அ வேளாங்கண்ணி - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  அ வேளாங்கண்ணி
இடம்:  சோளிங்கர், தமிழ்நாடு
பிறந்த தேதி :  25-May-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jan-2013
பார்த்தவர்கள்:  7126
புள்ளி:  6529

என்னைப் பற்றி...

நான் நல்ல நண்பன்...

இருபது வருடங்கள் நாட்டுப்பணி முடித்து, தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்(சோளிங்கர், வேலூர் மாவட்டம்) பணிபுரிந்து கொண்டுள்ளேன்....

திரு.அகன் ஐயா தொகுப்பாசிரியராக இருந்த "தொலைந்து போன வானவில்" எனும் நூலில் எனது கவிதை ஒன்று இடம்பெற்றுள்ளது....

மற்றும் தோழர்கள் கவிஜி மற்றும் தாகு என்னும் கனா காண்பவன் அவர்கள் தொகுத்தளித்த "மழையும் மழலையும்" எனும் நூலில் எனது இரண்டு கவிதைகள் இடம்பெற்றுள்ளன...

நிலாமுற்றம் என்ற முகநூல் குழுமம் வெளியிட்ட "சொல்லழகு" என்ற முதலாம் ஆண்டுவிழா கவிதைத் தொகுப்பு 2016 நூலில் எனது கவிதை "சந்திப்பு" இடம்பெற்றுள்ளது...

இதுவரை கல்கி மற்றும் இனிய உதயம் இதழ்களில் ஒரு கவிதையும், வாரமலரில் பத்து குறுங்கவிதைகளும், அத்திப்பூ இதழில் ஆறு கவிதைகளும், ஐந்து சிறுகதைகளும், ஒரு நகைச்சுவையும், ராணி, குமுதம் மற்றும் பாக்யா இதழ்களில் பல நகைச்சுவைகளும், பொதிகை மின்னல் இதழில் நான்கு குறுங்கவிதைகளும், கொலுசு மின்னிதழில் குறுங்கதை, குறுங்கவிதை மற்றும் சிறுகதைகள், சிறுவர் மலரில் மூன்று சிறுவர் பாடல்களும் பிரசுரம் ஆகியுள்ளன..
======================================================================
https://www.facebook.com/velanganni77
======================================================================

எனது முதல் கவி அனுபவம்....
============================
1991... பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த வேளை... எப்படியாவது கவிதை எழுதிவிட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்தேன்.... வீட்டில் மாத, வார பத்திரிக்கைகள் பெரும்பாலும் வாங்கும் பழக்கம் இருந்ததால்... எங்கேனும் யாரேனும் கவிதை எழுதுவதைப் பற்றி எழுதியிருந்தால் உடனே படித்துவிடுவேன்.... ஆனால் எவ்வளவும் முயன்றும் ஒன்றும் எழுத வரவில்லை... எப்போதும் வானொலி கேட்கும் பழக்கமும் இருந்ததால்.. அதிலும் கவிதையைப் பற்றி ஏதேனும் ஒலிபரப்பினால் தவறாமல் கேட்டுவிடுவேன்.... இந்த வேளையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஓய்வு பெரும் நாள் வந்தது... அவருக்காக ஒரு பிரிவுரைக் கவிதை என்னை எழுதச் சொல்லி எங்கள் தமிழ் ஆசிரியை சொன்னார்கள்... ஆழ்ந்து யோசித்து நான் எழுதிக் கொடுத்த வரிகளை சிறிது திருத்தம் செய்து என்னை பள்ளியின் மேடையில் காலையில் வாசிக்கச் சொன்னார்கள்... அவ்வாறு ஆரம்பமாகியது... பின் பள்ளியில் ஒரு கவிதைப்போட்டி நடந்தது... அதில் மயில் எனும் தலைப்பில் நான் எழுதிய படைப்பு இரண்டாம் பரிசு பெற்றது... அதனை படித்த ஒரு ஆசிரியர் மிகவும் நன்றாக இருந்ததாகத் தெரிவித்தார்... அதுவரை நான் மயிலைப் பார்த்தது இல்லை.... பத்தாம் வகுப்பு விடுமுறையில் இயற்கையைப் பற்றி, விலங்குகளைப் பற்றி, கடவுளைப்பற்றி மிக அதிகமாக எழுதினேன்... அவை இன்றும் உண்டு பத்திரமாக...

சொந்தங்களின் குழந்தைகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதையாகவே எழுதி அனுப்புவேன் கடிதம் மூலமாக...

என் அண்ணன் ஒருவரின் திருமணத்தில் நான் கலந்து கொள்ள முடியாத சூழ் நிலையில் ஒரு திருமண வாழ்த்து மடம் எழுதி அனுப்பினேன்... அதனை எனது அப்பா மற்றும் சொந்தங்கள் ஒரு பத்திரிக்கையாக அடித்து அங்கு வந்த அனைவருக்கும் கொடுத்திருக்கின்றனர்... பின்பு நான் ஊருக்குச சென்ற பொழுது நீ வராவிட்டாலும் உன் கவிதையை எல்லோரும் படித்துச் சென்றது நீ அங்கு வந்தது போலவே இருந்தது என்று சொன்னது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...

அந்த கவிதைப்பயணம் இன்று எழுத்துத்தளத்தின் மூலமாகவும், முகப்புத்தகத்தின் படைப்பு, ஒரு கவிஞனின் கனவு, நிலாமுற்றம், தமிழ்பட்டறை, கவியுலகப் பூஞ்சோலை மற்றும் செய்யுட்கலை சூடிகை ஆகிய குழுமங்களின் மூலமாகவும் தொடர்ந்து கொண்டுள்ளது.. மேலும் அனைத்து இதழ்களுக்கும் தினமும் கவிதைகளை அனுப்பிக் கொண்டுள்ளேன்... என்றாவது என் எழுத்துக்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...
*************************************************************
#தூண்டிலில்_சிக்காத_மீன்கள்
***** ***** ***** ***** ***** *****
சாதிக்க நினைப்போரை மலையும் தடுத்திடாது
தாண்ட நினைத்தோரை கல்லும் தடுக்கிடாது
போதிக்க ஊரிலே பெரியோர்கள் பலருண்டு
வீணாக இருந்தோமெனில் காணாமல் போயிடுவோம்

முதலடி வைத்ததுமே முள்ளும் குத்திடலாம்
வலிக்குதென நினைத்தோமெனில் வரும்வெற்றி மாறிடலாம்
முள்ளை மிதித்துநின்று வலியைப் பொறுத்தோமெனில்
முள்ளும் மலராகும் வான்மேகம் மலர்தூவும்

புயலது அடிக்குமெனில் இலைகள் உதிர்ந்திடலாம்
கடலது கோபம்கொள்ள கரைகள் அழுதிடலாம்
எரிமலை பொங்கிடவே தரையெல்லாம் கருகிடலாம்
லட்சிய வெறிகொண்டால் எதையும் எதிர்த்திடலாம்

முயற்சி செய்வதற்கான முயற்சியை எடுத்துவிட்டால்
அயர்ச்சி ஓடிவிடும் நம்பிக்கைவிதை மரமாகும்
பயிற்சி செய்துவந்து பந்தயத்தில் கலந்துகொள்ள
தளர்ச்சி தளர்ந்தோடும் கிளர்ச்சி மனம்கொள்ளும்

புழுவினைக் கட்டித்தூண்டில் மீனினைப் பிடிப்பதுபோல்
மயக்கும் காரணிகள் சுற்றிலும் பயமுறுத்தும்
எழுச்சியே கொள்கையென்று நினைக்கும் இதயத்திற்கு
தடைக்கல்லும் படிக்கல்லாகும் நாளையே விடியலாகும்
------------------------------------------------------------------------------------

என் படைப்புகள்
அ வேளாங்கண்ணி செய்திகள்
அ வேளாங்கண்ணி - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2017 9:49 am

பெயர் தெரியாது
ஊர் தெரியாது
எப்போதோ சிறு உதவி மட்டும் செய்தேன்
நான் என் வழியில்..
அவன் அவன் வழியில்..

மழை வெள்ளத்தில்
என் கிராமமே மூழ்க‌
ஓடோடி வந்தான்..
தன் சிரமம் பார்க்காது..
தண்ணீரில் மூழ்கி
பல காயங்கள் வாங்கி..
எனக்காக என் ஊரின் பலரைக் காப்பாற்றினான்..

அந்தக் காப்பாற்றும் முயற்சியில்
கடைசியாக என்னைக் காப்பாற்றியவன்
திடீரென்று வந்த வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டான்..
இன்று வரை அவனுக்காய்
என் நெஞ்சம் அழுது கொண்டேயுள்ளது..

நட்பாக பழகவில்லை
ஆனால் உயிர் தருமளவு
சிறு உதவிக்காய் அவன் காட்டிய அன்பு
நட்பை விட கோடி முறை உயர்ந்ததன்றோ...

மேலும்

அ வேளாங்கண்ணி - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2017 9:55 pm

பாசம் இன்றைய உடனடித் தேவை
பாசத்தால் ஏங்குவோருக்கு
பணமும் வேண்டாம்
பதவியும் வேண்டாம்
பாசம் மட்டுமே போதும்..

ஆனால் இன்றோ
பாசம் கூட ஆனது வேசமாய்..
நாகரீக உலகிலே
பாசம் காட்ட மனிதன் மறந்துவிட்டான்..
அதனால் அவன் மனிதனென்ற‌
பெயரைக்கூட என்றோ இழந்துவிட்டான்..

பாசம் மிகப் பெரிய சக்தி..
பாசம் சகமனிதனிடத்தில் இருந்தால்
இன்று உலகிலே எந்த தீவிரவாதமும் இருக்காது..
எந்த பிரச்சினையும் தோன்றியே இருக்காது..

என்ன செய்வது..
பாசமில்லா மனித இனம் இன்று பெருகிக்கிடக்குது..
அதனால் இழப்பென்னவோ அவனுக்கு மட்டும்தான்....

மேலும்

அ வேளாங்கண்ணி - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2017 9:18 pm

வாழும் ஆசை விட்டதோ
பற்றின்றி விழுகிறது
ஒற்றை இலை..

சிறு காற்றுக்கா
பெரும் புயலுக்கா
எதற்கு கோபம் இந்த இலை மேல்?

மண்ணை நோக்கி விழும்போதும்
ஆடிக்கொண்டே விழுவதேன்
ஒற்றை இலை..

காற்றின் தூளி ஆட்டத்தில்
தூங்கியபடியே மண்ணை அடைந்தது
ஒற்றை இலை..

குடும்பமே இதற்காய் கண்ணீர் வடிக்க‌
தன் மரவாழ்வு விட்டு
தவவாழ்வு காண விழுகிறது ஒற்றைஇலை..

மரத்திலிருந்து போது எவர் கண்ணிலும் படவில்லை
கீழே விழுந்தவுடன்
எறும்புகளுக்கு குடையானது ஒற்றை இலை..

தன்னை பெற்ற தாயை
காலடியில் விழுந்து வணங்கியது
ஒற்றை இலை..

மேலும்

அழகான வரிகள் . 17-Jan-2017 7:48 am
அ வேளாங்கண்ணி - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2017 9:47 pm

புன்சிரிப்பு அதிகம்
அன்பு அதைவிட அதிகம்
கோபம் துளியுமில்லை
மென்மையான பேச்சு மட்டும்..

பார்வையில் அன்பு மட்டுமே
செய்கையில் அது தெரியுமே
முகச்சுளிப்பில்லை வசவுகள் இல்லை
முகம் பார்த்தாலே கோபங்கள் மலையேறும்

தானாய் உதவும் பண்பு
வஞ்சகமாய் பேசுவோருக்கு சுட்டெரிக்கும் பார்வை
இயல்பாகவே இந்த குணமோ
பார்ப்போரும் சந்தேகிப்பர்
இப்படியும் ஒரு மனிதப்பிறவியாவென...

பார்க்கும் தொழிலில் நேர்த்தி
பேசும் பேச்சிலேயே நலம் அடைந்ததாய் உணர்வர்..
செவிலியர் எல்லோரும் இப்படியே..
இவர்கள் நிச்சயம் தேவதைகளே..

மேலும்

அ வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2017 11:18 pm

தங்கமென நீ வானில் மின்னிட‌
தாலாட்டில் மகிழ்கின்ற குழந்தையாய் ஆகிட‌
தினமும் நம்பிக்கையை மட்டும் வணங்கிடு
தீதாய் பழகுவோரை விட்டு விலகிடு
துரத்து லட்சியத்தை தயங்கி நிற்காதே
தூரத்து நிலவொளியும் உனக்கு வழிகாட்டும்
தேயும் நிலாவும் பௌர்ணமியில் முழுதாகும்
தைக்கும் முட்களெல்லாம் மிதித்திடவே பழுதாகும்
தோல்வி ஓடிவிடும் வெற்றி தேடிவரும்

நல்லது நினைத்திருக்க பொல்லாங்கு வந்திடாது
நாளும் பொழுதுகளும் வலியெதுவும் தந்திடாது
நில்லாமல் உழைப்போருக்கு உதவும் இதயங்களும்
நீயும் முன்னேற வாழ்த்தும் கைதட்டும்
நுகர வருகின்ற இடஞ்சல்கள் பதறியோடும்
நூதனம் நீயென்றெண்ணி நாற்புறமும் சிதறியோடும்
நேரம் நல்லதா

மேலும்

அ வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2017 11:14 pm

உன்னிதயச் சிறையில்
சந்தோஷ கைதியாக நாளுமிருக்க ஆசைதான்..
நீ பூட்டிடாவிட்டாலும் நான் வெளியே வரமாட்டேன்...
நீ காவலுக்கு இல்லையென்றாலும்
நான் தப்பிக்க மாட்டேன்..
உன்னிடம் மாட்டிக்கொள்ளவே ஆசைப்பட்டேன்
இன்று மாட்டிக்கொண்டேன்...
இனி எனக்கு வேண்டாம் விடுதலை..
எனக்காய் நானே வாதிடுவேன்
விடுதலை வேண்டாமென்று..
இது சிறை அல்ல..
எனது வாழ்க்கையின் மீதி கால அறை..

மேலும்

அ வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2017 11:02 pm

உள்ளத்தின் உள்ளே உனக்கே தெரியாமல்
உன்னை அடைத்து வைத்தேன்
உனை நாயகனாய் மாற்றி
பல கனவுகள் படைத்து வைத்தேன்
அதில் சில கனவுகள் இன்று களவு போனது
அதனை அனுப்பி வைத்திருந்தேன் உனை வேவு பார்க்க..
உனைக் கண்டதும் அவை
உன்னுள்ளே அடைக்கலம் ஆகிவிட்டன...
சீக்கிரம் எனக்கு திருப்பி அனுப்பிவிடு
இல்லை திருடிவிடுவேன் மீண்டும்

மேலும்

அ வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2017 10:57 pm

இல்லாத ஒன்றைத் தேடுவது தானே மனித இயல்பு
நீதியும் இங்கு இல்லாமலே போனதோ..

தேவையில்லா வஞ்சனைகள் எல்லாம்
புற்றாய் வளர்ந்திருக்கும் போது..
நீதி புயலாய் அடித்து களைப்பது தானே முறை..

ஆனால் அதுவோ
தென்றலாய் தவழ்ந்து கொண்டுள்ளது
இருந்தும் இல்லாதது போல்
ஒரு வேசம் போட்டுள்ளது

இல்லாதோருக்கு அது இல்லாமலே போய்விட்டது
இருப்போருக்கோ காலடியில் கிடக்கிறது

நீதியின் பிடி இறுக்கும் போதுதான்
நல்லவர்கள் நடமாட முடியும்..
இங்கு நல்லவர்கள் நடமாட வழியே இல்லை
ஏனெனில் நீதிப்பெண்
கண்களைக் கட்டிக்கொண்டு
அவர்கள் கைக்கு எட்டாத் தூரத்தில்
ஒளிந்து கொண்டுள்ளாள்..

அழைப்போரின் குரலோ
அழுவோரின் கண்ணீரோ

மேலும்

அ வேளாங்கண்ணி - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2017 9:00 am

அழகு அழகு பொங்கல் வந்தது
அமுது அமுது பொங்கல் வந்தது
இனிய இனிய பொங்கல் வந்தது
இனிக்க இனிக்க பொங்கல் வந்தது

சிரித்து சிரித்தே பொங்கல் வந்தது
சிரிக்க வைக்க பொங்கல் வந்தது
ஒரு ஆண்டு கழித்து வந்தது
வரும் ஆண்டை செழிப்பாக்க வந்தது

இன்பம் ஊற பொங்கல் வந்தது
துன்பம் மாற பொங்கல் வந்தது
மாற்றம் கொடுக்க பொங்கல் வந்தது
ஏற்றம் தரவே பொங்கல் வந்தது

வந்தது வந்தது பொங்கல் வந்தது
தந்தது தந்தது கோடி பாடல்
அன்பது அன்பது பொங்கட்டும் பொங்கட்டும்
இன்னிசை வாழ்வில் தங்கட்டும் தங்கட்டும்

மேலும்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் தோழி.... 13-Jan-2017 10:13 pm
அன்பது அன்பது பொங்கட்டும் பொங்கட்டும் இன்னிசை வாழ்வில் தங்கட்டும் தங்கட்டும்........அருமை நண்பரே.... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....!! 13-Jan-2017 3:07 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Jan-2017 3:36 pm

நெஞ்சள்ளிச் சென்றவனை நினைக்கையிலே மனத்திரையில்
>>>>நிழலாடும் அவனுருவே !
கஞ்சமலர்க் கன்னமென்றான் கருவண்டு விழிகளென்றான்
>>>>கள்வனவன் அழகனடி !
செஞ்சாந்து பொட்டிட்டுச் செல்லமாய்க் கிள்ளினனே
>>>>சிலிர்த்துவிட்டேன் என்தோழி !
வஞ்சியெனைச் சிலையென்றான் வளைக்கரமும் வனப்பென்றான்
>>>>வளைத்துவிட்டான் அன்பாலே !

கள்ளூறும் இதழென்றான் கற்கண்டு மொழியென்றான்
>>>>கவின்மலரே நீயென்றான் !
துள்ளிவரும் மானென்றான் தும்பைப்பூ சிரிப்பென்றான்
>>>>துடியிடையோ கொடியென்றான் !
உள்ளத்தால் மழலையென்றான் உயிர்வளியும் நீயென்றான்
>>>>உணர்வினிலே கலந்துவிட்டான் !
வெள்ளிவரும் வேளைக்குள் விரைந்திடுவேன் என்றுசென்

மேலும்

சிறப்பு! 04-Jan-2017 9:26 pm
மிக்க நன்றி ! 04-Jan-2017 1:31 pm
மிக்க நன்றி ! 04-Jan-2017 1:31 pm
மிக்க நன்றி ! 04-Jan-2017 1:31 pm
அ வேளாங்கண்ணி - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2013 1:33 pm

தொண்டை வறண்டு போச்சு!
தேகம் துவண்டு போச்சு!
மண்டை வெடிச்சுப் போச்சு!
அண்டை வீட்டுக்காரியாலே!


சண்டையென்று ஏதுமில்லை!
சாதிசண்டை ஒன்றுமில்லை!
பண்டமாற்று முறையாலே
பதுங்கவேண்டி வந்ததடி!


பண்டமது மாறிவிடும்!
தவறேதும் இல்லாமல்
இங்கிருந்து அங்குமட்டும்!
அங்கிருந்தோ வந்ததில்லை!


தினந்தோறும் விருந்தாளி
தவறாமல் அவருக்குண்டு!
பதட்டமாய் ஓடிவந்து
பலபொருளை பெற்றுச்செல்வர்!


அவருக்கோ சிறுபதட்டம்!
அவரைக்கண்ட மாத்திரத்தில்
எங்கிருந்தோ ஓடிவரும்
எனக்குள்ளே பெரும்பதட்டம்!


இன்றென்ன கேட்டிடுவார்!
சர்க்கரையோ! காப்பித்தூளோ!
இல்லாத காய்கனியோ!
மறுப்பதுவும் தான் முறையோ!


ஆரம்ப

மேலும்

"அத்திப்பூ" இதழில் வெளிவந்த படைப்பு 09-Dec-2016 7:59 am
அ வேளாங்கண்ணி - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2015 6:09 pm

திடீரென கண்களைக் கூசச்செய்யும் வெளிச்சம்.... கண்களின் முன்னே.... அவனால் கண்களையே சரியாக திறக்க முடியவில்லை.... எப்படியோ கஷ்டப்பட்டு திறந்த பார்த்தால்.... அவனால் நம்பவே முடியவில்லை... முன்னே கடவுள் நின்று கொண்டிருந்தார்... அவனுக்கு மயக்கம் வருவது போல இருந்தது... கடவுள் அவனைப் பார்த்து....

"தைரியம் கொள் மானிடா....! உனது வேண்டுதல்களில் நான் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன்... எப்போதுதுமே நீ பிறருக்காக மட்டுமே வேண்டுவாய்... உனக்காக எதுவுமே கேட்டதில்லை... இப்பொழுது உனக்கொரு வரம் தரலாம் என இருக்கிறேன்... என்ன வேண்டுமோ கேள்", என்றார்...

அவன் உடம்பு நடுங்க நின்று கொண்டிருந்தான்... எப்படியோ த

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உமது கனவுகள் தமிழ் அன்னை ஆசிகள் ----------------------------------------------------- கடவுளை நான் காண என்னை அழைத்துச் செல்லவும் என் வேண்டுகோள் இந்த உலக நாள் வாழ்வுக்காக பற்பல உள்ளன ! 26-Nov-2016 6:17 am
"கொலுசு" மின்னிதழில் பிரசுரமாகியுள்ளது.... 24-Nov-2016 8:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (436)

SHAN PAZHANI

SHAN PAZHANI

தருமபுரி, காமலாபுரம்
raghul kalaiyarasan

raghul kalaiyarasan

பட்டுக்கோட்டை
Puunthalir

Puunthalir

சிதம்பரம்
sirojan Piruntha

sirojan Piruntha

மட்டக்களப்பு, இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (437)

Siva

Siva

Malaysia
krishnan hari

krishnan hari

chennai
g.m.kavitha

g.m.kavitha

கோயம்புத்தூர்,

இவரை பின்தொடர்பவர்கள் (437)

vellurraja

vellurraja

விருதுநகர் (மா) வெள்ளூர்
springsiva

springsiva

DELHI
sarabass

sarabass

trichy

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

பிரபலமான விளையாட்டுகள்

மேலே