பத்மாஜெய் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பத்மாஜெய்
இடம்:  mysore
பிறந்த தேதி :  09-Sep-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Apr-2014
பார்த்தவர்கள்:  302
புள்ளி:  8

என்னைப் பற்றி...

என் பெயர் பத்மா நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவள் . எனக்கு கவிதை , நாவெல் என்றால் மிகவும் பிடிக்கும் .

என் படைப்புகள்
பத்மாஜெய் செய்திகள்
பத்மாஜெய் - மருத்துவ குறிப்புகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Jan-2015 1:18 pm

க‌ம்பளிப் பூச்சி க‌டித்த‌ இட‌த்தில் அரிப்பு குறைய

>> கம்பளிப் பூச்சியின் உரோமம் பட்ட இடத்தில் நல்லெண்ணெயை தேய்க்க அரிப்பு குறையும்.
>>முருங்கை இலையை அரைத்து ப‌ற்றுப்போட‌ க‌ம்பளிப் பூச்சி க‌டித்த‌ இட‌த்தில் அரிப்பு குறையும்.
>> வெற்றிலையை சாறு வரும்படி அழுத்தி தேய்த்தால் சிறிது நேரத்தில் குணமாகும்.

மேலும்

பத்மாஜெய் - கோப்பெருந்தேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jan-2015 12:08 pm

விடைபெறும் முன்
விண்ணப்பம் அளிக்கிறேன்
விலகிச் செல்லும் முன் வினவிச் செல்
நானும் உடன் வருகிறேன்
இறக்கும் வரை!

மேலும்

அருமை, வாழ்த்துக்கள் 05-Jan-2015 2:51 pm
அருமை 05-Jan-2015 1:18 pm
அருமை 05-Jan-2015 9:47 am
அருமை நட்பே....! 05-Jan-2015 8:03 am
பத்மாஜெய் - மருத்துவ குறிப்புகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2014 4:28 pm

கருத்தரித்த பெண்களின் ஆரோக்கியமான பிரசவத்திற்கு

ஆடுதீண்டாப்பாளை வேர் 2 கிராம் எடுத்து பொடி செய்து வெந்நீரில் குடித்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

சீரகத்தை அரைத்து எருமை வெண்ணெயில் கலந்து கொடுக்க ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

ஆடாதோடை இலை, வேர் வகைக்கு அரைக் கைப்பிடி அளவு எடுத்து நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி கொடுத்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

குங்குமப் பூவை சோம்பு நீரில் கரைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் இவைகளை சாப்பிட்டுவர சுகப்பிரசவத்தின் வாய்ப்புகள் அதிகம்.

மேலும்

பத்மாஜெய் - ஹரிஹர ஐய்யப்பன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2014 7:27 pm

ஒரு மனிதனை நல் வழி படுத்துவது நட்பா அல்லது உறவா...?????

மேலும்

உறவு , உறவுதான் நல்ல மனிதனை உருவாக்கும். பின் நல்ல நண்பனை உறவாகி தரும். 02-Jan-2015 6:12 pm
பெற்றோர்களின் வளர்ப்பே முக்கிய பங்கு வகிக்கும்.... அவனுடைய சூழ்நிலைகளும் , கடந்து செல்லும் வாழ்கை பயணமும் அவன் தேர்ந்தெடுத்த வழிக்கு அனுபவத்தையே சேர்க்கும் என நான் கருதுகிறேன்.... 02-Jan-2015 5:01 pm
இரண்டும் இல்லை தோழரே .. அவனுடைய சூழ்நிலைகளும் , கடந்து செல்லும் வாழ்கை பயணமும் ... 02-Jan-2015 4:35 pm
நட்பு 31-Dec-2014 1:48 pm
பத்மாஜெய் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2014 9:48 am

இன்றைய பட்டி மன்ற கேள்வி.

நாளை கொண்டாட இருக்கும் புத்தாண்டை வரவேற்க காத்திருப்பவர்கள் பெரியோர்களா?..இல்லை சிறியோர்களா?.

2015 புத்தாண்டு வாழ்த்துகளுடன்.புத்தாண்டை வரவேற்று..
கருத்துகளை எழுதுங்கள்..

மேலும்

* சின்னப் பசங்கதான்! 01-Jan-2015 8:44 am
பெரியவர்கள் குழந்தைகளின் குதூகலத்துடன் வரவேற்கிறார்கள். சிறியவர்கள் கனவுகளோடு, சங்கற்பத்தோடு பெரியவர்களின் பக்குவத்தோடு வரவேற்கிறார்கள். பெரியோர்,சிறியோர் இரு சாராருமே red carpet welcome கொடுத்து green signal காண்பித்து இசை முழக்கத்துடன் வரவேற்கிறார்கள். ஒன்று சேர்ந்து வரவேற்போம் வாருங்கள்! வாருங்கள்! விரைந்து வாருங்கள்! வருக 2015! வாழ்த்துக எங்கள் அனைவரையும்! 31-Dec-2014 8:54 pm
உலகமே 31-Dec-2014 1:47 pm
பத்மாஜெய் - கார்த்திக் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2014 6:54 am

புதிய வருடத்தில் இருந்து சில நல்ல செயல்களை செய்வீர்களா ? 1.ஆம் 2.இல்லை 3.கருத்து கூர விரும்ப வில்லை

மேலும்

ஆம் 31-Dec-2014 1:46 pm
பத்மாஜெய் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2014 10:30 am

புத்தாண்டு வருகின்றது
புது உணர்வு பிறக்கின்றது
புதைத்து வைத்த ஆசைக்கெல்லாம்
புத்துயிர் கிடைக்கின்றது..

உயிர் பறிக்கும் எண்ணம் மாற்றி
உயிர்காக்க உறுதி பூண்டு
உத்தம புத்தாண்டு பூமி வர
உள்மனது அழைக்கின்றது.

பணம் மட்டும் வாழ்க்கையல்ல
பந்த பாசம் வேண்டும் என்று
பறைசாற்றி புரியவைக்க
பணிவான புத்தாண்டை பாவி உள்ளம்
கேட்கின்றது ..

இழந்தவற்றை எடுக்க முடியாத போது
இருப்பவற்றை எடுத்து
இன்னல் கொடுக்காமல் இருக்க
இறையருளோடு
இருள் நீக்கி ஒளி கொடுக்க
இப்புத்தாண்டு சரி
ஏழைக்காக பிறக்க
இன்முகம் காட்டி வரவேற்குது
என் மனம் .

வருக புத்தாண்டே
வாழ வைத்திடு அனைவரையும்
வஞ

மேலும்

வரவிலும் வாழ்த்திலும் மகிழ்ந்தேன் தோழி தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . 31-Dec-2014 5:53 pm
வரவிருக்கும் புத்தாண்டு சிறப்பான ஆண்டாக அமைய என் இனிய வாழ்த்துக்கள் தோழியே..... 31-Dec-2014 5:27 pm
நிறைவேறினால் நன்றே அண்ணா ........uruvam illaa iraivanidam பிராத்திப்போம் நல்லதே நடக்க வேண்டும் என்று . நன்றிகள் அண்ணா . 31-Dec-2014 4:32 pm
தங்களுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நித்யா . வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி வாழ்த்துக்களுக்கு நன்றிகள் மா 31-Dec-2014 4:30 pm
பத்மாஜெய் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2014 9:55 am

இன்றைய பட்டி மன்ற கேள்வி.

மாமியார் மருமகள் சண்டையில் முக்கிய பங்கு வகிப்பவர் யார்?
மாமியாரா? இல்லை மருமகளா?

கருத்துகளை எழுதுங்கள். மன்சூர் அலி.

மேலும்

இந்த ரகசியம் தெரியாதா உங்களுக்கு இதுவரை.... சரி கொஞ்சம் நேர்த்தியாவே பதில் சொல்ல முயற்சிக்கிறேன். நல்லா கேட்டுக்குங்க... நா ஒரு வாட்டிதெங் சொல்லுவேன்... திருப்பிக் கேட்டா மறந்து போயிரும்... சொல்லட்டா..... சரி சொல்ரெங்... கேளுங்க... மாமியார்- மருமகள் நாங்க ரெண்டு பேருமே வீட்ல இருக்கொங்... இருக்கோமா... அப்ப பொழுது போகலின்னா என்ன செய்வோங்... பள்ளிக்கூடொங் புள்ளைக மாதிரி கொஞ்சொங் பேசலாமேன்னு ஆரம்பிப்போம்.... அதுல எங்களுக்குள்ள வாக்கு தடிக்கும். தடிக்குமா... அப்புறம் கேளுங்க.... அப்புடி தடிக்கும்போது அதை அங்ஙனக்குள்ளயே காட்டாம மனசுக்குள்ள குறிச்சி வெச்சிக்குவோம்... நேரம் வரும்போது போட்டுத் தள்றதுக்குத்தெங்.. குறிச்சி வெச்சிக்குவோமா.. இருங்க சொல்றத கேளுங்க...அப்புடீ குறிச்சி வெச்சிக்கிட்ட பொறவு.... சின்னப்புள்ளையில யாராவது நம்மள அடிச்சிப்புட்டா ஆளக் கூட்டியாந்து அடிக்க விடுவோமில்ல.... (அப்பிடி கூட்டாயார ஆளுக இல்லினா அந்த பிரச்சினைய கிடப்புல போட்டுப்புடுவோமில்ல) அந்த மாதிரி, சாயங்காலம் ஆம்பிள வீட்டுக்கு வந்தஒடனேயே முதல் ஆளா போட்டுக் குடுக்குற வேலைய ஆரம்பிப்போம். அது எதுக்குன்னா எங்கள்ல ஒருத்தர் முந்திக்கிட்டாத்தாங் அடுத்தவுக சொல்லும் முந்தியே நம்ம பேச்சு எடுபட்டு அதுலயும் ஒருபடி நாம முன்னுக்கு இருப்போங்... ஆங்... இப்ப புரிஞ்சிருக்குமில்ல... இதுல யாரு ஒசத்தி யாரு பொறத்தின்னு... யாரு மொதல்ல வம்பு வத்தி வெக்கிறாகளோ அவுக பக்கம் ஞாயம் இருக்குறதா அர்த்தமாயிடும்... போலிசுகாரங்க சொல்ற முதல் தகவல் அறிக்கை மாதிரித்தெங்... இதுக்கு மேல நாங் என்னத்தெங் சொல்வெங்... எப்புடீ வெளக்குவெங்....என் ராசா.... நான் சொல்ரதெல்லாம் நெசம் ராசா... என்னய நம்பு ராசா... ஆங்... 03-Jan-2015 11:21 am
சமீபத்தில் உயர்நீதி மன்ற பெண் வழக்குரைஞர் நிகழ் காலத்தில் விவாகரத்துக்கள் தனிக்குடித்தனம் செய்து வாழும் தம்பதியர்களிடம் தான் பெருகி வருகிறது. வேலை நிமித்தமாக மாமியார், நாத்தனார், இவர்களைவிட்டு மகன்-மருமகள் வேறு நகரங்களில் வசிப்பதால் பெரும்பாலும் சண்டைகள், முக்கியமாக விவாகரத்து அளவுக்கு செல்பவை கணவன்-மனைவி தான் காரணம். இதில் முக்கியமாக ego, கணவனை விட பெரிய பதவி & சம்பளம் மற்றும் காதல் திருமணங்கள் அதிகம் என்று கூறினார். பல மாமனார், மாமியார்கள் தனியாக (குடித்தனம்) வாழ்க்கை நடத்தி மகன்-மருமகள், பேரன்-பேத்தி உறவுக்காக ஏங்குகிறார்கள். அப்படியும் சிலர் சேர்ந்து இருப்பவர்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக வைத்துக் கொள்ளப்படுகிறார்கள். மாமனார்-மாமியாரை முதியார் இல்லத்திற்கு அனுப்பிவிடும் காலத்தில் மாமியார்-மருமகள் சண்டையா? எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? 02-Jan-2015 7:40 pm
இருவரைவிடவும் கணவர்தான். 02-Jan-2015 3:01 pm
இரண்டு பேரின் விட்டு கொடுக்காத மனது .கண்ணவனை விட்டு கொடுக்க முடியாமல் மருமகளும் .மகனை விட்டு கொடுக்க முடியாத மாமியாரும். 30-Dec-2014 6:16 pm
பத்மாஜெய் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2014 5:01 pm

பணம் என்னும் படிக்கட்டு
ஏறித்தான்
படிப்பு என்னும் சிகரத்தை
அடைய முடியும் தற்காலத்தில் !!!

மேலும்

பத்மாஜெய் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2014 5:06 pm

அன்பு மகளே !

நீ ஏதோ பாவம் செய்துவிட்டாய்
உன்னை பெற்ற நான் உன்னுடன் இல்லை!
நான் ஏதோ பாவம் செய்திருப்பேன் போல
நான் பெற்ற நீயும் என் னுடன் இல்லை !
எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் கூட இருக்கிறது
என்னவென்று கேட்கிறாயா ??
என் அழுகை மட்டுமே
உனக்கும் கூட தான் !!

மேலும்

பத்மாஜெய் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2014 6:50 pm

உன்னை நினைக்க வேண்டாம் என்று
என் மனம் சொல்கிறது
ஆனால் அந்த மனது தான் எப்போதும்
உன்னை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறது
நான் வாழும் போதும் உன் நினைவோடு தான்
இறக்கும் தருவாயில் கூட உன்னை பற்றி
நினைத்து கொண்டு தான் இறப்பேன்
உன் காதலியாக
என் உயிர் காதலே !!!

மேலும்

பத்மாஜெய் - எண்ணம் (public)
19-Apr-2014 3:32 pm

இனிய உயிர்தெழுதல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே