மூமுத்துச்செல்வி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மூமுத்துச்செல்வி |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 12-Jan-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 4263 |
புள்ளி | : 561 |
தமிழ் வார்த்தைகள் தந்த நேசம் கவிதைகளாய் என் வரிகள். பட்டதாரிக்கும் பட்டம் தந்த என் தமிழ் அன்னை.
https://pearlkavithaikal.blogspot.in/ இது என்னுடைய கவிதைகளின் முகவரி
என்னாச்சு! ஏன் இப்படி இருக்கிறாய்? சொல்லித்தான் தொலையேன்....
என்ன சொல்ல மனசே சரியில்லை...
ஏன் என்னாச்சு
கோவம் ஆத்திரம் அழுகை எல்லாம் ஒன்னா வருது.. நான் என்ன பண்ண...
எதுக்கு இப்படி?
எல்லாம் வெறுமையாக இருக்கு. எல்லாம் வெறுப்பாக இருக்கு.
என்ன நடந்துச்சு சொல்லி தொல...
வழக்கம் போல் எல்லாம் கிண்டல் கேலி...
கருப்பு கருப்பு என்று வெறுப்புடன் பேசுகிறார்கள்.. கருப்பாக பிறந்தது என் குற்றமா? என்ன பண்றதுன்னு தெரியல... சாகலாம்னு இருக்கு...
லூசு லூசு மாரி பேசாத
பின்ன
பின்ன எப்படி பேச, பிறந்ததுல இருந்தே கருப்பு கருப்புனு கேலி, வளர வளர இன்னும் மோசமாக கிண்டல்...
கருப்பா இருக
ஓடையில் நீந்துகிறது
கருவிழிகள்.!
- முத்து துரை
என் நிழல்களுக்கு பின்னால் நின்று
என் நிஜங்களை தேடுகிறேன்
என் இதயம் நொறுங்கும் சத்தத்தை
எட்ட நின்று கேட்கிறேன்
நான் யார் ?
நான் என்ன ?
யோசித்தும் விடையில்லை என்னுள் ..
எதற்காக இந்த பிறவி
எதற்காக இந்த நொடி
எதற்காக எல்லாம்
பல வித கேள்விகள்
பதில் இல்லை என்னுள்
என்ன சாதிக்க பிறந்தேன்
என்ன சோதிக்க பிறந்தேன்
என்ன என்ன
விடையில்லா நான்!
- முத்து துரை சூர்யா நிரஞ்சனா
இருளின் எதிரி
இரும்பின் கதிர்
கண்ணாடி பதுமை
பளிச்சிடும் புதுமை
இருப்பிடம் அளித்து
பொத்தான் கொண்டு
வேண்டும் நேரம்
மின்னும் மின்மினி
பார்வை பல
பார்த்தவர் பல
வாழ்வு முடிந்ததும்
குப்பைமேடில்...
- முத்து துரை சூர்யா
ஊடல் ஊறும் வேளை
கூடல் தந்தாய்
கூடலில் நான் திளைத்திருக்க
மனகடலில் மகிழ்ச்சி தந்தாய்
என் எண்ணங்கள் முழுவதும்
நீ இருக்க
வண்ணங்கள் நிறைந்தது வாழ்க்கை
ஆதி நீ
அந்தமும் நீயே!
என் முடிவும் நீயே!
தோல் சாய்ந்திடும் நேரம்
தோல்விகள் இல்லை - உன்னுடன்
துயில் கொள்ளும் நேரம்
துன்பம் இல்லை.
தோழன் என நீ இருந்தால்
தோள்களின் வலிமையை நான் அறிவேன்
வழித்துணையாக நீ இருந்தால்
வழிகளின் சுவடுகள் நான் அறிவேன்
இயற்கையென நீ இருந்தால்
இன்பம் பல நான் அறிவேன்
உதயம் என நீ இருந்தால்
உருகும் உயிர் என நான் இருப்பேன்.
அணைத்துமாக நீ இருந்தால்
கணவனே உன் கரம் பற்றி
உன் மூச்சுக்காற்று
தென்றல் ஸ்பரிசத்தில்
வாழ்ந்திட ஆசை...
உன் கண்களில்
அழகிய பிம்பமாய்
இருந்திட ஆசை...
உன் நெற்றி
வியர்வையில் துளிகளாய்
விழுந்திட ஆசை...
உன் உதடின்
கொஞ்சிடும் முத்தங்களாய்
சிந்திட ஆசை...
உன் இதய துடிப்பில்
என் பெயர்
துடித்திட ஆசை...
உன் பாதங்கள்
படைக்கும் பாதைகள்
நானாக ஆசை...
- மூ.முத்துச்செல்வி
வான்மதி கொஞ்சும்
வான்பொழுது
மெல்லிய மூச்சுக்காற்று
வருடும் தருணம்
வானவில் உதடுகள்
நெற்றியில் முத்தமிட
மலர்ந்தது காதல்...
சிறு கோபங்கள்
சிறு சலனங்கள்
இருந்தும் புன்னகைக்கும்
காதல்...
உதட்டில் உருளும்
புன்னகை...
விரிகிறது நாட்களின்
தொடக்கம்...
என்னவன்
அவன்தான்...
மார்கழி குளிரில்
பூத்த மலர்தான்...
- மூ.முத்துச்செல்வி
யாருக்கு வேண்டும் இந்த சுதந்திர தினம்?
யாரிடமும் இல்லை சுதந்திரம்
சுதந்திரம் யாரிடம் உள்ளது
பெண்கொடுமை, வன்கொடுமை
இதிலுள்ள சுதந்திரம்
ஆடம்பரத்திற்கு பிறர்
ஆடைகள் களவுகொள்வதில் சுதந்திரம்
திரையில் இரட்டை வசனத்தில்
சுதந்திரம் -வளரும் தலையும்
உச்சரிப்பதில் சுதந்திரம்
போலிகள் பின் செல்லும்
அரசியலில் சுதந்திரம்
இறைவன் என்ற பெயரில்
இம்சைகளுக்கு சுதந்திரம்
பொருளாதார பதாளத்திற்கு
சுதந்திரம்.
மக்கள் வெள்ளத்தில்
தவிக்கும் போது
இங்கு சுதந்திர தினமும் வேண்டுமோ!
தியாகிகளின் நினைவுதான்
சுதந்திர தினம்
மறுக்கவில்லை
ஆனால் இங்கு
நாங்களே திராணியின்றி இருக்கிறோமே
-மூ.முத்துச்செல்வி
எதிரில் இருக்கும்
எதிரியை எதிர்த்தாய்
உள் இருக்கும்
துரோகியை மறந்தாய்
உன் இறுதியில் அழுதவன்
எதிரியாய் நீ நினத்தவர்கள்தான்
அன்புக்குள்ளவர் என்று நினைத்தவர்கள்
கண்கள் களங்ககூட இல்லையே !!!
ஏன் இந்த துரோகிகளை நம்பி
பொறுப்பை விட்டாய்.....
உன் கண்ணசைவுக்கு
கட்டுப்பட்ட கூட்டம் கொண்ட
அன்பு எங்கே....
ஏமாந்தது நீயா? இல்லை நாங்களா?
புரியவில்லை சொல்லி செல்ல
மறுபிறவி எடுப்பாயா???
எங்களுக்கு அரசியலின் கதை
தெரியாது இருந்தும் - உன்
உடல் கண்டு கலங்கினோம்.....
கடைசி நிமிடமும் இவர்களுடன்
உங்கள் வாழ்க்கை....
-மூ.முத்துச்செல்வி
வெல்ல பாதிப்பில் தவித்த அத்தனை மக்களுக்கும் உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
அகண்ட உலகில்
அடிமையாய் அகபட்டேன்
அவள் விழி சிறையில்..........
முகம் பார்த்ததில்லை
கண்களின் கவிகளை மட்டும்
காதலித்தேன்.......
முகத்திரை அகற்ற மறுப்பவள்
விழித்திரையில்
வீழ்ந்திட்ட என் விழிகள்........
பறந்திடும் கரும் பட்டாம் பூச்சி
வட்டமிடும் அவள் கண்கள்
வசீகர பார்வை........
கண்களில் விழுந்த -என்
காதல் கவிதையில்
காலம் செல்கிறது
ஆதாயம் தேடும் உலகில்
ஆகாரம் இன்றி அலைகிறேன்
அழகிய விழி கொடுத்த கனவில்.......
-மூ.முத்துச்செல்வி
தனிமை தவழ
தனித்திருந்து சிந்திக்கிறேன்...
தனிமையை...
தவிப்பது நான்
உள் துடிப்பது
நீயாக இருப்பதால்...
இடிகளின் இன்னலில்
கிழியும் மேகமாய்
கிழிந்தது உள்ளம்....
பிறக்கின்ற
குழந்தை அழுக்குரலாய்
ஒரமாய் உள்
அழும் மனம்.......
-மூ.முத்துச்செல்வி