திருமதி கலைஞானகுமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : திருமதி கலைஞானகுமார் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 29-Jan-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 1063 |
புள்ளி | : 206 |
பாக்களிலிலே ரதியாகிப்
பிறந்தவளே மகளே...
பூக்களெலாம் தோற்கடித்துப்
பூத்தவளே மகளே...!
................... நீ ...................
பூ விரலால் பூமி தொட்டுத்
தவழ்ந்து வரும் போதும் – உன்
பொன் முகத்தால் நீ மலர்ந்து
புன்னகைக்கும் போதும்...
அன்பென்ற ஆறு பூத்து
அள்ளுதடி வெள்ளம் – என்
ஐம்புலனும் ஈறு தாண்டித்
தின்னுதடி வெல்லம் !
==
கீச்சு மொழிப் பேச்செடுத்துக்
கிறங்க வைக்கும் போதும்...
ஈச்சம் பழம் கொட்டுவதாய்
எச்சில் சொட்டும் போதும்...
மின்மினிகள் நெஞ்சுக்குள்ளே
நிரந்தரமாய் தங்கும் – என்
கண்மணியாள் கதைப் படித்தே
காலத்தினைத் தள்ளும் !
==
பஞ்சு விரல் நெஞ்சில் ஏறிக்
கையைக் கட்டி
வாயைப் பொத்தி
கழுத்தை நெரித்தும்...
வல்லுறவுக்காய்
குறி நிமிர்த்தும்
வல்லூறுகள்....
செத்து மடியும்
தேகத்தை தேய்த்து
மோகத்தைப் பீய்ச்சி
முகர்ந்து மொய்க்கும்
விந்துக் கழிவுகள்....!
தங்கையைப் புணர்ந்து
வீடு கடக்கும்
புலாலுண்ணிகள்....
கனவுகளைச் சுமந்து
தெரு கடக்கும் தேவதைகளை
தினவுக்கு இரையாக்கும்
காட்டேரிகள்....
கழிவறை போன்றொரு
கருவறையில்....
கழிவொன்று. கசியவிட்ட
காமக் கழிவுகள்...!
யோனி வழி வெளிவந்த
மனித மிருகங்கள்....!
பெண்ணினமே....
கண்ணியமான
ஆணினமே....
சட்டம்
ஓர் இருட்டறை....
நீ வா
வெளிச்சத்திற்கு....!
தெருவுக்கு வா.
வணக்கம் தோழர்களே....
மீண்டுமொரு புத்தாண்டின் வருகைக்காக காத்திருக்கும் தோழர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்...
வருடாவருடம் அண்ணன் நிலாசூரியனின் அர்ப்பணிப்பிலும் அக்கறையிலும் விளைந்த “தைத்திருநாள் கவிதைத் திருவிழா”வினை இம்முறை ஏற்று நடாத்தும் பொறுப்பினை ஏற்றிருக்கிறேன். பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இயந்திரமாய்ச் சுழலும் உலகில் சொற்ப நேரத்தைக் கூட ஒதுக்கிக் கொள்ள முடியாத சூழலில் நின்று இந்த போட்டியினை நடாத்த தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
போட்டிகளில் தோழர்கள் பலரும் கலந்துக் கொள்வதோடு, சக தோழர்களை இணைத்துக் கொள்ளவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரச்சினைகள
மகளென உறவொன்றுப் பெற்று – யான்
மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டேன் !
அகமெல்லாம் ஆயிரம் கோடி – மின்னல்
அடிப்பதை உணர்வால் பார்க்கிறேன் !
பூக்களில் என்ன அழகிருக்கு ? – சொற்
பாக்களில் என்னடா அழகிருக்கு ?
தேவதை எந்தன் மடியிருக்க – அந்த
தேனிலும் எங்கடா இனிப்பிருக்கு ?
அகத்தின் ஆசையைப் பெருக்கி – இந்த
ஜகத்தினில் திமிராய் நடக்கிறேன் !
முகத்தினில் மீசையை முறுக்கி – நான்
சுகத்தினில் சுழன்றுத் துடிக்கிறேன் !
சொற்களைத் தேடி அலைகிறேன்- புதுச்
சொர்க்கத்தை நேரினில் காண்கிறேன் !
கற்பனைத் தாண்டிய அழகினில் – ஒரு
கவிதையை எழுதிப் பறக்கிறேன் !
தமிழன் பாரதி நினைவுதினம்- இவன்
தரணியில்