பவானி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பவானி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 187 |
புள்ளி | : 23 |
இயற்கை என்பது இறைவனடா -அதன்
செயற்கை என்பது அறிவியலடா !
அறிவியல் ஆரம்பம் அறிவினிலடா!
அறிவிழந்து கிடப்பதேனடா ?
இயற்கையின் ஓர் அங்கம் அறிவியல் !
அறிவோம் நாமும் நம் அறிவினில் !
இயற்கை வளம்பெற ஆக்கம் செய்வோம் !
உலக மனங்களும் ஊக்கம் பெறுவோம் !!
மனிதா !மனிதா !பணமா பெரிது !
மனிதா !மனிதா !மணி தாவென்றால்
மண்ணில் மழைத்துளி விழுமா ?
உன்னில் உயிர் தான் வாழுமா ?
அகிலத்தின் காட்சியை காணும்
கண்ணும் பார்வைக்கு பணம்கேட்டால்
மண்ணும் பொன்னும் தந்தாலும் போதாது!
மறந்து போனாயோ ?இல்லை மரத்து போனாயோ ?!!
மனிதம் தொலைத்த மனிதா
உனக்கு பிடித்ததென்ன மதமா ?
இயற்கையழித்து பணமாக்கி-உன்
இற
செல்லு மிடமெல்லாம் சீர் தமிழாக
வெல்லு மென்றெண்ணி இசைப்போம் யாப்பு !
சொல்லும் சொல்லாய் நின்றால் ஓங்காது
எண்ணம் எழுத்தானால் நிறையும்...!
என்னுள் விழுந்த யாப்பு விதை
மண்ணுள் போகும் முன்னே விழிக்கும்
உன்னுள் நுழைந்து ஓங்கி உயர்ந்தால்
தன்னால் செழிக்கும் தமிழ் !
விண்ணில் ஒளிரும் கோள் போல்
மண்ணில் முதன்மையாய் வாசம் வீசட்டும்!
நம்மில் வேற்றுமை நீக்கி வேரருத்தால் !
மின்னும் பொன்னாய் மலரும் !
யாவரு முறங்கினாலு முறங்கா தியங்கியே
இருக்குமா மிணைய தளம் .
(குறிப்பு :புது முயற்சி பிழையிருப்பின் சுட்டுக )
நிலவென சொன்னால் ஒளி வீசுமா?!!
நிழல் கண்டு திகைத்தால் உயிர் மீளுமா?!!
துணிவோடு நின்றால் துளிநீராம் கடல்
தன்னம்பிக்கை கொண்டால் வானமுன் மடியில் !
முதுகெலும்பற்ற மண்புழு மண்ணில் துளை போட
ஆயுதமற்ற எலிகள் வலை போட
கால்தடமதில் மிதிபடும் எறும்பூறி கல் தேய
எல்லாமிருந்தும் ஏன்? உன்னால் முடியாது மனிதா!
முயற்சியெனும் விழுது பற்றி முன்னேற பாரு!
வரும் இகழ்ச்சிதனை பாதையாய் மாற்று!
புகழ்ச்சி கண்டு நீயும் மயங்கிட வேண்டா!
இலட்சியம் தொடும் வரை எந்த இச்சையும் வேண்டா!
பயிற்சிதனை பாலமாயாக்கி முயற்சியதை கூட்டு
அனுபவமதை ஆழ விதைத்து நல்நட்பதனை பெருக்கு
கடந்த பாதையை எண்ணிஇலட்சிய பாதையை வகுத்
தொடர்வண்டி ஓட்டத்திலே
தொங்கிக்கொண்டு போறேனானே
போகிற போக்கிலதான்
எட்டி எட்டி பார்க்கிறேன்...!
எத்தனை பெட்டியென்று
என்னி எண்ணி பார்க்கிறேன்!
இத்தனை பெட்டியையும்
இழுத்து செல்லும் இஞ்சின் நிலை என்னவாகும்?!!
இயந்திரம் தான் இஞ்சினென நானறிவேன்!
இருந்தாலும் எனக்குள்ளே இருதயம் துடிக்கிறதே!
நெருப்பாக இஞ்சின் தகதகிக்க பின்னாலே
ஏசியில பலர் குளுகுளுன்னு இலவசமா பயணிக்க...!
மாண்புமிகு மந்திரியும் ஓசியில குந்திக்கொண்டு
மக்கள்பணி செய்யசொல்லி இலவசமா தந்த இடத்தில்
மனையாளில்லா மகளிரோடு களப்பணியில் மூழ்கிடவே
மக்களோடு மக்களாக மானம்கெட்டு போறாரே!!
காசுகொடுத்து பயணிக்கும் உழ
நாதியற்ற சாதியடா
நாம் தமிழனென்பது பாதியடா!
கூடி கூடி குலாவி மகிழ்ந்தே பின்
குழிபறிக்கும் புத்தியடா...!
வீதியெங்கும் இரக்கம் காட்டி
வீடிழந்து நிற்குமடா...!
பிற தேசத்தவர்க்கு பரிவு காட்டி
பின் புண்ணாகும் பின்புத்தி தமிழனடா!!
தானும் வாழாமல் தமிழை
தழைத்தோங்க செய்யாமல்
தமிழனுக்கு எதிராகி
தலை தொங்கி நிற்போமடா !!
பிறர்க்கென்றால் முன் நிற்கும்
தமக்கென்றால் பின் செல்லும்
தனக்கென்ற தனி சிந்தையற்ற
குறை சாதி கூட்டமடா ...!!
பிறர் துதி பாடி பாடி
பின்னாலே சென்று சென்று
பல்லாக்கு தூக்கி தூக்கி
கூனுலுந்த கிழவனடா !!
பிறருக்கு இழப்பென்றால்
தன் வீட்டையும் விற்று
எத்தனையோ புத்தனுங்க பொறந்துமிங்கு
போதிமரம் மட்டுமிப்போ மிச்சமில்லை!
அச்சமெனும் போர்வையை போர்த்தி போர்த்தி
துச்சமென மாதர் மானம் போகுதிங்கே !
சாதி தீ மூட்டி மூட்டி பலர்
காம தீயில் குளிர் காய்ந்திருக்க
சக மனிதனென மறந்துமிங்கு
அநீதியும் தான் அதிகமாச்சு !
வக்கனையா வாய் கிழிய பேசி பேசி
வாங்கி போறான் கைநிறைய காசு ! காசு !!
வாழ்வாதாரம் வறுமையாகி வளமைகுன்றி
வாரணாசியிலும் யாசி கேட்க ...!
பாசி பிடித்த மதத்தை தூர்வார
பாசிச கொள்கை கடைபிடித்தாலும் பரவாயில்லை
நாசிக்கு சுவாசிக்க தூய்மை காற்றில்லை
தீண்டலில் என்ன சுத்தம் தேடுறாய் ?
உறுப்பு தானம் பெறும்போதும்
குருதி தான
நாம் பிறந்த மண்ணு தாய் போலடா
பிறந்தபின்னே மறு பிறவி அறிந்ததாரடா !
இருந்த பூமி வறண்டு கிடக்க
நாம் அறிந்த படிப்பு வீண்தானடா!
பறந்து பறந்து பல மொழியில் பயிலுவோம்
இருண்ட மனதில் அறிவியல் புதையலாகுவோம் !
விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற்று நம்மண்ணில் வந்து உழுவோம் !
வேளாண்மையில் வளர்ச்சி கண்டு இவ்வுலகம் வியக்க வாழுவோம் !
மாரி பொழியா மண்ணிலும்
மாற்றம் காண முயலுவோம்!
பிறந்த பூமி சிறந்து விளங்க
உறுதிகொண்டு உழைப்போம்!!
தமிழன் என்ற உணர்வு பொங்க
தை பொங்கலிட்டு மகிழுவோம்!
தரணியெங்கும் பசுமை கண்டு
பஞ்சமென்பதை விரட்டுவோம் !
அஞ்சுபத்துக்கு பஞ்சாய் பறப்பவர் நெஞ்சம்
கொஞ்சி மகிழ விந
வீரமாக பேசிப் பேசி பலரின் விசும்பலுக்கு ஆளாகும் உபதேசவாதிகள் சாதிக்கத் துடிப்பது தான் என்ன ? ஆன்மிகம் என்றாலும் அராஜகம் அராஜகம் தானே !மதமென்று சொல்லி மனித மனதை கொல்லும் மடச்செயலுக்கு குருவாக இருக்கும் இதுபோன்ற உபதேச தலைவனை என் செய்யலாம்
உயரப் பறந்தாலும்
ஊர் குருவி பருந்தாகாது
உருண்டு பெரண்டாலும்
ஒட்டுவது தான் ஒட்டும்
வயிறுக்கு பட்டினி
வாரிசுக்கு சொத்து
வாழ்கை வாழ்ந்து
சாதித்தாலும் சாம்பல் தான் மிஞ்சும்
உள்ளொன்று புறமொன்று
சொல்லொன்று மனமொன்று
உனைநினைப்பதொன்று நீநினைப்பதொன்று
கல்லுக்குள் தேரை போல
காற்றிற்க்குள் மாசுபோல
வந்தே தொலைத்தாய் மனித நெஞ்சில் ...
யாதுமாகி நின்றாய் கவியே
சூது வந்து வாழ்வினை கவ்வும்
வாழ்ந்து நீயும் காட்டடி பெண்ணே
காதலாகி கனியும் முன்னே கவிகுழந்தையை
தத்தெடுத்து தாயுமாகி நிற்பவள் பெண்ணே !!