எழுத்தில் புதியவை / அறிவிப்பு
(Eluthu Puthiyavai / Arivippu)
எழுத்து தோழர்களுக்கு வணக்கம்,பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றி!அந்த மகிழ்ச்சியான செய்தி... (கீத்ஸ்)
26-Sep-2017 2:31 pm
எழுத்து தோழர்களுக்கு வணக்கம்,
பொறுமையாக காத்திருந்தமைக்கு நன்றி!
அந்த மகிழ்ச்சியான செய்தி :
எழுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கவிதை போட்டி ஒன்றை அறிவிக்கவுள்ளது.
போட்டி குறித்த விவரங்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கவும்.
காணொளி போட்டி நாளை முடிவடைகிறது. அதன் பின், கவிதை போட்டிக்கான அறிவுப்பு வெளியாகும்.
இந்த வார விடுமுறை நாட்களுக்கு முன் போட்டி பற்றிய விவரங்கள் அறிவிக்க படும்.
மகிழ்ச்சிதானே!
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
மகிழ்வே..
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் 08-Aug-2020 1:29 pm
மகிழ்வான செய்தி ஆனாலும் கசப்பாக இருக்கிறது. என்னடா இப்படி சொல்றான் என்று யாரும் தப்பாக நினைத்து விடாதீங்க. போட்டிக்கு நூறு இல்லை ஆயிரம் படைப்புக்கள் வரும் என்பது உறுதியான வெளிப்பாடு ஆனாலும் அந்த ஆயிரத்தில் ஒன்றுக்காவது பத்து தோழர்களின் வெகுமதியாக கருத்துக்கள் கிடைக்குமா என்பதில் விடையும் கேள்விக்குறி தான். நீண்ட காலங்களின் பின் எழுத்து தளத்தால் இப்போட்டி நடாத்தப்பட இருப்பது இன்பமான அறிவிப்பு. ஆனாலும் அதை விடவும் நீண்டகாலமாக நிலவும் நான் சொன்ன பற்றாக்குறை நீங்கி ஓர் ஆரோக்கியமான போட்டியாக இது அமையுமா என்பதில் மீண்டும் அதே கேள்விக்குறி தான்.இங்கு அற்புதமான சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் நிச்சயம் போட்டி கடுமையாக இருக்கும் என்று நினைக்கும் போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.
ஒவ்வொரு எழுத்துக்களும் போட்டி போட வேண்டும் ஆனால் பொறாமை கொள்ளக்கூடாது. சிந்தனை நீர்விழ்ச்சியில்
கருத்து அருவிகள் சமுத்திரம் போல் பெறுக வேண்டும். வெகுமதிகள் யாவருக்கும் இல்லையென்றாலும்
மனத்திருப்தி ஒவ்வொரு படைப்பாளிக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். எல்லோரும் கட்டாயம் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். யாவருக்கும் வாழ்த்துக்கள் தவறாக நான் ஏதும் பேசவில்லை என்று நினைக்கிறேன் என்னை மீறி ஏதும் தவறாக பதிவிட்டு இருந்தால் மன்னிக்கவும்.
26-Sep-2017 5:59 pm
இன்னும் மூன்று நாட்களில் எழுத்து தோழர்களுக்கு ஒரு
மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கின்றது.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
மிக்க மகிழ்சசி . வாழ்த்துக்கள் 22-Sep-2017 6:43 am
காத்திருக்கிறோம் 21-Sep-2017 5:47 pm
எண்ணம் காணொளி போட்டி இறுதி நாள் செப்டம்பர் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
100 புள்ளிகள் பெற்றவர் மட்டுமே காணொளி சமர்ப்பிக்க முடியும் என்பதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இனி அனைவரும் காணொளி சமர்ப்பிக்கலாம்.
சிரமங்கள் இருப்பின் தெரிவுபடுத்தவும்.
எண்ணம் காணொளி போட்டிதோழர்களுக்கு வணக்கம்!எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி... (கீத்ஸ்)
18-Sep-2017 12:33 pm
எண்ணம் காணொளி போட்டி
தோழர்களுக்கு வணக்கம்!எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017
தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.
விதிமுறைகள்:
- சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
- காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
- ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
- சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
காணொளி சமர்ப்பிக்க:
- எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
- பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
- அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
- Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
- உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில்
ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக்
கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am
எழுத்து கவிதை போட்டி : வெற்றி பெற்ற படைப்பு
சீதளாதேவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இவருக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 3000 மற்றும் ஆச்சிரியமூட்டும் சிறப்புப் பரிசு பொருள் ஒன்றும் காத்திருக்கிறது.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
தயவு செய்து வெற்றிப்பெற்ற கவிதையின் லிங்கையும் குறிப்பிடவும் 11-May-2017 12:17 pm
வாழ்த்துக்கள். .. 01-Jan-2017 8:30 am
போட்டியில் வெற்றிப்பெறுவதற்காக உருவான கவிதையில்லை...போட்டி ஒரு களம் தானே தவிர முடிவு அல்ல...இங்கு எல்லோரும் கவிஞர்களே பிழை இல்லாமல் எழுதியோர் என்னை எழுதப் பழகும் குழந்தை என எண்ணி அமைதி ஆகிவிட்டனர் என்று நினைக்கிறேன்...அவர்கள் என்னை எதிரியாகவோ அல்லது போட்டியாளர் என்றோ எண்ணுவதாக தோன்றவில்லை...நன்றி சகோதரரே உங்கள் விமர்சனத்திற்கு ஏனெனில் விமர்சனம் மட்டுமே வளர்க்கும்.,எப்படியும் என் கருத்துகளுக்கு விமர்சனம் அனுப்புவீர்கள் என்னை வளர்க்க காத்திருக்கிறேன் 06-Dec-2016 7:53 pm
பிழை பொறுக்கவும் என்று கேட்டது என் பண்பாடு...பிழையை சுட்டி காட்டுங்கள் என்று சொன்னது இயலாமை...இதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை...நாங்கள் மதிப்பெண்ணிற்காகவும் தகுதியான பணிக்காகவும் உருவாக்கப்பட்ட தலைமுறை முடிந்தால் தவறினை சுட்டி காட்டி ஊக்கப்படுத்துங்கள்., 06-Dec-2016 7:32 pm
எழுத்து கவிதை மற்றும் கட்டுரை போட்டி : இரண்டாம் தேர்வு பட்டியல்
- உழவர்- உழவர் வாழ்க்கை நிலை (க.அர.இராசேந்திரன்)
- நீர் இன்றி அமையாது உலகு - போட்டி கவிதை (கவியரசன்)
- வலியோடு வெற்றி (கணேசன் நா)
- உழைப்பே உயர்வு (தங்கதுரை)
- நீரின்றி அமையாது உலகு (செ.கிரி பாரதி.)
- உழைப்பே உயர்வு-பாரதிதாசனுக்கு பாமரனின் வாழ்த்து (க.அர.இராசேந்திரன்)
- நீரின்றி அமையாது உலகு (க.அர.இராசேந்திரன்)
- புதியதோர் உலகம் செய்வோம் (க.அர.இராசேந்திரன்)
- குழந்தை தொழிலாளர் (charlie kirubakaran)
- உழவு (த.சிங்காரவேல் என்கிற கவிமணி)
- குழந்தைத் தொழிலாளி - மே தின எழுத்துக் கவிதைப் போட்டி (விவேக்பாரதி)
- புதியதோர் உலகம் செய்வோம் - கவிதை போட்டி (கவியரசன்)
- குழந்தைத் தொழிலாளர் (சு.அய்யப்பன்)
நன்றி,
இப்படிக்கு
எழுத்து.காம்
வாழ்த்துக்கள்! 18-Sep-2016 9:08 am
அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
15-Sep-2016 3:41 pm
வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ! 15-Sep-2016 12:48 am
அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 14-Sep-2016 5:09 pm
எழுத்து கவிதை மற்றும் கட்டுரை போட்டி : முதற்கட்ட தேர்வு பட்டியல்
எழுத்து போட்டிக்கு சமர்ப்பிக்க பட்ட 300கும் மேற்பட்ட கவிதைகளில் சில கவிதைகள் முதற்கட்ட தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ளது அவை கீழ்வருமாறு. இன்னும் சில நிலுவையில் உள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு அறிவிக்க மிகுந்த காலதாமதம் ஆனதால் போட்டியில் வெற்றிபெறும் நபருக்கு அறிவித்திருந்த பரிசுத்தொகையுடன் மேலும் பல பரிசுப்பொருட்கள் காத்திருக்கின்றது. இது போன்ற சிரமம் இனி கலைஞர்களுக்கு நேராது என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.
- புதியதோர் உலகம் செய்வோம் (Geetha paraman)
- நீயின்றி அமையாது உணவு (Sugumar Surya)
- வலியோடு வெற்றி (KR Rajendran)
- குழந்தை தொழிலாளர் (seethaladevi)
- உழவர் (seethaladevi)
- குழந்தை தொழிலாளர் (Geetha paraman)
- குழந்தைத் தொழிலாளர் (T. Joseph Julius)
- புதியதோர் உலகம் செய்வோம் (vanji nellai)
- உழவர் (Giri Bharathi)
- உழவர் (athinada)
- பசுமை உலகம் (CViswanathan)
- உழைப்பாளி (KR Rajendran)
- உழவன் (Anuthamizhsuya)
- உழைப்பாளி --போட்டிக் கவிதை --முஹம்மத் ஸர்பான் (Mohamed Sarfan)
- குழந்தைத் தொழிலாளர் (mu sivakumar)
- கவிதை - உழவர் - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிக்கு (kramesu)
- நான் மரம் பேசுகின்றேன் (Ever UR Jeevan...)
- புதியதோர் உலகம் செய்வோம் (MRNK)
- குழந்தை தொழிலாளர் --போட்டிக் கவிதை--முஹம்மத் ஸர்பான் (Mohamed Sarfan)
- புதியதோர் உலகம் செய்வோம் (kanagarathinam)
- உழவு (krishnan hari)
- புதியதோர் உலகம் --போட்டிக் கவிதை --முஹம்மத் ஸர்பான் (Mohamed சரிபான்)
நன்றி,
இப்படிக்கு எழுத்து.காம்
எழுத்து கவிதை மற்றும் கட்டுரை போட்டி : -
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்
தமிழ் அன்னை ஆசிகள் 18-Sep-2016 5:31 am
அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 14-Sep-2016 6:07 am
ஒருவழியாக பொறுமையாக படித்து முடிக்கப்பட்டு தேர்வுக்கு வந்தாயிற்று. இவை வாக்கெடுப்புக்கு செல்லப்போகிறதா சகோதரி..? இந்த பட்டியலில்கூட எல்லோரையும் கவர்ந்த எனது கவிதை (பசுமை உலகம் kavithai/290476. html) இடம்பெறவில்லை என்பது வருத்தமே . பட்டியலில் உள்ளவற்றில் எழுத்துப்பிழையுள்ள கவிதையும் இருக்கிறது என நினைக்கிறேன்.. எழுத்துப்பிழையுள்ள கவிதைகள் வாக்கெடுப்புக்கு விடப்படுமா..? கட்டுரை போட்டி முடிவுகள் பரிசீலிக்கப்பட்டதா சகோதரி ? அந்த முடிவுகளை எப்போது எதிர்பார்க்கலாம்.? 14-Sep-2016 12:36 am
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்திய ஓவியப்போட்டியில் பரிசு பெறுபவர்
செல்வமணி அவர்கள்
வாழ்த்துக்கள். இவருக்கு பரிசுத்தொகையாக 1000 ரூபாயும் 8GB விரலியும் பரிசாக வழங்கப்படும்.
செல்வமணி அவர்களின் ஓவியத்தொகுப்பு உங்கள் பார்வைக்காக
மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வென்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும்.....
தொடரட்டும் போட்டிகள்
09-Sep-2016 8:52 pm
அழகிய ஓவியங்கள், பாராட்டுக்கள்.
03-Sep-2016 9:03 am
நன்றி 21-Aug-2016 10:12 am
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வென்றவர்களுக்கும் பங்கேற்றவர்களும்.....
கவிதை போட்டி முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது...? 11-Aug-2016 10:03 am
உன் நிழலை
நீ மிதித்தால்
அது பயணம்
உன் நிழலை
காலன் மிதித்தால்
அது மரணம்
நன்றி 16-Jun-2016 9:44 am
எழுத்து தோழமைகளுக்கு வணக்கம்,தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்திய... (கீத்ஸ்)
01-Jun-2016 11:02 am
எழுத்து தோழமைகளுக்கு வணக்கம்,
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்திய கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும்.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எங்களது நன்றி.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
மேலும்...
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [68]
- Dr.V.K.Kanniappan [34]
- ஜீவன் [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- மலர்91 [20]