துராந்திரன் குமரவேலு - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : துராந்திரன் குமரவேலு |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 31-Jul-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 204 |
புள்ளி | : 65 |
நான் எழுத்துக்குப் புதியவன். தோன்றுவதையும் தூண்டுவதையும் கவிதையாக வடிக்க விரும்புகிறேன். இன்னும் கற்றுக்கொண்டு இருக்கின்றேன்.
காற்றின் தீண்டலில் காய்ந்த இலைகளை உதிர்க்கும் இம்மரங்களைப் போல
நட்புறவின் தென்றல் பேச்சினால் என் சோக துன்பங்களும் என்னை விட்டு நீங்கி போக கண்டேன்.
எப்படி விழுந்த இலைகள் உரமாகின்றனவோ அப்படியே என் வலிகளும் என்னை வளமாக்கும்; வழுவாக்கும்.
காற்றின் தீண்டலில் காய்ந்த இலைகளை உதிர்க்கும் இம்மரங்களைப் போல
நட்புறவின் தென்றல் பேச்சினால் என் சோக துன்பங்களும் என்னை விட்டு நீங்கி போக கண்டேன்.
எப்படி விழுந்த இலைகள் உரமாகின்றனவோ அப்படியே என் வலிகளும் என்னை வளமாக்கும்; வழுவாக்கும்.
நிழல் நிஜமனதா?
நிஜம் நிழலானதா?
குழப்பத்தில் நான். ஒரு பாதை வரை உடன் வந்த உறவுகளைத் தட்டிப் பிடிக்கும் போதுதான் உணர்கிறேன். தொட்டதும் கரைந்தது நிழலென்று. நிழலை இங்கு விட்டு நிஜத்தைக் கொண்டுச் சென்றதேனோ? நிஜத்தைத் தொலைத்தவன் நான், நிழலைக் கோபித்து ஒன்றுமாக போவதில்லை. மீதி இருக்கும் நிஜத்தையாவது நிலைப்பெறச் செய்வோம்.
இப்போது இருக்கும் நீ உண்மையில் நீதானா?
ஏச்சுக்கும் பேச்சுக்கும் நீ இடந்தரலாமா?
உன் வேக விவேகத்தை உன்னில் வேக வைத்தாயோ?
நீ கொண்டதோர் உயர்க்கனவு, அதற்கு இன்றே உயிர்க்கொடு.
உலகம் என்ன சொல்லும் என்று தயங்காதே
உன்னை விட வேறெவறும் இல்லை சாதிக்க
சிலநாள் கொண்ட எலிவேடம் மேடைக்காக
அதுவே அல்ல நீ உன் வெற்றிமேடை காண!
பாதை!
உன் இலக்கை அடைவதற்கான பாதை இன்னதென தேர்தெடுத்தப்பின், தயக்கமின்றி தொடர்ந்து செல். உன் கண்ணில் தென்படும் வைரக் கல்லை மட்டுமல்ல வெறுங்கல்லையும் சேகரித்துக் கொள். வைரக் கல்லைக் கொண்டு நீ எண்ணியதை எண்ணியவாறு பெற்றுக்கொள்ளலாம். வெறும் கல்லும் சிலருக்குப் பயன்படலாம்; விரட்டியடிக்க...
படைப்பாக்கத்தில் எனது நிலைப்பாடு :
எனது படைப்புக்கள் யாவும் எந்தவிதத்திலும் தமிழ் இலக்கியத்தின் கோட்பாடுகளிலோ அதன் பரிணாம வளர்ச்சியலோ பங்கேற்பது இல்லை. நிச்சயமாக நான் ஏற்றுக்கொள்கிறேன்.
அதற்கென்று தமிழாய்ந்த கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களால் தமிழ் சிறக்கட்டும். இலக்கியம் வளரட்டும். உலக அரங்கில் பெருமைபடட்டும்.. பெருமிதத்தோடு தமிழாய்ந்த கவிஞர்கள, எழுத்தாளர்களுக்கு உற்சாக குரல் கொடுத்து வாழ்த்து சொல்லி .. கொஞ்சம் தள்ளியே நிற்கிறேன்.
ஆனால்.. என் படைப்புக்களும், என்னை போன்ற மற்றவர்களின (...)
இவன்+இவள்= காதல்
**********************************
இந்த கால பெண்கள் மிகவும் விரும்பும் மூன்று நாட்கள் வளர்க்கப்பட்ட தாடியுடன். சிறுப் புன்னகையை எந்நேரம் சிந்திக்கொண்டிருக்கும் இதழ்களுக்கும் கூரிய நாசிக்கும் இடையே.சின்ன மீசையுடன் , ஒரளவு மாநிறம், அடர்த்தியான தலைமுடி. அளவான உடலமைப்பு கொண்ட வசீகர நாயகன் போலத்தான் இருக்கிறான் இந்த சிரஞ்சீவி.
Express Avenue லுள்ள ஒரு காபி ஷாபில் கையில் சில ரோஜா பூக்களுடனும், வாழ்த்து அட்டையில் கவிதை என்று அவனாக தமிழில் தப்பும்தவறுமாக எழுதிய காதல் வாசகத்துடனும் அமர்ந்துக்கொண்டிருக்கிறான். காலை 10 மணிக்கு வருகிறேன் என்று சொன்னவளுக்காக மதியம் 12 மணி வரை கா
செருப்பு தைத்துக்கொண்டிருக்கும்
அந்த மாமாவிற்கும்
கோயில் வாசலில் பூவிற்கும்
அந்த அத்தைக்கும்
கவிதை எழுத தெரியுமா....?
குறைந்த பட்சம்
வாசிக்க ரசிக்க தெரியுமா ?
முதலில் கேட்டுவருகிறேன்.
பின்பு படைக்கிறேன்
உலகத்தரமான இலக்கியத்தை...!
வயல்காட்டிலும் களத்துமேட்டிலும்
ஒட்டிய வயிற்றோடு
பசிவீக்கமெடுத்த அந்த கிழவனுக்கு
ஹைக்கூ சொன்னால் புரியுமா ?
இல்லை
சென்ரியு சொல்லி சிரிக்க வைக்கமுடியுமா?
முதலில் தெரிந்துக்கொள்கிறேன்
பின்பு எழுதுகிறேன்
மேதாவிகள் போற்றக்கூடிய
ஒரு காவியத்தை....!
பெரு நகரங்களிலும்
சிலபொழுது கிராமங்களிலும்
தலைவிரித்து செல்லும் கண்ணகிகளிடமும்
ஜீன்ஸ்போட்டிர
வாசலில் உணவிட்டும் ஏன் கை வைத்தாய் என்னுணவில்...
அதை உன் காதலிக்குப் பரிசளிக்க கொண்டு செல்லும் சிற்றெறும்பே!
உன்னால் உன்னெடைக்கு மேல் சுமக்க முடியுமென்ற தலை கணமா? தலையில் கணமா?
பசிக்குது ரொம்ப பசிக்குது எனக்குப்
பல நாளா சரியா சாப்பாடு இல்ல
பிஞ்சி மனசு என்னலா யாருக்குத் தெரியும்?
பிடித்த கிழமையில பிடித்த சாமிக்கு
நாங்க விரதமிருக்காம பட்டினி கிடக்கோம்
கிடைச்சா ஒரு வேள குப்ப ஆப்பிள் தான்
தானத்துல செறந்தது அன்ன தானமுனுங்க
அது இப்போ யாருக்குத் தேவையினு தெரியல
ஆறுவேள உண்டவங்க மத்தியில நாங்க எங்க,
வீணாப் போயிட்டா குப்பையில கொட்டுராங்க
கொடுத்தா நாங்களாவது சாப்பிடுவோம்ல..
பணங்காசு கேக்கலைங்க மிஞ்சுரத போட்டாலே போதும்
ஊர ஏமாத்தி பொழப்பு நடத்தல நாங்க
நாய் மேலுள்ள மதிப்புல கொஞ்சமாவது காட்டுங்க
மனுச பிறவி ஐயா நாங்க, மறந்துட்டீங்களா?
ஏழ நாட்டுல மட்டோ பட்டின
எங்கே போகிறேன் என
தெரியவில்லை..
பயணம் புதிதா ?
பாதை புதிதா ?
எதுவும் தெரியவில்லை...
தொலைந்து விடுவேனா ? எங்கேயாவது
தொலைந்து தான் போவேனா ?
ஒருவேளை தொலைத்து விட்டேனோ ?
அதைத் தேடித்தான் போகிறேனா ?
அட , என்ன இது
எதுவும் புரியவில்லையே..
இன்னும் போய்க் கொண்டுதான்
இருக்கிறேன்..
இதோ இந்த மரத்தை கடந்து போகிறேன்..
அதோ அந்த மரத்தையும் கடந்து போவேன்..
ஆனால் ,
போய்ச் சேரும் இடம் மட்டும்
இன்னும் மர்மம் தான்..
பூலோக வாழ்வை துறந்து
மாயலோகம் தான் செல்கிறேனோ ?????
மண்ணில் பூத்த பலகோடி
பூக்கள் சொல்லும் ஒரு
வார்த்தை அது அம்மா.
பத்து திங்கள் மடி சுமந்து
சுவனச்சோலை சங்கமித்து
தாய் பட்ட வேதனை யாரும் அறிந்ததுண்டோ?
வலிமைக்கு பால் தந்தவளே!
பாசத்தால் என்னை காத்தவளே!
ஆயிரம் முத்துக்கள் நெய்தாலும்
தாயினை பால் வருமா?
பள்ளிக்கு என்னை கூட்டிச்செல்வா?
நிலாசோறு ஊட்டி விடுவா?தோளினில்
எனை அணைத்து மடியினில் தூங்க
வைப்பா.அதுவும் ஒரு காலம்.
விண்ணுக்கு தாலாட்டுப்பாட அம்மா
இல்லை.தூவுது மார்கழி கண்ணீர்மழை.
கோபத்தில் என்னை தூற்றுகையில்
என் கண்கள் அவள் பார்த்து ஆனந்தக்
கண்ணீரில் என்னை தாலாட்டுவாள்.
வாழ்க்கையில் தோல்விகள் தொடர்ந்தாலென்ன?
காதலி
நண்பர்கள் (27)

சந்திரா
இலங்கை

வெங்கடேஷ் PG
சென்னை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

அருண்குமார்செ
எறையூர் (பெரம்பலூர்)
