பேருந்து காதலன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பேருந்து காதலன்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  10-Oct-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jul-2015
பார்த்தவர்கள்:  193
புள்ளி:  27

என் படைப்புகள்
பேருந்து காதலன் செய்திகள்
பேருந்து காதலன் - பேருந்து காதலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2018 2:36 pm

மழை வரும்போது
மண் வாசம் வருகிறதோ இல்லையே
உன் நினைவுகள் வந்துவிடுகிறது

மேலும்

பேருந்து காதலன் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2017 10:43 am

திருப்பூர் சாமளாபுரத்தில் பெண்கள்தான் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது?

மேலும்

பெண்களும் ரௌத்திரம் பழகுவதை வணங்குவதா? இல்லை அவர்களை ரௌத்திரம் பழக்கச் செய்த எடப்பாடி மக்களுக்கு சேலையை அனுப்புவதா??? யாம் அறியேன் பராபரமே..... 27-Jul-2017 10:06 pm
**அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை.. இதோ.. **கூவத்தூர் விடுதியில் அவர்களே வந்து தங்கியிருக்கிறார்கள்.! **நாங்கள் குதிரை பேரம் பேசவில்லை.! **இடைதேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுக்கவில்லை.! **ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீவிரவாதிகள் புகுந்தனர்.! **ஆட்டோ மற்றும் வாகனங்ளுக்கு போலீஸ் தீ வைக்கவில்லை.! அதைவிட .. **அதிமுக வில் எந்த பிளவுமில்லை....! ஹாஹ்ஹா..ஹ்..ஹா.. சொன்னார்கள்.. இன்னும் சொல்வார்கள்.. சொரணையற்ற மக்கள் வாழும்வரை..! நட்புடன் குமரி 17-Jul-2017 4:22 pm
இரண்டு பேர் சண்டை போட்டால், இவன் அவனையும் அவன் இவனையும் சொல்வது தெரிந்ததுதானே? பெண்கள்தான் முதலில் அடித்தனர் என்று போலீஸ் அறிக்கை கொடுத்திருக்கும். போலீஸ் துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரும் அதையே சொல்கிறார்! போராட்டக் களத்தில் பெண்கள் அடிக்கவும் வாய்ப்புண்டு! 14-Jul-2017 2:14 pm
திருப்பூரில் சமளாபுரம் என்று ஒரு பகுதியே கிடையாது என்று அவர் சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை ஏனா அவன் அரசியல்வாதி 11-Jul-2017 5:43 pm
பேருந்து காதலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2017 5:22 pm

ஆயிரமாயிரம் கோபங்கள்
ஆயிரமாயிரம் வலிகள்
இவை அனைத்தையும் -
உன் ஒற்றை பார்வையால்
சரி செய்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி
நீ விலகி போக
அரை நாள் இன்பம் தொலைத்து
மீண்டும் ஆயிரமாயிரம் கோபங்களுடனும்
ஆயிரமாயிரம் வலிகளுடனும்
நானும் விடைபெறுகிறேன்
உன்னிடமும் உன் காதலிடமும் . . . !

மேலும்

பேருந்து காதலன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
பேருந்து காதலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2017 1:01 pm

ஒரு பொழுதேனும் உன்னுடனே - நான்
உயிராய் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும் மறு பிறப்பினிலும்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன்

நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை
நான் பார்த்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை

மேலும்

பேருந்து காதலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2017 12:53 pm

உன்னை பார்க்கும் முன்பு பரிதவிப்பு
உன்னை பார்த்த பின்பு பரவசம்
எது எப்படியோ நான் நானாக இருக்க போவதில்லை
நீ என்னோடு இருக்கும் வரை.... !

மேலும்

பேருந்து காதலன் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2016 11:39 am

இன்றைய சூழ் நிலையில் இந்திய பிரதமர் மோடி அவர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிக்கை வெளியிட்டது நியமானதா???இல்லை அநியாமானதா???

மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்
00966-509150390

மேலும்

அநியாயம் நிறைந்த நியாயம். அதாவது கள்ளப்பண ஒழிப்பு, கருப்புப்பண ஒழிப்பு, என்ற உயர்ந்த நோக்கங்களோடு.....ஆனால் சரியான முன்னேற்பாடுகள் இல்லாமல் வந்த நியாயம். நான் முன்னேற்பாடுகள் என்று சொலவ்து பாமர மக்களின் அனுதின சிரமத்தை மட்டும் கருத்தில் கொண்டு அல்ல. நல்ல பணம், கருப்பு பண முதலைகளிடம் சென்று குவிந்து விட்ட அவலத்தையும் கருத்தில் கொண்டுதான். உயர்ந்த நோக்குடன் வந்த திட்டத்தின் பலவீனமான பக்கங்கள் தெரிகின்றன. ஆனாலும் ஒரு ஆறுதல். அதிரடி சோதனையில் கிடக்கின்ற தொகையில் பெரும்பான்மை சதவீதம் பழைய நோட்டுக்கள் இருப்பதுதான். முழுமையாக மாற்ற முடியவில்லை என்பதுதான். இத்திட்டத்தின் முழு வெற்றி என்பது பணமில்லா பரிமாற்றம், தங்கத்தின் மீது உச்சவரம்பு, கடுமையான நில உச்சவரம்பு, நில வணிகத்தில் கருப்புப்பண ஒழிப்பு, லஞ்ச, லாவண்ய குற்றங்களுக்கு கடுமையான தண்டனை என அடுத்தடுத்த படிகளை வெற்றிகரமாக கடக்கும் போதுதான் நமக்குத் தெரிய வரும். 11-Dec-2016 4:08 pm
நல்ல திட்டமே. ஆனால் நடைமுறை சிக்கல்களை மனதில் கொள்ளாது செய்துவிட்டார்கள். இதனால் கறுப்புப்பணம் வைத்துள்ள யாரும் சிரமம் அனுபவிக்கவில்லை. ஆனால் சாதாரண பிரஜைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனது எண்ணம்: RBI தலைவராக உள்ள திரு உர்ஜித் படேல் இது போன்ற அதிரடி நடவடிக்கைகளுக்கு பொருத்தமான திறமை இல்லாதவர். மாறாக திரு ரகுராம் ராஜன் அவர்களுக்கு பதவி நீட்டிப்பு கொடுத்து அவரிடம் இந்த பொறுப்பை விட்டிருக்கலாம். அப்போது அவர் மிகவும் திறமையோடு திட்டமிட்டு இதை நல்ல முறையில் நடத்தி இருப்பார் 23-Nov-2016 7:05 pm
நியாயம் அநியாம் அப்படிலாம் இல்லை தப்பு அவங்க பிளான் மொத்தமும் தப்பு எவ்ளோவோ வழி இருக்கு அதையெல்லாம் ஒழுங்கா செஞ்சுருந்த இப்ப மக்கள் இவ்ளோ கஷ்ட படமா இருந்துருப்பாங்க 17-Nov-2016 11:44 am
கண்ணை மூடிக்கொண்டு மோடியை ஆதரிக்கும் அப்பாவி மோடி ஆதரவாளர்களுக்கு முகநூலில் (FACEBOOK) முன்னாள் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு செயலாளர் விடுத்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மோடிக்கு ஆதரவாக விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் அத்தனைபேரும் தலைதெறிக்க ஓடிவிட்டணர். 1) 500கோடிக்கு அதிகமாக கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கருப்புபண முதலைகளின் பெயர்களை இன்றுவரை வெளியிடாமல் அவர்களை தப்பிக்கவைத்துக்கொண்டிருக்கும் மோடியா கருப்புபணத்தை ஒழிக்கப்போகிறார்? 2) BJP ஆட்சியில் ஊழலே நடக்கவிடமாட்டேன் என்று பொய்யான சூளுரை விடுத்து ஆட்சிக்கு வந்தபிறகு நாட்டையே தலைகுனிய வைத்த மத்தியபிரதேச வியாபம் ஊழலில் ஆளும் BJP அரசின் மீது சிறு நடவடிக்கை கூட எடுக்காமல் ஊழல் ஆட்சியை காப்பாற்றிக்கொண்டிருக்கும் மோடியா கறுப்புபணத்தை மீட்பர்? இன்றுவரை ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான செளகான் தான் மத்தியபிரதேச CM. அவர் மீது எந்த நடவடிக்கையும் மோடி எடுக்கவில்லை. 3) RELIANCE அம்பானி இந்திய வங்கிகளை ஏமாற்றி திருப்பி செலுத்தாமல் இருக்கும் ஏறக்குறைய 50,000 கோடிக்கு அதிகமான கறுப்பு பணத்தை மீட்பதற்கு மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்? ஒரு சிறு துறும்பைக்கூட அவர் நகர்த்தவில்லை 3) வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஜெ வழக்கில் பொய்யான கணக்குப்பிழையில் விடுதலை பெற்றது சாமானிய குடிமகனுக்குகூட தெரியும். ஒரு பிரதமர் பொறுப்பில் உள்ளவர் நடுநிலை வகித்து இருக்கவேண்டும். ஆனால் ஜெ விடுதலை பெற்றதற்கு வாழ்த்து வேறு தெரிவித்தார். இவரா கறுப்பு பணம் பதுக்கியவர்களை பிடிப்பார் என்று நம்புகிறீர்கள்? 5) ஆட்சிப்பொறுப்பு ஏற்றவுடன் வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புபணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியகுடிமகனின் வங்கிகணக்கிலும் 15லட்சம் சேர்க்கப்படும் என்றார். சந்தேகம் இருந்தால் BJP ன் தேர்தல் அறிக்கையை படித்துப்பாருங்கள். ஒரு மாதத்தில் கறுப்பு பணத்தை மீட்பேண் என்று கூறிதாண் ஆட்சிக்கு வந்தார். எனக்கு தெரிந்து மோடி ஆட்சிக்கு வந்து 2வருடம் ஆகிறது. ஆனால் மோடிக்கு இன்னும் ஒரு மாதம் ஆகவில்லை போலும். PRESSMEET வைத்தால் பத்திரிக்கையாளர்கள் கேள்வி க்கணைகள் தொடுப்பார்கள் என்பதால் ஆட்சிபொறுப்பேற்று இண்று வரை பத்திரிக்கையாளர்களை சந்திக்க பயந்து ஒளிந்துஓடும் முதல் இந்திய பிரதமர். 6) கறுப்பு பண முதலைகளான மல்லையா ,லலித்மோடி, கல்மாடி etc. . . போன்றோர் சிறையில் இல்லை. அவர்கள் வெளிநாடுகளிலும் பண்ணைவீடுகளிலும் ஏகபோக வாழ்வு வாழ்ந்துகொன்டிருக்கிறார்கள். இவர்களை இண்டர்போல் REDALERT மூலம் 48மணிநேரத்தில் இந்தியா கொண்டுவந்து சிறையில் தள்ளலாம். கறுப்புபண மீட்பர் என்று கூறிக்கொள்பவர் முதலில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். க்ண்டிப்பாக சட்டத்தின் ஓட்டைகளை பயண்படுத்தி இவர்களை மோடிஜி தப்பிக்கவிடுவார் என்பதில் எள்ளளவு கூட சந்தேகம் இல்லை முகநூலில் ஒரு பதிவு. நியாயமான பதிவுதானோ.!!?? 14-Nov-2016 2:53 pm
பேருந்து காதலன் - குமரிப்பையன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2016 4:10 pm

ஒரே இரவில் பணத்தை செல்லாது என்று அறிவித்த அரசுக்கு

ஏன்?

ஒரே நாளில் மதுஒழிப்பு சாத்தியம் இல்லாமல் போனது?.

மேலும்

சிந்திக்க வேண்டிய கருத்து... ஆனால் நம் 'குடி'மகன்களுக்கு இது புரிவதில்லையே!! 13-Dec-2016 1:44 pm
மது ஒழிப்பு அவரவர் வீட்டில் இருந்து ஆரம்பமாக வேண்டும், கருப்புப்பண ஒழிப்பு அரசாங்கத்தில் இருந்து ஆரம்பமாக வேண்டும், இரண்டும் எப்படி ஒன்று????? 27-Nov-2016 10:32 am
செல்லாது என்று அறிவித்தாலும். அதற்கு நிகரான இன்னொரு பணம் கிடைக்கிறது, மது ஒழித்தால் அதற்கு நிகராக வேறு எதை தருவது என்பதே அரசின் திகைப்பு??? மேலும் வீட்டில் உள்ளவர்களே திருத்த முடியாத போது அரசு என்னதான் செய்ய முடியும்????? 27-Nov-2016 10:30 am
ஹாஹ்ஹா,ஹா.ஹ்.ஹா,! யாரும் கைவைக்க மாட்டாங்க..! வச்சா தூக்கி அடிச்சிருமில்லே.. தேர்தல்லே.! 22-Nov-2016 6:41 pm
பேருந்து காதலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2016 5:25 pm

பார்த்து பார்த்து புன்னகை செய்தது - நீ
பைத்தியக்காரன் என்ற பட்டம் மட்டும் - எனக்கு
போங்கடி நீங்களும் உங்க காதலும் . . . !

மேலும்

கூடவே கண்ணீரும் தந்து செல்கிறது 15-Jul-2016 11:43 am
பலரின் மனதில் காதல் காயத்தை மட்டும் தான் கொடுக்கிறது 15-Jul-2016 6:58 am
பேருந்து காதலன் - பேருந்து காதலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2016 9:47 pm

எனக்கென்று பெரிய தேவைகள்
எதுவும் இல்லை
தினம் ஒரு பேருந்து பயணம்
ஐன்னலோர இருக்கை
அருகில் நீ
இது போதும் எனக்கு . . . !

மேலும்

நன்றி அய்யா 17-Apr-2017 12:46 pm
அருமையான வரிகள் தம்பி... இந்த பேருந்தில் தான் பல காதல்களின் பயணங்கள் தொடங்கியிருக்கின்றன... 07-Jan-2017 4:32 pm
இது கிடைத்தாலே போதும் தோழரே 14-Jul-2016 5:05 pm
தோழியின் கருத்துக்கு நன்றி 14-Jul-2016 5:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
சதீஷ் ராம்கி

சதீஷ் ராம்கி

திருவள்ளூர்-ஊத்துக்கோட்ட

இவர் பின்தொடர்பவர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

சதீஷ் ராம்கி

சதீஷ் ராம்கி

திருவள்ளூர்-ஊத்துக்கோட்ட
ராம்

ராம்

காரைக்குடி
மேலே