மு முருக பூபதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மு முருக பூபதி
இடம்:  Perundurai erode district
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Feb-2012
பார்த்தவர்கள்:  1526
புள்ளி:  682

என்னைப் பற்றி...

கவிதைகள் எழுத தெரியாது .. இவைகள் என் கிறுக்கல்கள் ..! ரேகைக்கு எதற்கு எழுத்தாணி என முடங்கி கிடக்காமல் .. கிடைக்கும் நேரத்தில் சில கிறுக்கல்கள் ...!
நேசியுங்கள் என் எழுத்துக்களை ,,குறைகளை திருத்த உதவுங்கள் ..! நன்றி ..!

என் படைப்புகள்
மு முருக பூபதி செய்திகள்
மு முருக பூபதி - மு முருக பூபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Apr-2020 11:10 am

இருளில் இருந்து
இனி
நம்பிக்கையோடு
புதிய வெளிச்சம்
பிறக்கட்டும்.....!

நேற்று வரை எப்படியோ
இனி இதயத்தில்
நம்பிக்கையோடு
எதிர் கொள்வோம்
வருங்காலத்தை......!

வருடா...வருடம்
வெயிலின் தாக்கத்தால்
குடைகளை சுமந்து
வீதிகளில்
வலம் வந்த பாதங்கள்..
இன்று
வைரஸின் தாக்கத்தால்
வீட்டையே குடையாக்கி
வீட்டுக்குள்
முடங்கிக்கிடக்கின்றன...!

இன்று
சிறகடித்து
பறந்து திரிகிறது
சிட்டுக்குறிவிகள்...
இறகுகள் இருந்தும்
வானில் வட்டமடிக்க
இயலாமல்
காத்திருக்கின்றன
வான ஊர்திகள்......!

மனிதர்களையும்
வாகனங்களையும்
சுமந்து சுமந்து
களைப்படைந்த வீதிகள்
இன்று
ஓய்வெடுக்கின்

மேலும்

நன்றி கவின் சாரலன் அவர்களே.மூன்று ஆண்டுகளாக இந்த தளத்தின் பக்கம் நான் வராமலேயே இருந்து விட்டேன். தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் 05-Apr-2020 6:34 pm
இன்று வைரஸின் தாக்கத்தால் வீட்டையே குடையாக்கி வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கின்றன...! பூட்டிய கோவில்களில் இருந்த தெய்வங்களெல்லாம் மருத்துவர்களாய்.. செவிலியர்களாய்.. ஊழியர்களாய்..... மருத்துவ மனைகளில் கடவுள்களாய் காட்சிகள் தருகிறார்கள் ....! ------காலத்தை இன்றைய நிஜத்தை பிரதிபலிக்கும் அற்புதமான கவிதை பாராட்டுக்கள் பகிர்கிறேன் 05-Apr-2020 6:04 pm
மு முருக பூபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2020 11:10 am

இருளில் இருந்து
இனி
நம்பிக்கையோடு
புதிய வெளிச்சம்
பிறக்கட்டும்.....!

நேற்று வரை எப்படியோ
இனி இதயத்தில்
நம்பிக்கையோடு
எதிர் கொள்வோம்
வருங்காலத்தை......!

வருடா...வருடம்
வெயிலின் தாக்கத்தால்
குடைகளை சுமந்து
வீதிகளில்
வலம் வந்த பாதங்கள்..
இன்று
வைரஸின் தாக்கத்தால்
வீட்டையே குடையாக்கி
வீட்டுக்குள்
முடங்கிக்கிடக்கின்றன...!

இன்று
சிறகடித்து
பறந்து திரிகிறது
சிட்டுக்குறிவிகள்...
இறகுகள் இருந்தும்
வானில் வட்டமடிக்க
இயலாமல்
காத்திருக்கின்றன
வான ஊர்திகள்......!

