தேவிராஜ்கமல் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தேவிராஜ்கமல்
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  03-Jul-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Dec-2010
பார்த்தவர்கள்:  1695
புள்ளி:  270

என்னைப் பற்றி...

வாழ்கை வாழ்வதற்கே..வாழ்வது வாழவைப்பதற்கே..!!!

என் படைப்புகள்
தேவிராஜ்கமல் செய்திகள்
தேவிராஜ்கமல் - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2024 11:26 am

#அப்பா என்றழைக்கிறது கவிதை..!

கவிதைக்குக் கரு கேட்டேன்
எடுத்துக்கொள் என்றாள்..!

எடுத்தேன்… கொடுத்தாள்
கொடுத்தேன்… எடுத்தாள்..!

கைகால் முளைத்தது
அவளை முட்டி உதைத்தது...
என்னை அப்பா என்றழைக்கிறது
இப்போது கவிதை..!..

#சொ. சாந்தி

மேலும்

ஆஹா !!!! வியந்தேன் ! உண்மையில் மிகசிறந்த படைப்பு ..., நான் இரசித்த இன்றய மிகசிறந்த கவிதை இது வாழ்த்துக்கள் கைகால் முளைத்தது அவளை முட்டி உதைத்தது... என்னை அப்பா என்றழைக்கிறது இப்போது கவிதை..!. அருமையான வரிகள் இது போன்று நிறைய கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள் 26-Jul-2024 11:11 pm
தேவிராஜ்கமல் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2024 6:31 pm

இதயத்தின்
அருகினில்
இடைவிடாது
துடிக்கும்
இன்னொரு
இதயம்!

மேலும்

தேவிராஜ்கமல் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2021 5:54 pm

எலும்புகள் இல்லா
இதயம் தான்...
ஆனால் ஏனோ...
காயப்படும் போதெல்லாம்
நொறுங்கித்தான் போகிறது...!

மேலும்

தேவிராஜ்கமல் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2021 1:37 pm

என் மனம்
செயலிழக்கும்
போதெல்லாம்...
அதனை
புதுப்பித்துக்கொள்ள
உதவும்
மந்திரச் சாவி...
உந்தன் மாயக் கண்கள்!

மேலும்

தேவிராஜ்கமல் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2021 4:24 am

இயக்கம்
இல்லையென்றால்
இறந்தேன்
என்றாகிவிடுமா?
புரிந்துகொள் ஆருயிரே
நீ என்னருகில்
இல்லையென்று!

மேலும்

தேவிராஜ்கமல் - தேவிராஜ்கமல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2021 9:18 am

என்னை நேசிக்க...
என்னைப் புரிந்துகொள்ள...
எனக்காக துடிக்க...
ஓர் உயிர் போதும்...
அது நீயாக வேண்டும்...!

மேலும்

நன்றி தம்பி... 05-Apr-2021 12:34 am
அருமையான கவிதை அக்கா. 04-Apr-2021 11:11 am
தேவிராஜ்கமல் - தேவிராஜ்கமல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2021 9:31 am

பலமுறை காதலில்
விழுந்திருக்கிறேன்...
அது...
ஒவ்வொரு முறையும்
உன்னுடன் மட்டுமே...!

மேலும்

நன்றி சகோதரர் விஜய்... 25-Apr-2021 8:29 am
அழகு... 21-Apr-2021 1:32 pm
நன்றி தம்பி... 05-Apr-2021 12:32 am
அருமை 04-Apr-2021 11:14 am
தேவிராஜ்கமல் - தேவிராஜ்கமல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2020 2:21 pm

நரைத் தோன்றி
திரை விழுந்து
மூப்பில் கரைந்து
முதுமகன் ஒருவன்
அருகன் வேண்டி
விழிநீர் வழிய
தனிமை உண்டு
காற்றுக் குடிக்கும்
தாவரமென
பருக்கைகள்
உண்டீரோயென
வினவ நாதியற்று
ஈர நெஞ்சம் அதனை
கனக்கச் செய்தல்
நியாயமாகுமோ
மூப்பெய்தும் தானே
உமக்கும்
அறிய மாட்டீரோ
இளமை யவருக்கும்
நிரந்தரமில்லை
உணர்ந்துக் கொண்டு
முதுமையைப் போற்றிட
வாரீரோ மானுடரே!

மேலும்

நன்றி தம்பி. நான் நலமா இருக்கிறேன். நீங்க நலமா? 16-Feb-2020 5:36 pm
அருமை அக்கா. நீங்கள் நலமா? 15-Feb-2020 9:09 pm
தேவிராஜ்கமல் - வருண் மகிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2018 3:03 pm

இவன்
புறத்தில் அழுக்கன் ...
அகத்தில் அளப்பறியா அழகன்...

இவன்
நோய் தொற்று என்று
தன் பணிக்கு விரதமிருந்ததில்லை ..

இவன்
நாற்றத்தையே சுவாசமாய் ஏற்பவன் ...
குப்பைகளே கூடாரமாய் .கொண்டவன்...
எச்சத்தையே சுற்றி வாழ்பவன்...
மிச்சத்தை உண்டு மறைபவன்...

இவன்
நம் எச்சத்தின் மிச்சத்தை
நம் இச்சையின் பிச்சையை
மனமுவந்து மருந்து தெளித்து
நறுமணம் நல்க செய்பவன்..!

மூக்கை மூடி கடக்குறோம் நாங்க
முங்கி அதுலே கிடக்குற நீங்க...

துப்புக் கெட்டு துப்புறது நாங்க
கைய விட்டு கிட்டு அள்ளுறது நீங்க...

கழிவறைனு சொல்லவே கூச்சம்...
சாக்கடை சொல்ல சங்கோஜம்...
நம் மலத்தை நாமே வெறு

மேலும்

நன்றி .. பிரியா .. 16-Sep-2018 9:32 pm
நன்றி ..தோழி .. 16-Sep-2018 9:31 pm
"கழிவறைனு சொல்லவே கூச்சம்... சாக்கடை சொல்ல சங்கோஜம்... நம் மலத்தை நாமே வெறுக்க... சம்மதத்துடன் சமத்துவம் காப்பவன் ..!! ழிவறைனு சொல்லவே கூச்சம்... சாக்கடை சொல்ல சங்கோஜம்... நம் மலத்தை நாமே வெறுக்க... சம்மதத்துடன் சமத்துவம் காப்பவன் ..!! " அருமை மிகவும் அருமை...என் குழந்தைகள் கூட துப்புரவு தொழிலாளியை கண்டால் வணக்கம் தெரிவித்து செல்வார்கள். அவர்களும் நம்மை போல சக மனிதர்கள் தான் என நம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். 16-Sep-2018 9:21 pm
Arumaiyana varigal....nijamana edhratham... 16-Sep-2018 3:34 pm
தேவிராஜ்கமல் - தேவிராஜ்கமல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2018 6:16 pm

உன்னில் என்னை
தொலைத்தத் தருணம்...
என்றுமே
மீளக்கூடாதத் தருணமாய்!

மேலும்

நன்றி தோழி.... 09-Apr-2018 12:41 pm
Nice 07-Apr-2018 5:57 pm
நன்றி ஐயா.. 07-Apr-2018 3:05 pm
அருமை... 07-Apr-2018 2:46 pm
தேவிராஜ்கமல் - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2018 7:40 pm

காண்கையில்
கவிழ்ந்த இமைகள்
திறந்தன மனதை.
நீண்ட யூகங்களின்
மகரந்தம் சுழன்றன
மௌனத்தில் மோதி.
பிறவிமுள் களைய
காந்தர்வ ஸ்நேகிதம்
ஒற்றிக்கொண்ட கண்களில்
ஸ்வாசித்தன அன்பினை.
வெட்கத்தின் கனவை
மொழிபெயர்த்த காதல்
மெல்லச்சிரித்தது
உன் கொலுசொலிகளில்.
ஒரு தருணத்தில்
சூடியிருந்த உன்
ஒளி கலவிய பூக்கள்
சாலையில் நழுவின
பயிர்ப்பின் உச்சத்தில்.
புன்னகையின் ஈரம்
நரம்புகளில் அதிர்ந்தது
காதலின் நறுமணமாய்.
பார்வைக்கப்பால் சென்றாலும்
வந்தவண்ணமாய் வருகிறாய்
தூரலில் திரண்டு
பூவில் கவிந்த பனியென.

மேலும்

மிக்க நன்றி... நான் எந்த பெண்ணையும் காதலித்தது இல்லை...இன்னும் சொன்னால் காதலுக்கு நான் எதிரி என்றால் நம்புவீர்களா? 06-Apr-2018 6:09 pm
அருமையான கவி ஐயா..காதல் எவ்வளவு அழுகு என்றால் இவ்வளவு அழகாய் கவி மலரும். 06-Apr-2018 5:59 pm
மிக்க நன்றிகள் நண்பரே...உங்கள் விமரிசனம் கூட வலு சேர்க்கும் எனக்கு...இருப்பின் பகிருங்கள்... 02-Apr-2018 4:19 pm
அருமையான கவி அவள் மேல் காதல் கவியில் தெரிகிறது அழகான கோர்வை உங்கள் சிந்தனை 02-Apr-2018 7:14 am
தேவிராஜ்கமல் - தேவிராஜ்கமல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2010 2:19 am

புரிந்துகொள்ளுதல்
மட்டும்
வாழ்க்கையாகி விட்டால்..
வாழ்வதைக்காடிலும்
இன்பம்
வேறேதும் இல்லை...!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]

இவர் பின்தொடர்பவர்கள் (29)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (29)

poet vamshi

poet vamshi

srilanka
கவிஜி

கவிஜி

COIMBATORE
user photo

ரஞ்ஜினி

மலேசியா
மேலே