மஞ்சுளா தாமோதரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மஞ்சுளா தாமோதரன் |
இடம் | : கரூர் |
பிறந்த தேதி | : 26-Apr-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 282 |
புள்ளி | : 23 |
தமிழ்த்தாய் மீது கொண்ட பற்றினால், கவி படிக்க தொடங்கியவள் இந்த சக்தி பாரதி......
வழி தேடவில்லை..........
முக
வரித் தேடவில்லை...........
"நான்கு கண்கள் மோத"
"மௌனங்கள் பேச"
"நான் நீயாக"
"நீ நானாக"
"முதல் காதல்................... "
நம்மிடம்
வழி தேடவில்லை..........
முக
வரித் தேடவில்லை...........
மதம், மொழி பார்க்கவில்லை..........
பிரிவின்
வலி பொறுக்கவில்லை.................
"உன் கரம் பிடிக்க"
"ஊரார் எதிர்க்க"
"ஒரு முடிவெடுக்க"
"இருவரை இணைத்த"
"முதல் காதல்................... "
நம்மிடம்
மதம், மொழி பார்க்கவில்லை.............
பிரிவின்
வலி பொறுக்கவில்லை ..............
உள்ளுக்குள்ளே உறவால்,
விதைத்தாய் என்னை........!
உள்ளுக்குள்ளே வைத்து,
வளர்த்தாய் என்னை...........!
பக்குவமாய் பார்த்து,
நடந்தாய் எனக்காய்..........!
பார்த்து, பார்த்து சிறந்ததை
ருசித்தாய் எனக்காய்.........!
பார்க்காமலே கனவுக ளோடு
காதலித்"தாயே"!!!
இமை திறந்து பார்த்தது முதல்
என் "முதல் காதல்" நீயே!
சோம்பித்,
திரிந்ததில்லை.......
உழைக்க,
மறந்ததில்லை........
ஒன்று பட ,
தவறியதில்லை......
ஆடம்பரம்,
செய்ததில்லை.......
சேமிக்க,
மறந்ததில்லை..........
எளியவனை,
கொன்றதில்லை..............
வலியப் போட்டிக்கு இழுப்பவனை,
வெல்லாமல் விட்டதில்லை.......
என் பெயர் "எறும்பு "
அன்புடன்
சக்தி பாரதி
இனியவளே !
இதயத்தில் புதிய சத்தம் உன்னாலே...!
புதியவளே !
மனதினிலே புதிய ஆசை உன்னாலே!
வாசத் தாமரையே !
என் வாசல் எங்கும் வசந்தம் உன்னாலே..!
வளர்ந்த பூங்கொடியே !
என் வாழ்வில் வசந்தம் என்றும் உன்னாலே.!
வளரா இளம் பிறையே !
என் வானில் பௌர்(ண்+அ)மி இன்று உன்னாலே....!
செல்வம் வேண்டும் செல்வம் வேண்டும்
என் சந்ததிக்காய் அதை கொடுக்க வேண்டும்
செலவிற்கு காசு பணம் கொடுக்க வேண்டாம்
நீர் கற்றறிந்த கல்வியினை கற்றுத்தாரும்...
செழிக்க வேண்டும் செழிக்க வேண்டும்
என் சமுதாயம் என்றுமே செழித்திடல் வேண்டும்
அணிவதற்கு வேட்டி சட்டை கொடுக்க வேண்டாம்
மானம் காக்க கல்வியினை கற்றுத்தாரும்...
ஒளி ஏற்ற வேண்டும் ஏற்ற வேண்டும்
என் சமூகம் அதிலே ஒளிரவும் வேண்டும்
ஒளிக்காக மின் விளக்கு கொடுக்க வேண்டாம்
வாழ்வு பிரகாசிக்க கல்வியினை கற்றுத்தாரும்...
பெற்று விட்டோம் பெற்று விட்டோம்
எளியோர் பட்டந்தனை பெற்றும் விட்டோம்
ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டாம்
ஏழைக்கும
தென்றலுக்காக காத்திருக்கும்,
தேமலர் போல…!
வசந்தம் வர காத்திருக்கும்,
இலையுதிர்ந்த மரம் போல…!
விடைகளுக்காக காத்திருக்கும்,
புதிர் வினாவைப் போல…!
நானும் காத்திருக்கின்றேன்…………………….
ஒவ்வொரு நொடியிலும்…………
“உன் பதிலுக்காக”.....
என் “கைப்பேசியை” பார்த்தபடி...!
கலைந்த கூந்தலை வருடும் - உன்
நேசமிகு கரங்கள், என்று என் கரங்களோடு சேரும்????
கண்சிமிட்டும் பூக்களாய் இருக்கும் -உன்
கண்கள் இரண்டும் என்று நேருக்கு நேர் என் கண்களை கண்டு பேசும்???
அந்தி மாலை தென்றல் அதில் அழகாய் அசைந்தாடும்,
பூ மலர்கள் கொண்ட செடிகளென ,
உன்னுடன் அருகில் அமர்ந்து , இந்த உலகம் ரசிக்க
இல்லை!!! இல்லை!!!
உன்னுடன் அளவி மகிழும் அந்த அழகை
இந்த உலகம் கண்டு ரசிக்க ஆசை!!!
என்னவளே !!
எப்போது வரும் அந்த இன்ப பூந்தளிர் காலம்!!!!!
நான் படித்தேன்,
அழகுமிகு ஆயிரம் கவிதைகள்.........
அவள் கண்களில்!
நான் கேட்டேன்,
அருமைமிகு ஆயிரம் பாடல்கள்........
அவள் பேச்சில்!
நான் காண்பேன்,
ஆசை மிகு இசைவு வார்த்தையினை..........
அவள் மௌனத்தில்!
நான் வாழ்வேன்,
அவள் நெஞ்சத்தில் என்றுமே " காதல் அகதியாய்"!