மனிதர்களையும்
வாகனங்களையும்
சுமந்து சுமந்து
களைப்படைந்த வீதிகள்
இன்று
ஓய்வெடுக்கின்

மேலும்

நன்றி கவின் சாரலன் அவர்களே.மூன்று ஆண்டுகளாக இந்த தளத்தின் பக்கம் நான் வராமலேயே இருந்து விட்டேன். தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் 05-Apr-2020 6:34 pm
இன்று வைரஸின் தாக்கத்தால் வீட்டையே குடையாக்கி வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கின்றன...! பூட்டிய கோவில்களில் இருந்த தெய்வங்களெல்லாம் மருத்துவர்களாய்.. செவிலியர்களாய்.. ஊழியர்களாய்..... மருத்துவ மனைகளில் கடவுள்களாய் காட்சிகள் தருகிறார்கள் ....! ------காலத்தை இன்றைய நிஜத்தை பிரதிபலிக்கும் அற்புதமான கவிதை பாராட்டுக்கள் பகிர்கிறேன் 05-Apr-2020 6:04 pm
மு முருக பூபதி - மு முருக பூபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2013 8:05 am

அன்பே
நீ
புதுக்குடை
வாங்கிய பின்
உன்னில்
எத்தனை மாற்றங்கள் ...!

கதிரவன்
விடைபெறும்
மாலையில்
பூங்காவில்
நாம்
இனி பூத்திருப்போம் என்றாய் ....!

பூவாக
நீ
வருவாயென
பூங்கா வாயிலில்
நான்
காத்திருக்க....
நெஞ்சில்
புத்தகங்களை
இறுக
அணைத்து
புள்ளி மானாய்
துள்ளிக்குதித்து
ஓடோடி வந்தாய் ....!

பூங்காவில்
பூக்களிருக்க
புத்தகங்கள்
எதற்கு என்றேன் ...?

இவைகள்
புத்தகங்கள் அல்ல
உன்
இதயம் என்றாய் ...!

அழுத்தமாக
அணைத்துக்கொள்ளதே
மூச்சு
எங்கெங்கோ
முட்டி
மோதுகிறது என்றேன் ...!

நாணப்புள்ளிகள்
வைத்து
வெட்க கோடுகள்
இழுத்து

மேலும்

நன்றி....! 23-Oct-2013 9:22 pm
அருமை தோழா..... அருமை ....... 15-Oct-2013 10:22 pm
nantry ayya 09-Oct-2013 8:40 am
படிக்கப் படிக்க ஆசை முடிக்க மனமில்லை! 07-Oct-2013 12:29 am
மு முருக பூபதி - மு முருக பூபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2012 9:04 am

பசுமை மரங்களின்
மடியில் இலைகளின் மரணங்கள்...!

பூமித்தாயின் மடியில்
வீழ்ந்து கிடக்கும்
இலைகளுக்கு
சருகுகளின் சலசலப்போடு
பூக்கள் நடத்தும் இறுதி மரியாதை...!

மீண்டும் பூப்பூக்க
தன்னம்பிக்கை கிளைகளோடு
நிர்வாணமாய் நிற்கும் மரங்கள்...!

வேடிக்கைபார்க்கும்
உறவுகளாய்
பசுமை மரக்கிளைகளில்
அமர்ந்து கும்மாளமிடும்
ஹனிமூன் பறவைகள்...!

மரங்களுக்கு மட்டுமா
இது
மனிதர்களுக்கும்தான்...!

நான்குபேர் தோள்களில் நான்பயணிக்க
எதிரே
சாம்பிராணி வாசனையோடு
சாமரம் வீசிவரும் ஐயர்
பல்லக்கில் பவனிவரும் கடவுள் ...!

என் மீதும்
பல்லக்கில் கடவுள் மீதும்
கிடக்கும் பூக்க

மேலும்

உங்கள் பாராட்டுகள் என் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கும்...நன்றிகள் 05-Mar-2012 11:01 pm
அருமை 05-Mar-2012 4:25 pm
நன்றி தோழரே, 04-Mar-2012 10:43 pm
அற்புதம் தோழரே, சிறப்பான சிந்திப்பு..!! 04-Mar-2012 10:03 am
மு முருக பூபதி - மு முருக பூபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2012 6:31 am

இமைச்சிறகுகளை
மத்தாப்புகளாய்
சிமிட்டிக்கொண்டு
ஒரு தேவதை
புள்ளிமானாய்
துள்ளிக்குதித்து
ஓடி வருகிறாள் பட்டாசுகள் வாங்க...!

