நிலாசூரியன் - சுயவிவரம்
(Profile)
நடுநிலையாளர்
இயற்பெயர் | : நிலாசூரியன் |
இடம் | : (தமிழ்நாடு) |
பிறந்த தேதி | : 15-Jun-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 6405 |
புள்ளி | : 1837 |
அழுவதற்கும் சிரிப்பதற்கும்
யோசிப்பவன்
இன்பத்தையும் துன்பத்தையும்
நேசிப்பவன்...
நான் வளைந்து கொடுப்பது
என் வழக்கம் - ஆனால்
பயந்து வளைந்தது
இதுவரை இல்லை...!!!
www.nilasuriyan.blogspot.com என்ற தளத்தில் மேலும் எனது படைப்புகளை காணலாம்.
என் கவிதைகள்
ஒரு நாள்
உற்ச்சாக தேரில் ஏறி
ஊர்வலம் போகும்...
புத்தாடை உடுத்திக்கொண்டு
பூச்சூடி பார்க்கும்...
பனித்துளியாய் மாறும்
பவளம்போல் ஜொலிக்கும்...
ஆனந்தம் அள்ளிக்கொண்டு
ஆகாயம் போகும்...
தேனள்ளித் தெளித்துச்செல்லும்
தென்றலாய் மாறும்...
கல்லாய் மண்ணாய் மரமாய்
மரித்துகிடக்கும்
என் கவிதைகள்
உயிர்பெற்று எழும்
உன் பெயரை தொழும்...
மனிதனின் உயிர்
மரம்போட்ட பிச்சை...
இங்கு பலருக்கும்
புரியவில்லை
உழைப்பிற்கு மிஞ்சிய
வருமானம் பணமல்ல பாவமென்று...
பாவம் பலவகைபட்டாலும்
அத்தனைப் பாவங்களையும்
இந்த ஞாலத்தில்
மனிதன் மட்டுமே செய்கிறான்
முல்லைக்குத் தேரையும்
மயிலுக்கு போர்வையும்
கொடுத்து மனிதம் உயர்ந்து நின்ற
மரபு மரித்துபோய்விட்டது
இன்று மனிதனைவிட
விலங்குகளே பரவாயில்லை
என்றாகிவிட்டது
ஒட்டுமொத்தமாக
தன்னை மற்றவர்களுக்கே
அர்ப்பணித்து கொண்ட
மரத்தின் தியாகத்திற்கு முன்பு;
மனிதனும் கடவுளும் எம்மாத்திரம்?
நல்ல நேரம் பார்த்துதான்
சுவாசிக்கும் காற்றை
வெளியிடுவேன் என்று
மரமே நிபந்தனை
விதி
நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பொழுதுதான் இந்த தளத்தின் பக்கம் வந்தேன், பல்லாண்டு காலம் இந்த தளத்தில் இணைந்திருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன், இந்த தளம் கவி அல்லது கருத்து எழுத கற்றுக்கொள்ளும் பயிற்சி பட்டறையாகவே நான் பயன்படுத்தி வருகிறேன், அந்த வகையிலே இந்த தளம் பல எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் உருவாக்கி இருப்பதை நான் என் அனுவபத்தால் உணர்ந்து இருக்கிறேன், அதற்கு கவிதை மரபறிந்த பெரியாயோர்களின் வழிகாட்டுதலே மறுக்கமுடியாத முக்கிய காரணமாகும்.
ஒரு கவிதைக்கு யாப்பு, அணி, சொல், பொருள், போன்ற இலக்கண கவிதை மரபு மிக அவசியம், ஆனால் அவைகளை எல்லாம் நான் கற்றவன் அல்ல, என் சிறு கல்வியையும், சிற்றறிவையும் நா
பொய்யும் புரட்டும் வெல்லும் - அது
புரிதலின்றி செல்லும்
வீணாய் வாயை மெல்லும் - அது
தானாய்த் தன்னை கொல்லும்
அடுத்தவர் உழைப்பை உண்ணும் - அது
கெடுத்தவர் கையை பின்னும்
படுத்தவர் மீது நடக்கும் - அது
படித்தவர் என்றே மிடுக்கும்
தலையை ஆட்டி நடிக்கும் - அது
வலையை நீட்டி பிடிக்கும்
களையை ஊற்றி வளர்க்கும் - அது
குளையில் ஏறி மிதிக்கும்
பாலாய்ப் பல்லைக் காட்டும் - அது
வேலாய் சொல்லைத் தீட்டும்
முதுகுக்குப் பின்னால் பேசும் - அது
கதவுக்குப் பின்னால் ஏசும்
நிறத்தை அறிந்து வாழ்வோம் - தமிழ்
அறத்தை அறிந்து வாழ்வோம்
சிரத்தை அறிந்து உய்வோம் - துணிந்து
சிறுமையின் தலையைக் கொய்வ
உன் இலக்கை பிறருக்காக நிராகரிக்கும் போது, அதன் மதிப்பு அந்நபர் உங்களை நிராகரிக்கும் போதுதான் புரியும் !!!
அப்போது நீ இலக்கை மட்டுமல்ல, காலத்தையும் இழந்திருப்பாய்...!!- கௌசல்யா சேகர்
கலிவிருத்தம்
(கூவிளங்காய் விளம் மா காய்)
என்னதவம் செய்ததோ எழுத்தும் உமைப்பெறவே
சொன்னவைய னைத்துமே சோர்வின் றியுலவிட
மன்னவரே தாமென மாண்பாம் எழுத்தினுக்குள்
சொன்னவண்ணம் செய்குவேன் சொற்கேள் சக்கரையே!
– வ.க.கன்னியப்பன்
கருத்து: திரு சக்கரை வாசன் அவர்கள்
முதல்சீர் நான்கும் ஒரே வகை காய்ச்சீர்கள்.
மற்ற அடிகளிலும் இரண்டாம் சீர் விளம், மூன்றாம் சீர் மா, நான்காம் சீர் காய்.
நான்கடிகளிலும் 1, 3 சீர்களில் தகுந்த மோனை.
பசை
******
தூரிகையில் பற்பசை ஏந்திட
விடியும் பொழுதுகள்
சவரப் பசையுடன்
முகச் செழிப்பாகி
வாசனைப் பசையுடன் மணக்கத் தொடங்குகிறது
ரொட்டியில் அம்மா தடவிக்கொடுக்கும்
சட்னிப் பசையோடு
பசையுள்ளத் தொழிலுக்கான தேடலில்
விண்ணப்பம் சுமக்கும் கூடுகளுக்கு
ஒட்டுப் பசையாகிக் காத்திருக்கும்
அசையாத நம்பிக்கைகள்
நிராகரிப்பு பசைதடவிய எதிர்பார்ப்புப் பலகைகளில்
கால்வைத்துச் சிக்கிக்கொள்ளும்
எலியாகிய வாழ்வியலில் நின்று
வெளியேறப் போராடவென்று
வாங்கியதான பட்டங்கள்
பெயருக்குப் பின்னால் ஒட்டியும்
ஒட்டாமலுமென்று
பசையற்று நிற்கையில்
பார்ப்பவர் கண்களில்
பசையின்றியே ஒட்டிக் கொள்கிறது
சி
கோவில்கள் எவ்வளவு
பிரம்மாண்டமாக இருந்தாலும்
கருவறை எப்போதும்
எளிமை தான்..
வளர்ந்து போகும்
ஜடா முடியை
பிரம்மாண்டமாக இருந்தாலும்
பக்தரைப் பார்க்கும் அவன்
உள்ளம் எளிமை தான்..
வசதியாக வீடுகளில்
வாழ்வதைவிட எளிமையான
வீடுகளில் தான்
ஆனந்தங்கள்
பொங்கி வழியும்..
இந்த நாட்டிலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் பலவேறு பிரச்சனைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன, ஆனால்! அவைகள் அனைத்தையும் இந்த உலகம் அறிந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை.
வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், சட்டப்படியான ஜனநாயக உரிமைகளை நுகர்வதற்கும், ஒவ்வொரு சாமானிய தனி மனிதனும் இந்த நாட்டிலே கடுமையாக போராட வேண்டிய நிலை இருக்கிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பதிமூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஒப்பந்த முறையில் பணியாற்றுகின்ற கணிணிப் பணியாளர்களின் வாழ்நிலை துன்பமும் துயரமும், வறுமையும் வாடலும் நிறைந்ததாக இருக்கிறது.
2009ஆம் ஆண்டு தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபக் கழகத்தில்
நானும், நீயும்
ஒரே சாயலோடுதான் இருக்கிறோம்.
இந்த தேசத்தின்
எதிர்காலம் குறித்த கனவுகள்...
உனக்கும், எனக்கும்
ஒரே மாதிரியானவை.
கணியன் எழுதிய
"யாதும் ஊரே ...யாவரும் கேளிர்"
நமது அன்பின் தொடர்ச்சிதான்.
உனது உதடுகளின் புன்னகை...
எனது பாரா-ஒலிம்பிக் தங்கத்தினால்
எனில்...
எனது அறிவு ஒளிர்கிறது
அனந்தமூர்த்தியின் எழுத்துக்களால்.
நானும், நீயும், விலங்குகளும் கூட...
நீர் அருந்தக்
குளம் தந்த பரம்பரைகள்
நம்முடையவை.
வாழ்வின் வலியில்...
நீரின்றிக் கருகுகிறது
நம் தேசத்தின்
வேராய் இருக்கும் எனது குறிஞ்சி.
அரசியலின் புனைவுகளால்...
இடைவெளிகளாகி...
நதியின் பாதைகளில்
எது கொண்டும்
திறக்க இயலாத மௌனம்
உன்னுடையது.
இடைவெளியற்று அலையும்
உன் பார்வைகளோ...
அலைகளடங்கிய நீர்ப்பெருக்கின்
நெரிசலால் தளும்புகிறது.
மிதந்து படியும் உன்சொற்கள்
மெல்லக் கீழிறங்குகிறது
துயரத்தின் கனம் தாளாமல்.
சுருண்ட பூனையாகி...
ஞாபகங்களின் வலியோடு
அரவமின்றி அலைகிறது
உனது நாட்களின் பயணம்.
மலராகி சரிந்த
உனது புருவ நெரிப்புகள்...
இன்று விரிசல்களாகிவிட
அதன் விளிம்புகளில்
நான் அறிந்தது
உனது அடையாளங்களையல்ல.
காலத்தின் எச்சம்
நிழல்களிலிருந்தும் முகம் தரக்கூடும்...
எனும்
அதீத நம்பிக்கையை
உனக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
நீயும் அறியாமல்