சரவணா Profile - நல்லைசரவணா சுயவிவரம்தமிழ் பித்தன்
இயற்பெயர்:  நல்லைசரவணா
இடம்:  பட்டுக்கோட்டை.
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jan-2013
பார்த்தவர்கள்:  2895
புள்ளி:  2888

என்னைப் பற்றி...

உலகத்தில் பேசவைக்கப்பட்ட மொழி பேசுபவனல்ல... உலகம் பேசிய மொழி பேசுபவன்...

என் படைப்புகள்
சரவணா செய்திகள்
kavithasababathi அளித்த படைப்பில் (public) jayarajarethinam மற்றும் 17 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Feb-2016 12:06 am

“மௌனம் கசியும் பாறைகள்”
***************************************

அதிகாலைப் பனிமேடை
குருவிகளின் கூட்டிசையில்
கௌசல்யா சுப்ரபாதம்

*

பச்சைமலைக் காடு
காட்டையே கட்டியிழுக்கிறது
வனவாசியின் கூப்பிடுகுரல்

*

கள்மரத்துப் பானைகளில்
சொட்டுசொட்டாய் வடிகிறது
தோட்டக்காரனின் தாகம்

*

வலையில் சிக்காத கடல்மீன்கள்
சிக்கிவிடுகின்றன
அவர்கள் பாட்டில்

*

யுகங்கள் கடந்துபோய்விடவில்லை
நின்றயிடத்திலிருந்தே வாழ்த்தும்
அருவிகள்

*

மஞ்சள் குருதியில்
மினுங்கும் மேனி
பொன்அந்தி மாலை

*

ஓடைகள் நதிகளாவதை
மலைத்து ரசிக்கின்றன
கசியும் பாறைகள்

*

அமாவாசை

மேலும்

அமாவாசை இரவு எங்கு தவிக்கிறதோ பிள்ளை(யின்) நிலா .....அழகிய ஹைக்கூ வரிகளுடன்...இன்னும் படிக்கத் தூண்டும் தவிப்புடன்...அருமை 29-Mar-2016 11:14 am
அனைத்தும் மிக அருமை..! அழகு..! சிறப்பு..! 20-Mar-2016 7:12 pm
இனிமையான ஹைக்கூ வாழ்த்துக்கள் 06-Mar-2016 4:21 pm
நல்ல தேடல்கள்... இயற்கையோடு கொஞ்சம் உலவமுடிகிறது... குருவிகள் கூட்டிசையில் புதியசுரங்கள்.. என இருக்கலாமோ....சுப்ரபாதம் வேண்டாம் எனத்தோன்றுகிறது.. வனவாசியின் குரல்..அழகு சொட்டுசொட்டாய் தோட்டக்காரனின் தாகம் மனதுள்... கடல் மீன்கள், அருவி, கசியும் பாறைகள், நீந்தும் நதி, அழகு.. தவிக்கும் நிலா ...கங்கையின் தவிப்பு...நல்ல மீட்டல்... வாழ்த்துக்கள் நண்பரே.. 06-Mar-2016 1:09 pm
Kalaracikan Kanna அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 16 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Feb-2016 5:53 am

ஒவ்வொரு பெண்ணும்
புரிந்துவைத்திருக்கிறாள்
புருவமத்தியில் ஒரு கைக்கூவை.

நல்ல கைக்கூ கிடைப்பது ஒரு வரம்.
என் தவம் இன்னும் முடியவில்லை

இதோ நதிக்கரையில்
நானும் என் கூழாங்கற்களும்..
________________________ 💐💐💐


தவிப்புக்குரலெழுப்பியபடி
தனித்துப்பறந்தது
நாரையொன்று நிலவொளியில்
_________________________

வழியனுப்பும் போதெல்லாம்
வலி தந்து நகர்கிறது
ஒரு பிரியமான சன்னல்.
_______________________

தும்பியின்
சிறகில் கண்டேன்
ஒரு ஜோடி வானம்.
_______________________

கைகட்டியிருந்தால்
சிலுவைகள்
இல்லை.
_____________________

நேற்றிரவு கட்டிக்கிடந்த ஆடு
இன்று பந்தியில் அச

மேலும்

அனைத்தும் மிகவும் அருமை. 29-Mar-2016 3:08 pm
ஹைக்கூ மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள் ! 29-Mar-2016 3:06 pm
எல்லா வரிகளும் ரசிக்க முடிகிறது. நேற்றிரவு கட்டிக்கிடந்த ஆடு இன்று பந்தியில் அசைபோடுகிறது பலநூறு வாய்களால்.....வெகு அருமை 29-Mar-2016 11:00 am
மொழியை காற்றில் வரைகிறது ஊமையின் விரல்கள்- அழகு நேற்றிரவு கட்டிக்கிடந்த ஆடு இன்று பந்தியில் அசைபோடுகிறது பலநூறு வாய்களால்- சிறப்பு பலூன் விற்பவன் குறட்டை விடுகிறான் கலர் கலராய்- அருமை அனைத்தும் மிக அருமை... வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 6:08 pm
T. Joseph Julius அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 17 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Feb-2016 7:57 am

குன்றுகளுக்கு இடையில்
நடமாடும் நதியினில் தீ
விடியலின் மிளிர்ச்சி. -1

நடக்க நடக்கத்
தெரிந்து மறைந்தும் போகிறது
கானல் நீர் – 2

குருடன் காட்டும்
கோல் வழியில் இன்னொருவன்
திறந்திருக்கிறது சாக்கடை -3

முகச்சவரம் செய்தேன்
குளித்து எழுந்தும் போகவில்லை
மன அழுக்கு – 4

கடற்கரையில் காதலர்கள்
என் மனத்திரையில் ஓடியது
நீலப்படம். – 5

சிறுவன் கையில்
சிறிய கண்ணாடித் துண்டு
சுவற்றில் சூரியநடனம் -6

மனவலைகள் எழுந்து
நுரையாக கனவில் விழுந்து
காத்திருக்கிறது காமம் – 7

தூரத்து இடியொலி
வங்காள விரிகுடாவில் வேட்டொலி
ஈழத்துப் போர்..-8

கரியதொரு முட்டை
இருளில் ஆழ்ந்து உறங்க

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. 29-Mar-2016 4:38 pm
வார்த்தை செதுக்கல்கள் அருமை ! 29-Mar-2016 3:10 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. 29-Mar-2016 12:48 pm
வாழ்க்கையும், நடப்புகளும்...அழகிய ஹைக்கூ வரிகளாய் இங்கே... 29-Mar-2016 10:58 am
Kumaresankrishnan அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 20 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Feb-2016 1:58 am

நடமாடும் நதிகள் - 16  
----------------------------------------  

மொட்டை மாடியில்
ஓய்வெடுக்கிறது
நிலா.

------------------------------------------------------------

வாழ வேண்டும்   
சாவைத் தேடுகிறான்   
சங்கூதுபவன்.

------------------------------------------------------------

சாலையோர நடை   
தலை உரசும் பறவை   
விழிக்கிறது மூடநம்பிக்கை.   

------------------------------------------------------------

ஓரமாய் ஒதுங்கும் வாகனம்   
முதுமை இளமையாய்   
மண் குதிரையில் சிறுவன்.
   
------------------------------------------------------------

நடமாடும் நதி   
மூழ்கியெழும் 

மேலும்

இனிய கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே. 28-May-2016 8:06 pm
இனிய கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே. 28-May-2016 8:06 pm
இனிய கருத்திற்கு மிக்க நன்றி அக்கா 28-May-2016 8:05 pm
இனிய கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே. 28-May-2016 8:04 pm
சரவணா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2016 5:24 am

திரவங்களினாலான.....!


அழகாயிருப்பதாய்
மொழிகிறேன்...ஏறிட்ட
விழிகளுமாய் நானொன்றும்
அப்படியல்ல என
இமைகள் துடித்து
ஏற்கிறாய்..... !
திமிரோடிருப்பதாய்
மொழிகிறேன்....ஏறிட்ட
விழிகளுமாய் நானொன்றும்
அப்படியல்ல என
இமைகள் துடித்து
மறுக்கிறாய் ....! இரண்டுக்குமான
ஒற்றை வித்தியாசம்
ஒருதுளி கண்ணீர்.....!!!

காதல் பகிரும்
பொழுதெல்லாம் தளும்பித்
திரண்டிருந்த உன்
விழிகளோடு
பார்வைகளால் காமம்
துய்த்திருந்த நாட்களை
சொல்லிக்கொடுக்க சொல்
நம்
படுக்கையறைக்கு.....!


புதுமண நாட்களின்
என் மார்பு ஈரங்கள்
சொல்லிக்கொடுத்து விடும்...
என் வீட்டில் நீ
எப்படி இருக்கிற

மேலும்

இரண்டாம் முறையாய் முதலில் இருந்து காதலிக்கத் தோன்றுகிறதெனக்கு...!!! இரண்டாம் முறையையும் தாண்டி முதலில் இருந்து வாசிக்கத்தோன்றுகிறது எனக்கு. 19-Feb-2016 4:57 pm
நன்றி அண்ணா 18-Feb-2016 3:42 pm
சரவணா....அருமை....அழகு....ஆஹா....! 17-Feb-2016 5:39 pm
ஆஹா மிக அருமை நண்பா... எப்போதும் போல பல முறை படித்து விட்டேன்... காதலர் தின ஸ்பெசலாக சுட சுட இருக்கிறது... வளர்வோம் வளர்ப்போம்... 16-Feb-2016 4:14 am
சரவணா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2016 4:53 am

செழித்துப்படர்ந்திருந்தன
மைதானங்கள்...
பசியோடு ஓடிக்கொண்டிருக்கின்றன...
பந்தயக்குதிரைகள்.

எல்லா அடர்வனங்களிலும்
வழிதவறாது
பயணித்து விடுகிறது
ஒற்றையடிப் பாதை...

காதல் வாய்க்கப்பெறாதவர்களின்
நிலவறை அலமாரிகளுள்
இற்றுப் போகாமலிருக்கிறது ஒரு
கைக்குட்டை...!

கொன்றது மழை...
எப்படியும் பிழைத்திடுவோம்..
மிகச் சமீபமாகத் தேர்தல்...

நக்கீரனும் பாண்டியனும்
அறியாதே போயிருந்ததை
ஈசனுக்காவது தெரிவிக்கவேண்டும்...
மண்வாசனை..

அண்ணன் மகளைத்
தலைகோதி.. அக்காள் மகளிடம்
மீசை முறுக்கிவிடுகிறது...
பெண்ணியம்...

அடிமைகள்
ஆராதிக்கப் படுகிறார்கள்...
இன்னுமொரு இறகு
உதிர்த்துப் பறக்க

மேலும்

அனைத்தும் மிக அருமை...! காதல் வாய்க்கப்பெறாதவர்களின் நிலவறை அலமாரிகளுள் இற்றுப் போகாமலிருக்கிறது ஒரு கைக்குட்டை...! - அருமை 20-Mar-2016 12:19 pm
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி....!! 09-Mar-2016 5:27 pm
ஹைக்கூ தாெடர் கவிதை பாராட்டுக்கள் நன்றி 09-Mar-2016 2:47 am
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி. 25-Feb-2016 6:58 pm
ஆண்டன் பெனி அளித்த படைப்பை (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 14 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
07-Feb-2016 12:28 am

நடமாடும் நதிகள்.....பகுதி 2
>>>>>>>>>

முன்னுரை:
"நடமாடும் நதியொன்றை
கைகளில் அள்ளினேன்
விரலுக்கொன்றாய் நதிகள்"

.......அப்படி அள்ளியதில் கிடைத்த,
என் பத்து விரல்களின் வழியே பாயும் நதிகளைத்தான் காட்சிப் பிழைகள் (இன்றி/உடன்)

திசைக்கொன்றாய் கீழே வெவ்வேறு பெயர்களில் உலவ விட்டிருக்கிறேன்....
வாருங்கள் நதியாடுவோம்.....

1.கோனாகி
~~~~~~~~~~
இன்னுமா கண்டறியவில்லை
மந்தையில் தொலைந்த என்னை
எக் கடவுளும்.
*********

2. கருவாகி
~~~~~~~~~~
அப்பா அம்மாவுக்கான எழுத்தில்
வைக்க முடியவில்லை
ஒரேயொரு முற்றுப்புள்ளி....
******

3.ஊனாகி
~~~~~~~~~~
நூறு முத்தங்கள் தரு

மேலும்

வாழ்ந்த அதிக நாட்களுக்கு கூடுதலாக வேகிறது முத்திய ஆடு......என்ன சொல்ல? இயல்பாய் இத்தனை எளிமையாய்...அருமையான ஹைக்கூ வரிகள். 28-Mar-2016 11:24 pm
அனைத்து வரிகளும் அருமை. குறிப்பாக... இப்போதெல்லாம் கருத்தில் முரண்படுகிறான் நண்பன் என்னைச் சந்தேகிக்கிறேன் நான். 22-Mar-2016 2:03 pm
அனைத்தும் அருமை...! மரம் நடுதல் தவிர்ப்போர் மரம் வெட்டுதல் பழகலாமே சீமைக்கருவேல். - மிக அருமை வேரினை கருகவும், அழுகவும் வைக்கிறது வேளாண்மைக்குப் பெய்யாத மழை. - மிக சிறப்பு 20-Mar-2016 11:14 am
மொத்தமும் சிறப்பு. இருந்தாலும் வானாகி, மண்ணாகி இரண்டும் எனக்குள் ஆழப்பதிந்து நிற்கிறது. ஹைக்கூ தந்த தங்களுக்கு நன்றி. 27-Feb-2016 5:18 pm
JINNA அளித்த எண்ணத்தை (public) Kumaresankrishnan மற்றும் 8 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
05-Feb-2016 2:59 am

ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 3

==============================

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... 
வரும் சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...

நீங்கள் எல்லாம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கான தலைப்பு இதுதான்.... 

 நடமாடும் நதிகள் 

இந்த தொடரில் எழுத போகும் முதல் பட்டியல்:
****************************************************

 1. அகன் - (06-FEB-2016)
 2. ஆண்டன் பெனி - (07-FEB-2016)
 3. கவிஜி - (08-FEB-2016)
 4. ராஜன் - (09-FEB-2016)
 5. கருணா - (10-FEB-2016)
 6. சந்தோஷ் குமார் - (11-FEB-2016)
 7. பழனி குமார் - (12-FEB-2016)
 8. சுஜய் ரகு - (13-FEB-2016)
 9. ஜின்னா  - (14-FEB-2016)
 10. கட்டாரி சரவணா  - (15-FEB-2016)
 11. ஷ்யாமளா  - (16-FEB-2016)
 12. மணிமீ  - (17-FEB-2016)
 13. கனா காண்பவன்  - (18-FEB-2016)
 14. ஷாந்தி  - (19-FEB-2016)
 15. உமை  - (20-FEB-2016)
 16. குமரேசன் கிருஷ்ணன்  - (21-FEB-2016)
 17. ஜோசெப் ஜூலிசிஎஸ் - (22-FEB-2016)
 18. நிலா கண்ணன்  - (23-FEB-2016)
 19. முரளி TN   - (24-FEB-2016)
 20. கார்த்திகா AK  - (25-FEB-2016)
 21. கவித்தா சபாபதி  - (26-FEB-2016)
 22. மதிபாலன்  - (27-FEB-2016)
 23. கருகுவெலதா - (28-FEB-2016)
 24. மனொரெட் - (29-FEB-2016)
 25. தர்மராஜ்  - (01-MAR-2016)
 26. வேளாங்கண்ணி- (02-MAR-2016)
 27. புனிதா வேளாங்கண்ணி - (03-MAR-2016)
 28. இனியவன் - (04-MAR-2016)
 29. நாக ராணி மதனகோபால் - (05-MAR-2016)
 30. கயல்விழி - (06-MAR-2016)
 31. கே.விக்னேஷ் - (07-MAR -2016)
 32. ஆதிநாடா - (08-MAR -2016)
 33. செல்வ முத்தமிழ் - (09-MAR -2016)
 34. மு.ர - (10-MAR-2016)
 35. அனு ஆனந்தி - (11-MAR-20156)
 36. ஜெய ராஜ ரத்தினம் - (12-MAR-2016)
 37. எசேக்கியல் காளியப்பன் - (13-MAR-2016)
 38. விவேக் பாரதி - (14-MAR-2016)
 39. குருச்சந்திரன் கிருஷ் - (15-MAR-2016)
 40. ஸ்ரீ மதி மகாலட்சுமி - (16-MAR-2016)
 41. மணி அமரன் - (17-MAR-2016)
 42. அமுதா அமுதா - (18-MAR-2016)
 43. பனிமலர் - (19-MAR-2016)
 44. திருமூர்த்தி - (20-MAR-20156)
 45. சாய்மாரன் - (21-MAR-2016)
 46. உதயா சன் - (22-MAR -2016)
 47. சேகுவாரா கோபி - (23-MAR -2016)
 48. ராஜ்குமார் -(24-MAR -2016)
 49. காஜா - (25-MAR -2016)
 50. பொள்ளாச்சி அபி - (26-MAR -2016)
இன்னும் தொடரும் இந்த பட்டியல் தேவை பட்டால்....

கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
**************************************

மேலும் இந்த எண்ணத்தில் பதிந்துள்ள படம் மட்டும்தான் இந்த தொடருக்கு முழுவதும் 
பதிய வேண்டும் மற்றும் வேறு எந்த படமும் பயன் படுத்தக் கூடாது....

மேலும் இந்த தொடரை தவிர வேறு எந்த கவிதைக்கும் இந்த படத்தை பயன் படுத்தக் கூடாது...
அதே போல இந்த தொடரை தவிர வேறு எந்த கவிதைக்கும் இந்த தலைப்பை பயன் படுத்தக் கூடாது...

இந்த தொடருக்காக படத்தை தந்த எனது நண்பர் கமல் காளிதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்,

வளர்வோம் வளர்ப்போம்....

நட்புடன்,
ஜின்னா.

மேலும்

இரண்டாம் முறையாக வாய்ப்பளித்தமைக்கு நன்றிபாராட்டுகிறேன் நண்பரே! 06-Feb-2016 8:20 pm
மிக்க நன்றி... வளர்வோம் வளர்ப்போம்... 06-Feb-2016 12:04 am
மிக்க நன்றி... இனி யார் சொன்னாலும் படம் மாற்றப் பட மாட்டாது கவிஞரே.. இதுவே இறுதி... வளர்வோம் வளர்ப்போம்... 05-Feb-2016 11:30 pm
மிக்க நன்றி... வளர்வோம் வளர்ப்போம்... 05-Feb-2016 11:29 pm
கே இனியவன் அளித்த படைப்பை (public) Umai மற்றும் 15 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
31-Dec-2015 4:17 am

காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்)

காதல்
ஒரு மந்திர கோல் .....
இரண்டு இதயங்களை ....
ஒன்றாக்கி விடும் ....!!!

நெற்றியில் ...
குங்கும பொட்டு.....?
அப்பாடா - சாமி ....
கும்பிட்டு வருகிறாள் ....!!!

தேவனிடம் ....
பாவ மன்னிப்புக்கேட்கிறாள் ....
என்னிடமும் கேட்பாள் .....!!!

^^^

கனவு
நிஜத்தில் நிறைவேறாத ...
ஆசைகளை நிறைவேற்றும் ....
நீர்க்குமிழி .....!!!

திடுக்கிட்டு எழுந்தாள் ....
தாலியை கண்ணில் வணங்கி...
என்னை பார்த்தாள் ....!!!

இன்னும்
சற்று தூங்கியிருந்தால் ....
சொர்கத்தை.........
பார்த்திருப்பேன்....!!!

^^^

நீ என்னை ....
காத

மேலும்

Nanri nanri 20-Feb-2016 7:07 pm
Enna solvathu ithanai karuthuku பின் Vszthukal 19-Feb-2016 8:46 pm
இத்தனை சிறப்புகளா ...? 26-Jan-2016 8:44 pm
பதிலுக்கு நன்றி 25-Jan-2016 8:36 pm
jayarajarethinam அளித்த படைப்பை (public) Umai மற்றும் 12 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
30-Dec-2015 12:10 am

            கசல் கவிதைகள்.....19

நீ ஆடையாக இருக்கிறாய்
நான் நூலாக இருக்கிறேன்.. என்னுள்
சிக்காமல் நீ சிக்கிக்கொண்டு நான்.

கை பேசியில் அழைத்தேன் ஒவ்வொரு முறையும்
பேசியது நான் நீ பேசியது மவுனம்.

நீ பூ சூடிக் கொண்டு போனாலும் உன் வாசம்
என் நாசி வழி சுவாசித்துக் கொண்டிருக்கும் நீங்காமல்..

காதலை அழைக்க சிக்கிக்கொண்டோம்
நீயென்றும் நானென்றும்..
அது வந்ததும் இருதுருவங்களாகிப் போனோம்.

நான் உன்னோடு வம்பு பேசவரவில்லை
அன்போடு வாழத்தான் அழைக்கிறேன்.

நீ மின்னலைப் பிடிக்கிறாய் பயமில்லாமல்.. உன் கண்களுக்குள் இருக்கும் நான் பயத்தோடு துடித்துக் கொண்டிருக்கிறேன்

நான் மனதோடு ஒத்திகை பா

மேலும்

மகிழ்ச்சி நன்றி 20-Jan-2016 7:27 am
மகிழ்ச்சி நன்றி 20-Jan-2016 7:25 am
நீ மின்னலைப் பிடிக்கிறாய் பயமில்லாமல்.. உன் கண்களுக்குள் இருக்கும் நான் பயத்தோடு துடித்துக் கொண்டிருக்கிறேன். ... மின்னலாலும், காதலாலும் முதலில் தாக்கப் படுவது ஈர விழிகள் தானோ ? அருமையான வரிகள் ! 18-Jan-2016 2:42 pm
சோகங்களைக் கூட சுகமாக மீட்டிச் செல்கிறது கவிதை ! 18-Jan-2016 10:28 am

கலோரிகள்
எரிக்கப்படுகின்றன...

திசுக்கள்
புதுப்பித்துக் கொள்கின்றன.....

எப்போதும்
இளமையாய் இருக்கலாம்...

இரத்த ஒட்டம்
சீரடைவதாய் சமீபத்திய
ஆய்வறிக்கை.....

சாயம் தவிர்த்தும்
இயல்பாகவே அழகாய்
இருக்கின்றன...

ஒரு முத்தத்திற்காய்
எத்தனை
மன்றாட வேண்டியிருக்கிறது...!!!

மேலும்

துர்காதேவியினை
நான்கு சிறுவர்கள்
வலம் வந்துகொண்டிருந்தனர்...

சரியாக
இடப்புறம் அமர்ந்திருந்த
காலபைரவன் ரத்தத்தின்
சுவை 
இனிப்பென்றிருந்தார்.....

ஆகமவிதிகளின் படி 
எல்லாமே 
சரியாக
அமைக்கப்பட்டிருந்தது....!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (238)

user photo

velayutham avudaiappan

KADAYANALLUR
Kavi Tamil Nishanth

Kavi Tamil Nishanth

வேலூர்
BASKARANADM

BASKARANADM

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
Prakash K Murugan

Prakash K Murugan

சேலம், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (239)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
Geeths

Geeths

கோவை
devirajkamal

devirajkamal

மலேசியா

இவரை பின்தொடர்பவர்கள் (242)

Vinothkannan

Vinothkannan

தஞ்சாவூர், தற்போது சீனாவி
jayarajarethinam

jayarajarethinam

திருச்சி
agan

agan

Puthucherry

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே