saranya gpyd - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : saranya gpyd |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-May-2019 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 1 |
இத்தளத்தில் படைப்புகளை பதிப்பது எப்படி
திருமணமான ஆணுக்கு எப்படி தன் மனைவியை தவிர்த்து இன்னோர் பெண் மீது காதல் வருகிறது? அவளை எப்படி இரண்டாந்தாரமாக திருமணம் செய்து கொள்கிறான். இதை சமூகம் சாதாரண விசயமாக பார்க்கிறதா?
இதையே ஒரு பெண் செய்தால் அதனை இச்சமூகம் எப்படி பார்க்கும்?
எட்டையபுரத்து கவிஞன்
அவன்!
யாரும் எட்டாத கவிஞன்
அவன்!
தமிழை நாவில்
சுமந்த அக்காலத்திலே
இதயத்தில் சுமந்து சுவாசித்தவன்!
தமிழை எண்ணெய் எனவும்
வார்தைகளை திரி எனவும்
மறு உருவம் தரித்து
கவிதைகளாக பெற்றெடுத்து
உலகிற்கு தத்துக்கொடுத்து
தீச்சுடரென ஓளிரவிட்டான்!
தேனை மட்டுமே
உண்ணுமாம் தேனீ
அவன்
தமிழை மட்டுமே
உண்ணும் ஞானி!
வெள்ளைத்தோல்களை உரிக்க
தன் அணு அளவு சிந்தனைகளையும்
உரித்தெடுத்தான் கவிதைகளாக!
ஆயுதம் ஏந்திய போராட்டங்கள்
அவன்!
கவிதைகளில்
அவன்!
தேன் சிந்தும் வரிகளை
கண்டபோதெல்லாம்
வான் சிந்தியிருக்கக்கூடும்
மழையை!
அவன்!
கவிதைகள் நெருப்
****பிரபஞ்ச தேடலில்
முற்றும் விளங்கா அறிஞன் போல்
உந்தன் தேடலில்
அந்தம் பெறாமல் ஓய்கிறேன்!
****கரை தழுவும் அலை போல்
வீசி வீசி மாய்கின்றன
ஆழி மனதுக்குள்
உந்தன் நினைவுகள் !
****கண்ணில் வந்த நோயாய்
எந்தன் பார்வை எல்லாம் நீயாய்
அங்கிங்கெனாத படி எங்குமாய்
யாவையுமாய் நீயே!
****வரமாய் வேண்டும் ஒரே ஒருநாள்
உன் நகத்தின் அழகை முழுதும் ரசிக்க
ஆயுட்கால ஜெபமாய்
உந்தன் பெயரே வேண்டும் !
****உயிர் அடங்கும் நேரத்தில்
என் கண்மணிக்குள் நீ வேண்டும்
நம் காதல் வாழ்வு இது
கடைசி வரை வேண்டும்!
சில தனிமை பொழுதுகளை கடப்பதென்பது அத்தனை சுலபமல்ல...
ஆம், அது சுயமானதாக அல்லாது
நம் சிநேகத்திற்கு உரியவர்களால் வழங்கப்படுகின்றபோது...
ஒற்றை கோப்பையில் தேனீருடன், இத்தனிமையை சற்று கூடுதலாக நிறப்பிடும்போதும்,
பிடித்தமான சில பாடல் வரிகள் செவிக்கு மட்டும் எட்டி சிந்தையில் ஒட்டாமல் ஓடிடும் போதும்,
சிலர் அள்ளிக்கொண்டுவந்த அலுத்துப்போன ஆறுதல் வார்தைகளை கேட்க துணிவின்றி கதவடைத்து, நமக்கு நாமாகவே
ஓர் சிறை எழுப்பும்போதும்,
இன்னும் இன்னும் பலவகையில்
இத்தனிமை நம்மை சில நினைவுகளால் நெருக்கிடும்போதும்
அத்தனை சுலபமானதாக இருப்பதில்லை,
இத்தகைய தனிமைப்பொழுதுகள்...