வாலிப இதயங்களில்
பறந்தும்
பூமியில் நடந்தும்
அவள் வருகையில்
ஆயிரம் பட்டாசுகளின்
வான வேடிக்கையில்
துள்ளிக்குதித்து
விளையாடுது வாலிப மனசுகள் ...!

கூந்தலில்
தூரி கட்டி விளையாடும்
மல்லிகை மொட்டுக்களும்
தேவதையின்
முக அழகை ரசிக்க
மதில்மேல் பூனையாய்
காத்துக்கிடக்கிறது
அவள் பளிங்கு தோள்களில் ...!

தேவதையே
உன் தோள்களிலிருந்து
நீ முன்
தூக்கிப்போடும்
கூந்தலோடு
மல்லிகை மொட்டுகளையும்
சேர்த்துக்கொள்
அவைகளாவது
அருகிலிருந்து

மேலும்

ஹா ஹா ஹா அதுக்குக்தானே உசுப்பிப் பேத்தி பாக்குறம் நாங்க! எழுதித் தள்ளுங்க எங்கப்பக்கம், சேத்து வச்சுக்கறம் படைப்பும் கருத்து பரிமாற்றங்களும் அருமை 13-Nov-2012 2:48 pm
"வெடிச்சா" திருத்தி வாசிக்கவும் தோழரே ..! 10-Nov-2012 6:41 am
ஆமாம் ..ஆமாம் ..தேவதை பட்டாசு வாங்கிட்டு போய்ட்டாங்க... அவங்க வெடிச்ச தீபாவளி வந்தாச்சு ...! 10-Nov-2012 6:39 am
அடடா! தீபாவளி வந்துருச்சு போல... 10-Nov-2012 12:43 am
மு முருக பூபதி - மு முருக பூபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2013 9:17 am

கிராமம் இருக்கிறது
தென்றல் தான் இல்லை ....!

ஆலமரத்திண்ணைகள்
அம்மணமாய்கிடக்கின்றன
அமர்ந்து பேசே
ஆட்கள் தான் இல்லை ....!

குளமுண்டு
குட்டைகளுண்டு
குளிப்பாட்ட
மது மட்டுமே உண்டு .....!

வயலும் வரப்புமுண்டு
வானொலியில்
வயலும் வாழ்வுமுண்டு
இங்கு
ரசித்துப்பார்க்க
பசுமை தான் இல்லை ....!

மயிலாட
முயலோட
மான்களும் ஓட ....

குயில்கள் கூவி
காகங்கள் கரைந்து
கிளிகள் பேசி மகிழ்ந்த
எங்கள்
கிராமத்து நந்தவனத்தில்
இன்று
மனிதன் மட்டுமே
தள்ளாடி தள்ளாடி
நடை பழகுகிறான் .....!

முகங்கள் இருக்கிறது
முகவரிகள் தான் இல்லை ....!

அந்நிய தேசத்தில்
அகதிய

மேலும்

உண்மை நண்பரே ...! 18-Sep-2013 9:57 pm
அருமையான படைப்பு.... கிராமங்கள் எல்லாம் நகரமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் உலகம் நகரமாக மாறுகிறதா இல்லை நரகமாக மாறுகிறதா என்று தான் யோசிக்க வேண்டி இருக்கிறது ! கிராபிக்ஸ் சித்திரங்கள் மட்டும் கிராமங்களைக் அழகாகக் காட்டிக் கொண்டிருகிறது ! 18-Sep-2013 9:41 pm
தங்களின் கருத்து பதிவுக்கும் வருகைக்கும் நன்றி ..! 18-Sep-2013 9:26 pm
"வயலும் வரப்புமுண்டு வானொலியில் வயலும் வாழ்வுமுண்டு இங்கு ரசித்துப்பார்க்க பசுமை தான் இல்லை ....!" பசுமை மட்டுமா இல்லை. வயலே அல்லவா காணாமல் போய்விட்டது. கற்பனைகளிலும் கனவுகளிலும் தான் கண்டு மகிழ வேண்டும் இவை அனைத்தையும். நல்ல படைப்பு. 16-Sep-2013 10:40 pm
மு முருக பூபதி - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2017 1:19 pm

நீ வைத்த
கருவாட்டுக் குழம்பில்
காதல் வாசம்.......!


**

உன் ரயிலில்
நான் சக பயணி.
என் ரயிலில்
நீயே பயணி..!


**

அதிகாலை கூந்தல் முடிச்சில்
சிக்கிக்கொண்ட என் மீசையை முறுக்கும்
அவளோடு நான் காதல் வசம்.
அது அவ்வளவும் மோக வாசம்.

**

பசிப்பது போல
வலிக்கிறது உன் நினைவு.

**

எனக்கான வாழ்க்கையில்
திரைக்கதையை நீ எழுதாதே..!
உனக்கான கதையை
நான் எழுதமாட்டேன்...!

**

என் நூலகத்தில்
நீ வாசிக்கப்பட்ட புத்தகம்.

**
என் தலையெழுத்து
ஓர் அந்தரங்க கவிதை

**

ஒரு தனியறை
ஒரு மேஜை
ஒரு பேனா
ஒரு நாள்
ஒரு நான்
ஒரு கவிதை
ஒரு வாக்குமூலம்
ஒரு மரணம்

***

உன் இதழ்

மேலும்

நல்ல வரிகள் வாழ்த்துக்கள் 10-Feb-2017 6:37 am
அருமையான வரிகள் ... வாழ்த்துக்கள் 25-Jan-2017 11:41 am
நன்றி தோழா 05-Jan-2017 5:06 pm
அடடா..... நன்றி தோழா 05-Jan-2017 5:06 pm
மு முருக பூபதி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2017 2:38 am

வானத்தின் மறுபக்கம்
நீளமாகப் பாய்கின்றக்
கனவுக்குதிரைகளின் கால்களில்
கடிவாளம் இடமுடிவதில்லை.

பூமியைப்போல் புராதனம் மிக்க
வேற்றுக்கிரகமொன்றில்
எப்போதோ வாழ்ந்திருந்த
தடயங்களை தேடி விரைகின்றக்
கனவுக்குதிரைகளின் நித்திரை பாதைகளில்
கட்டாயத் தடைபோட முடிவதில்லை.

இலட்சியமில்லாமல் போராடத்தொடங்கி
லத்தி அடிவாங்கி காயப்பட்ட
அப்பாவிகளைப் போலவே
வெற்றியை மட்டும் தேடி விரைகின்ற
கனவுக் குதிரைகளை அடக்குவதென்பதில்
ஜல்லிக்கட்டுக்கான பீட்டாவைபோல
இன்னொன்று முளைத்துவிடாத
அவதானத்துடன் சீறிப் பாய்கின்றன
அவைகள்.

மரணமென்னும் முற்றுப்புள்ளி
வாழ்க்கைக் கவிதைக்கு வைத்த
முன்னொரு

மேலும்

ஒரு ஆகாயத்தை வைத்துக் கொண்டு கதிரவன் முதல் நிலவு,தாரகைகள் என்று பல கோடி அழகியல்கள் சண்டையிடுகிறது.அதனை போல் குறுகிய காலத்து வாழ்க்கையில் எத்தனையோ முடிவில்லா விதிகளை நோக்கி மதிகள் நகர்கிறது அல்லவா 09-Feb-2017 5:29 pm
நன்று + நன்றி தோழரே 28-Jan-2017 10:05 am
ஆண்களின் அதிகாலை கனவுகளை அதிகம் கலைத்தது மனைவிகளின் அதிகார குரல்கள் தானே ...? வேலைகளின் காத்திருப்பும் விடியற் காலை சேவலாக கனவுகளை களைத்து விடுகிறது....! இனியாவது லட்சிய குதிரைகளை பகலில் ஓட்டிப்பார் ப்போம் ......! 27-Jan-2017 5:14 am
மு முருக பூபதி - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2017 7:15 pm

​​பொங்கி எழுந்ததும் நாடகம் அல்ல
பொறுமைக் காத்ததும் பொய்மை அல்ல
கடலெனத் திரண்டதும் காசுக்காக அல்ல
உரிமைக்குப் போராடியதும் சுயநலம் அல்ல
பெண்கள் பெருகியதும் அழைப்பால் அல்ல
குரல்கள் ஒலித்ததும் திரைமறைவில் அல்ல
உணர்ச்சிப் பெருக்கும் கற்பனையானது அல்ல
உலகத்தமிழர் இணைந்தது காட்சிக்காக அல்ல !

அரசுகள் பணிந்ததும் இதுபோன்று அல்ல
நாட்டையே உலுக்கியதும் நடந்தது அல்ல
உலகமே வியந்து நோக்கியதும் அல்ல
உள்ளங்கள் அதிர்ந்ததும் பொய்யும் அல்ல
இனமானம் காத்ததில் தோல்வியே அல்ல
தன்மானம் இழந்தவர்கள் தமிழரே அல்ல !
முடிவல்ல இதுதான் ஆரம்பம் அறிந்திடுக
நாளையத் தலைவர் இவர்களில் ஒருவரே !

( அல்ல

மேலும்

உண்மைதான்..ஒற்றுமையில் இணைகின்ற கூட்டம் நிச்சயம் விரைவில் இன்னும் பல சாதனைகள் செய்யலாம் 30-Jan-2017 7:18 pm
சீடர்கள் காத்திருக்கும் போது ஒரு தலைவன் நிச்சயம் உதயமாவான் ,,,! புதிய சமுதாய விழிப்புணர்வால் புத்துணர்ச்சி பெறட்டும் தமிழகம் ...! 27-Jan-2017 5:01 am
ஆம் ஐயா, முடிவல்ல ஆரம்பம் - மு.ரா. 26-Jan-2017 9:16 pm

தமிழர் முன்னேற்ற கழகம் துவங்கப்பட்ட வேண்டும்.  உலக தமிழர்களை ஒத்த உள்ளம்  கொண்டவர்களை இணைக்க வேண்டும்  அதற்கு ஓர் நல்ல தலைமை உருவாக வேண்டும் ..

மேலும்

மு முருக பூபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2017 8:59 am

ஆனி வரை
விதைகள் சேகரித்து
விதைத்து மகிழ்ந்த
ஆடிப்பட்டமும்
அறுந்த பட்டமாய்
காணாமல் போயிற்று ....!

மழை வருமென
விதைத்த கொஞ்சமும்
குற்றுயிராய் தவித்து கிடக்கிறது ...!

ஐப்பசியும் கார்த்திகையும்
அடை மழைக்கு
விடுமுறை கொடுத்து
விடைபெற்று சென்று விட்டது ....!

மார்கழியிலாவது
பனியோடு மழையும்
வருமென காத்திருந்த
உழவனின் விழிகளுக்கு
கண்ணீரே பரிசாயிற்று .....!

பொங்குகிற
பொங்கல் பானையாய்
உழவனின் உள்ளம்
கொதித்து கிடக்கையில்
எப்படி சொல்லுவேன்
உழவனுக்கு வாழ்த்து,,,?

மேலும்

தண்ணீரை கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு ,,,அதனை கொடுக்கும் கடமை அரசுக்கு உண்டு .... இதனை மக்களும் அரசியல் வாதிகளும் மறந்ததன் விளைவை அனுபவித்து கொண்டுள்ளோம் .. 28-Jan-2017 8:46 am
வீணாகும் தண்ணீ ரையும் தர மறுக்கும் அரசியல்வாதிகளும் இந்தியர்களா என்ற ஐயம் ஆறறிவு உள்ள அனைவருக்கும் ஏற்படும். 27-Jan-2017 8:10 pm
தன்னையும் தான் இழந்த நீராதாரங்களையும் உழவன் உணரும் வரை வருத்தம் தான் வாய்க்காலாக ஓடிவரும் ...! 27-Jan-2017 4:54 am
தமிழன் தானே திருந்தினால் தான் உண்டு ...! யாரை பார்த்தும் திருந்தும் குணம் இல்லை அய்யா ...! மேற்க்கே வீணாகும் தண்ணீரை கிழக்கே திருப்ப விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ,, மாணவ்ர்கள் மத்தியில் ..! தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா ..! 27-Jan-2017 4:51 am

கதிரவனின் கரங்கள்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (137)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (137)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா

இவரை பின்தொடர்பவர்கள் (137)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே