ராஜ்மோகன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராஜ்மோகன் |
இடம் | : திரிகோணமலை |
பிறந்த தேதி | : 10-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 0 |
√•√எ.காமில் இணைந்திருக்கும் ஒரு மாணவன்•√•
அன்புடை தோழமை நெஞ்சங்களே..(விருதுகள் )
பொதுவாக தளத்தில் பல புதுமுகங்களுக்கு உரிய அங்கிகாரம் கிட்டுவதில்லை .....புள்ளிகள் கிடைப்பதில்லை..குறைவான படைப்புகள் அளித்தால் பாராட்டுகள் பெற முடிவதில்லை என்ற குமுறல் பலரிடம் ஒரு படைப்பாக இவ்வாண்டு இங்கு பதியப் பட்டது அனைவரும் அறிவர். அதுவும் பெண் படைப்பாளிகள் ஊக்குவிக்கப் படுவதில்லை எனவும் கருத்துக்கள் எழுந்தன.இவையாவும் தவறு. தளத்தின் பிரியா..சாந்தி..புலமி...ஹூஜா...சியாமளா...என பலர் பாராட்டப்பட்டுள்ளனர். இன்று எழுத்தில் நன்கு வளர்ந்துள்ளனர்.இதற்கு தளத் (...)
தொலைவில் தெரியும் வானமும்
உன் விழியின் அருகில்தானடா.....
மறைந்தே செல்லும் காற்றும்
உன்னை தினம் தொட்டே செல்லுமடா...
விதையாய் வீழ்ந்திடு
புதுமரமாய் எழுந்திடு...
கனி கொடு நாளை
விழுமே கழுத்தினில் மாலை.....
நிலவுக்கு சென்ற
நீல்ஆம்ஸ்ட்ராங்கும்...
தனது மனதை
உழுதார் ஸ்ட்ராங்காக...
அழகிய கனவு காண
அப்துல்கலாமும் சொன்ன
அற்புத அறிவுரை
அன்பனே இதுதானோ...?
உப்பு நீராய் இருந்த கடலும்
நல்ல நீராய் மாறுகிறதே....
மேக மாற்றம் செய்வதுபோல
மனதில் மாற்றம் வேண்டாமோ...?
தூறல் போடும் மழைத்துளிதானே
வெள்ளப்பெருக்காய் ஆகிறது...
உறங்கி வாழும் தொட்டாசிணுங்கி
உரசிவிட்டால் விழிக்கிறது...
வண
தொலைவில் தெரியும் வானமும்
உன் விழியின் அருகில்தானடா.....
மறைந்தே செல்லும் காற்றும்
உன்னை தினம் தொட்டே செல்லுமடா...
விதையாய் வீழ்ந்திடு
புதுமரமாய் எழுந்திடு...
கனி கொடு நாளை
விழுமே கழுத்தினில் மாலை.....
நிலவுக்கு சென்ற
நீல்ஆம்ஸ்ட்ராங்கும்...
தனது மனதை
உழுதார் ஸ்ட்ராங்காக...
அழகிய கனவு காண
அப்துல்கலாமும் சொன்ன
அற்புத அறிவுரை
அன்பனே இதுதானோ...?
உப்பு நீராய் இருந்த கடலும்
நல்ல நீராய் மாறுகிறதே....
மேக மாற்றம் செய்வதுபோல
மனதில் மாற்றம் வேண்டாமோ...?
தூறல் போடும் மழைத்துளிதானே
வெள்ளப்பெருக்காய் ஆகிறது...
உறங்கி வாழும் தொட்டாசிணுங்கி
உரசிவிட்டால் விழிக்கிறது...
வண
தத்தி தத்தி நடை
போட்ட குட்டி தேவதை
நீயம்மா
எட்டி நீ உதைத்தாலும்
தாங்கிய தாயவள்
நானம்மா
குழந்தை நீ குமரியானாய்
குலமகளாய்
வலம்வந்தாய்
கொஞ்சமாய் நான்
கோபித்து கொண்டாலும்
கெஞ்சியே என்னை நீ
வென்றாய்
வண்ண மயிலே
உன்னை வர்ணிக்க
வார்த்தை எங்கே
நான் எடுப்பேன்
தோழியும் நீ
நான் சுவாசிக்கும்
மூச்சும் நீ
சோகங்கள் என்னை
சூலவந்தால்
தோள்கொடுக்கும்
துணையும் நீ
அன்பின் ஊற்று நீ
அழியாத செல்வம் நீ
தங்கமே நீ எனக்கு
தங்கை என்றாலும்
அன்னைக்கு மேல்...!!!
புதிது புதிதாக
கண்டுபிடிக்கிறேன் என்கிறாய்...
எதை
கண்டு பிடித்தாய் நீயாக...
அவன் காட்டித் தராமல்!
;
;
புதிது புதிதாக
படைப்புகள் படைக்கிறேன் என்கிறாய்....
எதை
படைத்து விட்டாய் நீயாக...
அவன் படைத்திராத ஒன்றைக் கொண்டு!
/
/
ஒன்றை மறைத்து வைத்தலே
கண்டுபிடிக்க காரணியும், காரணமும்;
கண்டு பிடித்தலுக்கான தூண்டல்
மறைத்து வைத்தல்....
/
/
நீ
கண்டு பிடித்ததையும்
படைத்ததையும்
உண்மையாக கண்டும், படைத்ததும்
நீயா...
/
/
நீயென்றால்
நீயாக படைத்தது எது...
முன்னர் படைத்த எதைக் கொண்டும்
அல்லாமல்...
/
/
அல்லாமல்
படைத்தாயென்றால்
நீ
படைப்பாளி.....
/
/
உன்னால் செய்யப்பட்டதெல்லாம்
காதலை சொல்ல ஆயிரம்
மொழிகள் இருந்தும்
உன்னிடம் பேசியது
என் மௌனம் மட்டுமே!!!!!
உன் மௌனம்
களைந்த பேச்சு...
நீ கொட்டித் தீர்த்த
அடைமழை...
பாவை நீ
பூட்டி வைத்த
பார்வைகள் அனைத்தும்...
என் தாய் மண்ணின்
இருளைப் போக்கும்
மின்சாரமடி...
சுண்டு விரலால்
ஈர்க்கும் காந்தமடி...
சுருண்டு விழுவேன்
உனை பார்த்த நொடி...
என் கவிதைகளுக்கு
நீ சந்தமடி...
என் கற்பனைக்கு
மட்டும் சொந்தமடி....!
பெண்ணே...
உன்னோடு நான் எத்தனை
பேசிருந்தாலும்...
நான் கொடுக்க நினைத்த
முத்தங்கள் எல்லாம்...
காற்றில் பறந்தன
சுவாசமாக...
செத்து வாழ்வது
உனக்கு தெரியுமா...
உணர்ந்து பாரடி தினம்
செத்து கொண்டே இருக்கிறேன்...
நிஜத்தில் என்னை
தேடிபார்காதே...
தென்றலில் தேடி பார்...
மிச்சம் இருப்பது என் சுவாசமும்
உன் நினைவுகளும்தான்...
உனக்கு துணையாக
உன் தோழி...
உன் மனதுக்கு துணையாக
என் மனம்...
எனக்கு துணையாக
நான் மட்டும்...
சாகும்வரை போதுமடி
உன் நினைவுகள் மட்டுமே...
வாழ்க நலமுடன்.....