Dream killer BALU - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Dream killer BALU |
இடம் | : அரியலூர்,tamilnadu |
பிறந்த தேதி | : 15-Mar-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 221 |
புள்ளி | : 17 |
உன்னில் ஒருவன் என்றும்.....
மாலை பொழுது உன்னால் தானோ ,
என்னவளே...
உன் மஞ்சள்முகம் கண்டு,
சூரியன் மயங்கிடும் நேரம் அதுவோ..!
கருமேகம் அலைமோதும் உன்னால்தானோ,
என்னவளே...
உன் விழிகள் கண்டு,
விரண்டோடும் நேரம் அதுவோ....!!
பூக்கள் பூத்துக் குவிகிறது உன்னால்தானோ,
என்னவளே,
நீ மலர்கள் கொண்டு
மாலை தொடுத்திடும்
காலம் அதுவோ...!!
எல்லாம் ,
இங்கு உனக்காக பிறந்திட,,,
அவை,
அனைத்தும் உனக்கு இன்பம் சேர்திட,,,
நீ மீண்டும் மீண்டும்
இப்பூமியில் மலர்ந்திட,,,
"என் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
என்ன பலன் செய்துவிட்டோம் பாரினில் பிறந்துவிட்டு
மண் திண்ணும் உடலுக்கு
மகத்துவம் தேடிவிட்டு
மனிதாபமானம் பறக்க விட்டோம்
பாரடா நீதியை
பாமரனின் பசி செய்த கோலத்தை
ஏனடா இந்த வேதனை
யார்? ஏற்றி வைத்தார் இந்த தீபத்தை
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
இந்த சகத்தினை அழித்திடுவோமென்றும்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம்
வாடினேனென்றும்
வாய் மொழிந்த பெரியோர் கூற்று மறந்து போனதோ?
கொடிதிலும் கொடிது வறுமை
அதனிலும் கொடிது
வறுமை சூழ்ந்த ஏழ்மை
என்று மாறுமோ இந்த நிலை?
அவள் மாலைதோறும் வந்து
என்னிடம் மயங்குகிறாள் !
மறு நாள் காலை விடிந்தால்
என்னை மறந்து விடுகிறாள் !
அவளை என்ன பெயர் சொல்லி அழைப்பது ?
அனஸ்தீசியா என்று அழைப்பதா ?
அல்லது அம்னீஷியா என்று அழைப்பதா ?
நீங்களே சொல்லுங்கள் !
என்
'அ'ன்பான புன்னகை நீ ,
'க'விதைகளின் கற்பனை நீ ,,
'ர'சிப்பின் சுவாரசியம் நீ,,,
'மு'கவரியின் தொடக்கம் நீ ,,,,
'த'னிமையின் ஆழம் நீ ,,,,,
'லி'லாலின் (நிழலின்) நிஜம் நீ,,,,,!
,,,,,,,,,,, என் அகரமுதலி ,,,,,,,,
ஆடை கலைத்து பெண்ணை தீண்டியது காற்று
அது அழகின் மீது கொண்ட காதல் மயக்கம்
அருகில் இருந்த என்னை அது வாட்டி வதைத்தது
என் மனதின் உள்ளே எழுந்த இளமையின் ஏக்கம்
ஆக்கம்
அஷ்ரப் அலி
இடம் மாற்றம்
நதி உண்டு மலை உண்டு
மயில் உண்டு குயில் உண்டு
சிங்கம் உண்டு சிறுத்தை உண்டு
யானை உண்டு கரடி உண்டு
.................காட்டினிலே
வீடு உண்டு வாசல் உண்டு
ஊர் உண்டு உறவு உண்டு
வாழ்வு உண்டு வசதி உண்டு
உணவு உண்டு நீர் உண்டு
................................நா
பனங்காட்டு நரி இவளோ...!
பதுங்கியே பாயிரா...!!
என்ன பதம் பக்கதான்,
துடிக்கிறா...!!!
ஒரே ரவுண்டுல,
புத்திய மாத்துரா,..!
பலம்'ஏத்துற, பனங்"கள்ளா இவ...!
கண்ணாலே,
போதை ஏத்துறா...!
நெஞ்சிக்குள்ள ,நஞ்ச ஊத்துறா....!!
பனங்'காட்டையே பத்த'வைக்கிற ,,,!
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
அனைவரின் காதலும் காவியமாக்கப்படுவதில்லை
என்பதை அவள் என் காதலை ஏற்றுக்கொள்ளாத போது தன் உணர்ந்தேன்................!
அவள் மட்டும் ஏற்றுக்கொண்டிருந்தால் என் காதலையும் ஒரு காவியமாக வடித்திருப்பேன்.............!