krishnan hari - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  krishnan hari
இடம்:  chennai
பிறந்த தேதி :  03-Apr-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jun-2010
பார்த்தவர்கள்:  10809
புள்ளி:  5652

என்னைப் பற்றி...

உங்கள் கருத்து பகிர
rudhran198134@yahoo.com (or)
rudhran198134@rediffmail.com
rudhranhari198134@gmail.com
rudhrahari198134@sify.com


ஒரு துளி விஷமென்றாலும் அதன் வீரியம் அது காட்டும்

மனிதா ..........
உனக்குள் ஆயிரம் திறமை உண்டு அதில் ஒரு துளியேனும் நீ காட்டு .........

என் படைப்புகள்
krishnan hari செய்திகள்
krishnan hari - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2017 7:59 pm

நாளை வாழ இன்று ஏதோ
தின்று படுக்கிறோம்...
நாளை கவலை நம்மை
துரத்த இறந்து உறங்கினோம்
கவலை மறந்து உறங்கினோம்

காத்திருக்கும் கவலை காண
தினமும் விழிக்கிறோம்
மீண்டும் மீண்டும் துவண்டு போக
நாமே துடிக்கிறோம் ...

தேடல் தேடல் என்று சொல்லி
நம்மை நாமே தேடுவோம்
மீண்டும் மீண்டும் நம்மை தொலைக்க
விலகி ஓடி தப்பி பிழைத்து
மிஞ்சும் உயிரை காத்து நிற்க
தினமும் துடிக்கிறோம்
நமது உயிர்கள் பிழைத்து வாழ
வழியை அமைக்கிறோம் ....
அதிலும் கூட பிறர் வலியை
மறந்து வாழ துடிக்கிறோம்

தூக்கம் என்னும் பெயரில்
நாமும் தினமும் இறக்கிறோம்
கொஞ்சம் இருக்கிறோம் ...

மேலும்

உண்மைதான்.. மனித வாழ்க்கை என்ற அழகான சித்திரத்தில் புதிரான எண்ணவோட்டங்கள் ஏராளம் 20-Aug-2017 12:28 am
krishnan hari - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2017 7:50 pm

இலைகள் பிரியும் மரத்தின்
சோகம் நானும் காண்கிறேன்
அன்பே உன்னை பிரிகையில்
வலிகள் சொல்லும் வார்த்தைகள்

கண்ணால் சொல்கிறேன்
என் கண்ணால் சொல்கிறேன்
கண்பேசும் வார்த்தை உனக்கு
புரியும் என்று என் வலியை உணர்த்தவே

நாளும் கவிதை எழுதினேன்
காதல் விதையை ஊன்றினேன்
சருகாகுமோ மரமாகுமோ
முடிவு உன் கையில்
பதில் வருமா விரைவில் ////
நாளும்

மேலும்

காத்திருப்பு காதலின் விடுதலை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 12:27 am
krishnan hari - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2017 8:40 pm

உறங்க போகும் முன்
உதிர்த்த ஒரு வார்த்தை
வளரும் ஒரு கவியாய்
சிலர்தான் அதை ரசிப்பார்

பலரின் மனம் கவர
ஏற்ற கவி எழுத
கால நேரம் எதுவென்று
எப்படி யோசித்தும்...

இதுவரை முடிவில்லை
ஏனோ தெரியவில்லை
கவிதை விளக்கம் சொல்லும்
கவிதை விளக்கி சொல்லும்

விரும்பிடும் கவிதை தர
எந்த கருப்பொருள் துணையின்றி
இயலுமா ஒரு கவிதை
இதுவே என் முன்னுரை

இப்படி யோசித்தால்
ரசிக்க யார் இருப்பார்
கவிதை வாசிக்கும்
ஆசையைதான் துறப்பார்
என்னையும் தூற்றி நிற்பார்

எதற்கிந்த விஷப்பரீட்சை
என்று நினைத்த நொடி
தூக்கத்தில் தொலைந்துவிட்டேன்
எழுதிய பக்கத்துடன்
இனியும் சொல்வது இல்லை
உறங்க போகும் முன்

மேலும்

krishnan hari - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2017 7:53 pm

தவம் செய்ய நானறியேன் நீ இன்றி
ஒரு சவம்போல வாழ்கிறேன்
என்று ஜனிப்பாயோ என்ற ஏக்கம்
எனக்கும் உன் தாய்க்கும் ????

விடிகிறது தினமும்
முடிகிறது என் கனவும் இரவும்

நீ கையில் தவழ போகும் அந்நாள்
உன் பிறந்தநாள் மட்டுமல்ல
எனக்கும்தான் ஆம்
அன்றுதான் நான் மீண்டும் பிறப்பேன்

அதுவரை என் மனைவி என் குழந்தை
அவள் பேசும் மொழி நான் ரசிக்கும்
புதுக்கவிதை என்றும் என் மனதில்

என் எல்லா கனவுகளும் பத்திரமாய்
உனக்காக ....
சீக்கிரம் வா
வாடுகிறது என் கனவுகள்

யார் யார் குழந்தையோ
என்னை வாஞ்சையோடு
பார்த்து சிரிக்கையில் நினைத்துக்கொள்வேன்
நிச்சயம் இதைவிட உன் சிரிப்பு
அழகு என ...

மேலும்

krishnan hari - krishnan hari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2016 10:44 pm

நீ என்னை நினைத்திடவே
ஒருவழி தெரியலையே
என்ன சொல்லுகிறாய் உன்
விழி மொழி புரியலையே

உன் சம்மதம் கிடைக்குமென்றால்
ஒரு ஜென்மம் காத்திருப்பேன்
அதை நீ மறுப்பதென்றால்
உன் நினைவால் வாழ்ந்திருப்பேன்

மறித்தால் நிரூபிக்க
வழி ஒன்றும் இல்லையடி
வாழ்ந்தால் நிரூபிக்கலாம்
என்பதால் வாழ்கின்றேன்

என்றாவது வருமென்றால்
வரட்டும் அதுவாக
அதுவரை காத்திருப்பேன்
என்றும் உன் காதலனாய்

மேலும்

நன்றி நண்பா வருகைக்கும் வாழ்த்திற்கும் 22-Dec-2016 10:26 pm
காத்திருப்பும் வாழ்க்கையில் சுகமானது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Dec-2016 8:55 am
krishnan hari அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Dec-2016 9:15 pm

அனுபவம் தரும் வலியினை
சுகமென உணர்ந்திடு ஒருமுறை
பிறகென்ன கவலை வாழ்வினில்
சிறகை விரித்து பறந்திட

கண்களால் சிந்திடும் வியர்வை
இனி சிந்திட நமக்கு பயமில்லை
உடலால் சிந்திடும் வியர்வைக்கு
அதிக இடம் தந்திட துணிந்துவிட்டால்

ஏற்றமும் இறக்கமும் தான் வாழ்க்கை
என்று மூலையில் நீ முடங்காமல்
ஏர்பிடிக்கும் உழவன் போல்
எங்கும் எதிலும் முயன்றிடு
தோல்வி என்பதே உனக்கில்லை

மேலும்

நன்றி நண்பா தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் 17-Dec-2016 9:39 pm
நன்றி நண்பா 17-Dec-2016 9:39 pm
நன்றி கங்கை மணி 17-Dec-2016 9:39 pm
வெற்றிபெறுவதற்கு ஏற்ற உகந்த கவிதை... தொடரட்டும் தங்கள் வெற்றிப் பயணம்!! 15-Dec-2016 8:21 pm
krishnan hari - krishnan hari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2016 8:58 pm

தேடி தேடி கிடைக்கல
ஓடி ஓடி முடியல
தேடி ஓட தேடி ஓட
தேடல் தொடருதே

காசுதானே வாழ்க்கையினு
மனசு துடிக்குதே
காதல் கூட காசுக்காக
இங்கு நடிக்குதே

பாசம் இங்கு நிசமில்ல
வேஷம் இங்கு புதுசில்ல
பணத்தை பார்த்த பொணமும் கூட
வாயை திறக்குதே
ஜனத்த மாத்தும் வசியம்
இந்த பணத்தில் இருக்குதே

காசிருந்த கேசில்ல
காசில்லாட்டி பாஸ் இல்ல
லூசுக்கூட தலைவனாகும்
வாய்ப்பு உண்டு நாட்டில

வழுக்கை தலையில் முடி முளைக்க
செஞ்ச தப்ப மூடி மறைக்க
காச நாம தேடி பிடிக்க
வாழ்க்கை தொலையுதே

தேடி தேடி நானும் ஓட
சுவாசம் குறையுதே
காசில்லா வாழ்க்கை வேஸ்ட்
நமக்கு தோணுதே ....

மேலும்

நன்றி நண்பா வருகைக்கும் வாழ்த்திற்கும் 09-Dec-2016 8:13 pm
ஆம் நண்பரே வாஸ்தவமே காசில்லாவிடில் வறுமை இளமையில் காசில்லா வறுமை கொடுமை ............ 09-Dec-2016 1:49 pm
krishnan hari - krishnan hari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2016 8:18 pm

அம்மா
;
;
;நீங்கள் ஆறுமுறை ஆட்சி பீடம்
கைப்பற்றியது அல்ல சாதனை
அறுசுவை உணவு அளித்தது
இல்லை உமது சாதனை

மடிக்கணினி வழங்கியதும்
அல்ல உமது சாதனை
காவிரியை பெற்று தந்ததும்
அல்ல உமது சாதனை

தாலிக்கு தங்கம் தந்ததும்
அல்ல உமது சாதனை
வீட்டு உபயோக பொருள்
தந்தது அல்ல உமது சாதனை

இலவச அரிசி வழங்கியது
அல்ல உமது சாதனை
மிதிவண்டி வழங்கியது
அல்ல உமது சாதனை

தொட்டில் குழந்தை திட்டம்
அல்ல உமது சாதனை
இலங்கை தமிழருக்கான
குரல் கொடுத்தது அல்ல
உமது சாதனை ...

நிஜமான சாதனை எது
தெரியுமா அம்மா ????
நீங்களே சொல்ல கேட்டிருக்கிறேன்

என் நிஜப்பெயர் மறந்து போனது
நீங்க

மேலும்

நன்றி தோழி பூந்தளிர் தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் 08-Dec-2016 8:50 pm
மிக்க நன்றி அய்யா தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் 08-Dec-2016 8:49 pm
மிக்க நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் 08-Dec-2016 8:49 pm
சத்தியமான / நிஜமான அஞ்சலி, அவரின் ஆன்மா சாந்தியடையட்டும் - மு.ரா. 08-Dec-2016 6:54 am
krishnan hari - krishnan hari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2015 12:31 pm

உன் நிழல் என நானும்

என் நிழல் என நீயும்

மனதில் எழும் ராகம்

சேர்ந்திட மனம் ஏங்கும்

தனிமையில் சில நேரம்

உன் முகம் வந்து போகும்

காதலில் பல நேரம்

தனிமையில் புலம்ப தோன்றும்

மேலும்

நன்றி தோழி 14-Apr-2015 4:54 pm
நன்றி தோழி 14-Apr-2015 4:54 pm
அழகு ... 14-Apr-2015 3:02 pm
நன்று ! 14-Apr-2015 2:55 pm
krishnan hari - krishnan hari அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Oct-2014 9:39 am

கண்களின் வார்த்தையை
மாற்றிட பார்க்கிறேன்
வாய்மொழி வந்திடுமா
உன் காதலை கேக்கிறேன்

உணர்வுகள் உண்டிடும்
பழக்கத்தை வாங்கினேன்
அதன்பேர் காதல்
என்றே மாற்றினேன்

என் நேசம் புரியுமா
என்று நான் கேட்கவே
பெண் பூவே உனக்கென
கவிதைகள் எழுதினேன்

கவிதையில் காதலை
சொல்வது பழமைதான்
இருந்தும் நான் சொல்கிறேன்
அனைத்துமே உண்மைதான்

உண்மைகள் கூடிய
காதல் என்னுடையது
என் கவிதைகள் அனைத்துமே
உனக்கென இருக்குது ......

மேலும்

நன்றி தோழி 26-Nov-2014 6:35 pm
நன்றி தோழி வரிக்கு வரி ரசித்தமைக்கு 26-Nov-2014 6:34 pm
நன்றி தோழி 26-Nov-2014 6:34 pm
Ovvoru varigalume arumai... 18-Nov-2014 9:22 pm
அளித்த எண்ணத்தை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Mar-2014 9:55 am

படிக்கவும்

மேலும்

நன்றி தோழமையே 30-Jul-2014 8:34 am
படித்தேன் நண்பரே ... 30-Jul-2014 7:46 am
நன்றி தோழமையே 30-Jul-2014 7:24 am
நன்றி தோழமையே 30-Jul-2014 7:24 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (212)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
தௌபீஃக் ரஹ்மான்

தௌபீஃக் ரஹ்மான்

பொள்ளாச்சி
பாலா

பாலா

தமிழ்நாடு
பிரகாஷ் வ

பிரகாஷ் வ

நாமக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (213)

சிவா

சிவா

Malaysia
user photo

hasini

dgl
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (213)

tamilan

tamilan

மதராசபட்டினம்

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே