Saro Santhaanam- கருத்துகள்
Saro Santhaanam கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [63]
- தருமராசு த பெ முனுசாமி [63]
- Dr.V.K.Kanniappan [27]
- hanisfathima [14]
- M Chermalatha [12]
பெண்மை போற்றும் அழகான கவிதை. அருமை.
நல்ல சாடல்...! நன்று.
அறிவுரை அழகு.
நிலவு இல்லை என்றால் பாடுபொருளுக்கும் தட்டுப்பாடுதான்...!! அருமை.
பணம் வாழ்க்கைக்கு அவசியம். ஆனால்...பணத்தை விட மேலானது உண்மை அன்பு. கவிதை நன்று.
சொல்லை விட செயல் முக்கியம். படைப்பை விட பண்பு முக்கியம். படைப்பு இனிது. பரிசுகள் பல வெல்ல வாழ்த்துக்கள்.
கவிதை ஈர்த்துவிட்டது .அருமை மணியன் சார்.
`ஒவ்வொரு தாயும் தன்னுடைய மகனை
பெண்ணினத்தை மதிக்கவும், போற்றவும்,
உதவும்குணம் கொண்டவனாக வளர்க்க வேண்டும்.` சிறப்பான கட்டுரை.
மாறவேண்டும்...! அருமை.
வறுமையின் பல்வேறு கோணங்களைப் படம் பிடித்த வரிகள் சிறப்பு. இளைஞனின் என்றுதானே வரவேண்டும்..! வாழ்த்துக்கள் ஸ்ரீ .
நிலைமொழியும் வருமொழியும் ஒன்றுபடப் புணர்வதே புணர்ச்சி ஆகும்.
இகர ,ஐகார உயிர்களையும், ய ர ழ ஒற்றுக்களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன்வரும் வல்லினம் வேற்றுமையினும் அல்வழியிலே பண்புத் தொகையிலும் உவமைத் தொகையிலும் மிகுந்து வரும்.
எழுவாய்த் தொடரிலும், உம்மைத் தொகையிலும் மிகாது.
அது மட்டுமன்றி இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும்,ஏழாம் வேற்றுமைத் தொகையிலும் வருமொழி வினையாகுமிடத்து வல்லினம் மிகாது.
உதாரணமாக,
புளி தின்றான்
தமிழ் கற்றான் எனும் (இரண்டாம் வேற்றுமைத் தொகை) புளித் தின்றான் என்று வராது. விரிக்கும்போது புளியைத் தின்றான் என்றே வரும். இங்கு வல்லினம் மிகாது.
அதே போலவே .
ஊர் சென்றான் என்பதில் (ஏழாம் வேற்றுமைத் தொகை) வல்லினம் மிகாது. இயல்பாக வரும் .
அந்த விதிகளின்படி பார்த்தால் நிலை மொழிகளான தாய்மொழி, அவள்விழி என்பதில் இகரமே ஈறாக வந்துள்ளது. வருமொழி வல்லினமாக அமைந்துள்ளது. ஏழாம் வேற்றுமைத் தொகை இங்கு இடம்பெறுவதால் புணர்ச்சியின்றி இயல்பாகவே வரும்.
இது தவறென்றால் ஆதாரத்துடன் நிரூபிக்கலாம். தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட சில விதிகள் நன்னூலில் மாற்றம் அடைந்தன. நன்னூலில் சொல்லப்பட்ட சில விதிகள் பிற்கால இலக்கண நூல்களில் மாற்றங்களைப் பெற்றன. பழையன கழிந்து புதியன புகுவது இயல்பானது என்று இலக்கண ஆசிரியர்களே கூறி உள்ளனர்.
மற்றும் இன்றைய நவீன இலக்கியங்கள் பலவற்றிலும், பத்திரிகைகளிலும் `நேர்காணல்` என்று சொல்லப்படுவது இத்தளத்தில் `நேர்க்காணல்` என்று எழுதப்படுகிறது.
என்னுடைய விளக்கம் இதுதான் நன்றி.
நல்ல கேள்வி. நானறிந்தவரை வாய்மொழி பேசும் , தாய்மொழி கூசும், சிரித்தே கிடக்கும், அவள்விழி கடக்கும் என்பதே சரியானது. புணர்ச்சி விதிகளின்படி பார்த்தால் அதுவே உண்மையும்கூட.
உண்மை....
கவிதை அருமை.
சிந்திக்கவைக்கும் அருமையான படைப்பு. பசியால் கையேந்தும் உயிருக்கு உணவு அளித்திடா இதயம் இருந்தென்ன லாபம்...!?
அவ்வளவுதானா...! பதிலுக்கும், விளக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
அழகான கவி வரிகளால் நெய்தல் அம்மா மனதில் இருக்கிறார். அருமை.
முன்பாதி புரிகிறது. பின்பாதி புரியவில்லை. ஆனால் கவிதை ரசிக்கும்படியாக உள்ளது. சிறப்பு.
தமிழ் மொழிக்கு ஈடேது
அதன் புகழ் பாடிய
கவிதைக்கு நிகரேது .....அருமை.
சரியாய்ச் சொன்னீங்க...அர்த்தமுள்ள வரிகள் சிறப்பு.