தை யார் மீதும் திணிக்க முயலவில்லை .அவர் அவரது சிந்தனையை ,கருத்தை சமூகத்தில் வெளிப்படுத்துகிறார் அதனைத் தவறென்று கூறி அவரை முடக்க முற்படுவதே தவறான செயல்.அவரது சிந்தனையை , கருத்தினை வெளிப்படுத்தும் சுதந்திரத்தில் தாங்கள் அத்து மீறி நுழைந்து அநாகரீகமாக செயற்படுவதாகத் தோன்றுகிறது.இதனை தாங்கள் இனியாவது தவிர்த்துக்கொள்வது நல்லதாக இருக்கும்.
தாங்கள் இந்தப் படைப்பில் வெளிப்படுத்திய கருத்தானது கலையின் மீதான தங்களின் பகைமை உணர்ச்சியை மட்டுமே கட்டி நிற்கிறது. கலையினை பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி இருங்கள் அவரை தளத்தை விட்டு ஒழிக்க வேண்டும் என நினைக்காதீர்கள்.அப்படி நினைத்தீர்களானால் நீங்களும் பகைமையினை எதிர்கொள்ள நேரிடும். ஏனையவர்களும் தங்களின் கருத்து பிடிக்காமல் தங்களை தளத்தினை விட்டு முடக்க வேண்டும் என நினைக்கலாம் அல்லவா ..?
நீங்கள் கலையை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்ற போது அதனை தளம் செயற்படுத்த தளம் ஒன்றும் எடுப்பார் கைபிள்ளை என்பதினையும் இனியும் தங்களின் தனிநபர் சாடல் தொடர்தலானது நல்லதல்ல என்பதினையும் மனதில் கொள்ளவும்.
இனியாவது நல்ல விமர்சனங்களோடு ஏனைய படைப்பாளிகளை அணுகுங்கள் ..
================================================
கலை கண்ணீருக்கு மதிப்பில்லை என்று கூறுவதைக் காட்டிலும் கண்ணீரானது எந்த தீர்வையும் பெற்றுத்தரப்போவதில்லை கண்ணீரே மதிப்பில்லாத ஒன்று ..
கண்ணீரை மட்டுமே கொட்டி எழுதப்படும் படைப்புக்களும் அவ்வாறேதான் இருக்கும் ..ஏதோ ஒரு தீர்வை பெற்றுத்தரும் வகையில் தன்னம்பிக்கையை விதைக்கும் படைப்புக்களைத் தருவதே ஒரு படைப்பாளிக்குரிய முக்கிய கடமை ..அதை செய்தீர்கள் அதற்கு நன்றி.
நன்றிகள் ..
நன்றிகள் ..
நன்றிகள் கருத்திற்கு ..
மிக்க நன்றி ..
நன்றிகள் பல கருத்திற்கு ..