GANESH K - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  GANESH K
இடம்:  Chennai
பிறந்த தேதி :  13-Sep-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2013
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  20

என்னைப் பற்றி...

எப்போதாவது ஏதோ கிறுக்குவேன், மற்றபடி ஒரு சராசரி இயந்திர வாழ்வில் சுழன்றுகொண்டு தான் இருக்கிறேன். என் கிறுக்கல்களுக்கு அர்த்தம் அறிய ஆவலோடு உள்ளேன் எப்போதும்.

என் படைப்புகள்
GANESH K செய்திகள்
GANESH K - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2016 1:18 pm

என் மடிக்கணினியின் ஒளித்திரையில்,
ஓர் சிற்றெறும்பு சுதந்திரமாய்
அங்கும் இங்கும் அலைகிறது,
நான் என் சுட்டியை கொண்டு,
அதனோடயே நகர்த்தினேன்,
எறும்பும் என் சுட்டியும்
சேர்ந்தே அலைந்தோம்,
ஒரு கட்டத்தில் நான் அதற்கு
வழிக்காட்டியாக எண்ணி கொண்டு,
அது திரையில் இருந்து வெளியேறும் வழியை
சுட்டியின் மூலம் காட்டினேன்,
அது வெளியேறுவதாக இல்லை, சுட்டியில் முட்டிமோதி திணறியது
இறுதியில் நான் என் சுட்டியை அசையாது நிறுத்தினேன்,
எறும்பதன் வழி கண்டு திரையில் இருந்து வெளியேறியது,
நான் என் வேலையை கவனித்தேன்!

மேலும்

உண்மைதான்.உயிர்கள் மேல் நேசம் வைத்தால் மனதில் மனிதம் பிறக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Jul-2016 6:28 am
அருமை தோழரே !!! 14-Jul-2016 1:21 pm
GANESH K - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2016 4:16 pm

சுடராய் நின்றாய்,
அணைத்திட துணிந்தேன்,
எது சுடுகிறது?
நீ நெருப்பென்ற மெய்யா?
அல்லது,
வெறும் நிழலென்ற பொய்யா?

மேலும்

இரண்டும் இனி மெல்லச் சிரிக்கும் ஆனால் ரசித்தால் மட்டும் வலிக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Jul-2016 5:35 am
GANESH K - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2016 11:59 am

ஈரம் உலர்ந்ததும் வெய்யிலை
மறக்கும் ஆடைக்கே,
வாழ்நாள் அதிகம்!!!

மேலும்

ஒன்றோடு ஒன்றியதாக வாழும் போதே சிக்கனம் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Jul-2016 6:01 pm
GANESH K - GANESH K அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2016 8:22 pm

மின்சாரம் போன இருளொயில்,
என் இடக்காலின் இரண்டாம் விரலில்
சுருக்கென்ற ஓர் உணர்வு,
உன் மேலான என் முதல் விரல் தீண்டல்
நினைவு வந்தது,
விளக்கு வந்தது,
என் கால்கள் செயலிழந்தது,
உடல் முழுதும் விஷம் ஏறியது,
கட்டிலின் அடைப்புக்குள்
மெல்ல நகர்ந்தது ஒரு தேள்!!!...

மேலும்

உணர்வுகள் காதலுக்கு கை கொடுக்கும் 13-Jul-2016 5:55 am
GANESH K - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2016 8:23 pm

மழை இரவில் ஒரு கனவு,
சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம்,
இருள் கவியும் நேரமாக இருக்க கூடும்,
முழுதாக முறுக்கியும்,
நடக்கும் வேகத்தில் என் இருசக்கர வாகனம் ஊர்கிறது,
எனக்கு முன்னே 16 சக்கரங்களோடு ஒரு ராட்சத வாகனம்,
இடதும் வலதுமாக நிலை தடுமாறி செல்கிறது,
அநேகமாக சென்னையில் நானும் அந்த தடுமாறும் ராட்சதனும் தான்,
பக்க சுவரை இடித்து நின்றது, என் இருசக்கரமும் நின்றது,
ஒரு சக்கர நாற்காலியில் கைலியும், முண்டா பணியனுமாக
மனிதன் ஒருவன் என்னை பார்த்து சிரித்துவிட்டு
கைகளால் அவன் சக்கர நாற்காலியை நகர்த்தி நகர்ந்தான்,
அந்த மனிதன் தான் அந்த ராட்சத வாகனத்தை ஓட்டி வந்தவனாக இருக்க வேண்டும்!

மேலும்

காலம் நேரமும் சரியாகத்தான் சுழல்கிறது! மனிதன் மனம்தான் மாறிவிட்டது என்பது என் கருத்து! 15-Jul-2016 10:19 pm
நேரும் காட்ச்சிகள் ஒரே சாயல் கொண்டவை ஆனால் காலம் தான் மாறிக் கொண்டிருக்கிறது 13-Jul-2016 5:58 am
GANESH K - GANESH K அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2014 6:49 pm

நடந்து கொண்டே இருக்கிறேன்,

சிலநேரம் ஓடவும் செய்கிறேன்,

பசும்புல் போர்த்திய ஒற்றையடிப்பாதை,

பாதங்கள் ரத்தமாய் இருக்கிறது,

புல்லின் வேர் முள்ளாக இருக்கமுடியுமா?!

இந்த சந்தேகம் என் ஓட்டத்தை

நிறுத்தவில்லை, ஓடிகொண்டே இருக்கிறேன்.

மேலும்

நன்றி நண்பரே. 15-Jan-2014 12:41 pm
தோல்விஎனும் முட்களின் மேல் ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள்..! வெற்றியை பிடிக்க..! நிச்சயம் அடைவீர்கள்..! 14-Jan-2014 5:26 pm
GANESH K அளித்த கேள்வியில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Jan-2014 10:23 pm

போதும் என்ற எண்ணம் மனதில் எப்போது வரும் ?

மேலும்

போதும் என்ற எண்ணம் வந்துவிட்டால் நாம் அனைவரும் புத்தர் ஆகிவிடுவோம் :) 11-Jan-2014 8:43 pm
உலக வாழ்க்கையின் உண்மையை உணரும்போது ............ 11-Jan-2014 10:37 am
நன்றி மலர் 08-Jan-2014 4:41 pm
அளவீடு என்பது அவரவர் கல்வி, பண்பு ஆகியவற்றைப் பொறுத்து. கல்வி நிலையங்களில் பயின்று சான்றிதழ் பெற்ற அனைவரையும் கற்றவர்களாக எடுத்துக் கொள்ளமுடியாது. பண்படுத்தாத கல்வி பணம் சம்பாதிக்கத் தான் உதவும். அதனால் ச்முதாயத்திற்குப் பயனில்லை 08-Jan-2014 4:37 pm
GANESH K - கனகரத்தினம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jan-2014 7:49 pm

சொந்தங்கள் சேரும் போது யாருக்கு யார் தலைமை

மேலும்

இப்போ எல்லாம் யார் யார் பேச்சையும் கேகுறதில்ல ..எல்லாம் மாறி விட்டது 04-Jan-2014 10:16 pm
சொந்தத்திற்கு பலமே தலைமை இல்லாமல் இருப்பதுதான் ....... 04-Jan-2014 9:58 pm
பந்தங்களுக்குள் எதுக்கு அய்யா , பதவி ??? இருப்பது அவசியம் எனில் அது அன்பாக மட்டுமே இருக்க வேண்டும் !!! வேண்டுமானால் , சகிப்பு தன்மை , விட்டுகொடுத்தல் , பலன் எதிர் பாரா பரிவு என்பதெல்லாம் .... தொண்டர்கள் எனலாம் :) 04-Jan-2014 1:22 pm
உறவுக்கு அன்பு தலைமை... அம்புட்டுதான்......!!!! அன்பில் சின்ன அன்பு , , பெரிய அன்பு ,அனுபவ அன்பு அனுபவமற்ற அன்பு ......என்றெல்லாம் கிடையாதே...!!! 04-Jan-2014 11:59 am
lakshmi777 அளித்த கேள்வியில் (public) பழனி குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Jan-2014 7:51 pm

பட்டாம்பூச்சி என்றால் உங்கள் நினைவுக்கு வருவது

மேலும்

வண்ணங்களின் ராணி.... நான் சிறுவயதில் பார்த்தேன் பட்டாம்பூச்சி ஆனால் இன்று அவை எல்லாம் மறைந்து பட்டுபோன பூச்சியாக காணப்படுகிறது...காரணம் மனிதன்... 24-Jan-2016 2:40 pm
வண்ணங்கள் பேசும் சந்தோசத்தின் உச்சகட்டம். 19-Dec-2014 12:29 pm
பட்டாம் பூச்சியின் வாழ்க்கை வட்டம் எம் வாழ்வின் உண்மை நிலை உணர்த்தும்..இதனை புழுவாய்க்காணும்போது அருவருக்கத் தோன்றும்.அது முழுமைபெறும்போது எமை மறந்து தொட்டணைக்கத் தோன்றும்.வாழ்வில் ஒரு கட்டத்தில் வெறுத்த சில விடயங்கள் ஒரு கட்டத்தில் அளவில்லா பிடிப்பைத் தருவதில்​லையா?எனக்கு இதனைக் காணும்போதெல்லாம் வாழ்க்கைத்தத்துவமே ஞாபகம் வரும்!!! 29-Jan-2014 6:41 am
சிந்தனைச்சிறகில் வண்ண வண்ண நினைவுகள் ஒட்டிக்கொள்ளும். 29-Jan-2014 2:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

மகேந்திரன்

மகேந்திரன்

திருநெல்வேலி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (17)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
nilamagal

nilamagal

tamil nadu
தமாசரத்குமார்

தமாசரத்குமார்

உசிலம்பட்டி

இவரை பின்தொடர்பவர்கள் (17)

கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
மேலே