அஷ்றப் அலி - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  அஷ்றப் அலி
இடம்:  சம்மாந்துறை , இலங்கை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Oct-2015
பார்த்தவர்கள்:  4971
புள்ளி:  1149

என்னைப் பற்றி...

சிறு வயது முதல் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். இடையில் சிறிது தேக்கம். மீண்டும் முனைப்போடு எழுதுகின்றேன் இலங்கையில் பிறந்தவன் இலக்கிய ஆர்வம் நிறைந்தவன்

என் படைப்புகள்
அஷ்றப் அலி செய்திகள்
அஷ்றப் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2025 3:06 pm

புன்னகைக் கள்ளேந்தி பூவிதழ் விரித்தாள்
கன்னத்தில் பப்பாளி தேன்ரசம் பிழிந்தாள்
கிண்ணத்தில் வைத்த ரெட்டை மதுசாரம்
முன்னத்தில் தளம்பும் நடைபயின்று
வந்தாள்
அன்னத்தால் எனைமறந்தேன் எண்ணத்தால் நிலைகுலைந்தேன்



அஷ்றப் அலி

மேலும்

அஷ்றப் அலி - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2025 1:33 am

சிவந்தஉன் பொன்னுடல் சீரிளம் தோற்றம்
உவந்து ரசிக்க உருவான கண்கள்
கவர்ந்தெனை ஈர்த்திடும் கார்கூந்தல் சரமே
தவித்தேன் உன்நினை வால்

அஷ்றப் அலி

மேலும்

மிக்க நன்றி அன்பின் Dr.V.K.Kanniyappan அவர்களே! நானும் இலக்கணக் கடலில் இவ்வாறான கவி முத்துக்களை அள்ள உங்கள் ஆக்க பூர்வமான கவி ஆலோசனைகளைத் தாருங்கள். 27-Aug-2025 11:33 pm
நல்ல முயற்சி; வாழ்த்துகள். ஒரு விகற்ப இன்னிசை வெண்பா சிவந்தஉன் பொன்னுடல் சீரிளம் தோற்றம் உவந்து ரசிக்க உருவான கண்கள் கவர்ந்தெனை ஈர்த்திடும் கார்கூந்தல் கண்டு தவித்தேன்,நான் உன்நினை வால்! 27-Aug-2025 9:07 am
அஷ்றப் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2025 1:33 am

சிவந்தஉன் பொன்னுடல் சீரிளம் தோற்றம்
உவந்து ரசிக்க உருவான கண்கள்
கவர்ந்தெனை ஈர்த்திடும் கார்கூந்தல் சரமே
தவித்தேன் உன்நினை வால்

அஷ்றப் அலி

மேலும்

மிக்க நன்றி அன்பின் Dr.V.K.Kanniyappan அவர்களே! நானும் இலக்கணக் கடலில் இவ்வாறான கவி முத்துக்களை அள்ள உங்கள் ஆக்க பூர்வமான கவி ஆலோசனைகளைத் தாருங்கள். 27-Aug-2025 11:33 pm
நல்ல முயற்சி; வாழ்த்துகள். ஒரு விகற்ப இன்னிசை வெண்பா சிவந்தஉன் பொன்னுடல் சீரிளம் தோற்றம் உவந்து ரசிக்க உருவான கண்கள் கவர்ந்தெனை ஈர்த்திடும் கார்கூந்தல் கண்டு தவித்தேன்,நான் உன்நினை வால்! 27-Aug-2025 9:07 am
அஷ்றப் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2025 10:30 am

வேல் விழி தேன் மொழி
அவள் யாவும் பிரமாதம்
பால் நிலா வேர்ப்பலா
உடல் தெய்வப் பிரசாதம்
சீர் வழி செல் எனக்
கூறும் சொற் பிரயோகம்
கார் முகில் ஒழித்தாள்
என் தீதுப் பிறப்பாக்கம்
யார் இனி வாழும் வரை
அவள் தான் பிரபஞ்சம்

அஷ்றப் அலி

மேலும்

அஷ்றப் அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2025 12:05 pm

தேனின் இதழாள் தெவிட்டாக் கனியாள்
மானின் விழியாள் மருளல் தந்தாள்
ஊனில் உணர்வில் ஒவ்வியே நிற்கிறாள்
வான்நி லாநிகர்த்த வள்

அஷ்றப் அலி

மேலும்

அஷ்றப் அலி - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2025 11:44 am

கஞ்சமாய் வாழ்வதேனோ காவிரிபோல் மேதினியில்
தஞ்சமென வருவோர்க்கு தானிரங்கு - அஞ்சாதே
ஓரிறையை நினைந்து ஒழுகினால் எப்பொழுதும்
பேரருளும் பெருகிடுமே உனக்கு

அஷ்றப் அலி

மேலும்

மிக்க நன்றி அன்பின் ஐயா. இவ்வாறு தொடர்ந்து ஊக்கம் தா.ருங்கள் 10-Aug-2025 9:15 am
இரு விகற்ப நேரிசை வெண்பா (ஒழுகிசைச் செப்பல் ஓசை) கஞ்சமாய் வாழ்வதேனோ காவிரிபோல் மேதினியில் தஞ்சம் வருவோர்க்குத் தானிரங்(கு) - அஞ்சாதே ஓரிறையை ஓர்ந்தே ஒழுகினால் எப்பொழுதும் பேரருள் ஓங்கும் உனக்கு! 10-Aug-2025 2:38 am
அஷ்றப் அலி - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2025 10:23 am

கரும்பாய் மெல்லிதழ் காட்டியே சிரிக்கின்றாய்
அரும்பாய் நெஞ்சிலே ஆசையை விரிக்கின்றாய்
விருந்து வேண்டாமன்பே காதல் நோய்க்கு
மருந்தாய் என்னிடம் வா

அஷ்றப் அலி

மேலும்

மிக்க நன்றி அன்பின் கவின். இவ்வாறு தொடர்ந்து ஊக்கம் தாருங்கள் 07-Aug-2025 8:39 pm
கருத்தும் கவிதையும் இனிமை கரும்பாய்உன் மெல்லிதழ் காட்டிச் சிரிப்பாய் அரும்பாய்என் நெஞ்சிலே ஆசை விரிப்பாய் விருந்துவேண் டாமன்பே காதலின் நோய்க்கு மருந்தாய்நீ என்னிடம் வா ----தூய வெண்பாவாக மாற்றியிருக்கிறேன் மூன்றாம் சீர் மோனையும் அருமை 06-Aug-2025 10:05 pm
அஷ்றப் அலி - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2025 10:35 am

இளவெய்யில் வீச இளஞ்சாரல் தூவ
பளபளக்கும் கண்ணில் திராட்சைகள் துள்ள
மனச்ச்சார லில்நான் நனைகிறேன் உள்ளே
வனமான் விழியெழி லே

மேலும்

வெய்யில் சரி வெயிலும் பயன்பாட்டில் உண்டு 04-Aug-2025 9:14 am
கவிஞரே! வெயிலா அல்லது வெய்யிலா சிறிது நோக்குங்களேன் 04-Aug-2025 7:57 am

பட்டி பலுகப் பலுக
பால் பானைப் பொங்கப் பொங்க
தீமைகள் முறிந்தோட
நன்மைகள் நின்று துலங்க
பொங்கலோ பொங்கல்!

உழவும் தொழிலும் பெருகிட
நிலமும் நீரும் திளைத்திட
வயலும் வாழ்வும் செழித்திட
வறுமையும் வெறுமையும் நீங்கிட
பொங்கலோ பொங்கல்!

தீந்தமிழ் திசைதோறும் நிரவிட
பைந்தமிழ் பாரெங்கும் பரவிட
முத்தமிழ் மனமெங்கும் நிறைந்திட
கன்னித்தமிழ் காலமெலாம் நிலைத்திட
பொங்கலோ பொங்கல்!

தமிழ் உறவுகள், தோழமைகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

மேலும்

அஷ்றப் அலி - தமிழ்க்கிழவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Oct-2018 12:53 pm

இலையுதிர் காலமிது;
பொல பொல பொல
என்றுதிரும் இலைகளை,
பலநிறம் மாறியிங்கவை
புரி வர்ணஜாலங்களை,
சர சர சரவென்று
பாதம்படுஞ் சருகினை,
மெல்லிய குளிர்காற்றென்
மேனி தழுவுதலை,
எங்கோ இருக்கும்
உன்னணைப்பின்
நினைவு தரும்
கதகதப்பில்
மனமுருகி
இரசித்த நான்;

உதிரும் இலைகள்
எதிர்நோக்கும்
உன்னுதிர்வையும்,
நிறமாற்றங்கள்
எம்வாழ்வின்
எதிர்பாராத்
திருப்பத்தையும்,
மிதிபடும் சருகுகள்
மெல்ல (உ)என்னுள்
மறுகிடும் ஆன்மாவையும்,
நினைவுறுத்த;
சில்லென்ற குளிர்காற்று
முகம் படவும்
“ஐயோ! இப்படித்தான்
என்னவளுடலும் ஓர்நாள்
சில்லிடுமோ”
என்று இன்று
மனஞ்சிதைந்து
விக்கித்து நிற்கிறேன்...

அழையா வ

மேலும்

அஷ்றப் அலி - அஷ்றப் அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2018 10:57 am

எங்கே தான் சென்றாய் நீ
உன்னைக் காணாமல்
நான் கரைகிறேன்
இங்கு தள்ளாடித் தவிக்கிறேன் ,
கனவிலே உன் முகம் காணும்
களிப்பிலே கண் மூடினால்
இடை நடுவில் ஓடோடி வந்து
என்னிரவின் நொடிகளை
உன் நினைவுகள் முழுவதுமாய்க்
கவர்ந்து கொல்கிறதே

என் விழிகளை
மட்டும் இப்போது நீ
நெருங்கி விடாதே
நித்திரை இழந்து
நெருப்புக் கோளமாய்
நிர்க்கதியில் கிடக்கும் அவை
கண்ட மாத்திரத்தில்
உன்னைச் சுக்குநூறாய்ச்
சுட்டெரித்து விடும்

அஷ்றப் அலி

மேலும்

ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு அல்லவா ? விரகதாபாத்தில் வெந்து கிடக்கும் விழி தானே முதல் பூவே ! சுடலாம் இல்லை கண்டவுடன் குளிராகவும் மாறலாம் .....ஈற்றில் கண்ணிலாக் காதல் தான் ஜெயிக்குமென நம்புவோமே! கருத்துக்கு மிக நன்றிங்க 18-Jul-2018 4:25 pm
காதல் நெருப்பு சுட்டெரிக்காது சுகம்தானே... 18-Jul-2018 3:39 pm
வாழ்த்துக்கும் வரிகளுக்கும் மிக்க நன்றி அன்பின் ஆரோ! 17-Jul-2018 1:33 pm
நல்ல காதல் கவிதை, அருமையாய் உள்ளது இன்னும் எழுதுங்கள். 17-Jul-2018 1:02 pm
அஷ்றப் அலி - ஜான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2018 9:02 pm

ஏழ்மை கொண்டாடப்பட வேண்டியது...

சந்தோசம் மட்டுமே ஏழ்மையின் அனுதினத் தேடல்...

அன்பினால் அரவணைத்து வாழ ஏழ்மை போதிக்கும்...

உடுத்த மட்டுமே உடை என உறுதியாக சொல்லித்தரும்...

கனவுகாணும் உயரங்களுக்குப் பறக்க ஏழ்மை கற்றுத் தரும்...

கீழிருந்து மேலேறும்போது சறுக்கும் சறுக்கல்களை சமாளிக்க ஏழ்மை கற்றுத் தரும்...

தொடக்கத்திலிருந்து இலக்கையடையும் அனுபவப்பாடத்தை ஏழ்மை சொல்லிக் கொடுக்கும்...

ருசிக்க சாப்பிடும் நாள் வரும்; இப்பொழுது பசி தீர்க்கும் வழி கண்டறி என சமரசமின்றி தேட வைக்கும்...

சுயநலம் கருதாது உழைக்கும் பாங்கை கட்டமைக்கும்...

ஏட்டிலடங்கா கல்வி பலவற்றை எளிதாக போதிக்கும்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (68)

இவர் பின்தொடர்பவர்கள் (68)

மேகலை

மேகலை

ஸ்ரீவில்லிபுத்தூர்
Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்

இவரை பின்தொடர்பவர்கள் (76)

மேலே