சிவநாதன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  சிவநாதன்
இடம்:  யாழ்ப்பாணம் இலங்கை
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Sep-2012
பார்த்தவர்கள்:  3166
புள்ளி:  1519

என் படைப்புகள்
சிவநாதன் செய்திகள்
சிவநாதன் - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2019 12:47 pm

இன்றைக்கு நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ரசம் சாதமும் கத்திரிக்காய் கறியும்.
இன்று அவியல் பண்ணியிருக்க கூடும் என்று நினைத்தேன்.

சுள்ளென்று ஒரு எரிச்சலும் கோபமும் பரவ சாப்பிட்டது போல் பாவனை பண்ணிக்கொண்டு வாசலுக்கு வந்து விட்டேன்.

இன்றைய நிப்டியும், சென்செக்ஸும் இறங்கிக்கொண்டே இருந்தது. கம்ப்யூட்டரை அணைத்து விட்டு சாப்பிட உட்காரும்போதுதான் ரசம் சாதம்.

வாசலில் வெயில். ஒரே வெயில். மத்தியானத்தை யாராவது குத்தி கொன்றால் என்ன என்று வந்தது. வெயில் நறநறவென பல்லை  காட்டிக்கொண்டு இளித்தபடி ஒரே இடத்தில் நின்றது. வெகுவாய் சிலர் சாலையில் நடமாடினர்.

எந்த அலுப்பும் இன்றி யாருக்கோ போனில் பேச

மேலும்

ஆம் .சுஜாதா அதிகம் படிக்கப் பட்டார்.அவர் சலவைக் கணக்கையும் இன்டெரெஸ்ட்டிங் காகப் பார்த்தார்கள்.cataloging சில வரிகளில் நின்று விட வேண்டும் அதற்கப்பால் கதை நகர வேண்டும் . நான் இரண்டு வழிகளில் அடையாளம் காட்டியிருக்கிறேன் . தொடர்ந்தால் இரண்டு கதைகள் எழுதலாம் . "ஒருவனுக்கு கிடைக்கிறது ஒருவனுக்கு கிடைக்கவில்லை. கிடைக்காத ஒன்று மறுக்கப்படுகிறது என்றே நான் கொள்கிறேன்"----ஏன் கிடைக்கிறது ? யோசிக்க வேண்டும் அல்லவா ?முன்னொரு கதைக்கு வேறு முடிவில் சொல்லலாம் என்று சொல்லியிருந்தேன் . சொல்கிறேன். 26-May-2019 3:25 pm
தங்களின் வாசிப்புக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மனமார்ந்த நன்றிகள் 26-May-2019 12:54 pm
ஒரு நாட் பொழுதுக்குள் நடக்கும் சம்பவம் கூட ஒரு தேர்ந்த எழுத்தாளரின் திறமையினால் கதை போலச் சொல்லப்படலாம். உச்சி வெயில் ஒவ்வொரு வரிகளினூடாகவும் உஷ்ணப் பிரம்பெடுத்து கதையோட்டத்தை ஓட ஓட நகர்த்தி மழையில் முடித்து விட்டது.நல்ல நயம். அருமையான நடை ..வாழ்த்துக்கள்!! 26-May-2019 10:34 am
நீங்கள் சொன்ன இந்த இரு உணர்வும் வேண்டியே இந்த கதை நெய்தேன். மிக்க நன்றி. 26-May-2019 10:03 am
சிவநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Oct-2018 8:54 pm

வானம் பற்றி
வாய் கிழியப்
பேசுகிறீர்கள்
வந்து பார்க்க
சாரல்களுக்கு மட்டும்
அனுமதியில்லை
என்று சாளரங்களைச்
சாத்திக் கொண்டால்
வறண்டு போய் விடாதா
உங்கள் வாதம்??

மேலும்

சிவநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Oct-2018 8:36 pm

பேசத்தான்
விரும்பினேன்
அழுதுகொண்டிருக்கிறதே
இந்த அடை மழை
வானத்தை நையப்
புடைத்தவர் யாரோ ??

மேலும்

சிவநாதன் - பிரவீன்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2018 4:05 pm

ஆதி பகவான் என்றால் யார்..?

மேலும்

ஆதி என்பவள் திருவள்ளுவரின் தாய் மற்றும் பகவன் என்பவர் அவரின் தந்தை என எங்கோ படித்த நினைவு 13-Feb-2020 11:52 pm
*"ரசித்தேன்" எனக்கூறியமைக்கு மிக்க நன்றி அண்ணா... நீங்கள் ரசிக்கும் படியாக விளக்கம் தந்தது அதே 22 வயது பெண். *என் படைப்புகள் அத்தனையையும் அழித்தவளாய் இத்தளத்தை விட்டு விலகிப் போகிறேன். *அண்ணாவுக்கு ஒரு மிகப்பெரிய வேண்டுகோள்: யார் மனமாவது புண்பட்டால் மகிழ்ச்சி என்று இன்னொரு முறை கூறிவிடாதீர்கள். ஒரு கலைஞனின் வார்த்தைகள் மற்றவர்களை வாழ வைப்பதாகவே இருக்க வேண்டும். கூறியது தவறாயின் மன்னியுங்கள் அண்ணா. போய் வருகிறேன்.(மன்னிக்கவும்- போகிறேன்.)☺ 08-Oct-2018 10:49 pm
08-Oct-2018 10:42 pm
மிக அருமையான மேற்கோளுடன் அழகிய விளக்கம். படித்து ரசித்தேன். வாழ்த்துக்கள் நண்பரே 08-Oct-2018 7:05 pm
சிவநாதன் - மலர்91 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2018 2:31 pm

சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க இதுவரை பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதற்குச்

சொல்லப்பட்ட ஒரு காரணம் அய்யப்பன் பிரமச்சாரியாம். அதனால் பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகளும்

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுமே ஐயப்பனைத் தரிசிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

அதே கோணத்தில் பார்த்தால் விநாயகப் பெருமானும் ஆஞ்சநேயரும் பிரம்மச்சாரிக் கடவுள்கள் தான்.

ஆனால்

இக்கடவுளர்களின் திருத்தலங்களுக்கு பெண்கள் செல்ல தடையேதும் இல்லை. இதற்கு என்ன காரணம்?

மேலும்

மாதவிடாய் என்ற காரணம் மட்டும் அல்ல...மலைப்பாதை மிக கடினம். குளிர், விலங்குகள் என்ற அச்சம். உணவு உண்ண மறுக்கும் பூச்சாண்டி காட்டி ஊட்டும் முறைதான் இங்கு பெரியோரால் அல்லது பழமைவாதிகளால் சொல்லப்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் திருமணம் ஆகாதவன்...இருப்பினும் குழந்தைத்தனமாக கேட்கிறேன். மாதவிடாய் காலத்தில் கணவன் விருப்பம் கொண்டால் பெண்கள் தாம்பத்யம் அனுமதிப்பரா...அது சாத்தியமா... தொலைக்காட்சியில் வாய் கிழிய பேசிய விவாதங்களை பார்த்தேன். அதில் எத்தனை பெண்கள் இருமுடி கட்டுவார்கள் என்று பார்ப்போம். விரதம் உணவு கட்டுப்பாடு என்று இருந்தால் எந்த ஆண்மகனும் சுக்கிலத்தை அடக்க முடியும். இது 22 வயது பருவ பெண்ணால் முடியுமா? பெண்ணுரிமை பேசுபவர்கள் மழையிலும் வெயிலிலும் கல் உடைக்கும் தார் ரோடு போடும் பீடி சுற்றும் வேலைகளில் இருந்து அபலை பெண்களுக்கு விலக்கு பெறட்டும். பெண்களை பெண்களாக முதலில் ஆக்குவோம். ஐயப்பன் எங்கே போக போகிறார்...பிரார்த்தனைகள் மூளைக்கு ஒரு அலாரம் மட்டுமே. இதில் அரசியல் வந்தால் பின் அனைத்திலும் அரசியல் வரும். பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் முதலில் உச்ச நீதிமன்றம் தரட்டும். பிறகு மத நம்பிக்கைகள் உள்ளே மூக்கை நுழைக்கட்டும். எந்த நாட்டு நீதிபதியும் வானத்தில் இருந்து குதித்தவர் அல்ல. புலி பதுங்குவது பாயத்தான் என்பது பழமொழி. இந்த கருத்து யார் மனதையாவது புண்படுத்தினால் அதற்காக மகிழ்கிறேன். 08-Oct-2018 12:43 pm
*ஒவ்வொரு தலத்திற்கும் ஒவ்வொரு வரலாறு, ஐதீகம், நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஐயப்பன் பிம்மச்சாரி என்பதாலும் 10-50 வயதிற்கு இடைப்பட்ட பெண்கள் மாத விலக்காவதாலும் சிறுமிகளும் மாதவிடாய் நின்ற பெண்களும் இங்கு அனுமதிக்கப்படுவது ஐதீகம். இது வைதீக ஆசாரவாதிகள் ஏற்படுத்திய பொருத்தமற்றவொரு வழிபாட்டு முறையாகவே கருதப்பட்டு வருகிறது. கார்த்திகை 1ம் திகதி மாலையணிந்து, ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருத்தலே நியதி ஆகும். ஆகவே, மாதவிடாய் இடைவெளி 28நாட்களாக இருப்பதால் பூப்பெய்திய பெண்களுக்கு இவ்விரதம் முற்றிலும் பொருத்தமற்றதாகிறது. *பிரம்மச்சாரிக்கும் மாதவிடாய்க்கும் என்ன தொடர்பென ஆராய முற்படினும் ஐதீகம் அதனைத் தடுக்கிறது. வழக்குகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. *மாதவிலக்கான பெண்கள் தூய்மையற்றவர்கள், தீட்டு, அவர்கள் சமைத்த உணவை உண்பது தகாது, அவர்களை தீண்டல் ஆகாது போன்ற பல இறுக்கமான கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகின்றன. அக்குறித்த நாட்களில் பெண்கள் உடல் சோர்வடைவதால் வேலை செய்யாமல் ஓய்வெடுக்க வழிவகுத்த முன்னோர்களின் பண்பானது விலக்காக மாறிப்போன மரபு அபாரமானது. "விலக்கு" என்ற வார்த்தையே பொருத்தமற்றது தான். * விநாயகருக்கு சத்தி, முத்தி என இரு மனைவிகள் இருந்ததாக கூறப்படும் வரலாறும் இருக்கிறது. அனுமன் பிம்மச்சாரி. இவர்களெல்லாம் சித்திரிக்கப்பட்ட கதாபாத்திரங்களாகக்கூட இருக்கலாம். கடவுளாக ஏற்றுக் கொண்டோம், வழிபட்டு வருகின்றோம். மாறாக, இவர்களது பிரம்மச்சாரியத்திற்கும் சபரிமலை ஐதீகத்திற்கும் முடிச்சு போட்டால் அது அவிழ்க்க முடியாததாகவே அமையும். காரணம் அது மரபாகிவிட்டது. பெண்கள் அனுமதிக்கப்படாத இன்னும் பத்து திருத்தலங்களும் இருக்கவே செய்கின்றன. *மாதவிடாயைப் புனிதக்கேடாகக் கருதுவோமெனின் நாம் வாழ்வியலுக்கு பொருத்தமற்றவர்களாவோம். கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், சுவாசிக்கும் மூச்சுக்காற்றிலும் இருப்பாரென்பது உண்மையெனின் பெண்களுக்கு உலகில் வாழ்வதற்கு இடமேது? மாறாக, இறைவன் கோவிலில் மட்டும் தான் இருக்கிறார், அதனால் தான் தூய்மையின்றி செல்லக்கூடாது எனக்கூறிவிடினும் அது தவறாகி விடும். **மாதவிலக்கு தீட்டு என்றால் விந்துப் போக்கும் தீட்டே!!! *இது காலம் காலமாக இரத்தத்தில் ஊறிப்போன கலாசாரமாகிவிட்டதால் இவ்விவாதக் கேள்விக்கு தீர்வு காண்பதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் தேவை. அதற்கும் மேலாக "கடவுள்" என்ற எண்ணக்கருவை உலகம் புரிந்து கொள்வதற்கு அதைவிடப் பலமடங்கு காலம் தேவை. *எனது தனிப்பட்ட கருத்துக்களை சமூகத்திற்கு அறிவிக்க இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி சுருக்கமாக கூறியுள்ளேன். யாரையும் தாக்கிப் பேசவில்லை, யார் மனதையும் புண்படுத்த எண்ணவில்லை. ஒவ்வொருவரது பார்வையிலும் ஒவ்வொரு பாதை. இக்கருத்தை ஏற்க மறுப்பவர்கள் மன்னிக்கவும். 07-Oct-2018 11:42 pm
சரணத்திற்கு விதிகள் உண்டு விதிகளுக்கு பதினெட்டுப் படிகள் உண்டு முடி சுமந்தவனுக்கே அங்கே அருகதை உண்டு முடி நீண்டவர்களுக்கு இல்லை ! ----ஸ்பரிசனின் கருத்தில் சொன்ன கருத்து. உங்கள் கேள்விக்கும் பதில் தந்திருக்கும் என்று நினைக்கிறேன் . கவிச் சகோ சிவநாதன் சுருக்கமாக மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் . இந்துத்தவத்திற்கு மார்தட்டும் நடுவண் அரசு என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் . 06-Oct-2018 10:25 am
ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு ஆகம விதி முறை இருக்கிறது அல்லவா? ஐயப்ப தரிசனம் புனிதமாக மேற்கொள்ள வேண்டியது என்பது எல்லோரும் அறிந்த உண்மை இதில் மாற்றுக் கருத்து இல்லை.. சைவப் பெண்கள் வீட்டிற்கு விலக்கு வந்தால் பூஜை அறைக்கே போவதில்லை பிறகு எப்படி சபரி மலைக்குப் போவது?? கோயிலின் புனிதம் கெட்டு விடும்.. 04-Oct-2018 12:15 am
சிவநாதன் - Bhagyasivakumar அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2018 9:18 am

தத்தெடுப்பது பற்றி கருத்து என்ன? Is adoption of child is good?? ☺️

மேலும்

நல்ல முயற்சிதான் 07-Oct-2018 2:51 pm
அருமையான முயற்சி தான் 28-Sep-2018 1:21 pm
நல்ல முயற்சி.. 23-Sep-2018 10:19 pm
நன்றி... 😁 22-Sep-2018 3:27 pm
சிவநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2018 10:14 pm

உலகம் முழுவதிலும் உள்ள சமுதாயங்களில் தங்களுக்கு மறுக்கப்பட்ட செயல்களைச் செய்வதற்கு பல நூற்றாண்டுகளாக பெண்கள், ஆண்களின் பெயர்களையும் அவர்களின் உடைகளையும் பயன்படுத்த வேண்டியதாய் இருந்தது என்பதை இன்னும் ஒரு புரியாத புதராக நாம் கருத வேண்டியதில்லை. அவ்வாறு செய்வதொன்றுதான், சமூகத்திலுள்ள பல துறைகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வதற்கு உரிய ஒரே வழிமுறையாகவும் அமைந்திருந்தது. இது இலக்கியத்திற்கும் பொருந்தும். அத்தகைய துணிவுடன் செயல்பட்டதால்தான் அவர்கள் உண்மையிலேயே நமது சமுதாயத்தை மாற்றியுள்ளனர். இது போன்ற நடத்தைக்காக அவர்களுக்கு பலமுறை மரணங்களே பரிசாக தரப்பட்டன. எனவேதான் இன்று பெண்களின் வரவானது வாழ்க்கை

மேலும்

சிவநாதன் - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2018 1:35 am

திருப்பூர்.., ஈரோடு.. கோவை மாநகரங்களில் #வாசகசாலை வழங்கும் “ இலக்கிய சந்திப்பு” நிகழ்வுகளின் விபரங்கள்.

அனைவரும் வருக...!

மேலும்

சிவநாதன் - KADAYANALLURAN அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2018 8:27 pm

 

தத்தாத்ரேயர் ஜெயந்தி தினம் இன்று 


     ஸ்ரீபிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள். 

      கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்வரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம வடிவமே என்கின்றன ஞானநூல்கள். 

      படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்களே. இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீதத்தாத்ரேய அவதாரம். மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரஞ்ஜீவியாக போற்றப்படுகிறார்.

       கற்பின் மேன்மை அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. விருப்பம். குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள். இதை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளுக்குக் குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் சொன்னார்கள்.  எப்படியும் இதில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி யாசகம் கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான் அதை ஏற்போம்“, என்றனர். அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதை எனும் குணத்தின் மீதும் அதீத நம்பிக்கை உண்டு.  கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, ‘நான், என் கணவருக்கு செய்யும் பணிவிடை சத்தியம் எனில், , இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்’ எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள். உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளானார்கள். தனக்கு பால் சுரக்கட்டும் என அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.   

     தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். நடந்ததைக் கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், உங்கள் கணவன்மார் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும் என்றார் அத்திரி மகரிஷி.  உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான் என்று கூறி மறைந்தனர். 

     இவரது பிறிதொரு பெயர் ஆத்ரேயர், (அதாவது அத்த்ரியின் புதல்வர்). ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்து அழைக்கப்படுகிறார்!

      தத்தாத்ரேயர் அவதாரம் நடந்த தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது. தாணுமாலயனாக இங்கே இறைவன் இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் குரு மூர்த்தி என்றாலேயே அது தத்தரைக் குறிக்கிறது. பிரயாகையில் இவரது கோயில் அமைந்துள்ளது. கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி என கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை, வேளச்சேரியில் தத்தாத்ரேயர் கோவில் அமைந்துள்ளது. தத்தாத்ரேயர் பிரதானமாக விளங்குவது இவ்வாலயத்தில் மட்டுமே. பக்தர்கள் கேட்டதைக் கொடுக்கும் ஜகன்மாதா மஹாலஷ்மி அனகாதேவியாக அவருடன் உறைகிறார். மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி நாளன்று பிரதான அனகாஷ்மமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அஷ்டமா சித்திகளையும் பிள்ளைகளாகப் பெற்ற அனகா தத்தரை வழிபடுவதே அனகாஷ்டமி விரதமாகும். சகல சௌபாக்கியங்களையும் அளிக்கக்கூடியது இந்த விரதம் பிரதி மாதம் ஆசிரம ஆலயத்தில் நடத்தப்படுகிறது. ஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே நம் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் என்கின்றனர்  பக்தர்கள் . இவரை  முறையாக  உபாஸித்து வணங்கித் தொழுதால், ஞானமும் யோகமும் கைகூடும் மனோதிடமும் பெருகும் என்பது நம்பிக்கை. தத்தாத்ரேயர் ஜெயந்தியான இன்று  தத்தாத்ரேயரை வழிபட்டு நலன்கள் பல பெறுவோம்.    

 ==கடையநல்லூரான்      

மேலும்

தத்தாத்ரேயரின் கதை சொல்லும் சிறப்பான பதிவு . குருவின் திருவடி சரணம் . வாழ்த்துக்கள். 11-May-2018 8:24 am
சிவநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-May-2018 12:32 am

கௌதமைக்குத் தன் குழந்தைமேல் அளவு கடந்த அன்பு உண்டு. இரண்டு வயதுள்ள அக்குழந்தையின் சிரிப்பும் களிப்பும் அவளுக்கு மகிழ்ச்சியை ஊட்டின. அதன் ஓட்டமும் ஆட்டமும் அவளுக்குப் பெருங்களிப்பை யுண்டாக்கின. அதனுடைய மழலைப் பேச்சு அவள் காதுகளுக்கு இனிய விருந்து. களங்கமற்ற அக்குழந்தை யின் இனிய முகம் அவள் கண்களுக்கு ஆனந்தக் காட்சி. அந்தக் குழந்தைதான் அவளுக்கு நிறைந்த செல்வம். அதற்குப் பால் ஊட்டு வதில் பேரானந்தம். அக்குழந்தையை அவள் கண்மணிபோல் கருதிச் சீராட்டிப் பாராட்டி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்த்து வந்தாள்.

மற்றக் குழந்தைகளுடன் தன் குழந்தையையும் விளையாட விட்டு மகிழ்வாள். நாய், பூனை, காக்கை, க

மேலும்

சிவநாதன் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2018 9:37 pm

  இரண்டு முறை நீதிமன்றம் எச்சரித்தும் இன்னும் இந்த காவல்துறை S V சேகரை கைது செய்து சிறையில் அடைக்கவில்லை பின்ணணி காரணம் என்ன ???????  

மேலும்

தங்கள் ஆதங்கம் நியாயமானது ..விவாதிக்கப்பட வேண்டிய விடயம்!! கேள்வி பதில் பகுதியில் பதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் 11-May-2018 12:01 am
சிவநாதன் - சிவநாதன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2018 7:50 pm

ஆண்டாள் சர்ச்சை குறித்து கோவை ஞானி, முதுபெரும் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன், இலக்குவனார் திருவள்ளுவன், கவிஞர் ஜெயபாஸ்கரன், சென்னிமலை தண்டபாணி போன்ற பெருமக்களின் கருத்துகள் அடங்கிய என் கட்டுரை, இன்றைய நக்கீரனில்.... வாய்ப்புள்ளோர் வாசிக்கலாம்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (158)

user photo

இரா இராஜசேகர்

வீரசிகாமணி , சங்கரன்கோவில
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
user photo

சுவாஸ்

nagercoil
அருண்

அருண்

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (158)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (160)

தாரகை

தாரகை

தமிழ் நாடு
user photo

nuskymim

kattankudy

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே