வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்
இடம்:  sydney
பிறந்த தேதி :  17-Mar-1944
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Sep-2013
பார்த்தவர்கள்:  86261
புள்ளி:  8181

என்னைப் பற்றி...

நான் ஒரு ஓய்வுபெற்ற விஞ்ஞானி; கவிதை,கட்டுரை எழுதுவதில் ஆர்வம் மிக்கவன்;இசையிலும் ஓரளவு தேர்ச்சிப் பெற்றவன்; புவி இயல் விஞானத்தில் ஜெர்மனியில் பி எச் டி பட்டம் பெற்றவன் .

என் படைப்புகள்
வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் செய்திகள்

காயாம்பூ வண்ணத்தான் கதிர்மதிய முகத்தான்
மாயன் மணிவண்ணன் ஆயர் குலத்தில்
வந்துதித்தான் வேய்ங்குழல் ஊதி வெகுநேர்த்தியாய்
ஆவினங்கள் மகிழவே கானகம் சென்று
மேய்த்து வந்தான் ஆயர் மகளிர் மனம் எல்லாம்
நிறைந்து மகிழ்ந்திடவே குரவைக் கூத்தும் ஆடினான்

மேலும்

மண்ணில் மதிமுகத்தாள் வலம் வந்தாள்
எண்ணிலா எழில் கொண்ட வான்நிலா
என்னவள் அவள் முகம் கண்டு
நாணியதோ மேகத்தின் பின்னே மறைந்தது
மங்கை அவள் போகும் வரைக்
காத்திருந்ததோ இதோ மீண்டும் உலா
வருகின்றதே இன்பம் பொங்கும் வெண்ணிலவாய்

மேலும்

எல்லாம் தருபவள் அதைத்தாண்டி அன்பில் எல்லையில்
இருந்து தன்னையே தந்திடவும் தயங்கா
அற்புத கற்பகவிருக்ஷம் தாயென்னும் தனிப்பெரும் தெய்வம்

மேலும்

நமக்குப் பின்னே நம்மோடும்
நமக்கு முன்னேயும் முடிவில்லாதது.
காலம்

மேலும்

தளதள வெனநடக் கும்தளுக்கு நடைமினுக்கே
பளபள வெனபட்டுச் சேலை மினுமினுக்கே
வளவள வெனஎன்ன வேற்றுமொழி பேசுகிறாய்
மளமள வெனதமிழில் மானேநீ பேசாயோ

----அடிதோறும் பலவாய்ப்பாடுகள் அமைந்த கலிவிருத்தம்

தளதள வெனநடந்தி டும்தளுக்கு நடைமினுக்கே
பளபள வெனபட்டுச் சேலையாடை மினுமினுக்கே
வளவள வெனஎன்ன வேற்றுமொழி பேசுகிறாய்
மளமள வெனதமிழில் மானேநீ பேசாயோ

தள பள வள மள என்ற ஒரே அடி எதுகையும்
அடிதோறும் விளம் காய் காய் காய் எனும் ஒரே வாய்ப்பாட்டில் அமைந்த கலிவிருத்தம்

சீர் மோனை ----1 3 ஆம் சீரில் த டு ப சே வ வே ம மா

மேலும்

ஆம் அழகிய பாடல் மீண்டும் கேட்டுப்பார்க்கிறேன் கட்டுடல் குமரிக்கு இரட்டைக் கிளவி பாடல் அழகிய கருத்து மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய வாசவன் 14-Oct-2024 4:30 pm
நண்பரே கவின் சாரலன்.....இந்த உங்கள் கவிதை அன்று கவியரசு எழுதிய 'கட்டி தங்கம் வெட்டி எடுத்து... அவள் தள தள வென்று ததும்பி நிற்கும் பருவமடா....பாடலை நினைவுகூர வைத்தது.....அந்த பாடல் முழுவதும் ரெட்டைக் கிளவிகள் ததும்பி நிற்கின்றன.....உங்கள் பாடலிலும்.... அசத்தல் போங்க....ரசித்தேன் 14-Oct-2024 3:38 pm

வயலோடை மீன்கள் விழியினில் ஆட
வயல்வரப்பில் வாளிப்பாய் வஞ்சி நடக்க
கயல்நீந்தா மல்கண்கள் கொட்டாது பார்க்க
கயல்விழி யாள்சிரித் தாள்

---- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

மாற்றிவெட்ட ஓடையை நானுமிவ ளைப்பார்த்து
மாற்றான் வயல்போன நீர்

---ஒரு விகற்பக் குறள் வெண்பா

பார்த்துப்பார்த் துச்சிரித்தாள் பாவை எழில்கயலி
நாத்துநட்டோ ரும்சிரித் தார்

---ஒரு விகற்பக் குறள் வெண்பா
பார்த்து ஆசிடை எதுகை நாத்து க்கு

மேலும்

அருமை அழகாகச் சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி மனமுவந்த நன்றி கவிப்பிரிய வாசவன் 26-Aug-2024 2:12 pm
'கட்டோடு குழல் ஆட ஆட.....கண்ணோடு மீன் ஆட ஆட' பழைய கவியரசர் கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வந்தது நண்பரே கவின் சாரலன்...... நாட்டுப்புற சூழ்நிலை....வயல்....நாற்று நடுதல்...கயல் விழியால் இவை தத்ரூபமாய் கண்முன்னே......வளமான கவிதை....வாழ்த்துக்கள் 26-Aug-2024 12:40 pm

கொடியில் படர்ந்த மல்லிகைப் பூவில்
கொடி இடையாள் சிரிப்பின் பல்வரிசைக்
கண்டேன் வாடிய மல்லிகைப் பூவில்
என்வருகைக்கு காத்து காத்து நான்
வாராது போக வாடிய அவள் முகம் கண்டேன்
மலரும் மங்கையும் ஒரு ஜாதி

மேலும்

மிக்க நன்றி கவி பாலை பாண்டி 25-Aug-2024 9:16 am
மல்லிகை பூவில் கொடி இடையாள் சிரிப்பின் பல் வரிசை... நன்று ...நல்ல கற்பனை வளம் ஐயா. 24-Aug-2024 7:42 pm

வானமெனம் நீலநிற வண்ணவெளி வெண்ணிலா
தேனமுதை சிந்திட பேனா எடுத்தபோது
நானெழுத எச்சொல்லும் நல்கவில்லை நற்றமிழ்
மானெ ழுதியவிழி நீவந்தென் முன்னின்றாய்
தானாக வந்ததுவெண் பா

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

மேலும்

வானமெனும் தேனமுதை எதுகைகளோடு இயைந்து ஒலிக்கிறது பேனா --பயன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட pen இன் தமிழ் வடிவடிவச் சொல் எழுதுகோல் திருக்குறளில் உள்ளது ஆனால் அது பெண்கள் கண்ணில் மை தீட்டப் பயன் படுத்திய சிறுகோல்.--எழுத அல்ல . ஓலைச் சுவடி காலத்தில் எழுத்தாணியைத்தான் எழுதப் பயன்படுத்தினர் எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து எழுதுங்கால் கோல்---மை தீட்டும் கோல் தமிழ்ச் சொல்சார் கருத்து மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய வாசவன் 16-Aug-2024 3:55 pm
பெண்களின் கண்ணிற்கு அப்படியோர் மகத்துவம்......ஹும்ம்ம்ம். நணபரே.....இரண்டாம் அடியில்.....'பேனா' வுக்கு பதில் 'மைக்கோல்' என்றிருந்தால் பேனா தமிழாகி இருக்கும் என்று நினைத்தேன் எப்போதும்போல் அருமையான கவிதை கவின் சாரலன் எழுதுகோல் தந்தது மகிழ்ச்சி..... 16-Aug-2024 3:03 pm

நான் கனவிலும்
நினைக்காத ஒன்று
என்னவாகிய நீ
வெறும் கனவாக
மாறிடுவாய் என்று...

மேலும்

மிகவும் அருமை 14-Apr-2020 8:52 pm

விலகி போ ......
என்று நீ
சொல்ல.....
உன் கண்கள் காணாத
தூரத்தில்...
நான் விலகி நின்றேன்....
உனக்கு தான் தெரியுமா..??
விலகி நின்றது என் தேகம்
மட்டும் என்று....
உன் உள்ளம்
உணரும் தூரத்தில் நான்
இருக்கிறேன்....
இருந்தும் உணர மறுப்பதேன்....???
தொலைந்து போனதா....????
நீ என்மேல் கொண்ட உண்மை அன்பு...???

மேலும்

நன்றி.... 21-Aug-2018 11:34 am
பிரிதலில் கூடும் புரிதலும் தொலைவினில் சேரும் நெருக்கமும் நினைவுகள் மட்டுமே சொல்லி கொண்டே இருக்கும் உணர்வுகளின் தடயங்களை வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் 21-Aug-2018 10:45 am
காதல் அழிவதில்லை- நீ வேண்டாம் என்றவுடன் என் கால்கள் சென்றதடி உன்னைவிட்டு தூரம் தூரம் என் மனம் மட்டும் நின்றதடி உந்தன் ஓரம் ஓரம் வேண்டாம் இந்த துயரம் துயரம் என்று வேண்டும் வேண்டும் என்றேன் மரணம் மரணம் மாண்டும் மறையவில்லை உந்தன் நினைவே நினைவு நீதானே என் கல்லரையில் நான் காணும் கனவே கனவு - அழுகும் உடலுக்கு தெரிவதில்லை காதல் அழிவதில்லை என்று... சாகும் காதலர்க்கு தெரிவதில்லை காதல், கல்லரைக்குச் சொந்தமில்லை என்று... ----கல்லரைக் காதலன் 20-Aug-2018 2:44 pm

நீலவான வீதியிலே தவழ்ந்து வந்து
***நெஞ்சத்தை முழுவதுமாய்க் கொள்ளை கொள்ளும் !
கோலயெழில் வட்டநிலா கண்ட பின்னர்
***கொஞ்சிவரும் பாக்களிலே உள்ளம் துள்ளும் !
நூலளவே வளைந்திருக்கும் பிறையைப் பெண்கள்
***நுதலுக்கும் உவமையாகக் கவிதை சொல்லும் !
பாலமுதம் கிண்ணத்தில் பிசைந்து வைத்துப்
***பாலகருக் கூட்டுகையில் நிலவே வெல்லும் !!

காதலர்க்கு நித்தமொரு வடிவம் காட்டும்
***கண்கலங்கும் கன்னியரின் கவலை தீர்க்கும் !
தூதனுப்பும் காதலனின் துடிப்பைக் கூறும்
***துணையின்றித் தனித்திருக்கும் தவிப்பைச் சொல்லும் !
மாதமொரு நாள்மட்டும் போகும் ஓய்வில்
***வருந்தாது வளர்ந்தபின்னர் உருவின் தேய்வில் !
மூதறி

மேலும்

போற்றுதற்குரிய நிலவு இலக்கியம் --பாராட்டுக்கள் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ இயற்கை வருணனைகளில் முதலிடம் வகிப்பது நிலா. . நிலவின் ஒளி - கருணை,காதல்,அமைதி, கற்பனை ஆகியவற்றின் சின்னமாக கருதப்பட்டது அழகின் வருணனைக்காக மட்டும் அல்லாது, நிலவில் மனிதன் கால் பதிப்பான் என்பதை " கன்னியராகி நிலவினில் ஆடி களித்ததும் இந்நாடே" என்று அன்றே கனவு கண்ட பாரதி . 20-Jun-2018 5:25 pm
எண்சீர் விருத்தங்கள் (காய் காய் மா தேமா அரையடிக்கு) அனைத்தும் இனிமை. 19-Jun-2018 4:16 pm

பெரியோர் மூலம் பெற்ற பரிசா?
பிறக்கும் போதே எழுதிய முடிச்ச?
எதுவாயினும் இனி நாம்
இருவரும் ஒருவரானோம்,

பெண்ணே!
உன்கண்களில் இனி கண்ணீர் எதற்காக,
உனக்காக இனி இருக்கும் அன்பின் வெளிபாடாக ,


உன் இறந்தகாலம் எனக்கு தேவையில்லையடி
என் நிகழ்காலம் உன்னுடன் தொடர்கையில்,
நம் எதிர்காலம் என்றும் சிறக்குமடி
ஒருவரைவொருவர் புரிந்துகொள்கையில்,

காதலின் முழுமை
தொடக்கத்தில் இல்லையடி,
முதுமையில் உள்ளதடி,
நிச்சயம் நாம் பொறுவோம்
வா இருவரும் புதுபயணம் கொள்வோம் ......................

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (149)

😍தமிழ் அழகினி✍️

😍தமிழ் அழகினி✍️

வெள்ளகோவில்
Balaji kannan

Balaji kannan

திருச்சிராப்பள்ளி
Deepan

Deepan

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (151)

user photo

வேலணையூர் சசிவா

இலங்கை த/போ பிரான்ஸ்

இவரை பின்தொடர்பவர்கள் (166)

user photo

svshanmu

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே