Athinada Profile - மெய்யன் நடராஜ் சுயவிவரம்தமிழ் பித்தன்
இயற்பெயர்:  மெய்யன் நடராஜ்
இடம்:  punduloya srilanka
பிறந்த தேதி :  18-Aug-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Sep-2012
பார்த்தவர்கள்:  2323
புள்ளி:  4029

என்னைப் பற்றி...

எமது இலங்கை வானொலி பத்திரிகைகள் போன்றவற்றிற்கு நீண்ட காலமாக மெய்யன் நடராஜ் எனும் என் சொந்த பெயரிலேயே கவிதை சிறுகதைகள் எழுதிவருகிறேன் .சமீப காலமாகத்தான் இணைய சஞ்சிகைகளுக்கும் எழுத ஆரம்பித்துள்ளேன். நாடு கடந்து வாழ்ந்துகொண்டு இருந்தாலும் எழுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அண்மையில் படிக்கட்டு என்ற எனது முதலாவது கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளேன்

என் படைப்புகள்
athinada செய்திகள்
athinada - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2017 10:21 am

அலைபோல் துயரில் அமிழ்ந்திடு வோர்க்கு
விலைமேல் விலைகொடுத்து வாங்கி – தலையில்
நிலைக்குமென்று சூட்டும் நினைவு மகுடம்
உலையரிசிக் காகா துணர்.
*மெய்யன் நடராஜ்

மேலும்

பசியின் வேதனைகள் மிகவும் கொடியது 26-Mar-2017 11:30 am
athinada - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2017 2:29 am

ஆயிரம் ஆசைக் கனவுகளை
=அள்ளி முடிந்து வாழ்வினிலே
பாயிரம் எழுதும் ஒருவனுக்கு
=பந்தி யாகியே பசிதீர்த்து
தாயென ஆனவள் மகிழ்வுடனே
=தன்னிறம் அனைத்தும் மிளிர்ந்திருக்க
நோயென கொண்டவன் போய்சேர
=நுடங்குவாள் நிறமிலா பூவெனவே.

பசியெனும் கொடிய நோய்தீர
=பருவ அழகை விலைபேச
நிசியினில் வாழ்வின் நிறமிழந்து
=நித்தமும் கண்ணீர் பொழிந்துருகும்
வசிப்பிடம் இல்லா வனிதையரை
=வாட்டும் ஏழ்மைத் துயரத்தை
ருசித்திடத் தொற்றும் நோயாலே
=நுடங்குவர் நிறமிலா பூவெனவே

இயற்கை அழகு சருமத்தின்
=எடுப்பைக் கூட்டும் முயற்சியிலே
செயற்கை ஒப்பனை செய்வோர்கள்
=சேர்க்கும் வாசனைத் திரவியங்கள்
மயக்கும் மேன

மேலும்

பூக்களை போல் நாளடைவில் மனிதனின் உள்ளம் சருகை விட பெறுமதி குறைந்ததாக போய்விட்டது 26-Mar-2017 11:35 am
athinada - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2017 3:51 pm

புதிதாய் வேய்ந்த கூரை
மழைக்காலம் ஓய்வெடுக்கின்றன
பாத்திரங்கள்.

மேலும்

சிறப்பு 26-Mar-2017 11:36 am
Tamilkuralpriya அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2017 11:24 am

ஞாயிறு - துயில் களைந்தும் எழ மனமில்லை :

வாரத்தின் முதல் நாள் என்று அவசரம் ஒருபக்கம்,
என்றும்போல இல்லாமல் இன்றாவது விரைவாக அலுவலகம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மறுபக்கம்.
சூரியன் வந்து குறுக்கில் மிதித்து எழுப்பாத குறை,
சூழீரென்று முதுகில் உரைத்த சூடு
பட்டென எழுப்பி விட்டது.
முதல் நாளே அருமையிலும் அருமை
என்றும் இல்லாமல் இன்று ஐந்து நாழிகை கூடுதல் தாமதம்.
ஒவ்வொரு நாளும் போர்களம் போல
வேலையின் தீவிரமோ அடுப்பிலிருந்து இறக்கிய பாத்திரம் போல
எடுக்கவும் முடியவில்லை, பிடிக்கவும் முடியவில்லை.
வண்டி வண்டியாய் வசை வாங்கி பள்ளிக்கு போனபோதே ஒழுங்காய் படித்திருக்கலாம்.
போனதை எண்ணி புழு

மேலும்

பாவம் அவருக்கு என்ன கவலையோ தெரியவில்லை ஐயா, ஒரு வேலை தூங்கி எழுந்ததும் நேரே அலுவலகம் போக போகிறாரோ என்னவோ.... நன்றி, தமிழ் ப்ரியா.... 24-Mar-2017 4:18 pm
இப்பிடி கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு மலை அடிவாரத்துல தூங்கினா I T கம்பெனி என்ன ஆவுது ? H 1 B வீசா இல்லைன்னு சொல்லிப் பூட்டாங்களா ? சுழல் சேரை எடுத்துக்கிட்டு மலை அடிவாரத்துல வந்து போனால் போகட்டும் போடான்னு நிம்மதியாய் தூங்குகிறாரா ? அன்புடன்,கவின் சாரலன் 24-Mar-2017 4:05 pm
வாழ்த்திற்கு நன்றி தோழி உதயசகி 24-Mar-2017 3:22 pm
தங்கள் கருத்திற்கு நன்றி சகோதரரே 24-Mar-2017 3:19 pm
athinada அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2017 2:43 am

நெற்றி வியர்வை நிலந்தனிற் சிந்தாமல்
வெற்றி வழங்கிடுமோ வேளாண்மை? – நற்றிறம்
கொண்டுழைக்க நல்விளைச்சல் கூட்டும் அறுவடைக்
கண்டு மகிழ்வதற்கே கண்.
*மெய்யன் நடராஜ்

மேலும்

மிக்க நன்றி ஐயா. 25-Mar-2017 2:30 am
போற்றுதற்குரிய கவிதை & அழகு ஓவியம் பாராட்டுக்கள் தொடரட்டும் வேளாண்மைக் கவிதைகள் ------------------------------ அறுவடை :---கைகளால் அறுவடை பண்டைய முறை --மலரும் கிராமிய நினைவுகள் பிரதானமாக இரண்டு முறைகளில் அறுவடை செய்யலாம். அவையாவன, கைகளால் அறுவடை செய்தல் மற்றையது இயந்திரங்களின் மூலம் அறுவடை செய்வதாகும். பெரும்பாலான ஆண்டுப் பயிர்கள் கைகளினாலேயே அறுவடை செய்யப்படுகின்றன 24-Mar-2017 5:43 pm
நன்றி 24-Mar-2017 1:02 pm
நன்றி 24-Mar-2017 1:02 pm
athinada - athinada அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2017 1:50 am

வாழ்ந்து முடித்த கோழியும்..
வாழப்போகும் முட்டையும்..
செத்துக் கிடக்கின்றன...
ஒரே தட்டில் பிரியாணியாய்!

மரணத்தின் சமதர்மம் சாப்பாட்டுத் தட்டில்
பந்தியாக பரிமாறப்படுகிறது
செத்ததை உண்டுவிட்டு செரிமானம்
சரியில்லாமல் மாத்திரைகளை வாங்கிக் குடித்து
மரணத்தை தள்ளிப்போட்டு வைக்கிறோம்

வானத்திற்கு கீழே நின்றுகொண்டு
மழைக்குப் பயம்கொண்ட மூடர்கள்
குடையைக் கண்டுபிடித்ததுபோல்
மரணத்திற்கு எதிரே நின்றுகொண்டு
வாழ்நாளை குடையாக ஏந்துகின்றோம்

ஓட்டை முதுகில் சுமக்கின்ற நத்தையைபோல்
வாழ்தலின் முதுகில் மரணத்தைத் தூக்கிக்கொண்டு
நடக்கின்ற தைரியசாலிகளாக இருந்தும்
அது வந்துவிடுமோ என்னும் ப

மேலும்

எங்கே நீண்டநாள் உங்களைக் காணவில்லை? இடைவெளிவிட்டு வந்தாலும் மறக்காமல் எல்லாக் கவிதைகளையும் வாசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சர்பான் 24-Mar-2017 2:47 am
ஒவ்வொரு மனித உள்ளமும் நிலையான வாழ்க்கையை சிந்தித்தால் இம்மை வாழ்க்கையின் பெறுமதி வெகு சொற்பம் என்று புரிந்துவிடும் 24-Mar-2017 12:19 am
athinada - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2017 2:43 am

நெற்றி வியர்வை நிலந்தனிற் சிந்தாமல்
வெற்றி வழங்கிடுமோ வேளாண்மை? – நற்றிறம்
கொண்டுழைக்க நல்விளைச்சல் கூட்டும் அறுவடைக்
கண்டு மகிழ்வதற்கே கண்.
*மெய்யன் நடராஜ்

மேலும்

மிக்க நன்றி ஐயா. 25-Mar-2017 2:30 am
போற்றுதற்குரிய கவிதை & அழகு ஓவியம் பாராட்டுக்கள் தொடரட்டும் வேளாண்மைக் கவிதைகள் ------------------------------ அறுவடை :---கைகளால் அறுவடை பண்டைய முறை --மலரும் கிராமிய நினைவுகள் பிரதானமாக இரண்டு முறைகளில் அறுவடை செய்யலாம். அவையாவன, கைகளால் அறுவடை செய்தல் மற்றையது இயந்திரங்களின் மூலம் அறுவடை செய்வதாகும். பெரும்பாலான ஆண்டுப் பயிர்கள் கைகளினாலேயே அறுவடை செய்யப்படுகின்றன 24-Mar-2017 5:43 pm
நன்றி 24-Mar-2017 1:02 pm
நன்றி 24-Mar-2017 1:02 pm
athinada - athinada அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2017 1:52 am

==============
அர்ச்சனைக்கு காணிக்கைக்கையை
கவனித்து எடுத்துவைத்து
வாசற்படியில் குந்தியிருக்கும்
யாசகர்களை மறந்தவனுக்கு
அருள்பாளித்துவிட்டு கல்லாய் சமைந்த
கடவுளிடம் இருக்கும் கருவியில்
அடையாளப்படுத்தப்டுகிறான் சுயநல பக்தன்

*மெய்யன் நடராஜ்

மேலும்

உண்மைதான்..இறைவனிடம் தினமும் நேசம் கொண்டு யாத்திரை செல்லும் உள்ளங்கள் இம்மை மறுமை வெல்கிறது..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Mar-2017 11:54 pm
மிக்க நன்றி குமரி தங்களுக்கும் கவிதைத்தின வாழ்த்துக்கள். 21-Mar-2017 4:01 pm
இன்று உலக கவிதைதினம் எழுத்துதள சிந்தைகவி தோழமையே.. உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 1:47 pm
athinada - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2014 9:17 pm

இன்னும் ஒரு முறை காதலிக்கத் தூண்டுகிறது..... ஒவ்வொரு முறை படிக்கும் போதும் இன்னும் ஒரு முறை காதலிக்கத் தோன்றுகிறது.....

"காதல் காதல் காதல்...... போயின்....... சாதல் சாதல் சாதல்...."

"அது................... சொல்லாமல்........ ஏங்க ஏங்க.......... அழுகை வந்தது...........................எந்தன் காதல் சொல்லும் போது சொல்லாமல் வந்த அழுகை நின்றது......"

"வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா.................. வந்து தழுவுது பார்......"

காதல்.........ம்ம்ம்ம்ம்............

கவிதைக்குள் நுழைந்து வெளி வராமலே போகும் காதலுக்குள்..... அவள்....
அவளுக்குள் நான்....
எங்களுக்குள் காதல்...
காதலுக

மேலும்

இப்படி என் கவிதைக்கு ஒரு விமர்சனம் தளத்தில் நிகழ்ந்தேறியிருக்கிறது என்பதை இப்போதுதான் நான் கண்ணுற்றேன்.அலசி ஆராய்ந்த அணுகுமுறை ஆச்சரியமூட்டுகிறது கவிஜி . மிக்க நன்றி 14-Feb-2016 9:42 am
படித்து பாராட்டிய சுதாவுக்கு மிக்க நன்றி... 22-May-2014 8:13 pm
அழகு கவியில் விமர்சனம் தந்த கவிஜிக்கு நன்றி 22-May-2014 1:35 pm
மிக்க நன்றி தோழரே.... 22-Apr-2014 2:48 pm
JINNA அளித்த எண்ணத்தை (public) Kumaresankrishnan மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
03-Feb-2016 1:05 pm

ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 2

==============================
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... 
வரும் சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...

இதன் முதல் இரு இடங்களில் எழுத போகும் அந்த இரு ஜாம்பவான்கள் யாரென்று தெரியனுமா?

அகர முதல எழுத்தெல்லாம் 
என்ற திருக்குறளை போலவும் 
ஆத்திச் சூடி போலவும் (அ ஆ)
என்ற எழுத்தில் ஆரம்பமாகும் இருவர் முதல் இரு இடங்களில் எழுத போகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

மீதி உள்ளவர்களின் பட்டியலை அடுத்த எண்ணத்தில் தெரிவிக்கிறேன்...

இந்த தொடருக்கான விதி முறைகள்:
*****************************************
  1. ஹைக்கூ இலக்கணம் மீறாமல் இருக்க வேண்டும்...
  2. ஹைக்கூ இலக்கணம் இல்லாமல் எழுதும் எந்த படைப்பும் அடுத்த கட்ட நகர்த்தலுக்கு எடுத்துக் கொள்ள மாட்டாது...
  3. மூன்று வரிகள் என்ற கோட்பாட்டிற்குள் ஹைக்கூ இருத்தல் வேண்டும் மற்றும் தொடரின் பெயரை தவிர வேறு பெயர்கள் தங்கள் படைப்பில் பதிவிட கூடாது.
  4. 30 வரிகளுக்கு மேல் கவிதை இருத்தல் கூடாது. ஒவ்வொரு பத்தியும் மூன்று வரிகளுக்கு மேல் இருக்கவும் கூடாது.
  5. அவரவர்களுக்கு கொடுத்த தேதியில் பதிய வேண்டும். தேதியை தவற விடுபவர்களுக்கு வேறு தேதி ஒதுக்கப் பட மாட்டாது.
  6. ஒருவேளை பதிவிட முடியாதவர்கள் இரு நாளைக்கு முன்னமே எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்து விட வேண்டும். அப்படி முறை படி தெரிவிக்காதவர்கள் அடுத்தடுத்த தொடர்களில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
  7. படைப்பை பதிவிடுபவர்கள் கண்டிப்பாக அந்த தேதியில் காலை 9 மணிக்கு முன் பதிவிட வேண்டும்.
  8. படைப்பு தங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
  9. மொழி பெயர்ப்பு /பிறர் கவிதைகளின் தழுவலோ இருக்க கூடாது.
  10. ஒன்றிற்கு மேல் எழுதும் வாய்ப்பு யாருக்கும் வழங்க பட மாட்டாது. அதே போல இந்த தொடரில் எழுதும் படைப்பாளிகள் இதே தொடர் பெயரில் வேறு படைப்புகளை பதிவிட கூடாது...

அடுத்த எண்ணத்தில் எழுத போகும் தோழர் தோழமைகளின் பட்டியலும் தொடருக்கான தலைப்பும் அறிவிக்கப் படும்...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

வளர்வோம் வளர்ப்போம்.

நட்புடன்,
ஜின்னா.

மேலும்

மிக்க நன்றி வளர்வோம் வளர்ப்போம்.. 06-Feb-2016 1:34 am
தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா... கைக்கூ மழையில் நனைய காத்திருக்கிறோம்... 05-Feb-2016 11:37 pm
மிக்க நன்றி.. வரவிற்கும் வழங்கிய கருத்திற்கும் நன்றிகள் பல... 05-Feb-2016 12:23 am
காத்திருக்கிறேன் ....இத் தொடரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். 04-Feb-2016 4:02 pm
athinada - athinada அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2012 7:59 pm

பதினாறு வயதினிலே
நெஞ்சில் ஒரு ராகம் .-அது
பருவத்தின் வாசலிலே
ஒரு தலை ராகம்

பூவெல்லாம் கேட்டுப்பார்
என்றென்றும் காதல்
இசைபாடும் தென்றல்
நீதானே என் பொன் வசந்தம்

எங்கேயும் எப்போதும்
நினைத்தாலே இனிக்கும்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

நீலக்கடலின் ஓரத்திலே
அலைகள் ஓய்வதில்லை
நெஞ்சிருக்கும் வரை
காதல் அழிவதில்லை

அழகே உன்னை ஆராதிக்கிறேன்
என்னருகில் நீயிருந்தால்
நிலவு சுடுவதில்லை

என்னவளே..
நீ கண்ணெதிரே தோன்றினால்
தித்திக்குதே நெஞ்சினிலே

பார்த்தால் பசிதீரும்
நீ வருவாயென இதயம் பேசுகிறது

உயிரே உனக்காக
இளமை ஊஞ்சலாடுகிறது


சொன்னால் தான் காதலா

மேலும்

நன்றி நண்பரே,, 16-Dec-2012 9:35 am
நன்றி நண்பரே ,,,அதில் எல்லாம் வெறும் சினிமா பெயர்கள் மாத்திரமே உள்ளது. சும்மா எழுதிப்பார்த்தேன் ,அது கவிதையாகிபோனது அவ்வளவுதான் 16-Dec-2012 9:34 am
நல்ல கவி உழைப்பு தெரிகிறது.... நல்லா படம் பார்குரிங்க... நல்லா படம் காட்டுறிங்க..... 16-Dec-2012 8:14 am
அருமை அதினடா! பழைய படங்களின் பெயரைக்கொண்டே ஒரு காதல் கவிதையா? 16-Dec-2012 12:06 am
athinada - athinada அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Sep-2013 2:43 am

என் வருகையின்போது
உன் வாசலில் குரைத்தக்
கடிநாயைப் பிடித்து நீ
கட்டிப்போட்டப்போதே
கட்டவிழ்ந்துவிட்டது
கட்டுக்கடங்கா ஆசைகள்.

உள்ளே வரவழைத்த
உன் அழகான
வரவேற்பில்
வரமறுத்து
அடம்பிடித்தன
என் கறுப்புகள்.

உள்ளே வந்து
நின்றுகொண்டிருந்த
எனக்கு நாற்காலி
போட்டுவிட்டு
அமர்ந்துகொண்டாய் நீ
என் உயிருக்குள்.

சூடாய் தேநீர்
வழங்கினாய்
இனித்தது சர்க்கரையாய்
உன் பரிமாற்றம் .

நிறைய விபரங்களோடு
பேசிக்கொண்டிருந்தாய்
காதல் குறித்த
விபரமில்லாதவளாய்.

எனக்கு ஏதோதோ
விளங்கப்படுத்தினாய்
என்னை விளங்கிக்
கொள்ளாதவளாய்.

என் பாதணிகளைபோலவே
உன் மனவாசலுக்கு
வெளியே என

மேலும்

மிக்க நன்றி ஐயா 23-Jan-2016 1:23 am
வரும்போ தெல்லாம் மனத்தையே இழுக்கும்! வாசிக்க வாசிக்க மனம்குதூ கலிக்கும்! ஒவ்வொரு சொல்லிலும் உணர்ச்சிகள் மிதக்கும்! உயிரதைப் பிடித்தே உள்மூச் செடுக்கும்! மகிழுந்தில் ஓரிடம் மழை நாளில் தேனீர் மெய்யனின் கவிதையில் எல்லாமே காணீர்! 22-Jan-2016 6:33 pm
நன்றிகள் நண்பரே.. 27-Sep-2013 12:49 pm
நன்றிகள் தோழி 27-Sep-2013 12:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (179)

user photo

Seegan

கன்னியாகுமரி
PERUVAI PARTHASARATHI

PERUVAI PARTHASARATHI

கலைஞர் நகர், சென்னை-78
J K Balaji

J K Balaji

அவனியாபுரம்,மதுரை
inzimamul haq

inzimamul haq

அக்கரைப்பற்று

இவர் பின்தொடர்பவர்கள் (179)

Siva

Siva

Malaysia
velu

velu

சென்னை (திருவண்ணாமலை)
yasar

yasar

Thanjavur

இவரை பின்தொடர்பவர்கள் (180)

Anusaran

Anusaran

நீலகிரி - உதகை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே