Panneerselvam S- கருத்துகள்

நயமான கவிதை பாராட்டுக்கள் . ஒரு கருத்து உடன்பாடில்லை . " பொய்த்த விவசாயத்தால் உணவு தட்டுப்பாடு" உணவு தட்டுப்பாடு வந்தது விவசாயத்தால் அல்ல . காரணம் : சரியான புரிதலின்றி காலந்தோறும் நடக்கும் விவசாயத்தை படிப்படியாக இல்லாமல் ஒரேநேரத்தில் இயற்கை விவசாயம் எனும் ஆர்கானிக் விளைபொருட்கள் வேண்டுமென்று சென்றதில் , ஆர்கானிக் விளைச்சல் வரும் நேரம் பிழையாக கணிதத்தில் வந்த வினை . அதிக விளைச்சல் வர இன்னும் சில வருடங்கள் பிடிக்கும். சீனா தந்த அறிவுரை நவீன விவசாயத்தில் பலிக்கவில்லை . மக்களுக்கு உணவு இறக்குமதி செய்ய பணமில்லை . சொந்த புத்தி இன்றி இலங்கை அகலக்கால் வைத்து அவதியில் மக்களை அரசு தவிக்க விட்டது. விவசாய ஞானிகள் சொன்னதை அரசு ஏற்கவில்லை . எனவே கவிஞரே ... வானமோ மண்ணோ பொய்க்கவில்லை என்று சொல்லும் வரிகள் மாற்றினால் நலம் . உங்கள் கற்பனைக்கு நான் தடை சொல்ல வில்லை.

உங்கள் கவிதை துள்ளி ஓடும் புள்ளி மானாய் விரைந்து செல்கிறது ! வாழ்த்துக்கள் கவிஞரே !!

ஆஹா நல்ல யோசனை ! .. சிலர் நல்ல அழகியாய் மக்களவைக்கு தேர்ந்தெடுங்கள் என்று வோட்டு கேட்டது போதாதா? ..... ம்ம் ..தங்கள் கூற்றுப்படி அவள் புன்னகை கூட்டணியிலிருந்தால் தமிழ்த் தேர்தல் வெல்வது நிச்சயமே ! உங்கள் கவிதை வெற்றி பெற்றுவிட்டது என்று சொல்லவும் வேண்டுமோ !

சரியான கேள்வி ஐயா. அன்று யாரோ ஒரு வந்தேறி தமிழைக் காட்டுமிராண்டி என்று சொல்லி நப்பாசையினால் திராவிடமென்ற வார்த்தையை சுண்டிவிட்டு விளையாட்டை ஆரம்பித்து வைத்தார் . இன்று வரை வோட்டு வாங்கியாய் 'இப்பதம்' சில கட்சியினருக்கு துணை போகிறது . புரிந்து கொள்ளாத சில தமிழர்களை மனம் நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை .

போகப்பொருளாகவே,
மதிப்பிடப்படுகின்றேன் " .... இந்த எண்ணம் தவறு என நினைக்கிறேன் பெண் என்றாலே அழகு என்று பொருள் பட்டு கவிஞனும் சரி காவியத்திலும் சரி வாழ்ந்ததை வாழ்த்தியதை கண்டிருக்கிறோம். பெண்ணை கண்டால் அந்த அழகை அடையவேண்டி மனதில் எழுச்சி இயற்கையே. அதை அன்பு காதல் என காணலாமே என்பது என் அபிப்ராயம் .

மானிடரே உன்னில் ஒரு
பாதி என்று நீ இன்னும் ஏற்காதது உன்மடமை " ..... வைரமாய் இழைக்கப்பட்ட வரிகள் . ஆம் மனிதன் புரிந்துகொண்டான் ... ஆனால் ஏற்க இன்னும் அவன் மனம் இடம் தரவில்லை . எப்படியும் விரைவில் திருந்துவோம். சரிதானே கவிஞரே? அருமையான கவிதை . வாழ்த்துக்கள் .

அனைவருக்கும் உறைக்கும் படி வெகு நேர்த்தியாக சொல்லப்பட்ட கருத்தான கவிதை . வாழ்த்துக்கள் கவிஞரே !

ஆணித்தரமாக உண்மை உரைக்கும் கவிதை. வாழ்த்துக்கள் ஐயா.

வெம்மையின் தாக்கம் கண்டு ... அந்த யுவதியின் கண்களில் வீசும் பார்வையின் குளுமை ..இன்றோ நாளையோ சரி சொல்ல விழைகிறது என்றுதான் படுகிறது. ஐயா !

நிலவாய் ..என்று திருத்தி வாசிக்கவும் .

நிலவை உலவும் பூமலருக்கு வாடும் மலர் ஏன் வேண்டும்? ...வந்தது தங்கள் மனதைப் பறிக்க என்று சொல்லவும் வேண்டுமோ !! .. இனிய கவிதை ஐயா , கவி. கவின் அவர்களே.

நிம்மதியின் ரீங்காரம் ' என்று சொல்லலாமோ !

இளமையான கருப்பொருளை வேண்டாத ஓவியனை .. கவிஞனை இறைவன் படைப்பதே இல்லை .
ஓவியனும் கவிஞனும் மனதில் என்றுமே இளமையாய் இருப்பது இயற்கை தந்த வரம் .
நீங்கள் தீட்டும் கவிதை ஓவியமாய் காவியமாய் வந்திட வாழ்த்துக்கள் . கவி . கவின் சாரலன் அவர்களே.

மூடநம்பிக்கையை அகற்றுகிறேன் என்று இந்து தெய்வங்களை நிந்தித்து பிழைப்பு நடத்தியவர். கண் திறக்கும் உண்மை விசைகள் முத்தான கவிதை வரிகளாய் . வாழ்த்துக்கள் கவி. பழனி ராஜன் ஐயா . .

சான்றோன் செந்தமிழை வல்லின மெல்லின இடையினமாய் பிரித்தான்....,
ஆனால் அந்த ப்ரம்மன் மெல்லிடையாய் உன்னை படைத்தான்...!😻 ஆஹா ..தமிழையும் இனியவளையும் போற்றும் என்ன அற்புதமான வரிகள். பரவசத்தில் ஆழ்த்திவிட்டீர்கள் கவிஞரே .பாராட்டுக்கள் .

வெகு சிறப்பான கவிதை .. பக்தனுக்கே இறைவன் ...நிதர்சன உண்மை .. வாழ்த்துக்கள் கவிஞரே.

மேலான விளக்கத்திற்கு நன்றியும் வணக்கமும் உங்களுக்கு., ஐயா.


Panneerselvam S கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே