செ நிரஞ்சலா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : செ நிரஞ்சலா |
இடம் | : களுத்துறை(இலங்கை) |
பிறந்த தேதி | : 15-Dec-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 371 |
புள்ளி | : 162 |
நான் ஓர் ஆசிரியையாக பணி புரிகிறேன்.. தென்கிழக்கு பல்கலைகழகத்தில் (வெளிவாரி )கலைமாணி பட்டப்படிப்பை தொடர்கிறேன்.
அன்பே
தேடிக்கொண்டுதான் இருக்கின்றேன்.
என்னை சேரும் முன்பே நீ
புதைந்து போன ..
உன் கல்லறையை..!.
இரண்டு பூக்களை வைத்து கண்ணீர் சிந்துவதற்கல்ல.. என் தேடல்..
இதயத்தில் ஒரு முறை என்னை நினைத்து பார். உனக்கே புரிந்திருக்கும்..
கவிதை
காதலுக்கு விதை
கனவுக்கு விருட்சம் ..
கவிதை
நினைவுகளின் இருப்பிடம்
பொய்களின் புகலரண்..!
கவிதை
உண்மைகளின் ஊமை பாஷை
இதயங்களின் கூக்குரல் ஓசை...!
கவிதை
சிலருக்கு தான் கற்பனை பிதற்றல்
ஆனால் கவிதை
பலருக்கு
கண்ணீரின் மொழி,
இவள் நிலா
சட்டென
நொறுங்கி போகும்
இதயத்துடன் தான்
நான் இன்னும்
வாழ்கிறேன்...
ஒட்டிக்கொள்ள
உன் நினைவு இருக்கின்ற
தைரியத்தில்...!!
இரு விழி மூடி
இதயத்தோடு பேசு..
இரக்கம் அற்ற உன்
இதயம்.. ஈரம் கொண்டு என்
இதயம் நனைத்த.. அந்த
இரக்கமற்ற பொழுதுகளின்..
இறுக்கத்தை நினைக்கட்டும்..
என் முழு இதயத்தோடு நேசிக்கிறேன் உன்னை....
என் முழு ஆத்மாவோடு காதலிக்கிறேன் உன்னை.....
எனக்குத் தெரியும்...,
என் மீது நம்பிக்கை இல்லை உனக்கு என்று.!
ஆனால்,
என்னை நம்பு.....
எனக்குத் தெரியும்....
என் காதல் ஆழமானது...
என் அன்பு உண்மையானது.....
அது எப்போதுமே மங்காது....
பொய்க்காது....
அதனால், இப்போதே என்னிடம் சொல்.....
உண்மையைச் சொல்.....
நீ இன்னும் என்னை உண்மையாகக் காதலிக்கிறாயா??.....
கடவுள் அளித்த
மிகப்பெரிய சாபம்...
நீ
காதலின் ஆழம் ....
கண்நீர்விடும்போது ....
மற்றவரும் சேர்ந்து ....
கண்ணீர் விடுவதில்லை ....!!!
உயிர் விட்டு போகும் .....
உடலுக்காக விடும் ....
கண்ணீரை விட கொடுமை ...
உயிராய் காதலித்தவர் ,,,,
விட்டுப்பிரியும்போது ....
ஓரக்கண்ணில் வடியும் ...
சிறுதுளி கண்ணீர் ....!!!
^
காதல் சோகக்கவிதை
கே இனியவன்
நினைவே நீ இல்லாமல் நித்தம் நித்தம் என் இதயம் இரத்தம் சொட்டுதடி..!
தொட்டு பார்கிற தூரத்துல நீயும் இல்லை..!
உன்னை விட்டு விடவும் மனசு இல்லை..!
நீ விட்டு போன தொலைவினீலே மனம் சொட்டு சொட்டா வழியிதடி..!
உன் நினைவு எனும் குருதியிலே...!
பயணிக்கும் இடமெல்லாம்
கல்லூரி ஆலயமென
அங்கும் இங்கும் எங்கு
பார்த்தாலும் காதல் இளஞ்சோடிகள்
அவர்கள் அளித்ததோ என்னவோ
அறியாமலே இவளுக்குள்ளும்
உண்டாயிற்று ஓர் தாக்கம்..........
சுற்றி திரிந்து சுற்றம் மறந்து இங்கு
செல்லிடைப்பேசியில் உறவாடும்
உருவங்கள் நித்தம் நித்தம் தென்பட
இவளுக்குள் தென்பட்டவையெல்லாம்
ஏதோ இவளரியாதொரு ஏக்கம்..........
இல்லத்தின் இன்னல்கள் ஒருபுறம் தென்பட
இதயத்தின் ஏக்கங்கள் மறுபுறம் மன்றாட
அகிலத்தின் காட்சிகள் இவளுள் நிலைபெற
அன்னிலையில் கண்டேன் என்னவனே ! ஆம்......
உன்னை அக்கணம் கண்டேன் என்னவனே !!
நான் காணும் உனது விழிகளின் ஏக்கம்
இன்னால்வர
நீ தொலைந்துப் போன
இராத்திரிகளில்
நான் வெறும் ஈசல் தானோ...?
விடிந்ததும் செத்துக்கிடக்கிறேன் ...!
சொர்க்கத்தில்
கறை ஒதுங்கவே
உன் நினைவினில்
தத்தளிக்கிறேன்
உன் பார்வையில் தான்
ஒளிச் சேர்க்கைச்
செய்துக் கொள்கிறது
என் உயிர்ச்செல்கள்
சில நாட்களாக
உன்னில் நான் இல்லை
என்னில் உன்னை தவிர
வேறெதுவும் இல்லை
உன்
நினைவுத் தூண்டில்
சிக்கிக்கொண்ட
மீன் நான்
நான் உன்னை
குறைச்சொல்ல மாட்டேன்
நீ அழகின் கற்பனை
நீ தலை துவட்டியத் துண்டில்
தங்கிவிட்ட முடியாய்
உன்னிலே தங்கிச் சிதைகிறது
என் உயிர்
அன்று நீதான் எனக்கு
முதல் குழந்தை என்றாய்
இன்று தான் புர
பிறையாய் மண்ணில் பிறந்து
குறையாய் ஏதும் சிறிதுமின்றி
நிறையாய் அழகம்சங்கள் அமைந்திட
தரைநிலவாய் சொலிக்கும் ஒளிமகளவள் ...
வானம் அவள் எழில்புகழின்
பொலிவான பொழிவதனில்
தனக்கும் பங்கு பெற
வான் நிலவென பட்டமிட்டது
தேனும் உலகப்பூக்களுடன்
ஒன்றுகூடி கலந்து பேசி
தீர்மானம் செய்துகொண்டு
தேன் நிலவென பட்டமிட்டது
கள்ளியாம் வெள்ளியும் கூட
அல்லியவள் அழகுப்பெயருடன் அவள்பெயரையும்
சொல்லிச்சொல்லி அழைக்கப்பட வேண்டி
வெள்ளிநிலவென பட்டமிட்டது
இப்படியாய் பட்டு நிலவின்
பட்டப்பெயர்களுக்கான பெயர் காரணங்களை ஆராயந்தறிந்தேன்
பால் நிலவெனும் பெயருக்கான காரணம் மட்டும்
வானவில்லை விஞ்சிடு
தாய் தந்தை இட்ட பெயர் மாறி
கோடீஸ்வரன் என்ற பெயர் வாங்கி
நேரம் காலம் மறந்து நின்று
வங்கி எல்லாம் பணம் நிறைத்து
கோடி ரூபாய் மதிப்பினிலே வீடு கட்டி
குளியலிட நீர் தடாகம் ஒன்று கட்டி
சொகுசான வாழ்வு கொண்டு
செல்வந்தன் என்று பெருமை இட்டு
தேடிவந்தோர் தெருவிலே காக்கவைத்து
தெனாவெட்டாய் திறத்தி விட்டு
நோட்டுகள் மட்டும் தொட்டு
நாணயங்கள் தட்டி விட்டு
அறு சுவை உணவு மட்டும்
ஆறு நேரம் உண்டு வந்து
பல கோடிகளில் ஊர்தி வாங்கி
பகட்டாக உலகம் சுத்தி
பஞ்சு மெத்தை மேல் உறக்க மிட்டு
பட்டாடடை மட்டும் அணிந்த என்னை....
அவர் என்ற மரியாதையை போய்
அது என்று அழைத்துக்கொண்டு